இன்னொரு மழை நாள்!

நள்ளிரவு!

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

வழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது! நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100!!] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் "டேய் first அதை off பண்றா! அப்போ இருந்து தூங்க விடாம!" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] அவன் வெறுப்புடன் "நல்ல அலாரம்!" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.

அவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்!] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்!! "இது ஆவுரதில்லை" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம்! இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து "என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே?" என்று கேட்பது போலிருந்தது!! என்ன சத்தமா?

பெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.

இதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்!

1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.
2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது! உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே! [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது!!!
]


0 Responses