வலைப்பதிவர் பெயர்: பிரதீப்
[சுருக்கமாக - பிரதீப் குமார் ஈஸ்வரி சுப்ரமணியன்]

வலைப்பூ பெயர்: பெய்யெனப் பெய்யும் மழை!
[யாருப்பா அது பிழைன்னு படிக்கிறது?]

சுட்டி(url) : http://espradeep.blogspot.com
[வலை உரலே க்யுட்டாயில்லை! நானும் இல்லைன்னு தானே சொன்னேன்!]
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை [அதனால் தான் வலைப்பதிவு வைத்து தமிழை மேலும் வளர்க்கிறேன்!]

நாடு: இந்தியா [ஜெய்ஹிந்த்!]

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் மேய்ந்த போது தெரிந்து கொண்டது கொஞ்சம்; ஷாங்ரீலா பவித்ராவின் மூலம் தெரிந்து கொண்டது கொஞ்சம்!
[பவித்ரா, உங்களுக்கு ஆபத்து! பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்!]

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 19, 2004
[சனி உச்சத்தில் இருந்த போது! உங்கள் எல்லோருக்கும்!!]

இது எத்தனையாவது பதிவு: 95

இப்பதிவின் சுட்டி(url):
http://espradeep.blogspot.com/2006/05/blog-post_28.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: ஆரம்பிக்கப்படாமல் இருந்தது!
[சமீபத்தில் சுஜாதாவின் கேள்வி - பதில் தொகுப்பை படித்ததன் விளைவு!]

சந்தித்த அனுபவங்கள்:

1. எழுத்தாளர் சுஜாதாவையும் சக வலைபதிவாளர்களையும் சந்தித்தது!
[தேசிகனுக்கு ஒரு ஆ! எத்தனை நாள் தான் ஓ போடுவது?]
2. என் வலைப்பதிவை தவறாமல் படிக்கும் நண்பர் ஒருவர், எனக்கு ஃபோன் செய்து எழுத்தாளர் சுஜாதா பேசுவதாகவும், நான் நன்றாக எழுதுவதாகவும், விகடனில் நான் எழுத முயற்சிக்க வேண்டுமாயும் கேட்டு என்னை கொஞ்ச நேரம் கலாய்த்தார்!
[அடுத்த முறை ஜெயகாந்தன் மாதிரி பேச சொல்லியிருக்கிறேன்!]
3. பஸ் ஸ்டாண்டில் என்னுடைய ரசிகர் ஒருவர் என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டது!
[இது சத்தியமான பொய்!]

பெற்ற நண்பர்கள்: பிரதீப்புக்கும் எனக்கும் இருந்த நெருக்கம் இன்னும் அதிகமானது!

கற்றவை: கற்றபின் நிற்க அதற்குத் தக.
[முன் பாதியை நிரப்பு - 2 மார்க்]

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: என்ன? இந்தியாவுக்கு சுதந்திரம் வந்துருச்சா?

இனி செய்ய நினைப்பவை: சொல்லிப் பெய்வதல்ல மழை!

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:

மதுரை மாநகரில் சுப்ரமணியன் - கீதா தம்பதியினருக்கு 1978ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிரதீப் வானத்தில் இருந்து குதித்தார்! நர்ஸ் காட்ச் பிடித்து தொட்டிலில் போட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிரதீப் சினிமாவிலும், சினிமா பாடல்களிலும் தேர்ந்து விளங்கினார். சிறு வயதிலேயே ரஜினி போல் நடந்து காட்டியும், நடித்துக் காட்டியும் பலருடைய உள்ளத்தை கொள்ளை கொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கொஞ்சமாய் வளர்ந்த பிரதீப்பின் வாழ்வில் அந்த சமயத்தில் விதி நன்றாக விளையாடியதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனார். அலுவலகத்தில் வலைபதிவதில் அயராது உழைத்தாலும் அதிலும் நேரம் மிச்சம் பிடித்து ப்ரொக்ராமிங்கும் செய்து கடமையை கண்ணும் கருத்துமாய் செய்தார்!! 2006 அல்லது 7 க்குள் யாராவது ஒரு குணவதியை மணப்பார்! இனிதே இல்லறம் நடத்துவார்? இப்படிப் பட்ட உயர்ந்த எண்ணங்களுடனும், குணங்களுடனும் வாழும் ஒரு மேதையை நாளை தமிழகம் இழந்தால் அது ஒரு பேரிழப்பாகவே இருக்கும். லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள்! செலுத்தனும்!!

