"தாண்டவம்" பார்த்தேன். இயக்குனர் என் கையில் கிடைத்தால் "ருத்ர தாண்டவம்" ஆடி இருப்பேன். இந்தக் கதைக்கு சண்டை வேறு! கஷ்டம்!! பார்வையாளர்கள் அத்தனை பெரும் அடி முட்டாள்கள் என்ற நினைப்பில் படம் எடுத்திருக்கிறார் இயக்குனர்.
வெடி குண்டு விபத்தில் தன் மனைவியையும், கண் பார்வையையும் இழந்த ஒருவன் பழி வாங்குவதே கதை. இனி மேல் தமிழ் சினிமாவில் பழி வாங்கும் கதையை எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரையும் நான் பழி வாங்கப் போகிறேன். போதும் யா...யோவ்! முடியலை...இயக்குனர் விக்ரமுக்கு இப்படி கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன். கூடவே என் மைன்ட் வாய்சும்.
விஜய்: சார், ஓபன் பண்ணா லண்டன்ல ஒரு பாம் பிளாஸ்ட். [ஆரம்பமே பிரம்மாண்ட அதிரடி!] அப்படியே டைட்டில் பறக்குது. சில வருடங்களோ, மாதங்களோ கழிந்ததும் லண்டன்ல ஒரு கொலை நடக்குது [?]. அந்தக் கொலையை பண்றது நீங்க! [படம் முடிஞ்சு போச்சு...பாம் ப்ளாஸ்ட்ல யாரோ செத்துட்டாங்க, பழிக்கு பழி!] அதுல என்ன புதுசுன்னு தானே கேக்குறீங்க [யு தேர்! கமான் டெல் மீ ]..உங்களுக்கு இந்தப் படத்துல கண்ணு தெரியாது [என்னா ட்விஸ்ட்!] அப்புறம் எப்படி கொலை எல்லாம்னு நீங்க கேப்பீங்க...[கெரகம், சொல்லுங்க!] உங்களுக்கு கண்ணு தான் தெரியாது, ஆனா நீங்க வாயை தொறந்தா ஒரு சத்தம் வருது! [எனக்கு இப்போ நல்லா வாயில வருது!] அந்த சத்ததோட எதிரொலி வச்சி எதிரியை கொல்றீங்க...[எதிரியை மட்டுமா கொல்றீங்க!] நீங்க லண்டன்ல ஒரு சர்சுல மணி ஆட்றீங்க...சாரி, பியானோ வாசிக்கிறீங்க [நைஸ்!]. அங்கே இருக்குற எல்லா வெள்ளைக் காரங்களுக்கும் உங்களை அவ்வளவு புடிக்கும். [ஏன்?] அந்த சர்ச்சுக்கு ஏமி வர்றாங்க [வரணுமே!]. அவங்க அந்த ஊர் வெள்ளைக்காரி மாடலை விட பெரிய மாடல் [ம்ம்ம்..]. அப்போ ஒரு குழந்தைய மடியில வச்சிட்டு வாசிக்கிறீங்க சார். இதை விட காதல்ல தொபக்கடீர்னு விழுறதுக்கு ஒரு சந்தர்பம் கிடைக்குமா சார்? அப்படியே லவ், ஒரு சாங்குக்கு ஃபாரின் போறோம். [நாம ஆல்ரெடி பாரின்ல தானேப்பா இருக்கோம்!]
அவங்களோட நீங்க ஒரு பார்க்ல நடந்து போகும் போது பேட் பாய்ஸ் வர்றாங்க. [லண்டன்லயுமா?] நீங்க எமியை கற்பழிக்க வர்றாங்கனு நெனச்சீங்களா, அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கோம்! [அங்கே கொண்டு போயா வச்சீங்க!] அவங்க எமியோட தொழில் ரீதியான எதிரிகள். எமியை அவங்க மெரட்றாங்க..தடுக்கப் போன உங்களை அடிக்க வர்றாங்க! [ஆஹா, இந்த எடத்துல தமிழ் சினிமா ஹீரோ கை, கால் இல்லைனாலே பத்து பேரை அடிப்பானே!] கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள சட்டை தொறந்த சல்மானா நிக்கிறீங்க...டொக்கு, டொக்குன்னு சத்தம் போட்டு போட்டு எதிரிகளை சுத்தி சுத்தி அடிக்கிறீங்க...எமி அப்படியே ஷாக் ஆயிடறாங்க...[நாங்களும் தான்! கண்ணு மண்ணு தெரியாம காப்பாத்துற ஆம்பளைகளை எந்த பொண்ணுக்குத் தான் புடிக்காது?] அவங்க லவ்வை ஓபன் பண்றாங்க..ஆஹா, நம்ம நெறைய பேரை க்ளோஸ் பண்ண வேண்டி இருக்கு, இந்த பொண்ணு லவ்வை ஓபன் பண்ணிடுச்சேன்னு வொரி ஆகுறீங்க...அப்போ அந்த லவ்வோட சேத்து உங்க ஃப்ளாஷ் பேக்கையும் ஓபன் பண்றோம்.
சத்தமே போடாம ஒரு பத்து பேரை அடிச்சி உங்க நண்பனை காப்பாத்துறீங்க.[அவன் துரோகியா இருப்பான்னு "ஐக்யு" வே இல்லாதவன் கூட சொல்வான்!]..என்னடான்னு பாத்தா, உங்களுக்கு கண்ணு தெரியுது! நீங்க டெல்லியில ரா ல ஒரு பெரிய உயர் அதிகாரி. திடீர்னு உங்களுக்கு கல்யாணம்! [இன்னுமா ஆகலை?] கட் பண்ணா, பச்சை பசேல்னு ஒரு கிராமம் [வில்லேஜ் ஆடியன்ஸ்!]. நீங்க பொண்ணை பாத்து கல்யாணம் வேணாம்னு சொல்ல போறீங்க...அப்போ தான் வழியில அனுஷ்கா மழையில நனையிறாங்க..[நாங்களும் தான்!] ஐஸ்வர்யா ராயையும், அனுஷ்காவையும் பொண்ணு ரூபத்துல பாத்த எவனாவது கல்யாணம் வேணாம்னு சொல்வானா? [மாட்டன், மாட்டான்!] அவங்க டெல்லியில கண் டாக்டர் [வாட் அன் ஐரணி!] உங்களுக்கு அவங்களை பத்தி தெரியாது, அவங்களுக்கு உங்களை பத்தி தெரியாது! கல்யாணம் பண்ணிட்டு கண்டு புடிக்கிறீங்க. அங்கே ஒரு லவ் எபிசொட்! [ஏன் சார், பிகாசோ, ரவி வர்மன் இப்படி எல்லாமே எங்களுக்கு தெரிஞ்ச பெயராவே இருக்கே, இவங்களைத் தவிர உங்களுக்கு எந்த பெயின்டரும் தெரியாதா? கொடுமை..ஆமா அனுஷ்கா சொன்ன மாதிரி விக்ரமும் உண்மை சொல்லி இருந்தா, அந்த எஸ். ஐ., பிரமோஷன், மொக்கை எல்லாம் கட் பண்ணி இருக்கலாமே! சரி அப்படியே கல்யாணத்துக்கு அப்புறம், எவனோ ஒருத்தன் உன் புருஷன் இங்கே தான் இன்னாரா வேலை பாக்குறான்னு சொன்னா..மனைவிக்கு நல்லாவா இருக்கும்? இதை எந்த விதத்துல க்யுட்டான சீன்ச்னு நினைச்சீங்க. எந்த பொண்டாட்டி சார் புருஷன் எங்க வேலை பண்றான்னே தெரியாம இருப்பா? என்ன லாஜிக்கோ...உங்களோட யாரு சார் டிஸ்கஷன்ல உக்கார்றது?] அனுஷ்காவுக்கு லவ் பொங்கி [நமக்கு ஆத்திரம் பொங்கி!] அவங்க லண்டன் வந்து பாம் வெடிச்சி செத்து போறாங்க. [நாங்க வெடிக்காம...]
அப்புறம் நீங்க லெட்சுமி ராயின் கிசு கிசு க்ளூவின் மூலம் எதிரிகளை பழி வாங்குறீங்க சார் [ஏன் சார், லெட்சுமி ராய்க்கு தான் கண்ணு தெரியுதே, அவங்களே போய் கொல்ல வேண்டியது தானே? அவங்களுக்கும் தான் புருஷன் செத்து போனான்!]
க்ளைமாக்ஸ் ல நீங்க அஞ்சு பேரை எப்படி பழி வாங்குநீங்கன்னு நாசர் அவரோட டேப்லட் ல ஆராஞ்சதுல ஐந்து கொலைகளும் பஞ்ச பூதங்களுக்கு தொடர்பு இருக்குன்னு கண்டு புடிக்கிறாரு. [இது வேறையா..]
ஆனா ஒன்னு சார், உங்களை சொல்லி குத்தமில்லை. நம்ம தமிழ் சினிமா நாயகர்களின் திறமையும் அசாத்தியம் தான் [அஜீத் தவிர, அவர் மட்டும் தான் புத்திசாலி!]. இப்படி ஒரு மொக்கை படத்தை பண்ணிட்டு அதை பத்தி டீவியில ஆஹா, ஓஹோன்னு பேசி நடிக்கிறாங்களே . அது தான் டாப்!
நல்லா எடுக்குறீங்க சார் படம். நீங்க இனிமே ஒரிஜினலா எழுதுறேன்னு எதையும் ட்ரை பண்ணாதீங்க...எத்தனை ஹாலிவுட் படம் வந்துருக்கு...உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை..பாத்து புரிஞ்சு நடந்துக்குங்க!
அருமை. நான் படம் பாக்குறதா இல்லை
கந்தசாமியில கொக்கரக்கோன்னு சத்தம் போடுவாரு.. ராவணன்ல டண்டணக்கா டண்டண்.. இந்த படத்துல வேற சத்தமா ? சுத்தம்... !! சவுண்டு சென்டிமெண்ட் போல...
விஜய் படத்த தியேட்டர்ல போய் பார்த்து.. பாவங்க நீங்க... எனிவே.. இன்னும் ரெண்டு மாசத்துல டிவில போடுவாங்க... விளம்பரத்துக்கு நடுவுல பார்த்துக்குறோம்..
அஜீத் தவிர, அவர் மட்டும் தான் புத்திசாலி///
அவரோட ரெட் படம் பாத்தீங்களா. அது ஒரு கொடுமை
jai,
ajeethoda ella padangalum kodumai thaan. padam mudinjathum athai purinjukkura motho aal avar thaan. athaan avar entha promotionukkum varrathillai :-)
athai sonnen...
Vickram ippodhu oru waste piece. Nadippathu pol illadhiruppathe nalla nadippukku adayalam. Athanai vikramidam ethirparppathu waste. Padamum waste Anushka irundhaalum. SEKAR