நேற்று office விட்டு போகும் பொழுது cycyle ல் யோசித்துக் கொண்டே சென்றேன். ஒரு வரி கதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

சுஜாதா ஒரு example கதை சொல்வார்:


உலகில் கடைசி மனிதன் மட்டும் உயிரோடிருந்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது!!


ஒரு வரியில் எத்தனை அழகான ஒரு திகில் கதை. இப்படி நம்மளும் எழுதிப்பாக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இங்கே: [உங்க தலையெழுத்தை யாரால மாத்த முடியும்? ஹிஹி..]


அதே முதியோர் இல்லம். அன்று என் அப்பா! இன்று நான் அப்பா!!


வாயில் நுரை பொங்கி வழிகிறது. அவள் அப்படிச் செய்திருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டே சாகிறேன்!


உள்ளே சென்றவன் வெறுப்புடன் வருகிறான். நான் எத்தனாவதாக நிற்கிறேன் என்று ஏழாவது முறையாக எண்ணிக் கொண்டேன்.


இந்த மூன்று கதைகளில் மூன்று களங்களைக் கையாண்டிருக்கிறேன் [அப்படி நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுதா?]

1. சோகம்
2. தோல்வி
3. நம்பிக்கை

இதில் எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு உங்கள் பாராட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள்! இதில் நீங்கள் புதுசாய் ஏதாவது உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்![ஹிஹி..]

நேற்று AID group ல் ஒரு கூட்டம் இருந்தது. திரு. பாமரன் அவர்கள் வந்திருந்தார். நீங்கள் எல்லோரும் பாமரனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனை, சமுதாய முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு போன்ற நல்ல எண்ணங்களைக் கொண்ட குறைந்த பேர்களில் அவரும் ஒருவர்.
அவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.

நான் அவருடைய படைப்புகளை நிறைய படித்ததில்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை சிலவற்றை படித்திருக்கிறேன். பாலச்சந்தரையும்,
மணிரத்னத்தையும் திட்டும் ஒரே மனிதர்! இதனாலேயே அவர் பிரபலம் ஆகிவிட்டதாக அவரே கூறுகிறார். 'நான் யாரையாவது பாராட்டி எழுதுனா
பத்திரிக்கையில போட மாட்டாங்க' என்கிறார்.

அவருக்கு எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி! Being a Software Engineers, சமூக நலனைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். Software Engineers எத்தனை பேர் இன்னைக்கு society பத்தி யோசிக்கிறாங்க என்று சாடினார். [வழக்கம் போல!]

என்னைப் பொறுத்த வரை நான் சமூக சேவை செய்வதாயும், என்னை எல்லோரும் புகழ வேண்டும் என்றோ நான் நினைத்ததே இல்லை. நான் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய சமூக கடமையைத் தான் செய்கிறேன்! சமூக சேவைக்கும் சமூக கடமைக்கும் வானத்திற்கும், பூமிக்குமான வித்தியாசம் இருக்கிறது! என்னைப் பொறுத்தவரை சமூக கடமை செய்யாத எல்லோரும் குற்றவாளிகளே ஆவர்!

ஜாதியை அறவே ஒழிப்பது
மதச் சண்டை
எல்லோருக்கும் கல்வி [இன்று உள்ள கல்வி முறையை மாற்றி அமைப்பது!]
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது
நல்ல வேலை வாய்ப்பு
ஏழ்மையை ஒழிப்பது
சுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக் கொள்வது

இப்படி பல வேலைகள் நமக்கு இருக்கிறது! ஆனால் நமக்கு weekend வந்தவுடன் vcd ல் 4 படம் பாக்கணும், bar, pub போய் நல்லா தண்ணி அடிக்கணும்.

கொஞ்சம் யோசிங்கப்பா! [பாமரனின் பேச்சு கேட்டவுடனே நானும் அவரை மாதிரி ஆயிட்டேனோ?]

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்!

பல சிந்திக்கும்படியான விஷயங்களை அவர் பேசினார். மணிரத்னம், பாலச்சந்தர், மதன், ஷங்கர், சுஜாதா, வாலி, வைரமுத்து, சேரன் எல்லோரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார்.

