இரண்டு வாரங்களுக்கு முன் என் மாமா டெல்லியில் இருந்து அவர் குடும்பத்துடன் சென்னையில் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவரின் ஆறாவது படிக்கும் பையன் சென்ட்ரலில் வந்து இறங்கும்போதே பிரச்சனை ஆரம்பித்து விட்டான்.

சென்னையில் கால் வைக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லையாம். இந்த மாதிரி மட்டமான, குப்பை ஊருக்கெல்லாம் ஏன் என்னை கூட்டி வருகிறீர்கள் என்று ஒரே களேபரம். வீட்டில் வந்து மாமா என்னிடம் சொன்னார். நமக்குத் தான் சின்ன பசங்களிடம் வாய் கொடுத்து மாட்ட பிடிக்குமே...ஆரம்பித்தேன்.

ஏன் சார் உங்களுக்கு சென்னை புடிக்கலை? இந்த ஊருக்கு என்ன குறைச்சல்? என்றேன்.

இது கந்தா ஊர் என்றான். கந்தா என்றால் முருகன் அல்ல, அசிங்கம். ka அல்ல ga!

வாடா மவனே என்று, என்ன கந்தா..உங்க டெல்லி ரொம்ப சுத்தமோ? [அந்த டாப்பிக்கில் போய் மாட்டிக்கொள்ளாமல், ball ஐ வேறு மாதிரி போட்டேன்!]

சென்னையில பீச் இருக்கு, உங்க ஊர்ல இருக்கா என்றேன்!

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. உடனே ஒரு counter அடித்தான். எங்க ஊர்ல "இந்தியா கேட்" இருக்கு என்று!

நானா சும்மா இருப்பேன், சரிடா..இந்தியா கேட் தானே, நீ அடுத்தவாட்டி வரும்போது நான் சென்னையில இந்தியா கேட் கட்டிற்றேன். நீ டெல்லியில பீச் கொண்டு வர முடியுமான்னு கேட்டேன். [எப்புடி?]

அவன் லைட்டா ஜெர்க் ஆனான்.

என் மாமா உடனே, இங்கே இருக்குற மெரினா பீச் தான் உலகத்துலேயே second longest beach தெரியுமா என்றார்.

பதிலுக்கு அந்த பய புள்ள, first எது என்றான்! இப்போ நாங்க ஜெர்க் ஆனோம்! [என்ன உஷாரா இருக்கானுங்க...நம்ம இது வரை இப்படி கேட்டதே இல்லையே! கூகுளித்ததில் பங்களாதேஷ், பிரேசில் என்று பல்வேறு தரப்புகள் சொல்கிறார்கள்.]

மெல்ல பேச்சை மாற்றி, வேற என்ன இருக்கு உங்க டெல்லியில என்றேன்.

எங்க ஊர்ல கன்னாட் ப்ளேஸ் இருக்கு, எவ்வளவு ஓல்ட் பில்டிங், இங்க இருக்கா என்றான்.

டே, சென்னையே ஓல்ட் தாண்டா என்று பல வித ஓல்ட் கட்டடங்களை அள்ளி விட்டேன்.

மேலும், உங்க கிட்ட இப்போ தான் மெட்ரோ இருக்கு, எங்ககிட்ட தரையில ஓடறது, பறக்குறது, இப்போ மெட்ரோன்னு மூணு விதமான ரயில் இருக்கு! என்று அவனை கட்டம் கட்டி அடித்தேன். அவன் கொஞ்ச நேரம் மௌனமாய் யோசித்தான். எப்படி பால் போட்டாலும் கோல் போடறானேன்னு நினைத்திருக்கலாம்.கொஞ்ச நேரம் பேசவேயில்லை. நாங்கள் பெரியவர்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தோம். தடாலென்று ஒரு கேள்வியுடன் வந்தான்...[பய புள்ள இவ்வளவு நேரம் யோசிச்சுருக்கு!]

எங்க ஊர்ல இந்திரா காந்தி வீடு இருக்கு..இங்க இருக்கா?

நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று எல்லோரும் ஆர்வமாய் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு நான், "இங்கே தாண்டா ரஜினிகாந்த் வீடு இருக்கு என்றேன்! இதுக்கப்புறம் அவன் பேசி இருப்பான்னு நெனைக்கிறீங்க?
7 Responses

  1. பையனும் சாதாரண ஆள் இல்லே. தேடிப்பிடிச்சு இந்திரா காந்தியை யோசிச்சிருக்கான். இதேமாதிரிதான் நான் ஊருக்குப் போகும்போதும் நடக்குது.


  2. Unknown Says:

    பிரதீப்,
    என் பெயரை சொல்லியிருந்தா பையன் அடங்கியிருப்பான்


  3. ஹாஹா ஹாஹா.

    ஒன்னுக்கொன்னு சளைக்கலை:-))))

    அதிலும் அந்த இந்தியா கேட் VS மெரினா பீச் சூப்பர்:-))))))))))


  4. அட என்ன பாஸ் சென்னையில கூவம் இருக்கே உங்க ஊருல இருக்கான்னு கேட்டிருந்தா பையன் முழித்திருப்பானே.


  5. gummaachi,

    ada, nalla thaan irukku. but koovamna ennanu antha payyanukku teriyaathe! athai velakkina, vivaatham thadaipattu swarasyam kettu poyirume boss :-)


  6. அடுத்தவாட்டி அந்த பையன் வரும் போது மீட் செய்யணுமே..