ஸ்டார் பதிவராய் இருந்து கொண்டும், பச்சை [யாரும் என்னை பச்சை நிறத்தில் கற்பனை செய்து பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!] ரஜினி ரசிகனாய் இருந்து கொண்டும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் அன்று அவரைப் பற்றிய பதிவு போடவில்லை என்றால் எப்படி என்று யோசித்தேன். சரி எழுதலாம் என்று ஆரம்பித்த்வுடன் தான் தெரிந்தது, எப்பவோ அதைப் பற்றி எழுதி ஆகிவிட்டது என்று! அட ரஜினி....
சரி இப்போது என்ன செய்வது என்று வண்டி ஒட்டிக் கொண்டே யோசித்த போது நேராய் ஒரு மடிசார் மாமியின் பேக்கில் இடித்து, கட்டையில போறவனே என்று என்னை அவர் திட்ட, அதைக் கேட்ட நான் ஐய்யோ, இது பைக் மாமி என்று எஸ்கேப் ஆன போது எனக்கு உதித்தது இந்த யோசனை! என்ன யோசனை?
இது ரீமிக்ஸ் காலம்! ஏன் திரைப்படங்களைத் தான் ரீமிக்ஸ் பண்ண வேண்டுமா? பதிவுகளை ரீமிக்ஸ் பண்ணக்கூடாதா? திடீரென்று அப்படி ஒரு 40 வாட்ஸ் பல்ப் என் மூளையில் பளிச்சிட்டதன் விளைவு இந்த ரீமிக்ஸ் பதிவு! அதாவது வலையுலகின் இலக்கணப்படி ஒரு மீள்பதிவு! எப்படி யோசனை? ஒரிஜினல் பதிவு இங்கே!
சூப்பர் ஸ்டாருக்கும் எனக்கும் பால்ய சிநேகிதம்! ஆனால் அந்த சிநேகிதத்தைப் பற்றி அவருக்கோ வேறு யாருக்குமோ தெரியாது! [தூ..இதுக்கு பிச்சை எடுக்கலாம்!] நேத்து பொறந்த வாண்டெல்லாம் மொட்டை ரஜினி மாதிரி மண்டையை தட்டிக் கொண்டிருக்கும் போது, ரஜினியோடவே வளந்தவங்க நாங்க..எங்க அலம்பலை எல்லாம் கேக்கனுமா?
வயித்தைக் கட்டி வாயைக் கட்டி எங்களை படிக்க வைத்த பெற்றோர் எங்கள் [நானும் என் தம்பியும்] கண்ணை மட்டும் கட்டாமல் எப்போது ரஜினி படம் வந்தாலும் மறுக்காமல் கூட்டிச் சென்றனர்! அது ஒரு காலம்!
"கண்ணா அறுலையும் சாவு, நூறுலையும் சாவு அநியாயத்தை கண்டா சும்மா அடிச்சி தூள் பண்ணு" என்று ஒரு வசனம் பேசி விட்டு சும்மா பறந்து பறந்து அடிப்பேன்!
20 வருடத்திற்கு முன் பரட்டைத் தலையுடன், அடிக்கடி தலையைக் கோதிக் கொண்டு, சட்டை பட்டன் போடாமல், பாதி டக் இன் செய்து கொண்டு, சாக்ஸுக்குள் பேண்ட் விட்டுக்கொண்டு தெருவில் விளையாடும் ஒரு பையனைப் பார்த்திருந்தால் அது சாட்சாத் நானே தான்! என்ன ஒரு சின்ன கஷ்டம், நான் எம்.ஜி.ஆர் கலர்! [அட்றா..அட்றா..]
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ரைம்ஸ் சொல்வது போல் மூன்று முகம் வசனம் அத்தனையும் பேசிக் கொன்டிருப்பேன்! சாம்பிள் பாக்குறீங்களா?
சங்கிலி முருகன்: அலெக்ஸ்!
அலெக்ஸ்: யேய், பேரை சொல்லிக் கூப்ட நாக்க இழுத்து வச்சு அறுத்திடுவேன்!
சமு: போலீஸ் படையே உன் பக்கம் இருக்குன்ற தைரியத்துல தானே எங்களை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட?
அ: போலீஸ் படையா? உங்களைப் புடிக்க போலீஸ் படை எதுக்குடா இந்த அலெக்ஸ் பாண்டியனோட நாய் போதும்!
சமு: எங்க பாஸ் பத்தி உனக்கு தெரியாது?
அ: என்னடா பூச்சாண்டி காட்றியா? யாருடா உங்க பாஸ்? அவன் என்ன பெரிய கொம்பனா?
செந்தாமரை: இல்லீங்க! அவன் அப்படிச் சொல்லலீங்க!
அ: [கதவருகில் வந்து நின்று] யார் நீங்க?
