சத்தியமாக இது பெரியாருக்கு சம்மந்தப்பட்ட பதிவல்ல! இணையத்தின் தற்போதைய பெரியோரைப் பற்றியது! இது வலைப்பதிவாளர்களை பொறுத்த வரை ஒரு உருப்படியான பதிவாய் இருக்குமென்று நம்புகிறேன்! இதைப் பற்றி வேறு யாராவது பதிவிட்டிருக்கிறார்களா என்று கொஞ்சம் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் நானே கோதாவில் இறங்குகிறேன்!
அலுவலகத்தில் சில வால் பையன்கள் இருக்கிறார்கள்! நானும் டெக்னாலஜி தெரிந்த மாதிரியே எவ்வளவு தான் நடிக்க முயன்றாலும் எப்படியோ கண்டுபிடித்து விடுதுகள். இப்படித் தான் ஒரு நா, "தல, இது வொர்க் பண்ண மாட்டேங்குது, கொஞ்சம் பாருங்க" என்றது ஒரு வால்! [மவனே தலன்னு கூப்டா கவுக்க பாக்குற, இருடி உனக்கு இருக்கு...!] கொஞ்ச நேரம் இல்லாத மூளையை கசக்கி பிழிகிற மாதிரி ஆக்ட் குடுத்துட்டு "உன் பக்கத்துல இருக்கே அந்த சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணு!" என்றேன். [தலன்னு கூப்டா, தல அமர்க்களம் படத்துல கண்ணாடிய திருப்புன மாதிரி தானே வழி சொல்ல முடியும்!] என் கெட்ட நேரம் அந்த வாலும் அந்த படத்தை பார்த்து தொலைத்திருந்தது! நான் எதிர்பார்த்த மாதிரியே அந்த வாலும், "என்ன தல, அன்னைக்கு பிரச்சனைன்னு சொன்னேன், என் சிஸ்டத்தை ரீ ஸ்டார்ட் பண்ண சொன்னீங்க அதுல ஒரு லாஜிக் இருந்தது! இன்னைக்கு பக்கத்துல இருக்குற சிஸ்டத்தை ரீ-ஸ்டார்ட் பண்ணா என் சிஸ்டம் எப்படி வொர்க் ஆகும்?" என்றது! "அப்போ ஒன்னு பண்ணு IE ஓபன் பண்ணி கூகுளார் கால்ல விழுன்னுட்டு, ஓ ஹாய் கமிங் யா என்று குரு சிஷ்யனில் ரஜினி கவுதமியிடம் எஸ்கேப் ஆவுற மாதிரி நான் அப்பீட் ஆகுறதுக்குள்ள...ஸ்வபா...அப்பவே கண்ண கட்டிருச்சே! சே! சே!!
சரி, மொத பாராவுல சொன்ன மேட்டரே இன்னும் வர்லியேன்னு நீங்க நெனைக்கிறது புரியுது! கம்ப ராமாயணமே படமா எடுத்தாலும் மாளவிகாவோட ஐட்டம் சாங் இல்லைன்னா யாரு படம் பாக்க வருவா? அதோட, இந்த வாரம் நான் யாரு? ஸ்டாரு! சூப்பர் ஸ்டாரு! நம்ம சூப்பர் ஸ்டார் ஃபார்முலா என்ன? காமெடி கலந்த ஆக்ஷன்! அதானே....அந்த மாதிரி என்ன தான் இந்தப் பதிவுல மேட்டர் இருந்தாலும், காமெடி இல்லைன்னா பதிவு எடுபடுமா! அதான் இரண்டாவது பாரா பூரா காமெடி ட்ராகை ஓட விட்டோம்!..இனி ஃபுல்லா மேட்டர் தான்! என்ன தான் காமெடி பண்ணாலும் நாங்கள்லாம் சப்டில்லா மெசேஜ் வப்போம்ல...அந்த காமெடி ட்ராக்ல மெசேஜ் என்னன்னா...... உங்க பேனாவோ, உங்க புள்ளகுட்டியோ, உங்க வாழ்க்கையோ எது தொலஞ்சாலும் கூகுள்ல தேடுங்கோ கோ கோ![ஹய்யோ ஹய்யோ!]
