கூறை மேலிருந்த கண்ணாடித் தடுப்பின் வழியே வெயில் சுள்ளென்று அடிக்கிறது. கண்ணை மூடிக் கொண்டே வெப்பத்தை உணர்கிறேன். மிகவும் சோர்வாக இருக்கிறது. வாயில் கசப்பு நிரந்தரமாய் தங்கி விட்டது. நோயின் வெம்மையோடு வெயிலின் வெம்மையும் சேர்ந்து விட்டது. கண்களைத் திறக்க நினைக்கிறேன், முடியவில்லை. மிகவும் ப்ரயத்தனப்பட்டுத் திறக்கிறேன். கண்களின் நேரே சூரிய ஒளி பட்டு கண் கூசுகிறது. மறுபடியும் கண்ணை மூடிக் கொள்கிறேன். அப்படியே சிரமப்பட்டு கட்டிலின் அந்தப் பக்கம் புரண்டு கொள்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. இப்போது கண்களைத் திறக்கலாம். என் பூப்படைந்த கண்ணின் வழியே அந்தக் காட்சியைக் காண்கிறேன். நான் தினமும் பார்க்கும் காட்சி. கண்ணாடித் தடுப்பின் வழியே நேர் கோட்டில் சூரிய ஒளி கட்டிலில் பட்டு அந்தக் கண்ணாடித் தட்டின் வடிவம் கட்டிலில் கிடக்கிறது. அந்த ஒளியின் ஊடே மாசு படிந்த ஒரு உலகம் தெரிகிறது. பல கோடி வருடங்களாய் கொளுந்து விட்டு எரியும் சூரியனின் ஒளியில் வயோதிகம் இல்லை. அதே வேகம், அதே தினவு, அதே வீச்சு, அதே கர்வம்! சூரியனை எந்த நோயும் பீடிப்பதில்லை போலும்.

இன்று என்ன தேதி, என்ன கிழமை, என்ன மாதம்? மூக்குக் கண்ணாடி அணியாத மங்கிய பார்வை போலாகிவிட்டது நினைவுகளும்! நினைவுகளின் துல்லியத்திற்கும் ஒரு மூக்குக் கண்ணாடி அவசியம் என்று தோன்றுகிறது. நினைவுக்கு ஏது மூக்கு? என்ன இது? ஒரே பிதற்றலாய் இருக்கிறதே? பேசும் போது பிதற்றுவது தான் உளரலென்றால் மனதளவில் இப்படிப் பிதற்றுவதற்கு என்ன பேர்? சே! என்ன உளரல் இது? உடம்பு நோய் கண்டும் இந்த மனது ஓய்வு எடுக்க மறுக்கிறதே? உடம்பு பாடாய் படுகிறது என்று சிறு இரக்கம் கூட காட்டுவதில்லையே இந்த மனம்? என்னால் முடியவில்லை. ஆமாம்....?, இந்த என்னால் என்பது உடலா, மனதா? ஏன் இப்படி உளருகிறேன் இன்று? சூரிய ஒளி மங்குகிறது. ஏதோ மேகம் மறைத்திருக்க வேண்டும். தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்ற வாசகம் ஞாபகம் வருகிறது. இந்த மூளை தான் மனதை செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறது?! இந்த மனக்கிறுக்கின் உளரலுக்கு செவி சாய்த்து மூளைப் பரணில் இருக்கும் கண்டதை தூசி தட்டி எடுத்துத் தருகிறதே? உடல் சொல்கிறது, இரண்டும் கூட்டுக் களவானிகள் என்று!

என் உடல் வெப்பத்தால் கட்டில் சுடுகிறது. இவ்வளவு நேரம் அதை உணரக்கூடாது என்று என் எண்ணங்களை திசை திருப்பிப் பார்த்தேன். பலிக்கவில்லை. கொஞ்சம் புரண்டு கொள்கிறேன். வேட்டியை இரு கால்களுக்கும் இடையில் நன்றாய் செலுத்திக் கொள்கிறேன். என்ன வெப்பம்?! உடலெல்லாம் ஒரே அசதி. நான் ஓடிய ஆடிய காலங்கள் நினைவுப் பரணில் எங்கோ தூசு கண்டு கிடக்கிறது. அதை எடுத்து தூசு தட்ட நினைத்தால் இருமல் வரும்! இதோ வந்து விட்டது..இவ்வளவு நேரம் எப்படி மறந்து போயிருந்தேன். அப்பா, உயிரை உள்ளிருந்து பிடுங்கி எறிவது போல் அவ்வளவு அழுத்தமான, ஆழமான இருமல்கள்! என் வயதான, இறந்த போன, இறந்த கால மனைவியின் தளர்ந்த கைகளை மிகவும் கஷ்டப்பட்டு நினைத்துக் கொண்டு என் மார்பை வருடிக் கொள்கிறேன்! இதமாய் இல்லை தான். அப்படி இருப்பது போல் கற்பனை செய்து கொள்கிறேன்! வற்றிய கிணறைப் போல வற்றி இருந்த பாத்திரத்தில் மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுக்கிறேன்..இல்லை; எடுக்க முயல்கிறேன். ஆஹா...விரல்களில் ஈரம் படிகிறது! நல்ல வேளை அதிகமாய் தண்ணீர் இல்லை, டம்ளரில் நிரம்ப தண்ணீர் இருந்தால் அதை தூக்க சிரமம் ஏற்பட்டிருக்கும். ஏதோ டம்ளரில் ஒட்டி இருந்த ஒரு திவளை நீரை நாக்கில் நனைத்துக் கொள்கிறேன். எனக்கு யாருமே இல்லையா? என்று மனதில் ஒரு குரல் ஓலமிட்டு அழுகிறது! பாழடைந்து போன கண்களில் சிறிது கண்ணீர் சுரக்கிறது. நானிருக்கிறேன் என்று ஒரு சிறு தென்றல் என் கண்ணீர் துடைக்கிறது. கூரையின் கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கிறேன். நோயாளியைப் பார்க்க வருபவர்கள் பழங்கள் கொண்டு வருவது போல், சூரியன் வேஷம் போட்டுக் கொண்டு எனக்காக நட்சத்திரங்களை கொண்டு வந்து எட்டிப் பார்க்கிறது அரை குறை நிலா! அதற்குள் இரவு வந்துவிட்டதா?