செ: என்னை பாத்து யார் நீன்னு கேட்ட மொத ஆள் நீங்க தான்!
அ: பாத்தவுடனே புரிஞ்சிக்கிறதுக்கு நீங்க என்ன அவ்வளவு பெரிய புள்ளியா?செ: நீங்க இந்த டிவிஷனுக்குப் புதுசு, இந்த ஏகாம்பரத்தோட பேரைக் கேட்ட அழுகுற கொழந்தை கூட வாய மூடும்!
அ: ம்...[பூமை சுற்றிக் கொண்டே] அதே கொழந்த கிட்ட போய் இந்த அலெக்ஸ் பாண்டியன் பேரைச் சொல்லி பாருங்க..இன்னொரு கையால தன் அம்மா வாயையும் மூடும்! [முறைப்பு!]
சரி விடுங்க...பூரா படத்தையுமா எழுத முடியும்! சாவகாசமா வீட்டுக்கு வாங்க...நடிச்சே காட்டிருவோம்! :) [அங்கே யார்ரா அது நியுட்டன் மூன்றாவது விதி என்னன்னு கேக்குறது? என்ன சின்ன புள்ளத் தனமா இருக்கு ரேஸ்கல்ஸ்!]
பழநி சென்ற போது ராகவேந்திரா காப்பு தான் வேண்டும் என்று அடம் பிடித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது! என்று தலைவர் நடு உச்சி எடுக்க ஆரம்பித்தாரோ அன்றிலிருந்து நானும் நடு உச்சி எடுத்து தான் சீவுவேன்! அம்மாவுக்கு எரிச்சலாய் வரும்...என்டா இப்படி உச்சி எடுக்குற என்று கேட்பார்...தெரிந்தால் திட்டு விழும் என்று நான் என்னம்மா பண்றது..அதுவா வருது என்று ஓடி விடுவேன்! தலைவரின் படப் பாடல்கள் எப்படி எனக்கு மனப்பாடம் ஆகிறது அது எப்படி இன்று வரை நினைவிலிருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை! ஒவ்வொரு படத்திலும் எல்லா பாடல்களும் அத்துப்படியாய் இருக்கும்! தளபதி சரியாக நவம்பர் 5ம் தேதி 1991ல் தீபாவளிக்கு வந்தது [கஷ்டம்!] . அன்று எண்ணெய் வைத்து தலை குளித்து வந்ததும் டீவியில் ஒளியும் ஒலியுமில் ராக்கம்மா கையத் தட்டு பாடல் ஒளிபரப்பினார்கள். தலைவர் லாங்க் ஷாட்டில் ஒரு மதில் சுவர் மேல் நின்று கொண்டு கையைத் தூக்கி "வக்கிர வானம் அந்த வானையே தைக்கனும் தம்பி விடு ஜோராக" என்றது தாம் தீபாவளி பிறந்த மாதிரி இருந்தது. அதை நான் நவம்பர் 14ம் தேதி 8 மணி ஷோ பார்த்தேன் [ரொம்பக் கஷ்டம்] ! என்ன இவ்வளவு டிலே என்கிறீர்களா, 9ம் தேதியே பார்க்கப் போனேன், டிக்கட் கிடைக்காமல் பக்கத்து தியேட்டரில் ஓடும் ஒரு பாடாவதி படம் [குணா!!!!] பார்க்க நேர்ந்தது! [நிற்க: அப்போது எனக்கு அது பாடாவதி படம் தான்!!]
என்னிடம் யாராவது ரஜினி மென்டல் என்று சொன்னால் போதும், அந்த இடத்தில் உடனடியாய் நான் மென்டல் ஆகி விடுவேன்! அப்புறம் என்ன...இப்புடு சூடு என்று பறந்து பறந்து அடிக்க வேண்டியது தான்! நான் குழந்தையாய் ரசித்த ரஜினி, இன்றைய குழந்தைகளும் ரசிக்கும் போது இப்படியும் ஒரு வாழ்க்கை யாருக்காவது கிடைக்குமா என்று தோன்றும்? சிவாஜி வந்த புதிதில் என் மேனஜர் ஒருவர், ரஜினிக்கு 57 வயசு! எங்க அம்மாவை விட வயசானவர்! என்றார்...அந்த ஒரு கணம் நான் பிரமித்துத் தான் போய் விட்டேன்!
ரஜினியின் சில நச் வசனங்கள்! [இதை யார் சொல்லியிருந்தாலும் இந்த அளவுக்கு பிரபலமாயிருக்குமா என்பது சந்தேகம் தான்!]