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்

பெய்யெனப் பெய்யும் மழை!

மதுமிதாவுக்கு ஒரு கேள்வி! இவ்வளவு லொள்ளா எழுதியிருக்கேனே, இதை புத்தகத்துல போடுவீங்க?
14 Responses
 1. Anonymous Says:

  "Sollippeivadalla Mazhai" - class.
  Nee inda padivu pottadin kaaranam padipporgaluku purindaal nichayam un blogirku vetri...

  Balaji K.R.S.


 2. Sivakumar NG Says:

  This day is most memorable day.
  in my office i have no work coz.,
  today is MEMORIAL DAY in USA.
  so, i read all your spots.
  some are boaring
  most are excellent

  about "iam not a tamilzhan"
  it's very fine and as a sourashtrian
  it's a new for me that azhagar
  married ... our bride (comment from Nisha Yamini)

  you have given a good comments for Mumbai x, Chandramuki

  it is a pleasentful surprise that you met me in my room.

  when I read your whole impressions,
  i really said myself you have good talent - not only in software - also in all areas.


 3. Pradeep Says:

  KRS,

  This post is for a research on blogs which is going to be done by madhumitha. I am sorry that i missed to mention that.

  Siva,

  Thanks for ur heartiest comments. I too felt very glad to meet my school friend after a long time.


 4. பிரதீப்,
  மண்ணிக்கனும், நம்ம 150வது பதிவு, 100வது நாள் பதிவுன்னு கொஞ்சம் பிஸியா இருந்தனாலே "மழை"க்கு கூட உங்க பதிவுக்கு ஒதுங்கல.

  இப்ப தில்லியில மழைவேற பெய்யுதா சரின்னு இங்க வந்தா, யப்பா, ரொம்பநாள் கழிச்சு ரொம்ப ஓவரா சிரிச்சேன். ஆபிஸில் என்ன ஆச்சுன்னு கேட்டாங்க, சிரிச்சு கூல்டவுன் பன்றதுக்குள்ள போதும்பா, இதுங்களுக்கு என்ன செல்வன் சார் சொன்ன மாதிரி சொல்ல தமிழும் ஆங்கிலமும் ஒழுங்கா தெரியாது (நான் மட்டும் என்ன ஹார்வர்டுகாரனா?).

  ரொம்ப நல்ல எழுதிருக்கீங்க, எந்த லொள்ளு கொறைக்காம உங்க பாணியில சொன்ன விதம் அருமை. இதுல இவ்ளோ செய்யலாமான்னு இப்ப தான் தெரியுது.

  (சரி ராத்ரி 12 மணி வரை என்ன அப்படி வேலை பதிவு தவிர. அதுவும் பதிச்சா மாதிரி தெரியலையே. :))))))


 5. பிரதீப் கலக்கிட்டீங்க. பொதுவா மதுவுக்காக எழுதறவங்க எல்லாரும் ஒரே மாதிரி என்ன பத்தி என்ன சொல்லருதும்பாங்க இல்லனா இனிமேலாவது உருப்படியா பதிவு போடனும்னு சொல்லுவாங்க ஆனா நீங்க வித்தியாசம் நல்ல நகைச்சுவையுணர்வுடன் எழுதியிருக்கீங்க.
  உங்களுக்கு ஒரு ஆ போட்டுட்டேன். (உங்க மாதிரியே வித்தியாசமா) :)


 6. சீனு Says:

  //மதுரை மாநகரில் சுப்ரமணியன் - கீதா தம்பதியினருக்கு 1978ம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பிரதீப் வானத்தில் இருந்து குதித்தார்! நர்ஸ் காட்ச் பிடித்து தொட்டிலில் போட்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப பிரதீப் சினிமாவிலும், சினிமா பாடல்களிலும் தேர்ந்து விளங்கினார். சிறு வயதிலேயே ரஜினி போல் நடந்து காட்டியும், நடித்துக் காட்டியும் பலருடைய உள்ளத்தை கொள்ளை கொண்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் கொஞ்சமாய் வளர்ந்த பிரதீப்பின் வாழ்வில் அந்த சமயத்தில் விதி நன்றாக விளையாடியதில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆனார். அலுவலகத்தில் வலைபதிவதில் அயராது உழைத்தாலும் அதிலும் நேரம் மிச்சம் பிடித்து ப்ரொக்ராமிங்கும் செய்து கடமையை கண்ணும் கருத்துமாய் செய்தார்!! 2006 அல்லது 7 க்குள் யாராவது ஒரு குணவதியை மணப்பார்! இனிதே இல்லறம் நடத்துவார்? இப்படிப் பட்ட உயர்ந்த எண்ணங்களுடனும், குணங்களுடனும் வாழும் ஒரு மேதையை நாளை தமிழகம் இழந்தால் அது ஒரு பேரிழப்பாகவே இருக்கும். லட்சோப லட்சம் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவார்கள்! செலுத்தனும்!!
  //

  எனக்கென்னவோ 'திருட்டுப் பயலே'-ல அஞ்சாங் கிளாஸ் மாணிக்கம் மாதிரியே இருக்கு.


 7. //எனக்கென்னவோ 'திருட்டுப் பயலே'-ல அஞ்சாங் கிளாஸ் மாணிக்கம் மாதிரியே இருக்கு//

  இதுக்கு தான் தனி தெறமைய சொல்றதுக்கு கொஞ்சம் பயம்மா இருக்கு.

  பாத்தீங்களா, யாரோ காசாக்கிட்டாங்க?
  ராயல்டி கேளுங்க பிரதீப்.


 8. Pradeep Says:

  சிவமுருகன்,

  என்னடா, பதிவு போட்டு இத்தனை நாள் ஆகியும் நம்ம ஆஸ்தான கமெண்ட்ரை காணொமேன்னு பாத்தேன்!

  ஆமா, அது எப்படி எனக்கு அப்புறம் வலைப் பதிவை ஆரம்பிச்சி 100, 150 ன்னு பறக்குறீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது?

  நானும் 100வது பதிவைப் போட்றனும்னு பாக்குறேன், நடக்க மாட்டேங்கிதே..

  அனுசுயா,

  உங்களுக்கு ஒரு இ! அதாவது, நன்றி! [அட, எப்படி எதுகை மோனைல வெளையாட்றேன், பாத்தீங்களா?]

  சீனு & சிவமுருகன்,

  நான் இன்னும் திருட்டுப் பயலே பாக்கலை!


 9. Hi Pradeep,
  Eppadi Ippadi ellaam mudiyudhu?...Nagaichchuvai unarvu ungalukku In born pola!
  Naan Oooo...Aaaa...ellaam pottutten!


 10. Pradeep Says:

  காயத்ரி,

  அதுவா வருதுங்க...


 11. This comment has been removed by a blog administrator.

 12. //என்னடா, பதிவு போட்டு இத்தனை நாள் ஆகியும் நம்ம ஆஸ்தான கமெண்ட்ரை காணொமேன்னு பாத்தேன்!//

  என்ன ப்ரதீப் நீங்கவேற ஆஸ்தான கமெண்டர் அது இதுன்னு, நானே உங்கள ரோல்மாடல்ன்னு சொல்லிகிட்டு திரியுறேன் பார்க்க

  //ஆமா, அது எப்படி எனக்கு அப்புறம் வலைப் பதிவை ஆரம்பிச்சி 100, 150 ன்னு பறக்குறீங்க? எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது?//

  மணற்கேணின்னு பேர் வச்சனாலன்னு நினைக்கிறேன், அதோட, அதுவும் அதுவா வந்திருச்சி.

  //நானும் 100வது பதிவைப் போட்றனும்னு பாக்குறேன், நடக்க மாட்டேங்கிதே..//

  அதான் நெருங்கிட்டீங்களே! இன்னும் அஞ்சு தானே, அஞ்சாம போட்டீங்கன முடிஞ்சுது

  //இது எத்தனையாவது பதிவு: 95//


 13. coming to ur site after some tme...u have not lost ur touch of humor still..was a very nice read...


 14. hi i am visiting ur page first time..great nalla eludhreenga..nakkal ungal eluthu poora paravi iruku..sujathavai ketadha solunga