ரோட்டில் போகும் முன் பின் தெரியாத ஒரு பெண்ணின் அருகில் பைக்கை நிறுத்தினான்.

எக்ஸ்க்யுஸ்மி, இஃப் யு டோன்ட் மைன்ட், நீங்க எங்க போறீங்கன்னு சொல்லுங்க நான் உங்களை டிராப்  பண்றேன்?

நோ தேங்க்ஸ். நடந்தாள்.

ஒரு நிமிஷம், நீங்க என்னை நம்பலாம். 

உங்களுக்கு என்னை முன்ன பின்ன தெரியுமா?

இல்லை.

அப்புறம் எப்படி மிஸ்டர் நான் உங்களை நம்புறது?

உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு தோணுது. நீங்க நம்பினா வாங்க.

அவனை தீர்க்கமாய் பார்த்தாள். ஒரு வித குழப்பத்துடன் ஓகே என்றாள்!

அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பைக்கில் கொஞ்சம் முன் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு அவளுக்கு இடம் கொடுத்தான். அவள் ஜாக்கிரதையாக ஏறி உட்கார்ந்தாள். போக வேண்டிய இடத்தை சொன்னாள்.

அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். மிகவும் ஜாக்கிரதையாக வண்டியை ஓட்டினான். அவளுக்கு சிரிப்பு வந்தது.

சிறிது தூரம் சென்றவுடன், வண்டி அவளின் வீடு நோக்கி செல்லவில்லை என்று தெரிந்து கொண்டாள். 

மிஸ்டர், நான் எங்க போக சொன்னா, நீங்க எங்க போறீங்க?

எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு தான் போறேன்.

அவனை பின்னால் அடித்து, வண்டியை அசைத்தாள். பாலன்ஸ் தவறி ஸ்கிட் ஆகி பைக் வழுக்கி விழுந்தது. அவன் மெதுவாய் போய் கொண்டிருந்ததால் இருவருக்கும் அதிகம் அடிபடவில்லை. உடலை தட்டிக் கொண்டே எழுந்தார்கள். 

இதுக்கு தான் நான் உங்க கூட வர மாட்டேன்னு சொன்னேன். இது தான் நான் சொன்ன இடத்துக்கு போற வழியா?

இது வேணா சரியான வழியா இல்லாம இருக்கலாம், ஆனா இது நீ போக வேண்டிய சரியான இடம் தான்.

புரியாமால்...நான் யார்னு உங்களுக்கு தெரியுமா?

ரொம்ப நடிக்காதே! நீ ஒரு பிராத்தல் கேஸ்னு எனக்கு தெரியும். ஆமா, நான் யார்னு உனக்கு தெரியுமா?

[அதிர்ச்சியுடன்] அலட்சியமாய்...தெரியாது! 

இந்த ஏரியாவுக்கு புதுசா வந்துருக்குற இன்ஸ்பெக்டர்!

அலட்சியம்++, கொஞ்சம் நல்ல பொண்ணா நடிச்சு பாப்போமேன்னு நெனச்சேன். அதான் உங்களுக்கே தெரியுமே, அப்புறம் என்ன? உங்களுக்கு வேண்டியதை இங்கேயே முடிச்சுக்கலாமே, எங்க கூட்டிட்டு போறீங்க? சார், இதுக்காகவே ஸ்பெஷலா பண்ணை வீடு வச்சுருகீங்களோ?

நீ நெனைக்கிற மாதிரி ஆள் இல்லை நான். ஒழுங்க ஸ்டேஷனுக்கு வா..

கோவுசுக்காதீங்க சார்.... உன்னை மாதிரி நான் எத்தனை பேரை பாத்திருப்பேன் என்று அவனின் சட்டையை அவிழ்க்க முற்படுகிறாள்!

அவன் பளீரென்று அவள் கன்னத்தில் ஒரு அரை விட்டான். அவள் எட்டிப் போய் விழுவதற்கும் அங்கு ஒரு கார் வந்து நிற்பதற்கும் சரியாய் இருந்தது. அந்த காரின் ஹெட் லைட் அவளின் கண்களில் பட்டு அவள் கண்கள் கூசியது. காரிலிருந்து ஒரு கரை வேட்டி இறங்கியது!