1. பம்பாய் படத்தில் முஸ்லீம்களைக் கொல்வதெல்லாம் close-up shot ஆக இருப்பதாகக் கூறினார். படம் பார்க்கும் மக்கள் அந்த கலவரக் காட்சியின் போது 'ஓம் காளி' என்று ஆக்ரோஷமாய் கத்துவதாயும் இதெல்லாம் மக்களை தூண்டி விடுவதாகவும் சொன்னார். இதை தொடர்ந்து கோவையில் கலவரம், குண்டு வெடிப்பு
பற்றிச் சொன்னார். "இப்படி சண்டை போடாதீங்க என்று சொல்ல அப்போ அர்விந்த சாமியோ, மணிரத்னமோ வர்லியே" என்றார்.

2. 'கன்னத்தில் முத்தமிட்டால்' விடுதலைப் புலிகள் பற்றிய படம் தான்..அது எப்படி வெளியே வந்தது. ஏன் 'குற்றப்பத்திரிக்கை' வெளியே வரவில்லை.
மணிரத்னத்துக்கு ஒரு நியாயம், செல்வமணிக்கு ஒரு நியாயமா என்று கேட்டார்!அது சிறந்த படம் என்று விருது கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள்
விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டார்.

3. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, முதலமைச்சர் என்றால் கடத்துவது [தேசிய கீதம்], பிரதமர் என்றால் காப்பாற்றுவது [மாநகர காவல்..பல படங்கள்!]என்ற ஒரு formula வைத்துள்ளார்கள் என்றார்.

4. Basically விஷயம் தெரிந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்!

5. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, அறிவோடும் இருக்கணும் இல்லைன்னா ரஜினி மாதிரி ஆயிடும்ன்றார் :)

6. வேலை மட்டும் செய்தால் போதாது, நாம் நிறைய படிக்க வேண்டும் என்றார். நமக்கு உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றார்.

7. அவருடைய 3 புத்தகங்களை [புத்தர் சிரித்தார், தெருவோர குறிப்புகள், சாட்டிலைட் சனியன்களுக்கு] எங்களுக்கு தண்டனை என்று சொல்லி கொடுத்தார்.

8. முடிந்தால் ஒரு net magazine ஆரம்பிக்கச் சொன்னார்!

மொத்தத்தில் ஒரு வித்தியாசமான கூட்டமாய் அமைந்தது.

வானம் தரையிலும் பூமி வானத்திலும்
ஒன்றும் நிலை மாறவில்லை

சூரியன் குளிர்வதாயோ சந்திரன் சுடுவதாயோ
எனக்குத் தோன்றவில்லை

வெல்லம் கசக்கவோ வேம்பு இனிக்கவோ
அப்படி ஏதும் சங்கதியில்லை

நான் நிற்பதாயும் தரை நடப்பதாயும்
அப்படி ஏதும் தடயமில்லை

இரவென்னைக் கொல்லவில்லை - பாவம்
அந்த நிலவென்னைக் கொல்லவில்லை

எனக்கும் சந்தேகம் தான் - ஆனால்
நீ நம்பித்தான் ஆகனும்

சத்தியமாய் நான் உன்னைக் காதலிக்கிறேன்!

Labels: | | edit post
ஊர் மக்களுக்கு ஓர் நற்செய்தி [It depends!].. டம டம...

அதாகப்பட்டது இருமல் நோய் முற்றி ஊருக்கு ஓடிப்போன உங்கள் ப்ரதீப் ஒரு பயனும் இல்லாமல் போன படியே திரும்பி வந்துவிட்டேன்!!

கொள்ளு..கொள்ளு..[இருமுறேங்க..நீங்க வேற]

அந்த 5 நாட்கள் :

மதுரை, கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்து வழிகிறது! நாம் இங்கே தான் 21 ஆண்டுகளாய் இருந்தோமா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் சிறுவனாய் இருந்த போது, "வெயில் காலம் வேற வருது" என்று புலம்பும் பெருசுகளை கண்டால் எனக்கு வியப்பாய் இருக்கும்..அப்படி என்ன இங்கே வெயில் அடிக்கிறது, இது இப்படி அலுத்துக்குது என்று நினைப்பேன்..மற்றும் எனக்கு துளி அளவு கூட வேர்க்காது [இது வரமா சாபமா தெரியவில்லை!] நான் முதலில் வெயிலை உணர்ந்தது டெல்லியில் தான்..இரவு 9 மணிக்கு office விட்டுக் கிளம்பி bus stop வந்தால், ஒரு அற்புதமான உஷ்ணக் காற்று உங்களை காதலுடன் தழுவும்!! உடல் முழுதும் பிசு பிசுன்னு..கொடுமையா இருக்கும்..வீட்டுக்கு போனவுடனே குளிக்கனும்..எல்லோர் வீட்டிலும் Air Cooler இருக்கும். [எங்கள் வீட்டில் அப்போது இல்லை!] நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா மதுரையிலும் இனி Air Cooler இல்லாமல் கஷ்டம் என்று தோன்றுகிறது..என்னடா இப்படி வெயில் அடிக்குதுன்னு பசங்ககிட்ட பேசவும் பயம்மா இருக்கு.."தோடா bangalore போனவுடனே இவனுக்கு மதுரை வெயில் தாங்கமுடியலை..அடங்குடா" என்று சொல்வார்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் சொல்வதும் நியாயம் தானே..ஓவரா film காட்டக்கூடாதுல்ல..

