MEGA SYSTEMS என்ற பெரிய மஞ்சள் போர்டில் வெகு சமீபத்தில் குழைத்துப் பூசிய சந்தனமும், குங்குமமும் அப்பி இருந்தது. அந்த போர்டின் கீழ் நேர்த்தியாக புடவை அணிந்த ஒரு பெண் ஃபோனில் வரும் அழைப்புகளுக்கு விடை சொல்லிக் கொண்டிருந்தாள். நான் நிற்பதைப் பார்த்து சைகையில் காத்திருக்கச் சொன்னாள். நான் தலையாட்டி விட்டு சுற்றும் முற்றும் பார்த்து முடிந்ததும்,
Yes sir, என்றாள்.
I am Nirajan, I want to meet Mega madam. என்றேன்.
Do you have any appointment sir? என்றாள்.
Yes, She asked me to come at 11 today என்றேன்.
That's fine sir. She is in a business meeting right now, please sit. Once she is out i will let her know என்றாள்.
How much time it will take என்று கேட்க நினைத்து, Sure மட்டும் சொல்லி விட்டு குஷன் சோஃபாவில் உட்கார்ந்தேன்.
அவள் ஃபோனில் busy ஆனாள். அதிக நேரம் mobile ஐ நோண்டாத வேலை இதுவாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.
வேலைக்குப் போய் ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. அல்லது வேலையை விட்டு விரட்டியடிக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. இதற்கும், அன்று காலை Whatsapp ல் ஒன்றிரண்டு Good Morning Message அதிகமாகவே இருந்தது. இருந்தும் எனக்கு அப்படி விடிந்தது.
எந்தவித தவறும் செய்யாமல், எந்தவித அறிகுறியும் தெரியாமல், எந்த வித காரணங்களும் சொல்லாமல், காலையில் கூப்பிட்டு மாலையில் ஒட்டு மொத்தமாகப் போகச் சொல்லிவிட்டார்கள். 28 வயதில் வீடு வாங்கத் தகுதியளித்ததும் இந்த I T தான், 38 வயதில் ஒட்டு மொத்தமாய் வீட்டுக்கு அனுப்பியதும் இதே I T தான்.
என்னைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். நான் ஒரு அழகான அக்மார்க் அம்மாஞ்சி. வழியில் யாராவது என்னை அடித்தால், பதிலுக்கு "ஏங்க அடிச்சீங்க?" என்று மரியாதையுடன் கேட்கும் இயல்புடையவன். பதினைந்து வருடம் I T யில் வேலை பார்த்தும், வயிறும் முதுகும் என் கட்டுக்குள் வைத்திருப்பது தான் என் ஒரே சாதனை. எனக்கு இந்த நாட்டின் politics யும் தெரியாது. office politics யும் தெரியாது. நான் உண்டு என் excel sheet உண்டு என்று இருந்தேன். Delivery Manager என்ற என் Designationக்கு எந்த பங்கமும் வராமல் தான் உழைத்தேன். நிறைய வேலை செய்தேன். காட்டிக்கொள்ளவில்லை. தெரியவில்லை. office ஐ பொறுத்தவரை, வேலை செய்வதோடு நிற்கக்கூடாது, அதைக் காட்டிக் கொள்ளத் தெரிய வேண்டும். ஒரு வேலையை முடித்தால், boss யிடம் சொல்ல வேண்டும், பிறகு ஒரு பத்து பேரை சிசி யில் வைத்து As discussed போட்டு மெயில் போட வேண்டும். அது எனக்கு cheap ஆகத் தோன்றியது. "கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே!" என்ற காலம் போய், "கடமையைச் செய், வேலையை எதிர்பார்க்காதே!" காலம் வந்து விட்டது தெரியாமல் போய் விட்டது. பரவாயில்லை. என் ஒழுக்கம், என் நேர்மை, என் அர்ப்பணிப்பு, எனக்குப் பிடித்திருக்கிறது. I am proud of myself, still.
Sir, you can go now என்றாள்.
எழுந்தேன்.
அவள் எழுந்து அவள் கழுத்தில் இருந்த பட்டையை காட்டியதும் கதவு திறந்தது.
Straight, last right cabin is mam's cabin என்றாள்.
Thanks.
கம்ப்யுட்டரை வெறித்துப் பார்க்கும், காப்பி குடிக்கும், டெஸ்கில் அமர்ந்து அரட்டை அடிக்கும், போர்டில் ப்ளான் போடும் சிலரைக் கடந்து right side cabin ல் கதவைத் தட்டிக் கொண்டு நுழைந்தேன்.
"ஹேய், நிரு!" என்று எழுந்து வந்தாள் மேகா.
மேகாவைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். இருவரும் நான்கு வருடங்கள் ஒன்றாய் படித்தோம். அவள் தனுஷ் மாதிரி, பார்க்கப் பார்க்கப் பிடிக்கும் அழகு. படிக்கும்போதே அவளுக்கு ஏனோ என்னைப் பிடித்திருந்தது. எங்களிடையில் ஒரு நல்ல நட்பு இருந்தது. அவள் என்னை விரும்பியதாக பின்னாளில் நண்பர்கள் சொன்னதுண்டு. அவள் என்னிடம் சொன்னதில்லை. மேற்படிப்புக்கு அமேரிக்கா போனவள், திரும்பி வந்து ஒரு கம்பெனி தொடங்கி இன்று கொஞ்சம் வளர்ந்து இருக்கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து linked in எங்களை connecti இருக்கிறது.
நான் கைகளை நீட்ட அவள் ஒரு quick hug செய்தாள்.
நான் எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கூச்சமாக இருந்தது. அவள் "டேய், இன்னுமா?" என்று பெரிதாய் சிரித்து "வா, உக்காரு" என்றாள்.
Sorry da, was in a business meeting which was prolonging. sorry for making you wait. என்றாள்.
Thats ok. I understand என்றேன்.
Wow, எத்தனை வருஷம் ஆச்சு. எப்பிட்றா இருக்க?
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே?
அதான் பாக்குறியே, Top of the world. I always dreamed about my own company. So here i am. அப்புறம், உனக்கு எப்படி போகுது? வீட்ல எல்லாரும் செளக்கியமா? wife பேரு என்ன? எத்தனை பசங்க?
Interview start ஆயிடுச்சா?
ஹஹஹ...ஆமா, உன் wife birthday, anniversary date இதெல்லாம் கேப்பேன். correct ஆ சொன்னா தான் உனக்கு இங்கே வேலை என்று சிரித்தாள்.
நானும் சிரித்தேன்.
உன் husband என்ன பண்றாரு?
ஹேய், தெரியாதா? i am a divorcee macha..
O, தெரியாது. I am sorry.
Don't be. I am happily single, இப்போ நீ வேற வந்துட்ட என்று கண்ணடித்தாள்.
நான் புரியாமல் அவளைப் பார்க்க மறுபடியும் அதே இடிச் சிரிப்பு.
Love teasing you. I missed you so much. ஆமா, உன்னை எப்படிடா வேலையை விட்டு தூக்கினாங்க? உன்னை மாதிரி பீஸ் எல்லாம் muesum ல தான் இருக்கு.
உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலையே என்றேன்.
எப்படியோ, its good, I got a DM. So, You might be knowing about the company, about your job, nothing new, same delivery management crap. You will take care of several SBUs here. See, we are growing fast. Touch wood. You might have to join me on some frequent short term travels. என்று படபடவென்று பேசியவள், ஒரு கணம் நிறுத்தி என் கண்ணைப் பார்த்து, ஓகே தானே? என்றாள்.
அந்த இடைப்பட்ட அமைதி என்னை கொஞ்சம் தொந்தரவு செய்தது. நான் ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவள் HR க்கு போன் அடித்தாள்.
Hey, Deepa, i am sending Mr. Niranjan, our new DM. Please take care of his joining formalities என்றாள்.
Sorry da, i have to rush for a meeting now. Will see you around. என்று அவள் எழுந்ததும், நான் Thanks என்றேன்.
ச்சீ, லூசு என்று அவள் hug செய்வது போல் வந்து கையைக் கொடுத்துவிட்டு சிரித்துக் கொண்டே போனாள்.
அன்று இரவு, நெடு நேரம் உறக்கம் பிடிக்கவில்லை. whatsapp பார்த்தேன். அவள் சில மணி நேரம் முன்பாக செய்த messages.
Hey great to see you today, sorry couldn't talk much. I felt very happy seeing you after this many years da. Vayasaanalum un azhagu innum kuraiyala. You looked very cute today. When you gonna join?
என்ன சொல்வது? ஏழு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த வேலை. இத்தனை நாளாய் ஒரு interview call கூட வரவில்லை. 15 வருடம் அனுபவம் உள்ள ஒரு மேனெஜர் resume ஐ யாரும் பார்ப்பதற்க்குக் கூட தயாராயில்லை. சம்பளத்தை குறைத்துச் சொல்லியும் பலனில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பீதி வயிற்றைக் கவ்விக் கொண்டிருந்த போது, மேகாவின் அழைப்பு. எனக்குத் தெரிந்த வேலை. நல்ல சம்பளம். comfort zone. comfort zone? really? are you comfortable?
மனம் தராசு போல் உருமாறிக் கொண்டது. ஒரு பக்கம் குடும்பம், குழந்தைகளின் படிப்பு, EMI, எதிர்காலம். இன்னொரு பக்கம் மனசாட்சி, நேர்மை, ஒழுக்கம்.
முடிவு?
எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் எழுந்ததும் ஒரு வித தெளிவுடன் அவளுக்கு பதில் அனுப்பினேன்.
Next Monday.