முகப்புத்தகத்தில் தமிழ் பழமொழிகளை இந்த காலத்துக்கு ஏற்ப மாற்றி எழுதியிருந்தார்கள். மிகவும் ரசித்தேன். உங்கள் பார்வைக்கு சில:
ஒரு பானை சோத்துக்கு - ஒரு குண்டா சாம்பார்
தம்பி உடையார் - அண்ணன் செட்டியார்!
தோல் கொடுப்பான் - கறிக்கடை பாய்!
ஊரார் புள்ளைய நீ ஊட்டி வளத்தா - உன் பொண்டாட்டி உன்னை சந்தேகப்படுவா..
நல்ல மாட்டுக்கு - அஞ்சு கிலோ புண்ணாக்கு
காற்றுள்ள போதே தூங்கி விடு - கரண்ட் போனா தூக்கம் வராது!
இதை படிச்சுட்டு நம்ம கை சும்மா இருக்குமா? ஆனா, இதை ரசிக்க உங்களுக்கு கீழ் கண்டவற்றின் சரியான பதிப்பு தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாம் பிரபலமானவை தான், தெரியும் என்று நம்புகிறேன்!
பசி வந்தால் - கொட்டிக்கோ
ஐந்தில் வளையாததை - அனாவசியமா வளைக்காதே
கந்தலானாலும் - ஜீன்ஸ் பேன்ட்
கூழானாலும் - ராவா குடி
ஆழமறியாமல் - தூர் வாராதே
விரலுக்கேத்த - மோதிரம்
வீட்டை கட்டி பார் - ஈ எம் ஐ கட்டிப் பார்
மரத்தை வச்சவன் - அதை வெட்டி பிளாட் கட்டுவான்
பெத்த மனம் பித்து - அஞ்சும் அஞ்சும் பத்து
சின்ன மீனை போட்டு - கொழம்பு வை மொதல்ல
இக்கரைக்கு அக்கரை - டார்க் பச்சை
Super!
Very funny... - kasi
Thanks Anony :-)
Thanks Kasi :-)