Showing posts with label கூகுள். Show all posts
Showing posts with label கூகுள். Show all posts

இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம். கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. அதில் நானும் ஒருவன். இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை நான் என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்

3. ஒரு லேப்டாப்

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.

பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது. ஆனால் கூகுள், ஒரு படம், ஒரு உள்ளீட்டு வசதி, ஒரு பொத்தானை வைத்துக் கொண்டு காட்டும் படம் இருக்கிறதே அப்பப்பா.....சமீபத்தில் கூட சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தன் அலுவலகத்தைச் சுற்றி உள்ள புற்களை சமன்படுத்த இயந்திரத்தை உபயோகிக்காமல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்! வேலை பாத்தா இங்கே பாக்கணும்!

சினிமாக்காரனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று வகை தொகை தெரியாமல் நாம் பல பேரை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து [என்ன அரசியல்வாதிகளை விட்டுட்டேனா? இல்லை தெரியாம தான் கேக்குறேன், அவங்களுக்கும் சமூகத்துக்கும் என்ன சார் சம்மந்தம்?] . பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைத்து வாழும் பல வித நிறுவனங்களுக்கு மத்தியில் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பில் ஒரு பங்காவது நம்மில் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டி தொடங்கும் போதே இதைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்தேன். பதியமுடியவில்லை. என் சமூக பொறுப்பு எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த போட்டியின் அழகியல் என்னை மிகவும் கவர்கிறது. இப்படி ஒரு தலைப்பை குழந்தைகளிடம் கொடுத்து தங்களுடைய லோகோவை வடிவமைக்கச் சொல்லி அழகு பார்ப்பது எத்தனை பேருக்கு வரும்? நாங்க தான் நாசமா போயிட்டோம், நீங்களாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க என்று குழந்தைகளுக்கு இந்த வகையில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது. எத்தனை வண்ணமயமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறது. கூகுளில் இதே பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குழந்தைகள் சலைத்தவர்கள் இல்லை என்பதை கீழ் உள்ள படங்கள் பறைசாற்றுகின்றன. எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்...

வெற்றி பெற்ற படம்


3வது படிக்குது...நானோடேக்னாலஜி அதுலயும் அண்டத்துல...

வாங்கப்பா பீச்சுக்கு என்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரல், ராணுவ ஆடைகளை எங்கே தொங்க விட்டிருக்கிறார் பாருங்கள்!



இந்தப் படம் தப்பு தான், உலகத்தை ஒரு அமைதியான இடத்துக்கு தூக்கிட்டு போகுதாம்...சுத்தி இருக்குற இடமா பிரச்சனை? உள்ளே இருக்குறவங்க தானே பிரச்சனை...ஆனாலும் அருமை...


இன்னும் பாருங்க...            




பூமி உருகுகிறது, அதன்மேல் தெர்மா மீட்டரை வைத்திருக்கிறார். அந்தப் போலார் கரடியை பாருங்கள். எத்தனை பாவமாய் உட்கார்ந்திருக்கிறது.

நம்பிக்கை துளிர் விடுகிறது...

ரணகளம்...






மிச்சத்தை வெண் திரையில் காண்க...

சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!

அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும் டெக்னாலஜி தெரிந்த மாதிரியே எவ்வளவு தான் நடிக்க முயன்றாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுதுகள். இப்படித் தான் ஒரு நா, "தல, இது வொர்க் பண்ண மாட்டேங்குது, கொஞ்சம் பாருங்க" என்றது ஒரு வால்! [மவனே தலன்னு கூப்டா கவுக்க பாக்குற, இருடி உனக்கு இருக்கு...!] கொஞ்ச நேரம் இல்லாத மூளையை கசக்கி பிழிகிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு "உன் பக்கத்துல இருக்கே அந்த சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணு!" என்றேன். [தலன்னு கூப்டா, தல அமர்க்களம் படத்துல கண்ணாடிய திருப்புன மாதிரி தானே வழி சொல்ல முடியும்!] என் கெட்ட நேரம் அந்த வாலும் அந்த படத்தை பார்த்து தொலைத்திருந்தது! நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வாலும், "என்ன தல, அன்னைக்கு பிரச்சனைன்னு சொன்னேன், என் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ண சொன்னீங்க அதுல ஒரு லாஜிக் இருந்தது! இன்னைக்கு பக்கத்துல இருக்குற சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணா என் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகும்?" என்றது! "அப்போ ஒன்னு பண்ணு IE ஓபன் பண்ணி கூகுளார் கால்ல விழுன்னுட்டு, ஓ ஹாய் கமிங் யா என்று குரு சிஷ்யனில் ரஜினி கவுதமியிடம் எஸ்கேப் ஆவுற மாதிரி நான் அப்பீட் ஆகுறதுக்குள்ள...ஸ்வபா...அப்பவே கண்ண கட்டிருச்சே! சே! சே!!