அலுவலகத்தில் ஒரு நண்பரின் மூலம் கூகுளாரின் அனலிடிக்ஸ் அறிமுகம் எனக்குக் கிடைத்தது! இதில் சென்று உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுத்து அவர்கள் கொடுக்கும் இரண்டு வரிகளை உங்கள் வலைப்பதிவில் இட்டுக் கொண்டால் போதும்! அதற்குப் பிறகு அது கூகுளாரின் பாடு! அடடா...பிரித்து மேய்வது என்று கேள்விப் பட்டிருக்கிறேன், அதை அங்கு தான் பார்த்தேன்! உங்கள் வலைப்பதிவை இஞ்ச் இஞ்சாக அளந்து, ஆய்ந்து, உங்கள் பதிவிற்கு தினமும் எத்தனை பேர் வந்தார்கள், எந்த நாட்டிலிருந்து வந்தார்கள், எந்த வழியாய் வந்தார்கள், எவ்வளவு நேரம் படித்தார்கள், உட்கார்ந்து படித்தார்களா, நின்று படித்தார்களா...அட போங்கப்பா...இனிமே நீங்களே படிச்சித் தெரிஞ்சுக்குங்க!
நீங்கள் செய்ய வேண்டியது
1. What is Google analytics? மொதல்ல படிக்க வேண்டியது!
2. Login @ Google Analytics
3. உங்கள் வலைப்பதிவின் உரலை கொடுக்க வேண்டியது.
4. அவர்கள் கொடுக்கும் இரண்டு வரியை உங்கள் வலைப்பக்கத்தில் அவர்கள் சொல்லும் இடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டியது.
5. பிறகு நேரம் கிடைக்கும்போது லாகின் செய்து உங்களின் வலைப்பதிவின் நிலை என்ன? யாருமே இல்லாத கடையில் நாம் மட்டும் தான் டீ ஆத்திக் கொண்டிருக்கிறோமா அல்லது நாலு பேரு வந்து போற இடமா என்று துல்லியமாக கூகுளார் சொல்வதை கேட்டுக்க வேண்டியது!
என்ன தான் நமிதா நடிச்ச படத்தொட கதை கேட்டாலும், நமிதாவை படத்துல பாக்குற மாதிரி ஆகுமா? அதனால.... என் வலைப்பக்கத்தின் சில பிரித்து மேயப்பட்ட பகுதிகள் உங்களின் பார்வைக்கு!
நவம்பர் 11ம் தேதியிலிருந்து டிசம்பர் 11ம் தேதி வரை என் வலைப்பதிவின் நிலவரம்:
தமிழ்மணத்தின் நட்சத்திர அந்தஸ்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டி விட்டது! நன்றி தமிழ்மணம்!

அப்படியே மேலாப்ல! [அதாங்க ஓவர்வீய்]
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நம் தமிழர்கள்!
புது வரவும்/வழக்கமான வரவும்
வெவ்வேறு மொழிகள்
எத்தனை விதமான ப்ரளசர்களின் மூலம் என் வலைப்பூ படிக்கப் படுகிறது
எந்தெந்த கனெக்ஷனின் மூலம் என் வலைப்பூ பார்வையிடப்பட்டது
எந்தெந்த இணையத்தளங்களில் என் வலைப்பூவின் இணைப்பு
என் வலைப்பூவை அடையும் குறிச்சொற்கள்
என் வலைப்பூவில் எந்தப் பக்கங்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டது?
இது என்ன பெரிய விஷயமா? இன்டெர்னெட்ல இப்படி எத்தனையோ கெடைக்குது என்று சொல்பவர்களுக்கு...இது வெறும் ட்ரைலர் தாம்மா, மெயின் பிக்சர் நீ இன்னும் பாக்கலை ரேஞ்சுக்கு அதில் ஏராளமாய் இருக்கிறது! ஆங்கில பதிவுகளாய் இருந்தால் ஆட்சென்ஸையும் கோர்த்து விட்டிருக்கலாம்! தமிழுக்கு இன்னும் அது ஆரம்பிக்கப் படவில்லை! என்னாது? ஆட்சென்ஸ்னா என்னவா? ஆத்தி! ஆள விடுங்கப்பூ....
