நீ ஏன்க்கா இந்த தொழிலுக்கு வந்தே?

ஆரம்பிச்சிட்டியா நீயும்?

சும்மா சொல்லு

எல்லாம் ஒரு சோஷியல் சர்வீஸ் தான்!

எது? இதுவா? அய்யே! இதுக்கு பேரு சோஷியல் சர்வீசா?

பின்ன நீ செய்றதா சோஷியல் சர்வீசு?

நானா சொன்னேன், நீ தான் சொன்னே?

ஆமா, நான் சொன்னேன். சொல்றேன். அதுக்கு என்ன?

இது எப்படி சோஷியல் சர்வீஸ்?

என்ன நீ புஸ்தகம் கிஸ்தகம் படிக்கிறதில்லையா?

இது சோஷியல் சர்வீஸ்னு எந்த புஸ்தகத்துல போட்ருக்கான்?

எங்களை மாதிரி பொம்பளைங்க இருக்குறதால தான் இன்னைக்கு குடும்ப பெண்கள் மிச்சமிருக்காங்க! அதை தெரிஞ்சுக்கோ நீ!

இது உனக்கே ஓவரா இல்ல?

அட யார்ரா இவன்? சரி, எங்க சர்வீசே இல்லைன்னு வச்சுக்கோ, 15 வயசுல வயசுக்கு வந்த நீ 35 வயசாகியும் ஒண்ணுமே பண்ணலைன்னா வெறி புடிச்சி போய் ரோட்ல போற பொண்ணை கை புடிச்சி இழுப்பியா மாட்டியா? எங்களை மாதிரி பொண்ணுங்க இருக்கும்போதே உங்க அட்டூழியம் சீரழியுது, பேப்பர் படிக்கலை? இதுல நாங்க இல்லைன்னா இந்த சொசைட்டி என்ன கதிக்கு ஆகும்? ஒரு இத்துப் போன டையையும், அந்த பாழடைஞ்சு போன மேன்சனையும் கட்டிட்டு அழற? உன் தங்கச்சிங்க 3 பேருக்கு உன் மெடிக்கல் ரெப் வேலையுல சம்பாதிச்சி பவுன் சேத்து கட்டிக் கொடுத்து கல்யாணம் பண்ண நீ இன்னொரு ஜென்மம் தான் எடுக்கணும்! இவ்வளவு கேள்வி கேக்குற அப்போ நீ ஏன்டா இங்கே வர்றேன்னு நான் உன்னை கேக்க முடியாது, ஏன்னா நீ வந்தா தான் என் பொழப்பு ஓடும்! அதுவுமில்லாம உன்ன சொல்லி குத்தமில்லை..., உனக்கு பசி! பசிச்சா சாப்டு தான் ஆகணும்? உங்களுக்கு பசிக்கிற வரை நாங்க பரிமாறிட்டே இருக்க வேண்டியது தானே?

எம்மாடி, என்னா மெசேஜ்! உன்கூட படுத்தவங்ககிட்ட துட்டு மட்டும் வாங்காம அவங்களோட உலக அறிவையும் வாங்கி இருப்பே போல! சூப்பர்! ஆமா, நீ ஏன் அரசியல்ல குதிக்கக் கூடாது? பெரிய ஆள் ஆயிடுவே!

பெரிய ஆள் ஆகி?

உன் பொது நலத் தொண்டை நல்லா செய்யலாம்ல?

நான் காந்தி மாதிரி, பெரியார் மாதிரி பதவியில இல்லாம என் சேவையை தொடர்ந்துக்குறேன்!

நல்லா வேலை இதெல்லாம் கேக்க அவங்க உயிரோட இல்லை! உன்னோட ஜெனரல் நாலேஜ் என்னால தாங்க முடியலை! என்ன படிச்சிருக்கே நீ?

பத்தாங் கிளாஸ்ல எங்க ஊர்ல நான் தான் பஸ்ட் மார்க் தெரியுமா?

அடங்க கொக்கமக்கா! அப்படியே படிச்சி டாக்டர் இஞ்சினியர்னு ஆயிருக்கலாம்ல? கை நிறையா சம்பாதிச்சிருக்கலாம்!

கை நெறையவா? ஹஹஹா, இப்போ தான் உடம்பு நெறைய சம்பாதிக்கிறேனே! உனக்கு புடிக்கலையா?

இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்! என்ஜினீயர், டாக்டர், வக்கீல் இவங்க சம்பாதிக்கிறதும், நீ சம்பாதிக்கிறதும் ஒண்ணா?

