நான் பார்த்த வரை அமேரிக்கர்கள் மந்த புத்திக்காரர்களாகத் தான் இருக்கிறார்கள்! [நான் பார்த்த வரை!] கடிவாளம் போட்ட குதிரை போல, தான் இத்தனை வருடங்கள் எப்படி ஒரு வேலையை செய்தோமோ, அது எத்தனை சுற்றி வளைத்து செய்ய வேண்டி இருந்தாலும் அதையே செய்கிறார்கள்! ஏன் இதற்கு இத்தனை கஷ்டப்பட வேண்டும்? இதற்கு வேறு வழி இல்லையா என்று யோசிக்கவே மாட்டார்களோ என்னமோ?
நான் பணிபுரியும் அலுவலகத்தில் ஒரு நாள் ஒரு அமேரிக்க நண்பனை வைத்துக் கொண்டு வேர்ட் டாக்குமென்டில் டாக்குமென்டிக் கொண்டிருந்தேன்..தலைப்புக்காக சிலவற்றை அடிக்கோடிட்டேன். அதாவது "கன்ட்ரோல் யு" அடித்தேன். திடீரென்று அவன் பதட்டப்பட்டு, அது எப்படி மெளஸ் இல்லாமல் நீ கோடு போட்டாய் என்று வியந்து கேட்டான்! நான் ஷார்ட் கட் கீ என்று சொல்லி எப்படிச் செய்வது என்று காண்பித்தேன்! "யு ஆர் ஜீனியஸ்" என்றான்! ஆஹா ஒருத்தன் சிக்கிட்டான்டா என்று நானும் சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய ஜீனியஸ் தனங்களை வெளிக்காட்டிக் கொண்டேன். நீ டீ ஆத்தக் கூட லாயக்கில்லை என்று பள்ளியில் என் வாத்தியார் என்னை திட்டியது எனக்கு ஞாபகம் வந்தது!! இதில் பாரட்டப்பட வேண்டிய விஷயம், தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதில் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை! நம்மைப் போல் எனக்குத் தெரியும், இருந்தாலும் உனக்கு தெரியுதா என்று டெஸ்ட் பண்ணேன் என்று பீலா விடுவதில்லை.என்னை பொறுத்தவரை, பொதுவாகவே இவர்கள் ஒரு நாள் மாங்கு மாங்கு என்று பார்க்கும் வேலையை நாம் ஒரு மணி நேரத்தில் செய்து விடுவோம் என்று தோன்றுகிறது! அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது! [மெளஸ், மவுசு எப்படி கனெக்ட் பண்ணேன் பாத்தீங்களா? அப்படி பொங்குதுங்க..சரி சரி!]
அமேரிக்காவின் பெயரை மாற்றி பேப்பரிக்கா என்று வைக்கலாம்! அத்தனை பேப்பர்களை செலவழிக்கிறார்கள்! இன்று ஒரு நாள் யாரும் எந்த வகையான பேப்பரையும் உபயோகிக்கக் கூடாது என்று சொல்லி விட்டால் போதும், பாதிக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு செத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! அலுவலகத்தில் கேட்கவே வேண்டாம்! கம்ப்யுட்டரில் ஒரு ஃபைல் தயாரித்து அதை ஒரு ஃபோல்டரில் போட்டு, அந்த ஃபைலை ப்ரிண்ட் எடுத்து அந்த பேப்பரை ஒரு ஃபைலில் போட்டு அதன் மேல் பத்து பதினைந்து ஸ்டிக் நோட் போட்டு டாக்டர் கையெழுத்தில் ஏதோ கிறுக்குகிறார்கள்! கடைசியில் தேடும்போது எது வேண்டுமோ அதை தவிர ஏகப்பட்ட பேப்பர்கள் இருக்கின்றன..ப்ரிண்டருக்கு வாய் இருந்தால் கதறி அழும்! நான் இந்தியாவில் ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை ப்ரிண்ட் எடுக்க போவேன், அன்னைக்குன்னு பாத்து பேப்பர் இருக்காது, இல்லைன்னா சோடா புட்டி கண்ணாடி போட்டு பாத்தாலும் தெரியாத அளவுக்கு மங்கலா விழும்! நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!
நான் இங்கு வந்த அன்று என் ஸீட்டில் ஒரு பெரிய டப்பா கொண்டு வந்து வைத்தார்கள்! முழு மகாபாரதத்தை ப்ரிண்ட் எடுத்து அதற்கு பின் போட எவ்வளவு பெரிய ஸ்டாப்லர் வேண்டுமோ அவ்வளவு பெரிய ஸ்டாப்லர்! ஒரு பெரிய கத்திரிக்கோல், பெரிய பஞ்சிங் மெஷின், நிறைய ஸ்டிக் பேட், நிறைய பேப்பர் க்ளிப்ஸ், சலஃபன் டேப், நிறைய மார்க்கர்ஸ் [மஞ்சள் கலர் சிங்குசா, பச்சை கலர் சிங்குசா...சே சே!], பேனாவில் தப்பாய் எழுதி விட்டால் அழிப்பதற்கு எரேசர் [ப்ளேடால் எப்படி அழிப்பது என்று இவர்களுக்கு இன்னும் தெரியாதா? பென்சில் என்றால் எச்சி தொட்டு அழிப்பது தான் பெஸ்ட்!] எனக்கு சந்தேகமே வந்து விட்டது, எனக்கு கம்ப்யுட்டர் கொடுப்பார்களா இல்லை அரசு அலுவலகம் மாதிரி பெரிய பெரிய பேரெடை கொடுத்து அதில் ப்ரோக்ராம் எழுது என்று சொல்லி விடுவார்களோ என்று! அடப்பாவிகளா..அவர்கள் கொடுத்த ஒன்றை கூட நான் இன்னும் தொடவில்லை, சில பேப்பர் க்ளிப்ஸை தவிர..கனினியின் பயனை இன்னும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று படுகிறது!
NOTE: இந்த பத்தியை சாப்பிட்டுக் கொண்டே படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!
அலுவலகத்தில் விடுங்கள், டாய்லட்டில்..அட நம் நாட்டில் தான் தண்ணீர் பஞ்சம் இருந்தும் தண்ணீர் இல்லையென்றால் நாம் வருவதை கூட அடக்கிக் கொண்டு விடுவோம்! இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். எனக்கு ஏனோ நான் பார்த்த ட்ரிபில் எக்ஸ் படமெல்லாம் ஞாபகம் வந்தது! சுத்தக்கார பாப்பாத்திகள்!
இன்னொரு முக்கியமான விஷயம் எப்போது பார்த்தாலும் எதையாவது கொறித்துக் கொண்டே இருக்கிறார்கள்! அலுவலகத்தில் ஒரு பெண் ஒரு மூட்டை பாப்கார்னை [உங்கள் தலை மேல் அடித்து சத்தியம் செய்கிறேன்!] கம்ப்யுட்டரில் வேலை பார்த்துக் கொண்டே ஒரு மணி நேரத்தில் தின்று தீர்த்து விட்டாள்! இருந்த இடத்திலேயே உட்கார்ந்து என்ன வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்பது இவர்களுக்கு மிக்க வசதியாய் இருக்கிறது. நம்மை மாதிரி வத்தக் குழம்பை சாதத்தில் குழைத்தா அடிக்க போகிறார்கள்! வாயில் நுழையாத பெரிய பர்கர் அல்லது சான்ட்விச்..அதில் ஆடு, மாடு, கோழி, பன்னி என்று அடித்து போட்டிருப்பார்கள்! நாளைக்கு ஒரு ஃபுட் ஃபெஸ்டிவல் வந்து விடுகிறது! எப்போதும் ஏதாவது கொறிக்க இருந்து கொண்டே இருக்கிறது! என் அமேரிக்க நண்பன், போ, போய் எடுத்து சாப்பிடு என்று என்னை பிடித்து தள்ளாத குறையாய் தள்ளுவான்! நண்பா, உன் அன்புக்கு ரொம்ப நன்றி நீ ஒன்றை மறந்து விட்டாய், நான் அமேரிக்கன் இல்லை இந்தியன்..உங்களைப் போல என்னால் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று மன்றாடினேன்! அவன் விழுந்து விழுந்து சிரித்தான்! சாப்பிட்டுக் கொண்டே இருப்பது எங்கள் வேலைகளில் ஒன்று என்றான்! [அவன் சொல்லும்போது எனக்கு அவ்வளவு புரியவில்லை, வாயில் அவ்வளவு பெரிய பர்கரய்யா..பர்கர்!] நானும் அவ்வப்போது அவர்களை போல் கொறிக்க ஆரம்பித்து விட்டேன் என்று தான் நினைக்கிறேன்! சென்னை போனதும் சாப்பிடாம எப்படி நீங்க எல்லாம் வேலை செய்றீங்கன்னு கேட்டு டின் வாங்கி கட்டிக்க போறேன் என்று தோன்றுகிறது!! am i getting westernized?
- பயணப்படும்

அருமையான பதிவு ப்ரதீப்....
நல்லவேளை நான் பார்த்த வரையில்னு ஒரு வார்த்தியப் போட்டுட்டீங்க.. எனக்கு தெரிந்த சில (ஒரு சில) அமெரிக்கர்கள் இங்கே ஜீனியஸ்ஸா இருக்காங்க!
இன்னொரு விசயம் என்னன்னா, இங்க இருக்குற எல்லா வீடுகளும் கட்டைல செஞ்சிருக்காங்க. பேப்பர் அநியாயத்துக்கு உபயோகிக்கிறாங்க. ஆனா, அமெரிக்கால ஒரு மரம் கூட வெட்ட மாட்டாங்க. எல்லாம் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி ஆகுது. இப்ப சொல்லுங்க அவுங்க ஜீனியஸ்ஸா இல்ல மத்தவங்களா?
அப்புறம், டாய்லட் பேப்பர் மேட்டரப் பத்தி நக்கலடித்து நான்கூட ஒரு மேட்டர் போட்டேன். பாருங்க...
http://veyililmazai.blogspot.com/2006/12/9.html
அமெரிக்கர்களில் அறிவாளிகளும் உள்ளார்கள். நன் நாட்டில் ஒரு அலுவலகத்தில் எல்லாருமே அந்தந்த துறையில் பட்டம் பெற்றவர்க
ல். இங்கே பெரும்பாலும் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு வந்துவிடுவார்கள். பிறகு மெதுவாக முன்னேறி மானேஜர் ஆகிவிடுவர். (நம் நாட்டில் கனவிலும் நடக்காது). ஆனால் டாக்டர் மற்றும் இஞ்ஜினீயர்களும், முக்கியமாக சிவில் இஞ்ஜினீயர்கள் கட்டாயம் பட்டம் மற்றும் அந்த வேலை செய்ய போதிய அளவு அனுபவம் வந்த பிறகு (4 வருடங்கள்) லைசன்ஸ் கொடுப்பார்கள். அதற்கு பிறகுதான் அவர்கள் தங்களை இஞ்ஜினியர் என்றோ அல்லது டாக்டர் என்றோ அழைத்துக் கொள்ள முடியும்!!.
நம்மூரில் யார் வேண்டுமானலும் டாக்டர் அல்லது இஞ்ஜினியர் ஆகிவிடலாம். அதுவும் சிவில் இஞ்ஜினியர் ஆவதற்கு மிக எளிது :)
சாதரண அமெரிக்கன் அப்பாவியாக நேர்மையாக இருக்கிறான்.
ஜீனியஸ்ங்கறதுல மட்டுமில்லை பிரதீப். நீங்க இங்க எழுதியிருக்கிற எல்லாமே நீங்க இங்க பாத்தவரையிலன்னு சொல்லிடுங்க. யாராவது உங்க பதிவைப் பாத்துட்டு அமெரிக்கர்கள் எல்லாருமே இப்படித் தான்னு நெனைச்சுறப்போறாங்க. எப்படி நம்ம ஊருல ஏகப்பட்ட வகையில மக்கள் இருக்காங்களோ அதே மாதிரி தான் இங்கேயும். நீங்க சொல்லியிருக்கிறதும் இங்கே இருக்கு. ஆனா இது மட்டுமே அமெரிக்கா இல்லை. (நீங்க அப்படி சொல்லலை. ஆனா படிக்கிறவங்க யாராவது அப்படி நினைச்சுடக் கூடாதுன்னு தான் சொல்றேன்)
மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது உங்கள் பதிவு , நகைச்சுவையுடன் மிக அழகான எழுத்து நடையில் எழுதியிருக்கிறீர்கள்.
\"அதனால் தான் இந்தியர்களுக்கு இங்கு ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒரு மெளசும் நிறைய மவுசும் இருக்கிறது\
ஆஹா, ஆஹா.........அசத்தல்!!
தூள் போஸ்ட், பாராட்டுக்கள்.
