நான் உள்ளே நுழையவும் "சரி பவி மீ அவுஸ்" [சரி அண்ணி, நான் கெளம்புறேன்] என்று அவள் கிளம்பவும் சரியாய் இருந்தது...

சாந்திக்கு வயது ஒரு 35 இருக்கலாம். அவள் வறுமைக்கும் வயிருக்கும் சம்மந்தமில்லை...நல்ல புஷ்டி! இருட்டில் பிடித்த கொலக்கட்டை போல் கொச கொசவென்று நான்கைந்து, வீடுகள் என்ற பெயரில் இருக்கும் கூடுகள் எங்கள் காம்பவுண்ட்! அந்த கொச கொச கூடுகளில் எங்கள் பக்கத்துக் கூட்டில் வசிப்பவள் இந்த சாந்தி. எல்லோரும் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சார்ந்தவர்கள். உங்களை பொறுத்த வரை காய்ரா பூய்ரா ஜாதி!

அவள் புருஷன் மகா யோக்கியன். குடிக்காமல் பெண்டாட்டியை கை நீட்டி அடிக்கவே மாட்டான்! அதே சமயம் குடிக்காமல் இருக்கவே மாட்டான்! இந்த இரண்டு வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருபவன், எப்படியோ இன்னொரு வேலையும் பொறுப்பாய் செய்துள்ளான். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். குடிகாரனின் குழந்தைகளாய் இருந்தாலென்ன, அத்தனை அழகு!

சாந்திக்கு இரண்டு வேலை தெரியும். ஒன்று தைப்பது; இன்னொன்று அழுவது! ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் பெயரை வரைவது போல் சாந்தியும் ஜாக்கட்டை தைத்து தன் பெயரை அதில் வரைந்திருந்தால், மதுரையில் அந்த ஏரியாவில் சந்துக்குச் சந்து இருக்கும் பெண்களின் மேல் அவள் பெயரை பார்க்கலாம்! அவ்வளவு தைத்திருக்கிறாள்! சாதாரண ஜாக்கெட் 30 ரூபாய். பஃப் கை 35! தொட்டி கழுத்து வைத்து பாசி வைக்க 40. ஜன்னல், பால்கனி என்று விதவிதமான டிசைன்கள், விதவிதமான ரேட்டுகள்! எங்கள் கொச கொச காம்பவுண்டில் எங்கள் வீடு ஒரு மாதா கோயில்! மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்! எல்லாவற்றையும் சொல்லி அழுவதில் அவர்களுக்கு ஒரு ஆறுதல்! இன்றும் சாந்தி கண்னைத் துடைத்துக் கொண்டே தான் சென்றாள்!

ககம்பா தூ காய்தி மெல்லே சேத்தே! தெனு சா ரொல்லே ஜாராஸ்! [ஏம்மா நீ ஏதாவது சொல்லிட்டு இருக்கே? பாரு அவங்க அழுதுட்டே போறாங்க] என்று அம்மாவை கலாய்த்தேன்!

ஹாய் மீ தெகோ சசு சா காய்தி மெனத்த..ஜீ பாத் தைலி காரா [ஆமாம், நான் தான் அவ மாமியாரு, ஏதாவது சொல்றதுக்கு! போய் சாப்பிட்றா...]

நான் சாப்பிட ஆரம்பித்ததும், அம்மா ஆரம்பித்து விட்டாள்! சாந்தி சொல்லி அழுததெல்லாம் என்னிடம் சொல்லி அவள் மீது பரிதாபப்பட்டாள்! மாதா கோயிலின் அடுத்த பாதிரியாராக என்னை பாவித்துக் கொண்டேன்! குழந்தைகளுக்கு பள்ளியில் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து அவன் குடித்து விட்டானாம்! கேட்டதற்கு சிகெரட் நெருப்பை வைத்து கையை சுட்டு விட்டானாம். கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இப்படி மனம் போன போக்கில் நடந்து கொள்கிறானாம். மூன்று பெண் குழந்தைகளையும் பார்த்து பார்த்து எரிந்து விழுகிறானாம். என் அம்மாவுக்கும் கண் கலங்கித் தான் இருந்தது...மனிதர்கள் ஏன் இத்தனை கேவலமான பிறவிகளாய் இருக்கிறார்கள்? இவர்களுக்கு ஏன் குடும்பம், குழந்தை குட்டி? எப்படி இவ்வளவு நீச்சமாக நடந்து கொள்ள முடிகிறது? எப்படி இருந்தாலும் அந்தப் பெண் பாவம் அவனுடன் தான் காலம் தள்ள வேண்டும் என்பது எத்தனை கொடுமை...எப்படி அவளால் அவனுடன் சிரித்துப் பேச முடியும்? நாள் முழுதும் சண்டை போட்டு விட்டு எப்படி அவன் முகம் பார்த்து வாழப் பிடிக்கும்? என்று ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தன...நானும் சாப்பிட்டு விட்டு எழுந்தேன்!

