விஸ்வரூபம் படத்தில் கமலின் "Directorial Touches" விளக்கிக் காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் ஓடுகிறது. கமல் புத்திசாலி. திரை மொழி நன்கு அறிந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் அத்தனை அறிவையும், திரை ஞானத்தையும் வைத்துக் கொண்டு எந்த மாதிரி படங்களை எடுக்கிறார் என்பதில் தான் எனக்கு ஒரு உறுத்தல். விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொள்வோம். அது ஒரு மிகச் சாதாரண மசாலா படம். துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல்சை வைத்து ஜல்லி அடித்த மாதிரி இதில் சீசேம் செல்சை வைத்து ஜல்லி அடித்து இருக்கிறார்கள். [தாங்க்ஸ் வாத்தியார்!]
படத்தின் ஆரம்பத்தில் ஒருவன் மிக நல்லவனாய், அமைதியானவனாய், அம்மாஞ்சியாய் இருப்பான், அவனே ஒரு சந்தர்ப்பத்தில் முப்பது பேரை பறந்து பறந்து [மறைக்கப்பட்ட ரோப்பை பிடித்திருக்கும் கையை கவனிக்கவும்!] அடிப்பான் என்று இனிமேல் தமிழ் சினிமாவில் யாராவது படம் எடுத்தால் உண்மையில் நானே அப்படி மாறி அந்த படம் எடுத்தவர்கள் அத்தனை போரையும் பறந்து பறந்து அடிப்பேன்! இன்னும் எத்தனை வருஷம்யா இதே கதையை சொல்லுவீங்க? உங்களுக்கு ட்விஸ்ட் தானே வேணும்? நான் சொல்ற மாதிரி செய்யுங்க! படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன், அம்மாஞ்சியாய் அப்பாவியாய் இருப்பான். அவன் படம் முடியும் வரை அப்படியே இருப்பான்! மக்கள் எல்லோரும் இவன் விஸ்வரூபம் எடுப்பாண்டா என்றே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அனால், அவன் கடைசி வரை அப்படியே இருப்பான். எப்படி ட்விஸ்ட்? [என்ன கழுத, படம் ஓடாது!]
அந்த வீடியோவுக்கு வருவோம். கமல் விஸ்வரூபம் படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் போகிற போக்கில் கதைக்கு தேவையான பல விஷயங்களை பூடகமாக சொல்லிக் கொண்டே போகிறார். அதை திரும்ப திரும்ப பார்த்தால் தான் புரியும் என்கிறார்கள். கண்டிப்பாய் நானும் ஒத்துக் கொள்கிறேன். பூடகமாக பல விஷயங்களை வைத்திருக்கிறார் தான். ஆனால் அவர் எப்படிப்பட்ட ஒரு கதைக்காக இதை எல்லாம் செய்கிறார் என்பதில் தானே அதன் வலு குறைந்து விடுகிறது! "நோலன்" படங்களில், "குப்ரிக்" படங்களில் இப்படி பல விஷயங்கள் பூடகமாய் இருக்கும். அதோடு நல்ல ஒரு கதையும் இருக்கும். அந்தக் கதையின் கருவை நினைத்து, பிரமித்து, மீண்டும் மீண்டும் நாம் பார்க்கும் போது அடப்பாவி, இங்கேயே இதை சொல்லிட்டானா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அது அற்புதமான ஒரு படானுபவத்தை கொடுக்கும். இந்த மாதிரி படங்களை அலசி ஆராய்ந்து நூறு பதிவுகள் இருக்கிறதே, அவைகளை படியுங்கள்.
நான், கஜினி படம் பார்க்கும்போது பதினைந்து நிமிடத்தில் மறக்கும் ஒருவனால் எப்படி கொலை எல்லாம் செய்ய முடியும்? எல்லாவற்றையும் அவன் ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்குள் மறுபடியும் மறந்து விடுவானே என்ற கேள்வி தான் என் மனதில் இருந்தது! படம் கலகலவென்றும், விருவிருவென்றும் இருந்தாலும், அந்த லாஜிக் இடைஞ்சலே என்னை அதிகம் தொந்தரவு செய்தது. அதுவே அந்தப் படத்தின் மூலமான மெமெண்டோவை பாருங்கள். அந்த இடைஞ்சல் இருக்காது. முதல் முறை படம் பார்க்கும்போது உங்களுக்கு பயங்கரமாய் குழம்பும். மறதி உள்ளவன் வாழ்க்கை அப்படித் தானே இருக்கும்? இதை தான் நான் சொல்கிறேன். சொல்ல வந்த கதையை நேர்மையாய் சொல்லுங்கள் என்று. அவர்கள் அதை தான் செய்கிறார்கள். ஹாலிவுட் தரத்தில் படம் எடுக்க விரும்பினால், அதே மாதிரி எடுக்க வேண்டியது தானே? ஏன் தமிழ்நாட்டு மசாலாவை அதில் தடவுகிறீர்கள்?