இதில்

கொத்தனார் வேலை பார்ப்பவர்கள்
ரோடு போடுபவர்கள்
சாலைகளில் ஏதோ ஒரு department க்காக குழி வெட்டுபவர்கள்
bus drivers & conductors
tea கடையில் வேலை பார்ப்பவர்கள்

இப்படிப் பலரை நான் நினைத்துப் பார்க்கிறேன்..ஏனோ முதன் முறையாய் எனக்கும் வேர்க்கிறது. நடமாடும் தெய்வங்கள்!!

கதிரவனே உனக்கொரு வேண்டுகோள்!
உழைப்பால் தம் உயிர் வளர்ப்பவர்களை விட்டு விட்டு
ஊழல் செய்தே உயிர் வளர்ப்பவர்களை மட்டும்
உன் செங்கதிர்களால் சாடு!!


[நானும் செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி சொல்லிட்டுத் தான் இருக்கேன், நீ எங்கே கேக்குற?]

சரி கொஞ்சம் நிழல்ல உட்கார்ந்து பேசுவோமா? வாங்க..

இருமலுக்காக நான் எடுத்துக்கொண்ட கை வைத்தியங்கள்:

1. ஆட்டுக்கால் சூப்
2. சாதம் வெந்த தண்ணியில் குந்தப்பானை போட்டு ஒரு glass
3. கொலக்கட்டையும் அதைச் சார்ந்த பானமும்
4. வால் மிளகும், பொரிகடலையும் சேர்ந்து மெல்லச் சொன்னார்கள். [குமட்டிக் கொண்டு வந்தது!]
5. பங்கரபான் பைரி [தமிழ்ல என்னன்னு தெரியலை! its a kind of வடை with தோசைப்பொடி]
6. பலாப்பழம்
7. காலையில் எழுந்தவுடன் ரெண்டு காதையும் இழுத்து விட்டுக்கச் சொன்னாங்க [அதை நான் செய்யவே இல்லை..யாருக்குப்பா ஞாபகம் இருக்கு!]
8. மஞ்சள், மிளகு போட்டு பால்!

என்னப்பா இப்போ இரும மாட்ரேன்னு வீட்லே யாராவது கேட்டா, கேட்டவுடனே ஞாபகம் வந்து இருமுவேன்..ஹிஹி..

இதுக்கெல்லாம் மசியாம கடைசியா doctor கிட்ட போனேன்..அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்..மறுநாள் பூரா நான் இருமவே

இல்லை..ஆனா இப்போ மறுபடியும் வந்துருச்சு!! : (

மதுரை:

1. வழக்கமான "எப்போப்பா வந்தே..உங்க அப்பா சொல்லிட்டே இருந்தாரு" நல்லா இருக்கியா? நல்லா பெருத்துட்டே..இன்னும் என்ன, உங்க அப்பாட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியது தானே"!!
2. எல்லா சொந்தக்காரர்களின் வீட்டிலும் இதே கேள்வி, இதே பேச்சு!
3. 5 நாளும் நான் TV பார்த்தே அழிந்தேன்.
4. நிறைய oneway ஆக்கி இருக்கிறார்கள்..எப்படி போவது எப்படி வருவது என்றே தெரியவில்லை.
5. ஒரு வழியாக திருமலை நாயக்கர் மஹாலை புதிப்பிக்கிறார்கள் [8 கோடி செலவில்]..தொல்பொருள் ஆய்வாளர்கள் கையில் சென்று விட்டதாம்.
6. நிறைய புதுப் புதுக் கட்டங்கள் எழும்பி விட்டன..எல்லாம் புது விதமாய் மாறுவதில் மகிழ்ந்தாலும், இனி அதை பழைய படி பார்க்க முடியாது என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..[இதை ஒரு நல்ல சிறுகதைக்கு கருவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன்!]