எனக்கு இன்றைக்குதான் சனி உச்சத்துல இருக்குன்னு நினைக்கின்றேன்.................
வாழ்த்துக்கள்...............
அருள்,
ஏன் என்ன ஆச்சு? என்னடா, இந்தப் பதிவு யாருக்குமே புரியலையோ யாரும் பின்னூட்டமிடலையேன்னு இருந்தேன்! ஆனா நீங்க போட்ட பின்னூட்டம் கடைசியில எனக்கு புரியமாட்டேங்குது!!
பிரதீப், இந்த இடுகைக்குப் பின்னூட்டம் வராத காரணம் இது ஏற்கனவே பலருக்கும் தெரியும்; பலரும் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இருக்கலாம். நான் இந்த இடுகையைப் படித்தேன்; புதிதாக எதுவும் இல்லை. அதனால் பேசாமல் போய்விட்டேன். :-)
வாவ்!
தகவலுக்கு நன்றி, பிரதீப்!!
விட்டா எந்த வீட்டில இருந்து பார்க்கிறாங்க..வீட்டு முகவரி, பேரு..னு அவுங்க சரித்திரம் குடுத்திருவானுங்க போல...ம்ம்ம்!
/இது ஏற்கனவே பலருக்கும் தெரியும்/
ஓ..நம்மதான் கடைசியா...?! :(
நாங்களும் இருக்குறோமில்ல...நமக்கும் இப்போ தான் தெரியும் :)
நன்றிங்க.
பிரதீப்,
வணக்கம்.........
உங்களுடைய பதிவு அனைத்தும் நன்று......
உங்களை பற்றி விவரங்களை படிக்கும் போது, நீங்க முதல் பதிவு எழுதின நாளை படிப்பவர் எல்லோருக்கும் சனி உச்சத்துல இருக்கின்ற நாள் என்று எழுதி இருந்திங்க............நான் நேற்றுதான் முதல் முறையாக உங்களுடைய பதிவை படித்தேன் என்பதை உன்ங்களுடய மொழியிலேயே சூசகமாக சொன்னேன்........அவ்வளவுதான்......ஒரு நகைச்சுவைக்காகதான் ,ஆனா என்னுடைய நகைச்சுவை இப்படி எழுதி விளக்கம் கொடுக்கிற அளவுக்கு கேவலமா இருந்திருக்குன்னு இப்பதான் புரியுது......
(தூ....இதெல்லாம் ஒரு நகைச்சுவையா அப்படின்னுதானே கேக்குறிங்க.........)
தவறாக எதுவும் நினைத்துக்கொள்ள வேண்டாம்...
குமரன்,
ஓ அப்படியா? நானும் இதைப் பற்றி யாராவது வலைபதித்திருக்கிறார்களா என்று பார்த்து யாரும் இதைப் பற்றி சொல்லவில்லையே, மிக நல்ல விஷயமாய் இருக்கிறதே என்ற ஆர்வத்தில் சொன்னேன்!
தென்றல்,
உபயோகப்படுத்தி பாருங்கள்! அப்பொழுது தெரியும் அதன் அருமை :)
நன்றி காட்டாறு
அருள்
நான் எழுதியதை வைத்துத் தான் நீங்கள் ஏதோ காமெடி பண்ணுகிறீர்கள் என்று புரிந்தது, ஆனால் அது எந்தப் பதிவு என்று மறந்து விட்டேன்! கடைசியில் அது நட்சத்திரத்துக்கு நான் கொடுத்த இன்ட்ரோவாய் இருக்கிறது. பல தடவை நல்ல நகைச்சுவையும் எடுபடாமல் போய் விடும்! அது உங்கள் தவறல்ல. என் தவறு தான்! என் பதிவுகளைப் படித்து ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி!