தேங்க்ஸ் கிவ்விங் நீண்ட விடுமுறையில் லாஸ் வேகஸ் சென்றிருந்தேன். அந்த நகரத்தை பார்த்த வியப்பில் ஒரு வாரம் என்னால் சரியாக வாயை மூடவே முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! [எதாவது விபரீதமா நினைச்சுக்காதீங்க] ! அத்தனை ஆச்சர்யங்கள், அத்தனை அதிசயங்கள்!! இப்படியும் ஒரு ஊரா என்று வியப்பே மிஞ்சுகிறது.

ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! இந்த தடவை நான் பேசப் போவதில்லை, என் படங்கள் பேசும்![பேசிட்டாலும்]

நியுயார்க் நியுயார்க்பாரீஸ் பாரீஸ்சீசர்ஸ் பாலஸ்அமெரிக்காவில் பிரை நிலவு இந்தப் பக்கம் திரும்பி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?

இயற்கைக்கு முன்னால் மனிதன் தான் எத்தனை சிறியவன்!

ஹூவர் டாம், அரிசோனாஅனைத்து படங்களும் இந்தக் காமிராவினால்...நான்.. நானே தான் எடுத்தேன் [பின்ன வேற யாராவது மண்டபத்துல கொடுத்தா எடுத்து வந்தேன்..நான் நானே தான் எடுத்தேன் ஐயா!] :-)- பயணப்படும்
13 Responses
 1. Prabu Raja Says:

  Where is Las Vegas Photoes?


 2. எடுத்த புகைப்படகருவிக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறமாதிரி அதோட படத்தையும் போட்டுடீங்க!!


 3. Divya Says:

  'Bellagio fountain show' picture எடுக்கலியா நீங்க, அதுவும் இருந்தா போட்டு விடுங்க உங்க பதிவில், அசத்தலா இருக்கும்,

  எல்லா படங்களும் நல்லா வந்திருக்குதுங்க.


 4. சிங்கப்பூர் சந்தோசாவில் நீர் விளையாட்டுக் காட்சியை பார்த்து ரசித்தவர்களுக்கு பெல்லாஜியோ ஜூஜூபியாகவே தோன்றும்.

  அது சரி.. கேசினோவில நீங்க காசு தொலச்ச போட்டோவெல்லாம் எங்கே?!


 5. படங்கள் அருமை.

  ஸ்ட்ராட்டோஸ்பியர், மாண்டலே, ட்ரஷர் ஐலண்ட், பிஃரிமோண்ட் எக்ஸ்பீரியன்ஸ் போனீர்களா?


 6. படங்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது.

  Wonderful... !

  வாழ்த்துக்கள்... நன்றி... !


 7. நல்லா வந்திருக்கு,.
  படங்கள் எல்லாம் பிரமாதம்.
  மத்த படங்களையும் போடவும்.


 8. Pradeep Says:

  பிரபு,

  அதான் பயணப்படும்னு போட்ருகேனே! எல்லாம் வரும், அவசரப்படாதீங்க! ரஜினி படத்துல ரஜினியோட காலை முதல்ல காட்டிட்டு அப்புறம் தானே ரஜினியோட முகத்தை காட்டுவாங்க! அந்த மாதிரி தான் இதுவும்! [ஏன்டா கேட்டோம்னு இருக்குமே உங்களுக்கு! ஹிஹி]

  வடுவூர்,

  நன்றி மறப்பது நன்றன்று! அப்படியே நான் தான் எடுத்தேன்னு என் ஃபோட்டோவையும் போட்டு ஒரு சின்ன அட்வர்டைஸ்மென்டும் பண்ணியிருக்கேனே, அதை கவனிக்கலையா நீங்க?

  திவ்யா,

  பொறுத்தார் பூமி ஆள்வார்! டிஜிட்டல் காமெரா ஒன்று கையில் கிடைத்தால் நம்மாட்கள் எப்படி படம் பிடிப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? பேப்பர், பேனா என்று எதையுமே விட்டு வைக்காமல் எடுத்திருக்கிறேன்! நேக்கு உங்களை விட்டா யாரைத் தெரியும், எல்லாம் இங்கே தானே கொட்டனும்!

  மாயவரத்தான்

  ஏங்க? நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா? காசு தொலைச்ச ஃபோட்டோ எல்லாம் எடுத்து போட்டு வீட்ல டின் வாங்கிக் கட்டிக்கவா? குசும்புய்யா உமக்கு!

  ரங்கநாதன்

  நன்றி நன்றி

  வல்லிசிம்ஹன்

  நன்றி கண்டிப்பாக...


 9. Pradeep Says:

  பெத்தராயுடு,

  ஸ்ட்ராட்டோஸ்பியர் கருமத்தை ஞாபகப்படுத்தாதீரும்! வயித்தை என்னவோ பண்றதுங்கானும்! அமேரிக்கர்களுக்கு இருந்தாலும் ஓவர் த்ரில் தேவைப்படுதப்பா!! எல்லா போட்டோக்களும் இருக்கிறது, கண்டிப்பாக போடுகிறேன்!


 10. //ஸ்ட்ராட்டோஸ்பியர் கருமத்தை ஞாபகப்படுத்தாதீரும்! வயித்தை என்னவோ பண்றதுங்கானும்! அமேரிக்கர்களுக்கு இருந்தாலும் ஓவர் த்ரில் தேவைப்படுதப்பா!! //

  அப்போ நீங்க six flags-க்கு ஒருவாட்டி போய் பாருங்க.. :))


 11. Pradeep Says:

  பெத்தராயுடு,

  நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க! ஆளை விடுங்க..ஸ்ட்ராட்டோஸ்பியருக்கே என் தாவு தீருந்துருச்சு! அது என்னய்யா 112 வது மாடியில போய் ராட்டினம் சுத்துறது? அதுவும் அந்த கட்டடத்துல இருந்து வெளியே வந்து..

  சின்ன புள்ளத் தனமால்ல இருக்கு...


 12. eskarthic Says:

  enda ippadiyellam vilambaram pandra?

  Ella photovum nee eduthada enna?


 13. Pradeep Says:

  karthic,

  yes, ellaame naan edutha photo thaan!