அலுவலகத்தில் மறுபடியும் கண்டுபிடித்து விட்டார்கள்..."என்ன சொன்னாலும் செய்றான் இவன் ரொம்ப நல்லவன்டா" என்று! எப்படித் தான் கண்டுபிடிக்கிறாய்ங்களோ? ஆமாம். அலுவல் நிமித்தமாக ஒரு மாதம் கோயம்பத்தூருக்கு டெபுட்டேஷனில் அனுப்பி விட்டார்கள். சரி, சென்னைக்கு வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது, ஒரு மாதம் கோவைக்குத் தான் சென்று வருவோமே, ஒரு எழுத்தாளன் வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் தானே என்று நானும் கிளம்பி விட்டேன். [இங்கு எழுத்தாளன் யார் என்பதை சரியாய் கண்டு பிடிப்பவரின் வீடு தேடி வந்து நானே கை குலுக்குவேன்!]

உங்க டெசிக்னேஷனுக்கு நீங்க ஏரோப்ளேன்ல போகலாம், நீங்களே புக் செய்து விட்டு பணத்தை ரீஎம்பர்ஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிறகு பணத்தை தராமல் டேக்கா கொடுத்து விடுவார்களோ என்று பயந்தேன். ஏனென்றல் இத்தகைய அனுபவம் எனக்கு ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறது...ஐந்து வருடத்திற்கு முன்னால் ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும் போது நீங்கள் ரயிலில் ஏசி கோச்சில் செல்லலாம், புக் செய்து டிக்கட்டைக் காட்டி பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். நமக்கும் இப்படி ஒரு வழ்வா? என்று நினைத்து ரயிலில் டிக்கட் கிடைக்காததால் வால்வோ பஸில் ஜம்மென்று 700/= கொடுத்து பெங்களூர் போய் பணத்தைக் கேட்டால் உங்க ட்ரான்ஸ்வர் லெட்டர் எங்கே என்று ஏதேதோ சால்ஜாப்பு சொல்லி பணத்தைக் கொடுக்க முடியாது என்று சொல்லி விடார்கள். அது சரி எல்லாம் நல்லா நடக்குதேனு கொஞ்சம் சந்தொஷப்பட்டது என் தப்பு தான்...இவர்கள் சும்மா இருந்திருந்தாலாவது உருளைக் கிழங்கு லாரியைப் பிடித்து போயிருப்பேன். சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டானுங்கடா...ஏதோ நான் பயந்த மாதிரியெல்லம் நடக்காமல் இந்த முறை அவர்களே ரயிலில் புக் செய்து அனுப்பி விட்டார்கள்!

எனக்கு என்னமோ ஏசி கோச் பிடிக்கவில்லை. மனிதர்களின் இரைச்சலே இல்லாமல் ஏதோ ஒரு எழவு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு. கண்ணாடியின் வழியே ஒன்றும் தெரிவதில்லை. ரயில் போகிறதா நிற்கிறதா என்றே புரிவதில்லை. என்ன ஒரு கம்பளி, ஒரு தலையணை, இரண்டு போர்வை கொடுக்கிறார்கள். செல்லும் இடம் வந்ததும் பொறுப்பாய் எழுப்பி விடுகிறார்கள். தமிழ் தெரிந்திருந்தாலும், ஆங்கிலத்திலேயே பேசுபவர்கள் இதில் பயணம் செய்கிறார்கள். அட்டென்டன்ட் போர்வை ஒன்றை கம்மியாய் கொடுத்து விட்டதாக டீடீஈயிடம் [ஏன் எல்லோரும் டீடீஆர் என்கிறோம்?] ஆங்கிலத்தில் கம்ப்ளயன்ட் செய்கிறார்கள்.