இது தான் என் 5 நாள் மதுரை புராணம்..ரொம்ப படுத்திட்டேனோ? சரி அப்புறம் பாக்கலாம்..
விருமாண்டியில் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கொத்தாலத் தேவர், விருமாண்டி உண்டு..நான் 5 நாள் leave ல மதுரை போறேன்..so no blogs for 5 days!! :(( அதை விருமாண்டி கதையோட்டத்தில் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இது..!

கொத்தாலத் தேவர் :

அந்த பயலைப் பத்தி பேசவே நாக்கு கூசுது! யாருன்னு கேக்குறீகளா, அதான் விருமாண்டி..விருமாண்டி!

Blog எழுதுறேன்னு எத்தனை பேரை கொன்றுப்பான்..அவனும் அவன் எழுத்தும். மனசுல சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு நெனைப்பு!
இவனை எல்லாம் படிக்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லனும்..அதாங்க அந்த சாமியே தண்டனை கொடுத்துருச்சு..1 மாசமா இருமிட்டு இருக்கானே, அவனுக்கு குணமாகுதா? bangalore ல தானப்பா இருக்கான். இங்கே இல்லாத doctor ஆ? போனானே, பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான் போனான்..doctor ஐ பார்த்தான்..அந்த பொம்பளை doctor ம் அவ கழுத்துல கிடந்ததை, அது என்ன கருமம்..என்னவோ scope ம்பாய்ங்க..வாயிலே நுழைய மாட்டேங்குது, கழுதை!! அதை எல்லம் எடுத்து அவன் நெஞ்சுல வச்சு மூச்சை இழுத்து விடு, அங்குட்டு திரும்பு, இங்குட்டு திரும்புன்னா..1 மாசமா இருக்குன்னு சொன்னவுடனே அந்தப் புள்ள நீ எதுக்கும் x-ray, blood test பண்ணிக்கோன்னு ஒரு போடு போட்டுச்சு..நம்ம ஆள் கிட்டத் தான் ஊரை அடிச்சி சேத்து வைச்ச காசு இருக்கே..சரி எதுக்கு வம்புன்னு எடுத்தான்..அவ சாதரணமா report வாங்கி பாத்துட்டு, ஒண்ணுமில்லை..அலர்ஜியா இருக்கும்னா!! நம்ம பயலுக்கு ஒண்ணும் இல்லயேன்னு சந்தோஷப்பட்றதா, இல்லை 500 செலவழிக்க வச்சுட்டு இப்ப இப்படி சொல்றாலேன்னு வருத்தப்பட்றதான்னு தெரியலை..இதோ அவ எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரை கூட தீந்து போச்சு..இன்னும் இருமிட்டு தானேப்பு இருக்கான்..

தோ, இப்போ ஐய்யா leave போட்டு ஊருக்கு போறாராம்..தன்னை குணப்படுத்திக்க..இவன் எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்னங்க? blog எழுத முடியாதேன்னுகவலையாம் இவருக்கு..ரொம்ப முக்கியம்!! இவன் blog படிக்கலைன்னா நமக்கு தூக்கம் வராதா? சோறு தண்ணி இறங்காதா? போப்பு!! உன்னை மாதிரி ஆயிரம் பேரை பாத்துருக்கோம்!! மக்களே நீங்க ஒன்னும் கவலை படாதீங்க!! இவனுக்கு இருமல் குறையப் போறதும் இல்லை, இவன் திரும்பி வந்து blog எழுதிநம்மளை கஷ்டப்படுத்தப் போறதும் இல்லை..சாமி நம்ம பக்கம் தான்..அவனுக்குத் தெரியும், யாரை எங்கே வைக்கணும்னு.. போடா!! போவியா!!


விருமாண்டி :

Blog எழுதுறேன்னு உங்களை எல்லாம் கொல்றேன்னு சொல்லி இருப்பாங்களே? சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு எனக்கு மனசுல நெனைப்புன்னு சொல்ல இருப்பாங்களே? அவங்கள்ளாம் யார் தெரியுமா? என்னோட குருக்கள்!! இன்னைக்கு நான் எதோ எழுதுறேன்னா அதுக்கு இவங்கள்ளாம் தான் காரணம். நான் இவங்க books எல்லாத்தையும் படிச்சதில்லை..ஆனா நான் படிச்ச கொஞ்சமே என்னை இந்த அளவுக்கு தூண்டி இருக்கு..நான் வாழ்க்கையை தேடிட்டு இருக்கேன்..சுஜாதா கூட, "எல்லா பிரபலம் ஆனவங்க கிட்டயும் ஒரு false start இருக்கும்னு சொல்றாரு.." அவங்களுக்கு வேண்டியதை கிடைக்கும் வரை அவங்க ஏதாவது புதுசு புதுசா முயற்சி பண்ணிட்டு தான் இருப்பாங்க!! அந்த மாதிரி தான் நான்..நான் எழுத்தாளனா, ஓவியனா, பேச்சாளனா, நடிகனா, பாடகனா, இந்த சமூகத்தையே மாற்ற வந்த பெரிய கொம்பனா...[நான் ஒரு நல்ல software engineer இல்லை என்பது எனக்குத் தெரியும்..so அந்த கேள்விக்கே இடமில்லை!] இப்படி ஆயிரம் கேள்விகளுக்கிடையில் என் பங்கு வாழ்க்கையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்!

