நான் முன்பு டெல்லியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன்! பெங்களூர் வந்து 1 வருடம் ஆகிறது. டெல்லியில் இருந்தபோது வருடத்திற்கு ஒரு முறை மதுரைக்கு வந்து போவதுண்டு! 2 நாள் பயணம்! அதிலும் வெயில் காலத்தில் அந்த tamil nadu express ல் வருவது இருக்கே..அடடா! நினத்தாலே பற்றிக் கொண்டு வருகிறது!! ஆனால் அந்த வெயிலிலும் எனக்கு சில சமயங்கள் கவிதை வந்ததுண்டு!!!!! [அய்யய்யோ! இப்போ எங்களுக்கு பத்திட்டு வருதேன்னு யாருப்பா சொல்றது?]

என் உள்ளே இருக்கும் ப்ரதீப் [அதான்பா மனசாட்சி!], நம்ம blog மக்களுக்கு இதைக் காமிடான்னு ஒரே அடம்! சரி தொலையிரான்னு உங்களுக்கு காட்றேன்! கவிதை சுமாரா இருந்தா நீங்க என்கிட்ட கோச்சுக்காம அந்த பயகிட்ட தான் கோச்சுக்கனும்! பாராட்டனும்னா மட்டும் என்கிட்ட சொல்லுங்க ஹிஹி...

அத்துவானக் காட்டில்
எப்போதாவது வரும் ரயிலைப் பார்த்து
கை அசைக்கிறான் அந்தச் சிறுவன் - தன்
கைகளால் பிடித்திருந்த கால்சட்டை
நழுவுவது தெரியாமல்!


இன்னைக்கு தான் இதை எழுதினேன்! ரொம்ப நாளா ஓடிட்டு இருந்தது! இதை எழுதிட்டு ஒரு friend கிட்ட காட்டினேன்! அவங்க இந்தக் கவிதையை புரிஞ்சுகிட்ட விதமே வேற மாதிரி இருந்தது!

இதை எழுதும் போது நான் உணர்ந்தது!

1. வாழ்க்கை எத்தனை சின்ன விஷயங்கள் இப்படி ரசிக்கும்படியாய் இருக்கிறது!
2. அந்த சிறுவனுடைய உற்சாகம், குதூகலம் எல்லாம் நமக்கும் அல்லவா தொற்றிக் கொள்கிறது!

என் friend உணர்ந்தது அவர் எனக்கு சொன்னது

இப்படித் தான் இன்னைக்கு பலர் இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்றாங்க!


இந்தக் கவிதைக்கு மேலும் உள்ளடங்கிய அர்த்தம் கண்டுபிடித்து எனக்கு அனுப்புபவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து, இந்தக் கவிதையின் இன்னொரு உள்ளடங்கிய அர்த்தமே பரிசாக வழங்கப் படும்!!

0 Responses