என் பார்வையில் புத்திசாலியான அமெரிக்கர்கள் சூப்பர் ஜீனியஸ்ஸா இருப்பாங்க. இவுங்க எண்ணிக்கை மிகக் குறைவா இருக்கும். மத்தவுங்கெல்லாம் சுமாரா வேலை செய்வாங்க. இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சராசரிக்கும் மேலே. அதனால்தான் அமெரிக்கர்கள் பார்வையில் நாம் புத்திசாலிகளாகத் தெரிகிறோம்.
அடுத்தது, பள்ளிக்கல்வி முடித்தாலே 'வயித்துபிரச்சினை' இல்லை என்ற நிலையில் அவர்களின் பொருளாதாரம் இருந்தது, இருக்கிறது.
//இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! துடைத்துக் கொண்டு ஒரு அரை மணி நேரம் சோப்பு போட்டு இவர்கள் கை கழுவுகிறார்கள்! [இப்போ என்ன பண்ணிட்டீங்கன்னு இந்த தேய் தேய்க்கிறீங்கன்னு கேக்கலாம் போல இருக்கு!] என் நண்பரிடம் ஏன் இவர்கள் கக்கூஸில் தண்ணீர் உபயோகப்படுத்துவதில்லை என்றதற்கு அவர்கள் கையை அந்த மாதிரி இடங்களிலெல்லாம் உபயோகிக்க மாட்டார்கள் என்றார். //
இதப் படிங்க மொதல்ல..
http://en.wikipedia.org/wiki/Bidet
ஒரு ஹோட்டலில் பிதே கண்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்ல :))
ஜி,
மரங்களெல்லாம் மலேசியா, பிரேஸில், இந்தோனீசியாலருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். மெஹிகோவிலருந்து டெக்கீலாவையும், கொரோனாவையும் இறக்குமதி செய்கிறார்கள்.
மரங்கள் வருவது கனடாவிலிருந்து தான். மலேஷியா/சீன மரங்கள் பர்னிச்சர்கள் மட்டும்
//ஜி,
மரங்களெல்லாம் மலேசியா, பிரேஸில், இந்தோனீசியாலருந்து இறக்குமதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். மெஹிகோவிலருந்து டெக்கீலாவையும், கொரோனாவையும் இறக்குமதி செய்கிறார்கள். //
//கால்கரி சிவா said...
மரங்கள் வருவது கனடாவிலிருந்து தான். மலேஷியா/சீன மரங்கள் பர்னிச்சர்கள் மட்டும்//
ஓகோ இவ்வளவு இடத்துல இருந்து வருதா?
[எங்கிருந்து வந்தா என்ன? மொத்தத்துல அமெரிக்கால ஒரு மரமும் வெட்ட மாட்டாங்க. அதான் மேட்டரு.]
ஜி,
நான் எழுதும் அமேரிக்கா நான் கண்ட அனுபவங்கள் தான்..அடுத்த பயணத்தில் அதை கொட்டை எழுத்தில் எழுதி விடுகிறேன்! உங்கள் பதிவைப் படித்தேன், இருந்தாலும் உங்களுக்கு ஓவர் நக்கல் சார் ஹிஹி..
கால்கரி சிவா,
அமேரிக்கர்கள் நேர்மையானவர்கள் என்று நான் என் முதல் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன்! நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன்!
குமரன்,
நீங்கள் சொன்னவுடன் தான் நான் செய்யும் தவறு எனக்கு புரிகிறது! சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி! என்னுடைய அடுத்த பதிவில் இதெல்லாம் நான் கண்ட அனுபவங்கள் என்று சொல்லி விடுகிறேன்! மிக்க நன்றி
திவ்யா,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி!
பெத்தராயுடு,
நீங்கள் சொல்வதும் ஆமோதிக்கிறேன்.
வருகை தந்த அனைவுருக்கும் நன்றி நன்றி!!
அமெரிக்காவைப் பற்றி என்ன ஒரு பிரமாதமா எழுதியிருக்கீங்க பிரதீப். படிக்க படிக்க அவ்வளவு சுவாரஸ்யமாகப் போகிறது உங்கள் நடை. ஒரு பத்திரிகையாளனாகச் சொல்கிறேன், தமிழ் நாட்டு பத்திரிகைகாரனெல்லாம் [சம்பளம் வாங்கிக்கொண்டு சாய்ந்திரம் ஆனா தின்னுட்டு தூங்கறவனுங்க] உங்க கிட்ட பிச்சை வாங்கனும்.
