முழு நிலவான உன்னைப் பற்றி
ஒரு கவிதை எழுத முயற்சிக்கிறேன்
என் மேஜை எங்கும் வார்த்தைகள்
நட்சத்திரங்களாய் கொட்டிக் கிடக்கின்றன!

நீ எனக்காக வடிக்கும்
கண்ணீரில் எல்லாம்
எனக்கான உன்
காதல் வழிகிறது

நீ கண்ணை மூடிக் கொண்டாய்
என் உலகம இருண்டு விட்டது!

எந்த ஜென்மத்தில் நான்
என்ன புண்ணியம் செய்தேனோ
நீ என் தெருவில் வசிக்கிறாய்

நீ வெட்கப்படுவதற்கும்
மழை ஆரம்பிப்பதற்கும்
சரியாய் இருக்கிறது!

உனக்கான என் காதல்
உன்னை சாதாரணப்
பெண்ணிலிருந்து
தேவதை ஆக்குகிறது!

நீ தூரத்தில் எங்கோ பேசுவது கேட்கிறது...
தேனீக்கள் என் காதுகளை
வட்டமடிக்கின்றன!

நீ என்னை ஓரக் கண்ணால் பார்
அடிக்கடி என்னை கடந்து செல்
உன் தோழிகளுடன் கூடிச் சிரி
என் கனவுகளில் வந்து போய்க் கொண்டிரு
நான் காதலில் திளைக்கிறேன்
வேறெதுவும் வேண்டாம் எனக்கு!
இக்கணம் இப்படியே இருக்கட்டும்
3 Responses
 1. Sivakumar Says:

  //எந்த ஜென்மத்தில் நான்
  என்ன புண்ணியம் செய்தேனோ
  நீ என் தெருவில் வசிக்கிறாய்//

  Nice.


 2. Paul Says:

  மற்ற வரிகள் சாதாரணமாகப்பட்டாலும், "வேறெதுவும் வேண்டாம் எனக்கு! இக்கணம் இப்படியே இருக்கட்டும்" அந்த வரி சொல்லப்பட்ட விதம் பிடித்திருந்தது..


 3. Anonymous Says:

  "நீ வெட்கப்படுவதற்கும்
  மழை ஆரம்பிப்பதற்கும்
  சரியாய் இருக்கிறது!"

  ..கவிதை, கவிதை..சூப்பரு

  -
  வெங்கடேஷ்