அமேரிக்காவில் என்ன வியாபாரம் செய்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று எனக்குப் புரிகிறது! இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம். மேலோட்டமாக, இங்கு மோட்டல் வைத்திருந்த ஒரு இந்தியரைப் பற்றி கேள்விப்பட்டேன். அவருடைய மோட்டலில் ஒரு நாள் தங்க வந்தவர், கால் தடுக்கி விழுந்து விட்டார். மோட்டல் ஓனரின் அறியாமையாலும், அஜாக்கிரதையாலும் தான் நான் தடுக்கி விழுந்தேன். இவர் எனக்கு இத்தனை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வாதாடி கடைசியில் அந்த இந்தியர் தன்னுடைய மோட்டல் சாவியை அவர் கையில் கொடுத்து விட்டு வெறும் கையுடன் நடையைக் கட்டினாராம். பார்த்தீர்களா கொடுமையை..

ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..அதே போல் காபி கப்பில் ஏதாவது பொன் மொழி இருப்பதுண்டு. பொன்மொழி 1 வரி இருந்தால், அது எங்கள் கருத்தல்ல, எழுதியவரின் கருத்து..இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்ற எஸ்கேப்பிஸம் 10 வரியில் இருக்கும். [சரிடா, இப்போ உங்களை என்ன சொல்லிட்டோம்] நானும் சரி இப்படி ஏதாவது நொள்ள சொல்லி ஒரு மில்லியன் டாலர் வாங்கிட்டு இந்தியா போய் செட்டில் ஆகிடலாம் என்றால் ஒரு குறையும் கண்ணுக்கு தெரிய மாட்டேன் என்கிறது..[குறை சொல்லியே பேர் வாங்கும் புலவர்கள் மத்தியில் அடியேனை பார்த்தீர்களா?]ஒரே வழி, நான் இங்கு ஒரு குறையும் பார்க்க முடியவில்லை என்று வழக்கு தொடர்வது தான்!

நம் ஊர் போல் இங்கு ரயிலை அதிகமாக உபயோகிப்பதில்லை. எல்லாம் சாலை வழி தான்! ஒவ்வொரு ஃப்ரீ வேயிலும் [நம் ஊரில் இது ஹைவே!] ஒவ்வொரு காரும் 80, 90, 100 மைலில் பறக்கிறது. அந்த ரோட்டில் அழகை என்னவென்று சொல்வேன். நீங்கள் செல்ல வேண்டிய லேனில் இருந்து சற்று விலகி எதிர் லேனில் சென்று விட்டால் டயரில் கிரீச் சத்தமிட்டு நீ தவறான பாதையில் செல்கிறாய் என்று எச்சரிக்கிறது! அட அட அடா...அனுமதிக்கப்பட்டிருக்கும் வேகத்தை மீறி செல்லும் வண்டிகளை கண்காணிக்க அங்கங்கு ரேடார் பொறுத்தப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் உள்ள ரோட்டில் கூட ஒரு குப்பை இல்லை. அமேரிக்க மக்களின் சுய ஒழுக்கம் அந்தச் சாலைகளில் பிரதிபலிக்கிறது! நான் பார்த்த வரை நம் ஊர்களில் இருப்பதைப் போல் சாலை ஓரங்களில் அதிக மரங்கள் இல்லை. எல்லாம் பரந்து விரிந்த வெறும் நிலமாகத் தான் இருக்கிறது. ஒரு வேளை சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் நம் மக்களைப் போல் சிறு நீர் கழிக்க முடியாததாலோ என்னவோ! [புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி] போர் காலங்களில் ஆகாய விமானங்கள் இறங்க ஓடு தளங்களாகவும் இந்த சாலைகளை உபயோகிப்பார்களாம்! அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எத்தனை விசாலமான, தூய்மையான சாலைகள் என்று!