மறுநாள் நான் கல்லூரியிலிருந்து வர நேரமாகிவிட்டது...பாதிரியார் தனியாகத் தான் இருந்தார். எந்தப் பாவியும் மன்னிப்பு கேட்க வரவில்லை போலும். பயங்கர பசி...

காய் அம்பா கெர்ரித்தே ஹிந்தோ? [என்னம்மா செஞ்சிருக்கே இன்னைக்கு?] என்ற என் பார்வையில் அந்த குளோப் ஜாமுன் விழுந்தது! ஒரு அழகான பெண்ணை பார்த்து வழிவதைப் போல் நாக்கு ஜொள்ளு வடித்தது! காய் விஷேஸ் ஹிந்தோ? கோனே எல்லே? [என்ன விஷெசம் இன்னைக்கு? ஏது இது?] என்று வாயில் போட்டேன்!

சாந்தி கெவ்ரார் மெனா! தெனோ அந்திர்தே! [சாந்தி முழுகாம இருக்காளாம், அவ கொடுத்தா!] என்றாள் அம்மா! குளோப் ஜாமூன் நெஞ்சை அடைத்தது!
21 Responses
 1. இப்படி கதை எழுதுவதும் நல்ல முறையாக இருக்கிறது பிரதீப். தமிழில் எழுதுவது போல் சௌராஷ்ட்ரத்திலும் பதிவுகள் எழுதுங்கள் என்று என்னிடம் ஒரு பெரியவர் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். நான் தான் எங்கே தொடங்குவது, எப்படி தொடங்குவது என்று புரியாமல் தயங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போல் சௌராஷ்ட்ர வார்த்தைகளுடன் சிறுகதை எழுதத் தொடங்கலாம் போலிருக்கிறது.

  சௌராஷ்ட்ரர் என்று சொன்னால் நன்றாக இருக்கும். சௌராஷ்ட்ரியர் என்பது சரியாகப் படவில்லை.

  'செர்க்கஸ்' என்ற சொல்லைப் புழங்குவது இல்லையா? என் மனைவியும் 'சரி' என்று தான் சொல்வார். திருமணம் ஆன புதிதில் நான் 'செர்க்கஸ்' 'செர்க்கஸ்' என்றால் அது புதுமையாக இருக்கும் அவருக்கு. :-) இப்போது எங்கள் மகள் செர்க்கஸ் தான் சொல்கிறாள்.

  ஒரு நண்பன் நான் என் அப்பாவுடன் தொலைபேசும் போது செர்க்கஸ் செர்க்கஸ் என்று இருபது தடவை சொன்னதை கேட்டுவிட்டு 'ஏன்டா உங்க அப்பா சர்க்கஸ்ல வேலை பாக்குறாரா? சர்க்கஸ் சர்க்கஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே'ன்னு கேட்டான். :-)


 2. குமரன்,

  நீங்கள் சொன்னதைப் போல் மாற்றி விட்டேன்! செர்கஸ் எல்லாம் சொல்வதே இல்லை குமரன்...மிகவும் அரிது...

  ஜோக் சூப்பர்!


 3. கெனி சொக்கட் சே பிரதீப்


 4. கெனி சொக்கட் சே பிரதீப்


 5. TBCD Says:

  எங்க வட்டத்தில் "எம்பேது" என்று தான் சொல்லுவோம்.
  ஒரு எண்பது காசு சீட்டு கொடுங்க என்றுச் சொல்ல என்றுச் சொல்ல "எம்பேது" கொடுங்க என்று பேருந்தில் கேட்டு, கேட்டு, செள = எம்பேது என்றாகிவிட்டது.

  காய்ராவை சொல்லுவதை விட, வசை சொல்லான அம்பா "%^&*", மாய் "$%^&**" என்று சொல் தான் எங்களுக்கு அதிகம் காதில் விழுகும். எல்லாரும் அப்படி திட்டுகிறார்களா தெரியல்ல.


 6. Anonymous Says:

  HI PRADEEP,

  First of all, i must say SORRY to all sowrastirars.
  Ungaludaya ezhuthukalai padikirathukku munbu varai... neenga sonna maathiri naanum KAARIRA POOIRA KOSTI enru than ninithirunthen... sathiyama ippa naan athai ninaithu feel panren... i mean thavarana abipraayam ethuvum illai enralum... EPPOTHUM PESIKONDIRUPPATHAI thavira perithaga ethuvum seiya maatargal endra ennam irunthathu... ippo naan athai mulumayaga vaabas vaangi kolgiren... ungalidamirunthu mattumalla. inimel yaarai patriyum ithu ponra thavarana karuthukal vaithukolla koodathu enbathilum uruthiyaga irukka pogiren... ivai ellathukkum
  ungalukkthan naan THANKS sollanum. THANKS!!!
  intha sirugathai... BHARATHIRAJA padathila varuvathu pol... OONGI 3 MURAI KANNATHIL ADITHATHU POLA IRUNTHATHU....
  well said. Keep it up.