நன்பர்களோட கமென்ட்ஸும் படிச்சேன். எல்லொரும் நல்ல தெளிவாய் இருக்கிறீர்கள். எனக்கு ரொம்ப நாளா இந்த டவுட் இருந்தது பிரதீப். அதாவது டாய்லெட்ல நாப்கின் வச்சிருக்கானுங்களே! இத எப்படி யூஸ் பண்றானுங்க'ன்னு. விளக்கம் அளித்ததற்கு ரொம்ப நன்றி.
பாலா,
நன்றி! மிக்க நன்றி..இன்னும் நிறைய்ய இருக்கிறது அமேரிக்காவைப் பற்றி. ஐய்யய்யோ, என்னங்க தமிழ்நாட்டு பத்திரிக்கைக்காரங்க எல்லாம் இழுத்து என்னை வம்புல மாட்டி விட்றுவீங்க போலிருக்கு. இருந்தாலும் தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி.
//இவர்களுக்கு அங்கேயும் பேப்பர் தான்! //
ஆமாங்க. இதைத்தான் நானும் சொல்லுவேன். தின்னாலும் கை கழுவறது இல்லை பேப்பர் வெச்சு தொடைக்கறான். போனாலும் அதே கதைதான். இதுல இவனுங்க நம்மாளுங்களைப் பார்த்து நீட்னஸ் இல்லை அப்படின்னு பேச்சு வேற!
அப்புறம் கண்ட மேனிக்கு இவங்க எடுக்கற பிரிண்ட் அவுட். ஒரு எக்ஸல் ஷீட்டை எடுத்தாங்கன்னா அதை பிரிண்ட் ப்ரிவ்யூவில் பார்க்காம காலிக் கட்டம் கட்டமா ஒரு பத்து இருவது பக்கம் அடிச்சி தள்ளுவாங்க. அப்புறம் இந்த ஒரு பக்கம் பிரிண்ட் அவுட் எடுத்து இருக்கற பேப்பரின் மத்த பக்கத்தில் ரஃப் பிரிண்ட் எடுப்போம் என்ற அறிவே இல்லாம அதை அப்படியே தூக்கிப் போட்டுடுவாங்க. அதை எல்லாம் நம்ம வீட்டுக்கு எடுத்து கிட்டு வந்து நம்ம பையன் கிட்ட குடுத்துடுவோமில்ல. அதனால நமக்கு சுற்றுசூழல் பற்றி கவலைப்படுபவன் அப்படின்னு நல்ல பெயர் வேற!
அப்புறம் இந்த புத்திசாலி மேட்டர். இங்க நான் பார்த்த வரையில் (நன்றி குமரன்!) ரொம்ப புத்திசாலியா இருக்காங்க, இல்லைன்னா ரொம்ப சுமார்தான். அந்த ரொம்ப புத்திசாலி ஆளுங்க நல்ல பிராஸஸ் போட்டு குடுத்துடறாங்க. அதை இந்த மத்த கேட்டகரி ஆட்கள் ஏன்னு கேட்காம நல்லா பின்பற்றி நடக்கறாங்க. ஆனா ஒரு எக்ஸெப்ஷன் கேஸ் வந்தா இவங்களால அதை ஹேண்டில் பண்ணவே முடியாது. ஒரு கடைக்குப் போயி 6.25 பில் வந்து, நம்ம கிட்ட 20 டாலர் நோட்டுதான் இருந்துதுன்னா காயின் சில்லறையா குடுக்கப் போறானேன்னு பயந்து 21.25 குடுத்தோமுன்னா முழிப்பானுங்க பாருங்க, ஒரே காமெடிதான்.
ரொம்ப நீளமா ஆவுதோ. சரி சரி. நிறுத்திக்கறேன். :))
kothanaar,
romba sariya sonneenga..periyya comment thaan!
Wonderful writtings.
"நானும், ஆனியே புடுங்க வேணாம்னு வந்துருவேன்!"
I enjoyed a lot on this line and I couldnt control my laughing.
Sakthi
சக்தி,
ஏதோ, செத்த நேரம் நம்ம வலைப்பக்கம் வந்துட்டு சந்தோஷமா இருந்தா சரி தான்!