அமெரிக்காவை பொறுத்த வரை நாளை தான் மார்ச் 19. இன்று பதிவு போட்ட பிறகு தான் தெரிந்தது இந்தியாவில் இன்று 19 என்று![நான் எவ்வளவு வெகுளி பாருங்க!] புவியியல் படி பாத்தா [அதாவது இந்திய நேரப்படி பாத்தா] இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்! இது வரை நீங்கள் என் வலைப்பதிவின் லோகோவை [ஒ, லோகோ எல்லாம் வேற இருக்கா?] கவனிக்கவில்லை என்றால், நான் வலைப்பதிவு ஆரம்பித்து இத்துடன் 6 வருடங்கள் ஆகி விட்டன. என் வாழ்வில் நீண்ட காலம் செய்த உருப்படியான காரியம் [என்று நான் நினைப்பது] இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுதி வருவது! நேற்று ஆரம்பித்தவர்கள் எல்லாம் இருநூறு முன்னூறு என்று பதிவுகளைப் போட்டு தாக்கிக் கொண்டிருக்கும் போது நான் இப்போது தான் இருநூறை தொட இருக்கிறேன். ஆமை வேகம் தான்! இருந்தாலும் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி! இத்தனை காலமும் தொடர்ந்து என்னை வாசித்து எனக்கு ஊக்கமளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கு நன்றி!

பின் குத்து: ஒரு பேனாவை கையில் வைத்துக் கொண்டு, மேலே விட்டத்தை நோக்கிக் யோசித்துக் கொண்டிருப்பது போல் என்னுடைய போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை..தப்பித்தீர்கள்!

12 Responses
  1. Sivakumar Says:

    ஏன் அப்படி ஒரு போட்டோவை பிடித்து போடா வேண்டியது தானே!

    6 வருடத்திற்கு வாழ்த்துக்கள்.



  2. Unknown Says:

    //ஒரு பேனாவை கையில் வைத்துக் கொண்டு, மேலே விட்டத்தை நோக்கிக் யோசித்துக் கொண்டிருப்பது போல் என்னுடைய போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை.//

    இதெல்லாம் ஓவரா தெரியலை


  3. siva,

    irunthalum unakku romba thaan dairiyam! vazhthukku nandri,

    suresh,

    ellam unga inspiration thaan!

    jai,

    hehehe..vidunga vidunga..ithellam pathivulagula sagajam!


  4. Anonymous Says:

    வாழ்த்துக்கள் டா! கீப் ரைட்டிங் அண்ட் கீப் என்டர்டைனிங்!

    -
    வெங்கடேஷ்


  5. sure da venki, thanks for ur visits and comments though!


  6. கிரி Says:

    பிரதீப் ஆறு வருடத்திற்கு வாழ்த்துக்கள்... பெரிய விஷயம் தான் :-)


  7. Sathish Says:

    பிரதீப்,

    கலக்கிடீங்க! 6 வருடமென்பது சாதாரன விஷயமா!!! உங்களோடத படிச்சு பதிவு எழுதத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன்..[வெளிய சொல்லக் கூடிய விஷயமா இது!!! ஹி ஹி ஹி ] தொடர்ந்து எழுதுங்கள்...


    பெய்யென பெய்யும் உங்கள் பேனாவிற்கு,
    'மை' என உதவும் எங்கள் ஆதரவு.....[அட்ரா அட்ரா ]


  8. giri/Satya,

    Thanks for your encouragement and comments!

    Satya,

    Sollittu appuram enna oru kelvi!!


  9. வலைப்பதிவில் ஆறு வருடங்கள் என்பது ஓர் அபார சாதனை. இன்று தற்செயலாகத் தான் உங்கள் பக்கம் வர நேர்ந்தது.

    முழு எழுத்துக்களையும் மேலோட்டமாகப் பார்த்ததில் சிறந்த தமிழ் அறிவியல் புலமையும் கண்ணியமும் மென்மையான நகைச்சுவையும் மிளிரக் கண்டேன்.

    உங்கள் கவிதைகள் மிக நன்றாக இருக்கின்றன.

    மீண்டும் வந்து ஆறுதலாக முழுவதையும் வாசிக்க வேண்டும்.

    உங்கள் எழுத்துக்குள் துலங்குகிறது நல்லதொரு மனிதனின் இதயம்.

    உங்கல் வலைப்பதிவின் அறிமுகம் கிட்டியதில் நிரம்ப மகிழ்ச்சி.

    வாழ்த்துக்கள்!தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆவல்.


  10. மணிமேகலா,

    தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தங்களுடைய பின்னூட்டம் எனக்கு மிகப் பெரிய தெம்பை தருகிறது! கண்டிப்பாய் நல்லதாய் தொடர முயற்சிக்கிறேன். அடிக்கடி வந்து என்னை ஊக்கப்படுத்துங்கள்!