இன்ஸ்பெக்டர் சல்யுட் அடித்தான்.

இங்கே பாரு, ரோட்லே ஆரம்பிச்சுடீங்களா? [அவனை பார்த்து] என்னய்யா பிரச்சனை?  

சார், ரவுண்ட்ஸ் வந்தேன் சார். இவ இங்கே பிராத்தல் பண்றான்னு நியுஸ் வந்தது, ஃபாலோ பண்ணி மடக்கிட்டேன் சார். ஸ்டேஷன் கூப்பிட்டா முரண்டு பண்றா சார். 

அவள் மெல்ல எழுந்து அவரை பார்த்து புன்னகைத்தாள்.

அது சரி, ஒண்ணு பண்ணு, நீ வண்டிய எடுத்துட்டு கெளம்பு. நான் இவளை ஸ்டேஷனுக்கு அனுப்புறேன்!

இல்லை சார், நானே கூட்டிட்டு போயிடறேன் சார்.

யோவ், சொன்னா புரிஞ்சுக்க மட்டீறு! நாளைக்கு மெதுவா ஸ்டேஷனுக்கு வரட்டும்! என்ன அவசரம்? என்ன கண்ணு? கார்ல ஏறு!

அவனின் பதிலுக்கு காத்திருக்காமல் அவளை காரில் ஏற்றி, கார் நகர்ந்தது. அவள் காரின் கண்ணாடியின் வழியே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்! அவன் தரையில் ஓங்கி ஒரு உதை  விட்டான்.

அடுத்த வாரம் ஸ்டேஷனுக்கு அவனின் பெயருக்கு ஒரு கவர்ன்மென்ட் ஆர்டரும், ஒரு லெட்டரும் வந்தது.

அந்த ஆர்டர் அவனின் ப்ரமோஷன் ஆர்டர்!

லெட்டரில்...

ஆர்டர் கைல வாங்கி இருப்பேன்னு நெனைக்கிறேன். ஆச்சர்யமா இருக்கா? இருக்கும். அன்னைக்கு நீ என்னை வண்டியில கூப்டப்ப நான் யாருன்னு தெரியாம தான் கூப்பிடறே, சரி இவனுக்கு ஏதோ சபலம், வண்டியில கூட்டிட்டு போற சாக்கில இவனும் கொஞ்சம் வாழ்ந்துட்டு போறான்னு நெனச்சி தான் ஏறினேன். நீ போலீஸ்னு எனக்கு தெரியாது. என்னை பத்தியும் உனக்குத் தெரியாதுன்னு நெனைச்சேன். ஆனா, லைஃப் ல எப்படியெல்லாம் ட்விஸ்ட் பாத்தியா? நெனச்ச சிரிப்பா வருது! ஆனா, நீ ரொம்ப நல்லவன்யா. அன்னைக்கு நடந்ததை நெனைச்சி எனக்கு என்னமோ உன் மேல பாவமா இருந்தச்சி. என்னை அனுபவிக்கவும் முடியல, உன் கடமை தவறாம என்னை ஸ்டேஷன் கொண்டு போய் தண்டனை வாங்கி கொடுக்கவும் முடியலை.  உனக்கு ஏதாவது பண்ணனும்னு தோணுச்சி! அதான் இந்த ஆர்டர். சொன்னா நம்பமாட்டே, உங்க டிபார்ட்மென்ட்ல எனக்கு நெறைய்ய ஃபிரண்ட்ஸ் இருக்காங்கப்பா...ஏதாவது வேலைன்னா சொல்லு...

இப்படிக்கு
இப்போதைக்கு "மைனா"

பல வித எதிர்பார்த்த/எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த குட்டிக் கதையை எழுதி விட்டேன். இது ஒரு வழக்கமான சுஜாதா ஸ்டைல் கதை. இதற்கு மேல் கதையை எப்படி கொண்டு போகலாம் என்று சொல்லுங்கள்..ஒரு கண்டிஷன், கதையின் ட்விஸ்ட் வித்தியாசமாய், எதிர்பாராததாய் இருக்க வேண்டும்! இதுவும் சுஜாதா ஸ்டைல் தான்!

0 Responses