டீக் ஹை [மூன்று முடுச்சு]
குருவம்மாக்கு பாவாடை போட்டா கூட நல்லா தான்டா இருக்கும்! இது எப்படி இருக்கு? [16 வயதினிலே]
வச்சுக்க நீ! [போக்கிரி ராஜா]
ஓ! இப்டி ஒன்னு இருக்கோ? [தம்பிக்கு எந்த ஊரு]
கெட்ட பய சார் இவன்! [முள்ளும் மலரும்]
இந்த உலகத்திலே யாரும் உன்னை விட பெரியவன் இல்லை, அதனால நீ யாருக்கும் பயப்படாதே, இந்த உலகத்திலே உன்னை விட யாரும் சின்னவன் இல்லை, அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே! [தில்லு முல்லு]

தீப்பட்டிக்கு ரெண்டு பக்கம் உரசினா தான் தீப்புடிக்கும், ஆனா இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு எந்தப் பக்கம் உரசினாலும் தீப் புடிக்கும்!ஜெகஜ் ஜாலக் கில்லாடிட மச்சான்![மூன்று முகம்]
மிஸ்டர். கோபிநாத்! இந்த உலகத்துல தான் தான் பெரியவன்னு யாரும் நெனச்சிடக்கூடாது! அவனுக்கு அப்பனும் பொறந்து இருப்பான்! [மிஸ்டர். பாரத்]
பாஸ், நான் படிச்சா உருப்படமாட்டேன்னு எங்க அப்பா படிக்க வைக்கல, எஸ் கிஸ் மீ! [குரு சிஷ்யன்]
ஒரு மொட்ட, ஒரு மீசை, நாலு ஸ்கூல் பசங்க! இதுக்கு ஒரு தலைவன்!டேய் கந்தசாமி இங்கே வாடா...[ராஜாதி ராஜா]
டேய் தூ! [ராஜா சின்ன ரோஜா, ரஜினி மாதிரி யாரலயும் துப்ப முடியாது!]

இந்த பீடி முடியிறதுக்குள்ள உங்க தலைவன் கதய முடிச்சிட்றேன்! [பணக்காரன்]
ஏன்னா நீ என் நண்பன்! [தளபதி]
உங்களை மாதிரி அகங்காரமும், அகம்பாவமும் புடிச்ச பொண்ணுங்களைக் கண்டா என்ன விட்டுடுங்க, என் தல முடி கூட ஆடாது![மன்னன்]
மலைடா அண்ணாமலை![அண்ணாமலை]
நம்ம ஆளுங்க கிட்ட நம்ம மொழியில பேசுங்க! அதான் நமக்கும் மரியாதை நம்ம மொழிக்கும் மரியாதை [எஜமான்]
ஹவ் இஸ் இட்?[வீரா]
இனிமே உன்னை இந்த இடத்துல பாத்தேன், பாத்த இடத்துலயே குழி தோண்டி பொதச்சுடுவேன்! நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி! [பாட்ஷா]
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது! கிடைக்காம இருக்கிறது கிடைக்காது! [முத்து]
பாத்து வேலை செய்! பாத்தவுடனே வேலை செய்யாதே![அருணாச்சலம்]
என் வழி தனி வழி! [படையப்பா]
இல்ல முருகேஷா...[சந்திரமுகி!]
பேரைக் கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல![சிவாஜி]
நான் ரஜினி ரசிகன் என்று மார் தட்டியதில் மேல் சொன்னதில் ஏதேனும் பிழை இருந்தால்...எவ்வளவு பிழை இருக்கிறதோ அவ்வளவுக்கு பரிசை குறைத்துக் கொள்ளுங்கள்![ஐய்யயோ இந்த டயலாக் சிவாஜி பிறந்தநாளுக்கு வேணுமே!]
last but not least....
தலைவா, என் பேரக் குழந்தையும் உங்களை ரசிக்கனும்! அதுவரைக்கும் நீங்க நடிக்கனும்! அம்புட்டுதேன்! லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெகுவாக ரசித்துப் படித்தேன்...கலக்கிப்புட்டீங்க...வரிக்கு வரி ரிப்பீட்டு.. :)
//
தலைவா, என் பேரக் குழந்தையும் உங்களை ரசிக்கனும்! அதுவரைக்கும் நீங்க நடிக்கனும்! அம்புட்டுதேன்! லேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!//
அதே தான் :))
நன்றி பி்ரதீப்!!
சொல்ல மறந்துட்டனே..தலைவரோட அந்த மொத ஸ்டில் எனக்கு ரொம்ப புடிச்ச ஸ்டில்...போன வருசம் பொறந்த நாளுக்கு இதே போட்டோவை என் பதிவுல பேனர் போட்டு வச்சிருந்தேன் ;)
கப்பி,
ரீமிக்ஸ்னாலே ஹிட்டுங்கிறீங்க! நன்றி...