நான் எழுதும் blog ற்கு பாராட்டு கிடைக்கும் போது நீ ஒரு நல்ல எழுத்தாளன் என என் மனம் மார் தட்டிக் கொள்கிறது..
நல்ல ஒரு ஓவியம் வரையும் போது, நீ சிறந்த ஓவியன் என்று நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறது..
எப்படி இப்படி எல்லாம் பேசுகிறாய் என்று நண்பர்கள் வியக்கும் போது, இது தானே எனக்குத் தெரியும் என்று சந்தோஷம் கொள்கிறது..

இப்படி எல்லா வித முயற்சிகளுடன் என் வாழ்க்கை நதி ஒரு பேரிரைச்சலுடன் வளைந்து நெளிந்து போய்க் கொண்டே இருக்கிறது..நடுவில் சில சிறிய
பாறைகளாய் இந்த இருமல், காய்ச்சல் எல்லாம்..என் வேகம் தெரியாமல் என்னை அடக்கப் பார்க்கின்றன!! பாவம், அதுங்களுக்கு என்ன தெரியும், கால வெள்ளத்தில் அது என்னுள்ளே தொலைந்து போகும் என்று..

என்னடா இவன் தான் கொஞ்சம் light ஆ எழுதுவான்! இவனும் leave போட்டுட்டு போயிட்டான்னு நினைக்காதீங்க!! இதோ நீங்க 'ம்' சொல்றதுக்குள்ளே [ஒரு 5
நாள் கழிச்சி சொல்லுங்க!] வந்துருவேன்!! தினமும் இவன் இன்னைக்கு என்ன எழுதியிருப்பான்னு என் பக்கத்தில் எட்டிப் பார்க்கும் உள்ளங்களுக்கு என் நன்றி!!

என் கவிதைகளுக்கு 13 வயது.. நான் 9வது படிக்கும்போது கவிதை எழுதத் துவங்கினேன். school ல் தனித் தனியே உட்கார்ந்து படிக்க சொல்வார்கள். எனக்குத் தெரிந்து top rank ல் உள்ள மாணவர்களைத் தவிர வேறு யாருமே அப்போது படிப்பதில்லை..

யாராவது ஒருவன் புது படம் பார்த்து விட்டு வந்திருப்பான். அவன் கதை சொல்வான்..எனக்கு ஒருவன் 'சின்னக் கவுண்டர்' கதை சொன்னான்..சிறிது நாள் கழித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்..ஒரு scene பிசகாமல் சொல்லி இருந்தான். நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.

சரி கவிதைக்கு வருவோம்..முதலில் என் கவிதைக்கு பழி ஆனது obviousely நிலா தான்..இன்று நினைத்துப் பார்க்கிறேன்..நிலவுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் எல்லா கவிஞர்களையும் மெட்ராஸ் பாஷையில் திட்டி இருக்கும்..அவ்வளவு படுத்துகிறோம் நிலவை..பாவம்!!

என் நினைவில் உள்ள வரை நான் எழுதிய முதல் கவிதை:

நிலவைப் பெண் பார்க்க மேகத்தில்
நட்சத்திர ஊர்வலம்!


[கவனிக்க: அது 'வானத்தில்' என்று இருக்க வேண்டும், எனக்கு அப்போது மேகத்துக்கும், வானத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ என்னவோ!!]

வெள்ளித் தட்டு போல் உள்ள நிலாவே
உன்னை யாராவது தூக்கிச் சென்று விடுவார்
என்று தான் இந்த நட்சத்திரக் காவலா?!
[யாருமே சொன்னதில்லை!!.. கவிதெ கவிதெ!!]

ஏழை என் கடன் அடைக்க
எனக்கொரு யோசனை!
வெள்ளி நிலவே உன்னை அடகு வைக்க!!