சரி, மொத பாராவுல சொன்ன மேட்டரே இன்னும் வர்லியேன்னு நீங்க நெனைக்கிறது புரியுது! கம்ப ராமாயணமே படமா எடுத்தாலும் மாளவிகாவோட ஐட்டம் சாங் இல்லைன்னா யாரு படம் பாக்க வருவா? அதோட, இந்த வாரம் நான் யாரு? ஸ்டாரு! சூப்பர் ஸ்டாரு! நம்ம சூப்பர் ஸ்டார் ஃபார்முலா என்ன? காமெடி கலந்த ஆக்ஷன்! அதானே....அந்த மாதிரி என்ன தான் இந்தப் பதிவுல மேட்டர் இருந்தாலும், காமெடி இல்லைன்னா பதிவு எடுபடுமா! அதான் இரண்டாவது பாரா பூரா காமெடி ட்ராகை ஓட விட்டோம்!..இனி ஃபுல்லா மேட்டர் தான்! என்ன தான் காமெடி பண்ணாலும் நாங்கள்லாம் சப்டில்லா மெசேஜ் வப்போம்ல...அந்த காமெடி ட்ராக்ல மெசேஜ் என்னன்னா...... உங்க பேனாவோ, உங்க புள்ளகுட்டியோ, உங்க வாழ்க்கையோ எது தொலஞ்சாலும் கூகுள்ல தேடுங்கோ கோ கோ![ஹய்யோ ஹய்யோ!]

அலுவலகத்தில் ஒரு நண்பரின் மூலம் கூகுளாரின் அனலிடிக்ஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது! இதில் சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுத்து அவர்கள் கொடுக்கும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பதிவில் இட்டுக் கொண்டால் போதும்! அதற்குப் பிறகு அது கூகுளாரின் பாடு! அடடா...பிரித்து மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதை அங்கு தான் பார்த்தேன்! உங்கள் வலைப்பதிவை இஞ்ச் இஞ்சாக அளந்து, ஆய்ந்து, உங்கள் பதிவிற்கு தினமும் எத்தனை பேர் வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து வந்தார்கள், எந்த வழியாய் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள், உட்கார்ந்து படித்தார்களா, நின்று படித்தார்களா...அட போங்கப்பா...இனிமே நீங்களே படிச்சித் தெரிஞ்சுக்குங்க!

நீங்கள் செய்ய வேண்டியது

1. What is Google analytics? மொதல்ல படிக்க வேண்டியது!
2. Login @ Google Analytics



3. உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுக்க வேண்டியது.
4. அவர்கள் கொடுக்கும் இரண்டு வரியை உங்கள் வலைப்பக்கத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
5. பிறகு நேரம் கிடைக்கும்போது லாகின் செய்து உங்களின் வலைப்பதிவின் நிலை என்ன? யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தான் டீ ஆத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது நாலு பேரு வந்து போற இடமா என்று துல்லியமாக கூகுளார் சொல்வதை கேட்டுக்க வேண்டியது!



என்ன தான் நமிதா நடிச்ச படத்தொட கதை கேட்டாலும், நமிதாவை படத்துல பாக்குற மாதிரி ஆகுமா? அதனால.... என் வலைப்பக்கத்தின் சில பிரித்து மேயப்பட்ட பகுதிகள் உங்களின் பார்வைக்கு!

நவம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி வரை என் வலைப்பதிவின் நிலவரம்:

தமிழ்மணத்தின் நட்சத்திர அந்தஸ்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது! நன்றி தமிழ்மணம்!



அப்படியே மேலாப்ல! [அதாங்க ஓவர்வீய்]



திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நம் தமிழர்கள்!



புது வரவும்/வழக்கமான வரவும்



வெவ்வேறு மொழிகள்



எத்தனை விதமான ப்ரளசர்களின் மூலம் என் வலைப்பூ படிக்கப் படுகிறது



எந்தெந்த கனெக்ஷனின் மூலம் என் வலைப்பூ பார்வையிடப்பட்டது



எந்தெந்த இணையத்தளங்களில் என் வலைப்பூவின் இணைப்பு



என் வலைப்பூவை அடையும் குறிச்சொற்கள்



என் வலைப்பூவில் எந்தப் பக்கங்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டது?



இது என்ன பெரிய விஷயமா? இன்டெர்னெட்ல இப்படி எத்தனையோ கெடைக்குது என்று சொல்பவர்களுக்கு...இது வெறும் ட்ரைலர் தாம்மா, மெயின் பிக்சர் நீ இன்னும் பாக்கலை ரேஞ்சுக்கு அதில் ஏராளமாய் இருக்கிறது! ஆங்கில பதிவுகளாய் இருந்தால் ஆட்சென்ஸையும் கோர்த்து விட்டிருக்கலாம்! தமிழுக்கு இன்னும் அது ஆரம்பிக்கப் படவில்லை! என்னாது? ஆட்சென்ஸ்னா என்னவா? ஆத்தி! ஆள விடுங்கப்பூ....