வாழ்வில் மற்றொரு நாள் கழிந்தது!

10 Responses
  1. Hi Pradeep,
    vayodigaththin valigalai purindhu padhivu seidhulleergal.

    Aamaam neenga blog thavira edhulayum publish pannadhundaa?Kalki siru kadhai potti arivichchurkaanga...adhuvum thodakka ezhuththaalarkku sirappu parisaam..Try pannungalen..
    Best Wishes!


  2. Anonymous Says:

    Naan Gayathri Chandrashekarai Vazhi Mozhigiren.
    (Copy Pastukku Tamille ippdi thaane solvaanga?)

    -Balaji K.R.S.


  3. பிரதீப்,
    மிக அருமையான நடை, சிறுகதை என்று நினைப்பவர்கள் ஏமாந்து விட்டார்கள். மனைவி மக்கள் யாருமற்ற (இருந்து இல்லாத) ஒருவர் வயோதிகத்தில் என்ன செய்வார் என்பதை தங்கள் எழுத்துகளில் சொல்லியுள்ளீர்கள்.

    அப்பேற்பட்ட ஒரு உண்மை சம்பவம் நடக்ககூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எழுத்துகளை படிக்கும் போதே கண்களில் நீர் துளி விட்டால், நிஜத்தில்? நினைக்கவே முடியவில்லை.


  4. Kadai nalla iruku.

    Uvamaigal adigamaga irukiradu inda kadaila. But unnoda style missing pola thonudu enakku.


  5. காயத்ரி,

    தாங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி! கல்கி சிறுகதை போட்டியில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

    பாலாஜி,

    காயத்ரிக்கு சொன்ன பதிலையே உனக்கும் வழி மொழிகிறேன்! [அதே காப்பி பேஸ்ட் தான்!]

    சிவமுருகன்,

    இப்படி எத்தனையோ பேர் அவதிப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.

    கார்த்திக்,

    எத்தனை நாள் தான் நகைச்சுவை ரசத்தை மட்டும் எழுதிக் கொண்டிருப்பது. சோக ரசம் எனக்கு வருகிறதா என்று பார்த்த முயற்சி தான் இது.

    இது கமெர்சியல் ஹீரோவான ரஜினி முள்ளும் மலரும் நடித்ததைப் போல்! ஆனால் அந்தப் படமும் வெற்றி தானே? [இந்த உவமை எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கிறது!]


  6. கசி Says:

    அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.



  7. //இப்படி எத்தனையோ பேர் அவதிப் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.//

    ஆம் கண்ணெதிரேயே கண்டுள்ளேன். சில மாற்றம், தில்லியில் சுத்தம் செய்யப்படாத பெரிய 2 படுக்கையறை கொண்ட ப்ளாட், தனி சமயலறை, உதவிக்கு ஒரு ஆள்(உறவல்ல, அவ்வப்போது வருவாள்), பேச்சு துணைக்கு யாருமில்லை, புள்ளி விழும் டி.வி., 88வயதான பெரியவர். பிளாட் 4வது மாடியில் என்பதை மறந்து விட்டேன்.
    4 நாட்கள் அவருடன் இருந்துள்ளேன். பெரியவரை ஏன் ஒதுக்கினர் என்று தெரியவில்லை. இந்த வயதிலும் புட்டபர்த்தி செல்லைருப்பதாக அன்று சொன்னது இன்றும் என் காதில் ஒலிக்கின்றது. பல விஷயங்களை பேசினேன் பொதுவாக பெரியவர்கள் ஒரு நடமாடும் நூலகம் என்று நான் மதிப்பதுண்டு.


  8. Anonymous Says:

    Pradeep,
    This is Sivakumar (NG)
    just now i read your blog.
    all the matters in that is fine.
    especially sivaji's snapshots.
    ....

    good going on...
    your that oldman's story is nice...
    with few drops of ....
    ok.

    How r u?
    next week, jawahar's marriage.
    are u going for that?


  9. Hey NG,

    Thank u very much for ur commentsda. ya i got the invitation from Jawahar, but i am not sure whether i can attend his marriage or not, because i am busy in office. daily 12 manikku thaan veetukke poren. let's see..