நிற்க

மோன்டனா [ஹெலினா, வேலைக்கு வந்த இடம்]
நெவேடா [லாஸ் வேகஸ்]
அரிசோனா [கிராண்ட் கேன்யன்]
செளத் டகோடா [மெளன்ட் ரஷ் மோர்]
வையோமிங் [யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க்]
நியு யார்க் [நியுயார்க் நகரம்]
மேரி லேன்ட் [பால்டிமோர்]
கலிஃபோர்னியா [லாஸ் ஏஞ்சல்ஸ்]

வந்து மூன்று மாதங்களில் அமேரிக்காவின் 8 மாநிலங்களை பார்த்து விட்டேன்! இது நானே எதிர்பார்க்காத ஒன்று! என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்! அதை என் விஷயத்தில் அச்சரம் பிசகாமல் செய்திருக்கிறேன் என்பதில் எனக்கு பரம திருப்தி! ஏக சந்தோஷம்! எத்தனை விதவிதமான ஊர்கள், மனிதர்கள், கலாச்சாரங்கள், நாகரீகங்கள், பழக்க வழக்கங்கள்! அடேயப்பா..வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?

அடுத்த வார இறுதியில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்படுகிறேன்! அமேரிக்காவில் முக்கியமான அனைத்து பெரு நகரங்களையும் பார்த்தாயிற்று! ஒரே குறை நயாகாராவை பார்க்க முடியவில்லை..குளிர் காலத்தில் அது உறைந்து விடுவதால் அனுமதி கிடையாதாம். உறைந்து போன அருவி, கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...ம்ம்ம்ம் நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்! அடுத்த டார்கெட் ஐரோப்பா தான்!

உலகம்..அழகு கலைகளின் சுரங்கம்!
பருவச் சிலைகளின் அரங்கம்!!

முன்னாலேயே போட்டிருக்க வேண்டிய பின்குறிப்பு: அமேரிக்காவைப் பற்றிய என் பதிவுகள் அத்தனையும், நான் பார்த்தவைகளையும், கேள்விப்பட்டவைகளையும் கொண்டு முழுக்க முழுக்க என் பார்வையில் எழுதப்பட்டது..இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!

- பயணங்கள் முடிவதில்லை!
14 Responses
  1. enna boss photo illama ippadi yaemaathitheenga.


  2. mahir,

    neenga soldrathu sari thaan! ella photovum potrukkalam! enna oru 2000 photo irukku...avvalavu thaan!


  3. அது எப்படிங்க அவ்வளவு எளிதா குறை கண்டுபிடிக்க முடியும். அதுக்குன்னே ஒவ்வொரு நிறுவனத்துலயும் ஒரு பெரிய குழுவே (டீமே) உக்காந்து வேலை பாக்குதே. அவங்க வேலையே இந்த மாதிரி குறைகளை கண்டுபிடிக்கிறது தான். பொது மக்கள் கண்டுபிடிக்கிறதுக்குள்ள அவங்களே கண்டுபிடிச்சு அதை சரிசெஞ்சிடுவாங்க.

    இந்த ஊரையெல்லாம் கல்யாணத்திற்கு முன்னாலேயே ஒரு தடவை சுத்திப் பாத்தாச்சா? சரி. திருமணத்திற்குப் பின்னாலும் இன்னொரு முறை சுத்திப் பாத்துடுங்க. அடியேன் அப்படி தான் செய்தேன். :-) நயாகரா இதுவரை மும்முறை சென்றாயிற்று. இப்போது நீங்கள் போனாலும் அருவி விழுவதைப் பார்க்கலாம். ஆனால் நதியின் மேல் மட்டம் உறைந்து போயிருக்கும். அதனால் அருவியின் மிக அருகில் உங்களை அழைத்துச் செல்லும் படகில் செல்ல முடியாது.


  4. என்ன பண்றது குமரன்,

    இத்தனைக்கும் மீறி மக்கள் குறை கண்டுபுடிக்கிறாங்களே, அதானே சிலரோட மெயின் வேலையா இருக்கு...


  5. //இதில் தவறிருக்கவும் வாய்ப்புண்டு!//

    itha e-ntha kOrttula vazhakku pOturathu. :)

    pathivukaL arumai, mUNdum varuka thAyagam..