நான் மறக்காம சொல்றேன்! உங்களை நான் அப்படியே வழிமொழிகிறேன்! அற்புதமான ஸ்டில்!
பதிவு நல்லா இருக்கு.......ரஜினிய அணு அணுவா ரசிப்பீங்க போல இருக்கு??!!:):)
உங்க தலைவன் அவரோட பொறந்த நாளைக்கி ஒரு குச்சு முட்டாயாவது குட்த்தாரா?
ப்ரதீப்,
நிறைய இடத்துல Same bloodனு சொல்ல வச்ச பதிவு.
நம்ம மட்டும்தான் இப்டி மெ**லா இருக்கோமோனு பல தடவை தோணும். இப்ப அந்த சந்தேகம் தீர்ந்துபோச்சு. Just kidding :)
-- Vicky (http;//vicky.in/dhandora)
Excellent. I really enjoyed reading this post.
Rumya
Btw நட்சத்திர வாரத்துல இந்த கதை மாதிரியான இன்னொரு விபரீத முயற்சியை எதிர்பார்க்கிறேன்
-- Vicky (http;//vicky.in/dhandora)
ராதா,
பச்சை ரசிகன்னா சும்மாவா?
குச்சு முட்டாய்,
எந்த தொந்தரவும் இல்லாம பெங்களூர் போயிட்டாரு! தமிழ்நாட்டுல சம்பாதிச்சதை எல்லாம் பெங்களூர்ல முதலீடு பண்றாரு! அவர் மேல இது போல் எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், அது வேற பக்கம்! அதை விமர்சித்து ஒரு தனி பதிவே போடலாம்! வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் தானெங்க இது? நான் ரசிக்கிறது அரிதாரம் பூசிய ரஜினியை! அவர் வசனத்தை காப்பி அடிச்சி பதிவு போட்ட எனக்கே இத்தனை பாராட்டு கிடைக்கும் போது, அதை இந்த அளவுக்கு நம்ம [என்] மனசுல நிறுத்துனவரைப் பத்தி பிறந்தநாள் அதுவுமா எழுதுறது என்னங்க தப்பு? டீக் ஹை?
விக்கி,
மறுபடியும் மெ**லா நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க, பறந்து வந்து அடிக்கிறேன்! அதே கிட்டிங் தாங்க...ஹிஹி
ரம்யா,
ரீமிக்ஸ் காலம்!
மறுபடியும் விக்கி,
உமக்கு இருந்தாலும் ஓவர் குசும்பைய்யா! எவ்வளவு நாள் தான் நானும் வெறும்னே அதை பத்தி எழுதிட்டே இருக்கிறது...ஏதேது, என் வலைப்பக்கத்தை பரங்கிமலை ஜோதி ரேஞ்சுக்கு ஆக்கிடுவீங்க போல இருக்கே?
Boss innum onnu,
Kodi Parakkudhu : Annanungala, Jeans potta chittunga kooda vilayadalaam, aana singathoda vilayadalaama?
BTW, his personal investments.. I/anyone can not claim whether it is correct or not. I bought land in my native, I work in bangalore. Some people may claim the remuneration difference. For those, who get 1000, 1500 rs. a month, anything more than 10000 is big money.
anony,
"mr. gopinath intha ulagathula thaan thaan periyavannu evanum nenachurakoodathu...avanukku appanum poranthuruppaan!"
antha dialogue thaan gnabakam varuthu enakku..yosichi yosichi ivvalavu ezhuthinen, aana onnai vittutene..hehehe good one!
athe padathula ellarum avarai adikka bikela varuvaanga, ivar styla ukkanthu bikai off pannunganu solvaaru..oruthan vandi mattum urumitte irukkum! athukku thalaivar ore vaarthai solvaaru....
"clutchai vidra mundam!!"
dhool.......
Great post
Great post
அதிருது பதிவு! சூப்பர்!
ரஜினி ரசிகன் இல்லன்னா பின்னூட்டம் போடலாம்ல? :)
ரசிகன் இல்லன்னாலும், நான் ஒரு சக நடிகன். அன்புள்ள ரஜினிகாந்த்ல, அரை டவுசர் போட்டுக்கிட்டு, மை தடவின கண்ணாடியோட குச்சி வச்சுக்கிட்டு கும்பலோட கோயிந்தா போன கோஷ்டீல நானும் ஒருவன் :)
font சிறுசா இருக்கு. கண்ணு வலிக்குது. டயலாக்ஸ் கலரும் கஷ்டமா இருக்கு படிக்க.
ரஜினியின் தீவிர ரசிகன் இல்லாத எனக்கு ஞாபகம் இருக்கும் டயலாம் மனிதன் படத்துல வர 'மெனிதன்'. இருக்கா? மறந்திட்டீங்களா?
again again again again