கோவையில் அவிநாசி ரோட்டில் ஒரு பெரிய ஃப்ளாட்டில் தங்கியிருக்கிறேன். மிக அற்புதமய் வீட்டை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு ஃப்ளாட் நிச்சயம் 50 லட்சமாவது இருக்கும். நேபாளத்திலிருந்து இங்கு வந்த நான்கு பேர், காலை, மாலை என்று எங்களுக்காக ரொட்டியை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் உங்களுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி என்று பணிவோடு சொல்கிறார்கள். அங்கு தங்கும் சிலரின் அட்டகாசம் தங்கமுடியவில்லை. நான் டீவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவேன், சாப்பாட்டை இங்கே கொண்டு வா என்று அதிகாரம் செய்கிறார்கள். எனக்குப் பாவமாக இருக்கிறது.
என்ன தான் ராஜ போகம் இருந்தாலும், எனக்கு என்னமோ வசதியான ஒரு ஜெயிலில் அடைத்து வைத்திருப்பது போலவே தோன்றுகிறது. காலை ஆனதும் சாப்பாடெல்லாம் போட்டு ஜெயில் கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்துவது போல் ஒரு வேனில் ஏற்றி அலுவலகத்திற்கு அனுப்புவதும், இரவு 10 மணிக்கு, 12 மணிக்கு மறுபடியும் வேனில் கொண்டு வந்து வீட்டில் விட்டால் அப்படித் தனே தோன்றும்! இதில் நான் கோவையில் இருந்தாலென்ன கொடைக்கானலில் இருந்தாலென்ன...

ஒரு வேளை சிறையில் இணைய வசதி வந்தால் மறுபடியும் சந்திக்கலாம்!
14 Responses
  1. முடிஞ்சா பேரூர்,தியானலிங்கம் போய்பாத்துட்டு அதபத்தியும் எழுதுங்க


  2. பிரதீப், உங்களுடைய அனுபவப் பகிர்வுகளும் இனிய நடையும் படிக்க இதமாய் இருக்கின்றன. தொடரவும். நீண்ட காலம் கழித்து இப்போது தான் உங்கள் பதிவைப் பார்க்கிறேன்.


  3. //இவர்கள் சும்மா இருந்திருந்தாலாவது உருளைக் கிழங்கு லாரியைப் பிடித்து போயிருப்பேன்.//

    :)

    //எனக்கு என்னமோ ஏசி கோச் பிடிக்கவில்லை. மனிதர்களின் இரைச்சலே இல்லாமல் ஏதோ ஒரு எழவு வீட்டில் இருப்பது போன்ற உணர்வு. கண்ணாடியின் வழியே ஒன்றும் தெரிவதில்லை.//

    உண்மை. a/c பேருந்தில் போன போதும் இது போல் உணர்ந்திருக்கிறேன்.


  4. Anonymous Says:

    enga ooru eppadi irukkunga.... enjoy pannunga :-) Jaila vittu veliya vaanga appo dhaan coimbatore oru cooles placenu puriyum...


  5. Anonymous Says:

    TTE - Travelling ticket examiner


  6. Anonymous Says:

    nice one..Write about Kovai city and work experience..
    btw: I work in Cognizant


  7. Sivakumar Says:

    "இதுக்கு மாடே தேவலயே!" அந்த மாதிரி இதுக்கு ஜெயிலே தேவல போல.... nice post!


  8. velarasi,

    sirayilirunthu viduthalai kidaithal kandippaaga poi varukiren!

    selvaraj,

    nandri selvaraj, kandipaaga adikkadi vaarungal

    ravisankar,

    same blood?

    anonys,

    neenga soldrathu rightu thaan.

    ravi,

    ya i am thinking to write abt that, let me see...

    siva,

    thx


  9. Anonymous Says:

    expecting posts on IPL


  10. Unknown Says:

    //இங்கு எழுத்தாளன் யார் என்பதை சரியாய் கண்டு பிடிப்பவரின் வீடு தேடி வந்து நானே கை குலுக்குவேன்!]//

    அந்த எழுத்தாளர் நீங்க தான் எப்படி என் சாமர்த்தியம். எப்போ வீட்டுக்கு வரீங்க


  11. yaarume illaatha kadaikku yaarukkuyya tea aathureenga mathiri irukku...unga comments.!

    en valai pathivu pakkam naan vanthe 2 maasam aayiduchu...innuma ennai nambureenga?

    ithukkaagavaavathu unga veetukku vanthu kai kulukkuren...




  12. prasanna Says:

    ungallukavudu night 12 mani annallum van varrum . enakku podi nadai than thalaiva