அவங்களுக்கு நான் என்னடா குறைஞ்சு போயிட்டேன். சொல்ல போனா அவங்களை விட நான் எவ்வளவோ மேல்!

நீ ஃபிமேல் ஆச்சே!

அடச்சீ சொல்றதை கேளு! இஞ்சினியருங்க பாலம் கட்றேன், அபார்ட்மென்ட் கட்றேன்னு அரைகுறையா கட்டி பணத்தை கொள்ளை அடிச்சி அநியாயம் பண்றாங்க! டாக்டருங்க ஒரு கிட்னி சரி செஞ்சா இன்னொரு கிட்னியை டிப்ஸா எடுத்துக்குறானுங்க! அப்புறம் என்ன சொன்ன? வக்கீலா? இப்போ எவன்டா வக்கீளுகெல்லாம் படிக்கிறான்? நான் என்ன சொல்ல வர்றேன்னா, அவங்களை மாதிரி கஸ்டமர்களை நாங்க ஏமாத்துறதில்லை! கையில காசு, வாயில தோசை! ஆமா... இன்னொன்னு சொல்றேன் கேட்டுக்கோ, என்ஜினீயர் அறிவை விக்கிறான், வக்கீல் வாயை விக்கிறான். நான் என் உடம்பை விக்கிறேன்! அவனவன்கிட்ட இருக்குறதை அவனவன் விக்கிறான்! அவங்க எல்லாரையும் விட நாங்க சரியா விக்கிறோம்! பாத்துக்க...இவங்களோட எல்லாம் என்னை சேத்து வச்சி இன்சல்ட் பண்ணாத! சொல்லிட்டேன்.

சரி ஒத்துக்குறேன், உன் தொழிலை பத்தி இவ்வளவு பெருமையா பேசுறியே எந்த பொண்ணாவது இந்த தொழிலை புடிச்சி செய்வாளா? பொண்ணுங்களுக்கு லவ் தான் முக்கியம், அப்புறம் தான் மத்ததெல்லாம் அப்படீன்னு பேசிக்கிறாங்க! எப்படி மடக்குனேன் பாத்தியா?

அடடடா..அறிவு வழியுது தொடச்சுக்கோ! நீ சொல்றது என்னமோ கரெக்ட் தான்! எந்தப் பொம்பளையும் இந்த தொழிலை புடிச்சி செய்ய மாட்டா! ஆனா, நீயே சொல்லு இன்னைக்கு எத்தனை என்ஜினீயர் புடிச்சி போய் என்ஜினீயரா இருக்கான் இங்கே? உன்னையே எடுத்துக்கோ, கொளுத்துற வெயில்ல டையை போட்டுட்டு நாயா சுத்துறியே, உனக்கு புடிச்சா நீ செய்றே? எத்தனை பேருக்கு புடிச்சது கெடைக்குது? கெடைச்சதை எடுத்துக்க வேண்டியது தான்! அதானே வாழ்க்கை!

பிலாசபி ஓவரா இருக்கே! இதுக்கு பதில் சொல்லு, நீ செய்ற தொழில் சட்டப்படி குற்றமாச்சே? இதுக்கு என்ன சொல்லப் போறே?

சட்டமா? அட ஏன்டா நீ ஒரு வெவரம் புரியாதவன்! இந்தா புடி, இது என்னோட வக்கீல் கஸ்டமர் எனக்கு சொன்னது!

வக்கீலே கஸ்டமரா? கஷ்டம்!! சொல்லு..சொல்லு!!

ஒரு பொண்ணுக்கு 18 வயசு ஆனா அவளுக்கு புடிச்சவன் கூட போகலாம்! இது சட்டம். ஆனா அவளை பெத்தவங்க, எங்க பொண்ணுக்கு நாளைக்கு தான் 18 வயசு ஆகுது இன்னைக்கு இவ மைனர் தான்னு அவளை தர தரன்னு இழுத்துட்டு போகலாம். சட்டப்படி அது சரி! ஆனா கொஞ்சம் யோசிச்சி பாரு; இன்னைக்கு அது ஓடி வந்தது தப்பு, நாளைக்கு ஓடி வந்திருந்தா அது சரி! எப்படி இருக்கு உங்க சட்டம்?

சட்டம் ஒரு இருட்டரைன்னு எனக்கு இன்னைக்குத் தான்க்கா வெளங்கியிருக்கு! ரைட்டு, உங்களால தான் எய்ட்ஸ் வந்துச்சு! அது உங்க சர்வீஸ்ல ஒண்ணுன்னு வச்சுக்கலாமா?