  Elango.S


 7. ஜீவி Says:

  நீங்கள் பழந்தமிழ் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய கதைகளைப் படித்திருக்கிறீர்களா?
  ('பொய்த்தேவு') போன்றவை.

  அற்புதமான எழுத்தாளர்.
  நான் எனது 'எழுத்தாளர்' பகுதியில் அவரைப் பற்றி எழுதுவதாக இருக்கிறேன்.


 8. Anonymous Says:

  'மாதா கோயிலின் பாதிரியார் போல் என் அம்மா எல்லோரின் கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு பாவ மன்னிப்பு கொடுப்பார்'

  Idharkku-than pengalai paadiriyar aaga viduvadill-aio?(pavaamanippu udanukkudanum kidaithuvidum)

  Ungalakku oru sweetum engalukku oru nalla kadaium eppadio kidaithadhu.

  sundaram


 9. ப்ரதீப்,

  வாவ், சூப்பர். படித்துக் கொண்டே வரும்போது எல்லாம் எதிர்பார்த்த மாதிரியே இருக்கே என்று பார்த்தால், முடிவு வரிகள் எதிர்பாராதவை. நல்ல நடை. வாழ்த்துக்கள்.


 10. சிவா,

  ஜுக்கு சொந்தோஷ்

  டிபிசிடி,

  "எம்பேது" சரியாய் சொன்னீர்கள்! நம் மக்களின் உச்சரிப்பே அலாதி...இன்னும் அப்படி திட்டத் தான் செய்கிறார்கள்.

  இளங்கோ,

  என் கதைக்கான சன்மானம் கிடைத்து விட்டது.

  ஜீவி,

  அவரின் இன்ஸ்பிரேஷனில் எழுதியது தான் இது...'பொய்த்தேவு' படித்ததில்லை..அவரின் சிறுகதை தொகுதி ஒன்றை ஒரு வரி விடாமல் படித்தேன்.

  சுந்தரம்

  இப்படி நிறைய ஸ்வீட்கள் இருக்கின்றது...எழுதத் தான் வேண்டும்.

  சதங்கா,

  மிக்க நன்றி.


 11. Unknown Says:

  பிரதீப், எனக்கு வேலை இல்லை.(இப்போ 3 மாசமா). அதனால உங்க பதிவை படிக்கிறேன். வேற ஒன்னும் இல்லை.


 12. 'கதை' அருமையா வந்துருக்கு.

  ஏன்னா பலர் வாழ்க்கையில் இதுதான் 'நிஜம்'.


  இன்னிக்குத்தான் வலைச்சரத்தின் மூலம் தெரிஞ்சது.

  எப்படிக் கோட்டை விட்டுருப்பேன்?ம்ம்ம்ம்ம்


 13. ஜெய்,

  எங்கோ நீங்க அடிக்கடி இந்தப் பக்கம் வந்துருவீங்களோன்னு ரொம்ப பயந்துட்டேங்க...

  துளசி அக்கா,

  மிக்க நன்றி!

  //எப்படிக் கோட்டை விட்டுருப்பேன்?ம்ம்ம்ம்ம்//

  சூரியனின் வெளிச்சத்தில் நிலாக்கள் தெரிவதில்லை போலும்!


 14. Unknown Says:

  //yaarume illaatha kadaikku yaarukkuyya tea aathureenga mathiri irukku...unga comments.!

  en valai pathivu pakkam naan vanthe 2 maasam aayiduchu...innuma ennai nambureenga?

  ithukkaagavaavathu unga veetukku vanthu kai kulukkuren//

  இதுக்கு பதில் தான் நான் எழுதியது


 15. Anonymous Says:

  A big question in my mind after reading this post,whether its a real story or imaginary one?i hope it to be ur imagination..


 16. anony,

  big answer for ur question is, this is happening to most of the women in today's world!

  kandathu, kettathu, angange irunthu serthathu ellam sernthu uruvaanathu intha kathai!


 17. சொக்கட் கெனி.நொவ்வ முயற்சிக:ன் லஹரெஸ்.தமிழ் + சௌராஷ்ட்ரா...
  'செர்க்கஸ்' பரமக்குடிம் சொக்கட் பொல்கரியெஸ்....


 18. jhukku sonthosh pirabu! isani jhukku kheni likkuno meni saariyo! muyarchi kerus :)


 19. பிரதீப்,

  ஹிந்தோஸ் எல்ல கெனி சொவ்தி ஸியேயோ!

  சொக்கட் ஸே!

  வித்யாஸ்கன் முஸட்ராஸ்! பந்தடிம் நிஜ்ஜம் சலே கெனி, ஒன்டே ஹட்வன் அவரஸ்! ஹொயேத் தெல்ல கெனி இஸனி, முஸுனா!


 20. chokkad yatan. Angun jukku keruvo.


 21. baskar dha,

  kattayam likkus!