  6. sivamurugan,

    aamanga, thappa ezhuthittu ungalukku courtukku address vera soldren, enga neenga vera :)

    mikka nandri, thaayagam vanthu senthaachu :)


  7. oh,really i am surprised to see my friends following my walk of life.Yes,this was my advice to every one.go round the world,do not think of money,which can be earned easily but not the places.i enjoyed my trips to US and as you have mentioned i circumlocuted US in my FORD MUSTANG and covered 2000 miles and 5 states.that was indeed a feat.
    karthik


  8. //ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] //

    ப்ரதீப், மில்லியன் டாலரா? ஸ்டார் பக்ஸ் 6.4 பில்லியன் டாலர் கம்பெனி சாமி அவிங்க லாபமே 781 மில்லியன் டாலர்கள்.

    இப்பல்லாம் மில்லியன் டாலர் என்பது ரொம்ப சல்லீசானது இங்கே


  9. siva,

    tounge slip aagura mathiri en hand slip aagi billion badila million vanduruchu..hehehe..

    konjam adjust pannikkunga!


  10. I read all your blogs about yr trip to America..Nice posts..next trip to Europe!..
    Enna ulagam sutrum vaaliban aayaachchaa?thirai kadal odi dhiraviyam thedara list la serndhaachchaa?


  11. gayathri,

    europe poganumnu sonnen, dont have any plans now..oru dream thaan!

    ya i love to travel around the world. had very good experience


  12. ப்ரதீப்

    தாமதமாகத்தான் இந்தப் பதிவுகள் என் கண்ணில் பட்டன. அதனால் தாமதமான பின்னூட்டம்.

    அனுபவத்தைக் கோர்வையாக இலகுவான நடையில் பதிந்து பகிர்ந்திருக்கிறீர்கள்.

    பாராட்டுகள்.


  13. sarathy Says:

    மிகவும் ரசனையான பதிவு...
    கூடிய விரைவில் நாங்களும் வருவோம்ல.....


  14. கிரி Says:

    //இல்லையென்றால் நீங்கள் சூ செய்யப்படுவீர்கள். அதாவது, பாதிக்கப்பட்டவர் உங்கள் வியாபாரத்தின் மீது வழக்கு தொடர்ந்து பல மில்லியன் டாலர்கள் வரை நஷ்ட ஈடு கேட்கலாம்//

    ஒரு நிமிடம் பயந்து விட்டேன்

    //ஸ்டார் பக்ஸில் [இது ஒரு மில்லியன் டாலர் கம்பேனியாமே அப்படியா?] ஒரு காபி குடிக்கும்போது அந்த கப்பில் கவனித்தேன். நீங்கள் குடிக்கப் போவது மிகவும் சூடானது என்று ஒரு எச்சரிக்கை, நானும் மெதுவாக வாய் வைத்து மெல்லமாய் உறிஞ்சினேன், காபி ஆறிப் போய் பல மணி நேரம் ஆகியிருந்தது..//

    ஹா ஹா ஹா

    எனக்கும் இதே போல MC Donalad ல ஏற்பட்டது..ஆனால் வேறு மாதிரி .. அப்படி என்ன பெரிய சூடு என்று நினைத்து வைத்து வாய் புண்ணாகி விட்டது சூடு தாங்காமல்

    //புரியலை? மரம் வளர உரம் வேணாமா ஹிஹி//

    ஹா ஹா ஹா

    //என் நண்பர்கள் வட்டத்தில் யார் அமேரிக்கா சென்றாலும் பணம் சேமிக்கனும்னு நினைக்காதே, நல்லா ஊர் சுத்தி பார் என்பது தான் என்னுடைய வேண்டுகோளாக இருக்கும்//

    இப்படி எல்லாம் கூறினால் நடக்கிற கதையா ;-)

    //வெறும் 2 அல்லது 3 லகரங்களை சேர்த்து வைப்பதற்காக இத்தனை அனுபவங்களை இழப்பதா?//

    நியாயமான கேள்வி...ஆனால் அது அவர்களுடைய சூழ்நிலையை பொறுத்தது