வச்சுக்கோ! உன்னை யாரு வேணாம்னா? கண்ணு, ரோட்ல ஆக்சிடெண்ட்ல டெய்லி நூறு பேர் சாவுறான், அதுக்காக ரோட்ல போகாமயா இருக்கோம்? ஹெல்மட் போட்டுட்டு வண்டியை ஒட்டு! அப்போ கூட சில அடிகள் படத் தான் செய்யும்! அவ்வளவு பயம் இருந்தா ஒருத்தியோட போதும்னு பொத்திட்டு இருக்க வேண்டியது தானே? ஏன் ஊர் மேயிறீங்க? அதெல்லாம் ஒத்துக்க முடியாதுன்னா , மக்கள் தொகையை கொறைக்குறதுக்கு நாங்க கவர்மெண்டுக்கு செய்ற சர்வீஸ்னு வச்சுக்கோயேன்!!

யப்பா, நீ கட்சி ஆரம்பிச்ச எங்கேயோ போயிடுவே! என்னாமா பேசுற நீ?! அப்போ நீ செய்றது தப்பே இல்லைன்ற?

தப்பேயில்லை, இப்போ எல்லாம் கால் கேள்ஸ் மாதிரி கால் பாய்சே இருக்காங்க, தெரியுமா? உங்க ஜென்மத்துக்கு தான் லவ்வே தேவையில்லையே! நீ தான் வேலையே புடிச்சி செய்யனும்னு சொல்றியே? செய்றியா? உனக்கு ஒரு சான்ஸ் வாங்கி தர்றேன்!

ஆள விடு ஆத்தா நீ!

ஹஹஹா..வந்துட்டான் பேட்டி எடுக்க!!
8 Responses
 1. Sivakumar Says:

  ம்ம்ம்ம்... நல்லாவே யோசிச்சு எழுதியிருக்கே....

  // மக்கள் தொகையை கொறைக்குறதுக்கு நாங்க கவர்மெண்டுக்கு செய்ற சர்வீஸ்னு வச்சுக்கோயேன்//

  ஒரு வகையில கரக்ட் தான் போ!

  இப்ப இருக்கிற வக்கீலு, டாக்டரு, இன்ஜினியர எல்லா கம்பேர் பண்ணா இவங்க தான் சின்சியரிடிலே பெஸ்ட்.

  சிவா.


 2. thanks siva...ippadi yosikkumbothu enakku onnum avnaga seirathu kevalamaana thozhila theriyalai...


 3. Sathish Says:

  தைரியமாக எடுத்த கருவுக்கு என் முதல் பாராட்டுக்கள்...பல நாடுகளில், இந்த தொழில் சட்ட விரோதமல்லனு சொல்லி இருக்காங்க..ஏன் னு கேட்டா இத சட்ட விரோதம்னு தடை செய்தா, பலாத்காரம் அதிகமாகுதாம்....அமெரிக்கா போன்ற சில மேலை நாடுகள்லே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு விதயாசமான முறையில் இருப்பதாய் அறிந்து ஆச்சரியமா இருந்தது...என்னனு கேட்டா, "நான் 1 வருடம் ஒரு பொண்ணோட இருக்கேன்னா, அந்த வருடம் முழுவதும் அவளை தவிர வேறு பெண்ணை பார்க்க மாட்டேன் என்பதே அவர்களின் ஒருவனுக்கு ஒருத்தி பாலிசி...என்னமா யோசிக்கிறாங்க?


 4. sathish,

  ethanayo naatla intha thozhil satta virothamaa illaindra pointai ezhuthalaamnu nenachen, but i found that major/minor law interesting. pesama namma 2 perum americaalaye poranthurukkalam! :(


 5. Unknown Says:

  இந்த பதிவ உங்க கிட்ட இருந்து நான் எதிர்பாக்கலை. இது பதிவர் சங்கத்துக்கு நீங்க விடும் ஒரு எதிர்ப்பு என்று நான் எடுத்துகொள்ளலாமா


 6. jai,

  aaha, korthu vidrathunna ithu thaanaa? intha pathivukkum pathivar sangathukkum enna sir sammantham? ennamo en moozhai ippadi ellam konal maanala yosikkuthu, athai pathivaa potrukken! aala vudunga sir!!


 7. A.S.Ramnath Says:

  என்னடா blog "ரூட்டு" மாறி போகுது


 8. ramnath,

  hahaha..appadi ellam onnum illaida, ellam ukkaanthu yosikkirathaala vantha vinai!