[இந்தா நிலாக்கண்ணு..கோச்சுக்காதேமே..நான் இன்னா பண்றது, உன்னை நெனைச்சா கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா அது எழுதனும்னு உட்கார்ந்தா..இந்த எழுத்து..வார்த்தை..]

இப்போ சொல்லுங்க, நிலா திட்டுமா? திட்டாதா?

அப்புறம் மெல்ல காதல் பக்கம் போனேன்..

பெண்ணுக்கு பஞ்சு போன்ற மென்மையான உடல் கொடுத்து
அதில் ஏன் இரும்பாலான இதயம் கொடுத்தாய்?


[அடஅடா..தேவதாஸ் range க்கு எழுதியிருக்கேன்யா!! இதெல்லாம் சத்தியமா cinema பாத்து கெட்டுப் போனதால வந்தது தான்..இல்லைன்னா 9வது படிக்கிற பையனுக்கு எப்படிய்யா இதெல்லாம்!!]

விலைவாசி ஏற்றத்தால்
அவள் மானமும் விலை ஏறியது


[ஒரு வேளை பிஞ்சுலேயே பழுத்திட்டேனோ?]

இப்படி ஆரம்பித்தது என் கவிதைப் பயணம்! பிறகு +1, +2 வில் கதை/கவிதை எழுதுமாறு தலைப்பு ஒன்றை கொடுப்பார்கள். கவிதையின் தலைப்பு பெரும்பாலும் குயில், மயில், நிலா [நம்ம ஆளு], வானவில் என்று இருக்கும்..எனக்கு வார்த்தைகள் எங்கிருந்தோ சரம் சரமாய் வந்து விழும்..எழுதித் தீர்த்திடுவேன்..வாத்தியார்களும் 10 க்கு 7, 8 என்று போட்டு விடுவார்கள். ஆனால் இதுவரை எந்த வாத்தியாரும் என்னை ஊக்குவிப்பது இருக்கட்டும், நல்லா இருக்குப்பா என்று ஒரு பொய் கூட சொன்னதில்லை..ஒரு வேளை அவர்களுக்கு கவிதை பிடிக்காதோ என்னவோ!

இனிமே அப்பப்போ என் கவிதைகளுடன் உங்களை முற்றுகை இடுவேன்..ஜாக்கிரதை!!

Labels: | | edit post
இந்தியா இமயத்தை விட
உயர்ந்திருந்தது

அரசியல்வாதிகள் அனைவரும்
காந்தியாய், காமராஜராய்
மாறி இருந்தனர்

ஊழல் ஊழ்வினை
கண்டிருந்தது

லஞ்சம் நாடு
கடத்தப்பட்டிருந்தது

தீவிரவாதம்
பக்கவாதம்
கண்டிருந்தது

வறுமையின் வயிரு பசியால்
வாடிப் போயிருந்தது

பாபருடன் இராமர்
என்மராகி இருந்தார்

தமிழ்நாட்டில் காவிரி
தலைவிரி கோலமாய்
ஓடிக் கொண்டிருந்தது

'ஆயிரம் வாலா' செய்து கொண்டிருந்தவர்கள்
'அறம் செய விரும்பு' படித்துக் கொண்டிருந்தனர்

வரம்பு மீறி கனவு
காண்பதாகக் கூறி - கனவே
என் கனவு கலைத்தது!! :(

இது நான் ஒரு 5 அல்லது 6 வருஷத்துக்கு முன்னே எழுதிய கவிதை..இந்தக் கனவிற்கு இன்றும் இதே நிலைமை தான் என்று நினைக்கும் போது என் விரல்கள் type செய்ய மறுக்கின்றன..

i hope to delete this post in near (??) future..can i?

Labels: | | edit post
நான் என் நண்பர்களுடன் இருக்கிறேன். என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் 7 பேர். எல்லோரும் software field ல் தான் குப்பை கொட்டுகிறோம்.

நாங்கள் இரவு மட்டும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நான் office ல் இருந்து சீக்கிரம் போய் விட்டால் என் favourite வத்தக் குழம்பு வைத்து விடுவேன். பசங்க பாவம் துடிதுடிச்சிப் போயிடுவாங்க!! [நல்லாத் தாங்க வைப்பேன், சும்மா என்னை ஓட்றதுக்காக பசங்க இப்படி பண்ணுவாங்க!]

