ஜனநாயகத்தில் எனக்கு இருக்கும் ஒரே உருப்படியான உரிமை வாக்களிப்பது; அது இன்று என்னால் முடியவில்லை.
வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லையாம்; நான் ஏன் இந்த அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்கலாம் என்று பார்க்கிறேன்!
"எனி வாலண்டியர்ஸ்" தமிழில்!
யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை வெளியில் சொல்லக்கூடாது;
ஐ டி கம்பனியில் அப்ரைசில் ரேட்டிங்கை யாரிடமும் சொல்லக் கூடாது என்பதை போல.
இரண்டையும் யாருமே கேட்பதில்லை!
ஒரு கதை எழுத வேண்டும்; சோம்பேறி தனமாய் இருக்கிறது! கருவை மட்டும் சொல்லி விடுகிறேன்.
ஒரு நல்ல சிறுகதைக்கான அனுபவத்தை பெற்றுக் கொள்ளுங்கள்!
[போகிற போக்கில் இன்று நான் வலைபதிந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று எழுதாமல் இருந்தால் சரி!!]
"பாவப்பட்டு ஒருவனுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தேன். வழியில் ஒரு விபத்தில் நான் தப்பிக்க அவன் இறந்து விட்டான்!" - சுபம்.
மடிப்பாக்கம் அடகு கடைகளாலும் டென்டல் கிளினிக்குகளாலும் நிரம்பி வழிகிறது! என்ன காரணமாய் இருக்கும்?
முக்குக்கு முக்கு பல பெயர்களில் வீற்றிருக்கும் அம்மன் கோவில்களுக்கும், எல். ஆர். ஈஸ்வரிக்கும், + 2 ரிசல்ட் குறைவதற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் படுகிறது!!
அரை கிலோ பொரிகடலை இன்று என்ன விலை தெரியுமா? முப்பத்தி மூன்று ரூபாய்! இதை எதற்கு சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதை வாங்கப் போய் தானே மேல் உள்ள அத்தனையும் பார்த்தது;கேட்டது;சிந்தித்தது!
நிலவு பல்லியின் வாலை ஒத்திருக்கிறது;
அது வெட்ட வெட்ட வளர்ந்து விடுகிறது!
[பொரிகடலை வாங்கினால் ஒரு கவிதை இலவசமாம்!]
Mr.Pradeep,
Sirukathai concept nallarukku. Nan vena kathaiya uruvaakkaren pa.
Amman koil-L.R.Eswari-+2 result..... Ithuku lam enna thodarbu?
Apram.... Pori kadala nu sonningale.... Apdina enna? Adhu epdi irukum pa?
Ilavasa kavithai romba nalla iruku. Intha kavithaiyin nadai Russia kavingnargal style mathiri iruku pa.
Chocolate Vaazhthukal!
தமிழ்,
தாராளமா! கதை எழுதி அனுப்புங்க...
இத்தனை அம்மன் கோவில்களாலே மாசத்துக்கு ஒரு திருவிழா வருது..ரேடியோ போட்டு அலற விடறாங்க. அதனால படிப்பு கெடுத்து! எப்புடி?
பொறி கடலை = பொட்டுக் கடலை
ரஷ்ய கவிதையா? உங்களை மாதிரி இரண்டு பேர் இவ்வளவு விசாலமா பின்னூட்டமிட்டா நான் எங்கேயோ போயிடுவேன் போல இருக்கே! மிக்க நன்றி!
வாக்களர் பெயர் விடுபடுவதற்கு காரணம் - ஒன்று சேகரித்தவரின் அலட்சியம், இல்லை அவர் எதோ உள்குத்து வேலை பார்த்து இருக்கார்.
>> "பாவப்பட்டு ஒருவனுக்கு வண்டியில் லிப்ட் கொடுத்தேன். வழியில் ஒரு விபத்தில் நான் தப்பிக்க அவன் இறந்து விட்டான்!"
ஏன், நீ லிப்ட் கேட்டவன எல்லாம் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் சாப்பாடு போட்ட?
-
வெங்கடேஷ்
அப்படின்னா ஒரு கிலோ பொறிகடலை 66 ரூபாய்னு சொல்லுறீங்களா
jai,
ungaloda kanitha arivai nenacha en udambu silirkuthu sir :)
adikkadi pori kadalai vaangu!!!
vaangitta pochchu :-)