கமலிடம் நான் எதிர்பார்ப்பது ராஜ பார்வை, பேசும்படம், மகாநதி போன்ற படங்களை..அமைதியாய் இருக்கும் ஒருவன் அம்பது பேரை அடிப்பான் என்பதையெல்லாம் ரஜினிகாந்த் பார்த்துக் கொள்வார். அதுக்குத் தானேப்பா அவரை வச்சிருக்கோம்! அவர் இன்னும் நூறு படத்தில் அதை செய்தாலும் நாம் பார்ப்போம்! என்ன நான் சொல்றது?
அப்புறம் கமலை பற்றி இவ்வளவு பேசுறதால, இதுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு விஷயத்தையும் இங்கே சொல்லணும். நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் அபூர்வ ராகங்களில் ரஜினி தேர்வானத்தை பற்றி சொன்னார். அதை பயங்கர டிவிஸ்டுடன், சுவாரஸ்யமாய் தான் சொன்னார். ஆனால் என்னைப் பொருத்தவரை அது அவரின் முகத்திரையை தான் கிழித்தது. விஷயம் இது தான். அபூர்வ ராகங்கள் வரும்போது இவர் பாலச்சந்தரின் ஆஸ்தான சீடன் ஆகிவிட்டார். இவர் தான் அந்தப் படத்தின் கதாநாயகன். ரஜினி ரோலுக்காக ஆள் எடுத்துக் கொண்டிருக்கும்போது இவர் அங்கு இருந்திருக்கிறார். "என்னடா, செம ரோலாய் இருக்கும் போல இருக்கே...எவனோ வந்து தட்டிட்டு போயிடுவான் போல இருக்கே!" என்று இவர் பதறி இருந்திருக்கார். பாலச்சந்தரிடம் போய், "சார் நான் பண்றேனே" என்றாராம். அவர் "நீ தான் இந்த படத்துல ஆல்ரெடி நடிக்கிறியே?" என்றாராம். "இல்லை சார், பரவாயில்லை, இதையும் நானே டபுள் ரோலா பண்ணிடறேனே" என்றவரை, "அதெல்லாம் வேணாம், நீ போடா" என்று பாலச்சந்தர் விரட்டி விட்டார். அந்த ரோலுக்குத் தான் பிறகு ரஜினியை போட்டார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இவர் அப்போது பாலச்சந்தரின் பிரதான சிஷ்யன். அவரின் எல்லா படங்களிலும் தொடர்ந்து நடிக்கிறார். நடிக்கப் போகிறார். அந்தப் படத்தின் கதாநாயகனே இவர் தான்! அது ஒரு தம்மாதுண்டு ரோல். அதையும் பிறருக்கு விட்டுக் கொடுக்க இவருக்கு மனமில்லை. என்ன தான் கலை தாகம், தொழில் பக்தி என்றாலும் ஒரு அளவில்லையா? இங்கே என்ன நவராத்திரி படமா எடுக்குறாங்க? சாவித்திரி தவிர எல்லாமே சிவாஜி கணேசனா இருக்கிறதுக்கு? நல்ல வேலை பாலசந்தர் கொஞ்சம் அசந்திருந்தாருன்னா நமக்கு ரஜினி கெடைச்சுருப்பாரான்னு சந்தேகம் தான்! ம்ம்...கமலை மட்டும் சொல்லி தப்பில்லை. "அவாள்ல" முக்காவாசி பேர் அப்படித் தான் இருக்கா!

Arumai sir.. Naan nenachadhe apdiye potrukeenga.. Veliya sonna nammale nakkala papppange..
Pradeep..super...u got guts to expose whatever in ur mind..
ஒரு ஆர்வதுள்ள பண்னனும்குற ஆசையில் அப்படி சொல்லி இருப்பார் அவாளிலேயே இவர் கொஞ்சம் நல்லவர் அவ்வளவே
// "அவாள்ல" முக்காவாசி பேர்///
ஏன் ”இவாள்”ல எல்லாரும் அப்படியே மகாத்தமாக்களா.... எவனாவது அரசமரத்தடி ஆண்டி மொட்டை மண்ட கடைச்சா.... அப்பபாப்பா....
R சந்திரசேகரன்