எங்க system படி யாராவது சமைச்சுட்டு இருந்தா, சும்மா இருக்குறவன் போய் தயிர், தொட்டுக்க சிப்ஸ் அப்படி இப்படின்னு வாங்கிட்டு வரணும். இதுல நான் எப்போவாவது மாட்டுவேன்!! நான் எப்பவுமே ஒரு வேலை சொன்னா, அதை 2 ஆக்கிடுவேன். அவ்வளவு சமத்து நான் :) இதுல எனக்கு ஞாபக மறதி வேற, கேக்கணுமா?

அதனால நான் சாமான் வாங்கப் போனா எல்லாம் சரியா எழுதிக்கொடுப்பாங்க! [அப்படியும் மறந்துருவேன்]

ஒரு நாள் நான் சாமான் வாங்க கிளம்பி போனேனா, பாதி தூரம் வந்த உடனே friend sms பண்ணான். இன்னைக்கு side dish வேணாம், potato 3/4 kg வாங்கிட்டு வான்னு சொன்னான்..சரின்னு கடைக்கு போனேன்..[அந்த aunty என்னை நல்லா sight அடிக்கும்..ஹிஹி]சரி அவங்களுக்கும் கொஞ்சம் காட்சி கொடுத்த மாதிரி இருக்குமேன்னு போனேன். [சரி சரி..] friend என்ன வாங்க சொன்னான், potato அதாவது உருளைக்கிழங்கு..நான் என்ன கேட்டேன் தெரியுமோ? அக்கா, ஒரு முக்கா கிலோ தக்காளி போடுங்கன்னேன்!!!!!!!! [எனக்கு ஆரம்பத்துல இருந்து இந்த potata, tomate குழம்பும்!] அவங்களுக்கு என்ன தெரியும் பாவம்..நம்ம ஆளு வந்துட்டான்ன மாதிரி பாத்துட்டு,

Aunty : 1 கிலோ வாங்கிக்குங்க உங்களுக்கு மட்டும் குறைச்சு போட்டுத் தர்றேன்
நான் : ஆமா இப்படி தான் எல்லாருக்கும் சொல்வீங்க எனக்குத் தெரியாதா? [அதுக்கு aunty பாத்துச்சே ஒரு பார்வை..நான் அவளை hurt பண்ணிட்டேனாம்..ஆஹா!! ஒரு கூட்டமாத் தான்யா அலையிராய்ங்க..நம்ம கிட்டேயே வர்றாங்களே!!]

so, அந்த பார்வையில் பயந்து போய், ஒரு கிலோ வாங்கிக்கிட்டேன்..எது, 3/4 கிலோ கிழங்கு வாங்கிட்டு வாடான்னா, 1 கிலோ தக்காளியோட நிக்கிறேன்..friend உள்ளே போன உடனே சொன்னான், என்னடா கிழங்கு வாங்காம தக்காளி வாங்கிட்டு வந்துருக்கேன்னு? அப்போ ஒடிச்சு எல்லா யோசனையும், இதுல அவரோட add up வேற..நினேச்சேண்டா..பையன் ஒரு தடவைல ஒரு வேலயை முடிக்க மாட்டானேன்னு" மானமே போச்சு..aunty எனக்குன்னு கம்மியா கொடுத்துருக்காடான்னேன்..அதற்கு அவர்கள் பதில்:

"இதுக்கு பிச்சை எடுக்கலாம்!!" [உபயம்: சூரியன் படம் - கவுண்டமணியைப் பார்த்து ஒமக்குச்சி சொல்லும் dialogue..

அதுக்கு நான் : இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!

சத்தியமா எனக்கு potato னா, உருளைக்கிழங்குன்னு தெரியும்..[என்னை நம்புங்க please], அவன் ரசம் வைக்கப் போறதா சொன்னான்..அப்போ 3/4 கிலோ தக்காளி எதுக்கு? அப்படியாவது யோசிச்சிருக்கணும், அதான் மண்டையிலே ஒன்னும் இல்லையே!! அவன் கிழங்க அவியல் [அவியல் தானா அது?] மாதிரி பண்ணலாம்னு கேட்ருக்கான்!! என்னை அனுப்புனா அவன் நினைச்சது நடக்குமோ?

இப்படி தான் நேத்தும் ஆச்சு!!

உப்பு - 1 pocket
parachut oil - 100 ml
milk
curd
mixture/காராபூந்தி

நேரா கடைக்கு போனேன் [actuala வளைஞ்சு வளைஞ்சு தான் போனேன்..ஹிஹி]. அந்த கடையிலே மிக்சர், காராபூந்தி எல்லாம் கிடைக்காது..[என் கஷ்ட காலம்!] so except side dishes, எல்லாம் வாங்கிட்டேன். அப்படியே வீட்டுக்கு போயிட்டேன்..நான் செஞ்ச தப்புக்கு நான் தானே போகனும், so இன்னொரு தடவை கடைக்குப் போய் side dish வாங்கினேன்..

so எல்லாமே தப்பு தப்பா செய்றதே என்னோட ஒரு தப்பான பழக்கமாயிடுச்சு..ஏன்னு தெரியலை..எனக்குன்னு ஒரு உலகத்துல நான் மட்டும் என் கனவுகளோட சுத்திட்டு இருக்கேன்..இதை நான் நகைச்சுவையா உங்களுக்கு சொல்றேனே தவிற எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..நான் எப்போ திருந்தப் போறேன்னு தெரியலை..சொல்ல மறந்துட்டேன்..நேத்து அப்படி என்ன தான் யோசிச்சுட்டு இருந்தேன்...நேத்து april fool day!!

இதை படத்துல ஒரு scenea வைக்கனும்னா என்ன செய்யலாம்னு யோசிச்சேன்..அதை நான் சொல்றேன்..உங்களுக்கு புடிச்ச herione ஐ நீங்க கற்பனை பண்ணிக்குங்க..என்ன? hero யாருன்னு சொல்லலயா? இதுல என்னங்க doubt? அகில உலக கலை நாயகன் ப்ரதீப் தான்..[என் வீட்ல எனக்கு பசங்க வைச்ச பேரு..ஹிஹி]


sunny day
Location : spencer plaza!
caste : hero, herione [hero நான்னு சொன்னதாலே அது ஒரு ஜொள்ளு பார்ட்டி character னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்..ஹிஹிஹி]
situation : இரண்டு பேரும் first time பாக்குறாங்க

Hero [herione அழகுல மயங்கி..]: Hello! என்னைத் தெரியுதா?
Herione : [பயந்து போய்] இல்லையே! யாரு நீங்க?
Hero : no problem. எனக்கும் உங்களைத் தெரியலை!
Herione [கடுப்பாகி] : excuse me..
Hero [cool] : excused!
[Herione : கடுப்பாகி போயிட்டே இருக்கா!!]
Hero [பின்னாடி ஓடிப்போய்]: 1 sec, என்னைத் தப்பா நெனைக்காதிங்க..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க! இதை சொல்லனும்னு தோனிச்சி..அதான்..sorry..bye! [மெல்ல நடந்து போறான்!]
Herione : [ஒன்னும் புரியாம..மெல்ல நடந்து போறா!]
Hero : excuse me..[அவள் திரும்பிப் பார்க்கிறாள்!] நீங்க நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு april 1st..அதான் just உங்களை fool பண்ணேன்..நீங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்லை!! ;) [சொல்லிட்டு அவள் பதில் எதிர்பார்க்காதவனாய் போகிறான்]
[Herione முகம் கோபத்தால் சிவக்கிறது! வெறுப்புடன் நடந்து போகிறாள்!]
Hero : மறுபடியும்..excuse me..[அவள் மறுபடியும் திரும்பிப் பார்க்கிறாள்!] நான் இப்போ தான் சும்மா சொன்னேன்..நீங்க உண்மையிலேயே அழகா இருக்கீங்க..:)
[Herione : அவளுக்கு லேசா சிரிப்பு வருது..]
Hero : இப்போ இன்னும் ரொம்ப அழகா..:)
[Herione முகம் இந்த முறை நாணத்தால் சிவக்கிறது!! Hero பார்த்துக்கொண்டே நிற்கிறான்...]

so, என்ன சொல்றீங்க? இதை இன்னும் hotel room போட்டு யோசிச்சேன்னா நல்லா கொண்டு வரலாம்..

சுஜாதா எதோ book ல சொல்லி இருந்தாரு..உன் கதையை யாராவது திருடாம இருக்கணும்னா, உன் கதையை எழுதி உனக்கே நீ register post பண்ணிக்கோ..அது ஒரு record மாதிரி ஆயிடும்..அப்புறம் யாராவது திருடினாக் கூட case போட்டு easy ஆ ஜெயிக்கலாம்னாரு..ஆனா அவர் சொன்ன ஐடியாவை விட என்கிட்ட ஒரு better ஐடியா இருக்கு..உங்க கதையை யாரும் திருடாமல் இருக்கணும்னா..best கதையே எழுதாதீங்கோ¡¡¡¡¡¡¡...