சதா அழுது கொண்டே இருந்த
ஒரு குழந்தை தெய்வத்தை
விண்வெளியில் விட்டுச் சென்றது
ஒரு தாய் தெய்வம்

சுற்றிலும் இருள்!
ஆங்காங்கே மினுக்கும்
சிறு சிறு பொறிகளையும், பந்துகளையும்
வேகமாய் நகரும் வெளிச்சங்களையும் 
விநோதமாய் வேடிக்கை பார்த்தது குழந்தை

சுற்றிக் கொண்டிருக்கும் 
சில பந்துகளை
ஆள்காட்டி விரலால் அழுத்தி 
நிறுத்துவதும், மறுபடியும்
அதை சுற்றி விடுவதும்
வேடிக்கையாய் இருந்தது அதற்கு

தெரியாமல் சூரியனில் கை விட்டு
விரலை சுட்டுக் கொண்டது!
கோபத்தில் பலமாய் ஊதிப் பார்த்தது!
இருந்தும் அது அணையாததால்
பூமியிலிருந்து கடலை எடுத்து அதன்
மேல் ஊற்றித் தோற்றது

அடங்காத கோபத்தில் அருகிலிருந்த
செவ்வாயையும் புதனையும்
சூரியனில் எரிந்தது.
அது சூரியனில் புகுந்து 
சாம்பலாவது ஏனோ பிடித்திருந்தது அதற்கு

நேரம் போவதே தெரியாமல்
சுற்றி இருந்த மற்றவைகளையும் 
குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

இப்படியே நேரம் செல்ல - 
அண்டவெளியில் விளையாடிக் களைத்து
அம்மாவை தேடி அழுதது 
குழந்தை தெய்வம்

11 Responses
 1. Anonymous Says:

  கவிதை அருமை! குழந்தைகளுக்கு எல்லாமே விளையாட்டு தான்! சூரியனும் சந்திரனும் ஒண்ணு தான்! பை தி வே, ஐ டெடிகேட் திஸ் சாங் டு மை டாட்டர்!

  -
  வெங்கடேஷ்


 2. அப்புறம் அம்மா தெய்வம் வந்து அண்டவெளியில் எல்லாவற்றையும் சரி செய்ததாமா?. உலகத்தை விட்டு வெளியில் இழுத்துச் சென்ற கவிதைக்கு நன்றி.


 3. சாகம்பரி,

  தங்களின் முடிவு அமர்க்களமாய் இருக்கிறது! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி!

  பிரதீப்


 4. Anonymous Says:

  good theme


 5. thanks anony, perai podalame!?


 6. ரொம்ப நல்லா இருக்கு கவிதை. வித்யாசமான தீம், நல்லா இருக்கு. 7. Thamizhachi Says:

  "நேரம் போவதே தெரியாமல்
  சுற்றி இருந்த மற்றவைகளையும்
  குழந்தை எரிந்தது; சூரியன் எறித்தது!

  இப்படியே நேரம் செல்ல -
  அண்டவெளியில் விளையாடிக் களைத்து
  அம்மாவை தேடி அழுதது
  குழந்தை தெய்வம்"

  Mr.Pradeep,
  Etho Dhevathai dhesathukulla poitu vantha oru unarvu..... Ofcouse, Thaayum seayum eppovume Dhevathaigal thane.....
  Karpanai valam nalla iruku. Mela sonna indha varigal etho ennai baadhikara mathiri feel panren. Epo oru kavithai padikaravar manasa baadhikum thanmaiyoda iruko apove antha kavidhaiyum, kavingnarum angeegarika pattuvittaar nu sollalam.....
  Extra Chocolate Vaazhthukal!...


 8. thamizhachi,

  wonderful comment! spl thanks :)


 9. Varathan Says:

  nallaa irukkuthu sir