மணிவண்ணன், வடிவுக்கரசி, சன் டி.வி. உமா இவர்கள் எல்லோருக்கும் நல்ல ஸ்கொப் படத்தில்! வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்!
அங்கவை சங்கவை, படப்பிடிப்பு முடியும் வரை வெயிலிலேயே நின்று தங்கள் உடல் வருத்தி படத்தில் காட்சிகள் இயல்பாக இருக்க கருத்து விட்டார்களாம்! என்ன ஒரு உழைப்பு! அதிலும் தீபாவளி தீபாவளி பாட்டுக்கு இடுப்பை அசைத்து அசைத்து அவர்கள் ஆடுவது மனதுக்கு உற்சாகமாக இருக்கிறது!
யார்? 9தாராவா அது? உடல் மெலிந்து போய் ஏதோ 2தாரா, 3தாரா போலிருக்கிறார்! ஆடும்போது அவர் தொப்பை குலுங்காதது என் மனதை உலுக்கி விட்டது!
ஷ்ரேயா பின்னழகை இழுத்து இழுத்து வளைத்து வளைத்து அது அப்படியே ஒரு நாள் நின்று விட போகிறதோ என்று எனக்குக் கொஞ்சம் பயமாகவும் சற்றே கிளுகிளுப்பாகவும் இருக்கிறது! இவருக்கு நைட்டியே கொடுத்தாலும் தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே தான் கட்டுவாரோ என்னமோ..
படத்தில் ஆரம்ப காட்சியில் அலை கடந்து அழும் கூட்டம் தமிழ் சினிமாவின் நல்ல கண்டுபிடிப்பு! தொடர்ந்து இவர்களுக்கு நல்ல படங்கள் கிடைத்தால் திரை வானத்தில் ஜொலிக்க வாய்ப்புண்டு!
படம் வந்து இவ்வளவு நாள் கழிச்சி விமர்சனம் பண்ணனும்னா இப்படி தான் பண்ண முடியும்!
நிற்க
படம் பார்த்ததன் பாதிப்பில் ரஜினி படம் என்றாலே இப்படித் தான் இருக்க வேண்டுமா என்று என் மூளையை கசக்கி பிழிந்ததில் [ஹேய் பொய் தானே சொல்ற!!]கீழ் வரும் கதை பிறந்தது! ரஜினி ரசிகர்கள் இதைப் படித்து விட்டு, என் விலாசம் கேட்டால் என்னைத் தெரிந்த நண்பர்கள் என்னை காட்டிக் கொடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்! இனி கதை...
சுத்தி பொட்டல் காடா இருக்கு! வானம் பாத்த பூமி! வானத்தையே பாக்குற ரஜினி! பூமியும் அவர் தலைய மாதிரியே தரிசா கெடக்கு! [படத்தில ரஜினி பொது விழாக்களுக்கு வர்ற அதே கெட்டப்புல வர்றாரு!] நம்ம நாட்ல தான் விவசாயிங்க கதை உங்களுக்கு தெரியுமே, அதே தான்! இவரும் நொந்து போய் லோன போட்டு ஸ்டைலா வெதைய வேற போட்றாரு, எழவு வெளைய தான் மாட்டேங்குது! பாங்குல இருந்து மாட்டை ஓட்டிட்டு போயிட்றாங்க! குடிக்க கஞ்சி இல்லை! அப்போ தான் அவர் பொங்கி எழுறாரு! அதுவோ இத்து போன டவுசரா சும்மா ஸ்டைலா கிழியுது பாருங்க!! [இதுக்கே அவார்ட் நிச்சயம்!]....அங்க தான் இன்டர்வல்!
பாப்கார்ன் எல்லாம் சாப்டு நீங்க உள்ள வந்ததும், ரஜினி பாங்க்ல இருக்காரு! சும்மா வெரலை சுண்டி ஒரு பஞ்ச் பேசும்போது விரல் சுலுக்கி ஆள் காட்டி விரல் மட்டும் அப்படியே மடங்காம நின்னுடுது! அப்படியே சோகமா வீட்டுக்கு கையை தூக்கிட்டே நடந்து வர்றாரு! மனோரமா தான் ரஜினி அம்மா! போகும்போது உன் தலை நிமிந்து இருந்துச்சு, இப்போ உன் தலை தொங்கி விரல் நிமுந்துருச்சேப்பான்னு.. பஞ்ச் டயலாக் வேற, ரஜினிக்கு கோவம்னா கோவம்! பொங்கி எழலாம்னா டவுசர் வேற கிழியும்!! சரி அம்மா தானேன்னு மன்னிச்சி விட்டுர்றாரு!
அந்த வெரலுக்கு விளக்கெண்ணை தடவி சுளுக்கு எடுக்குறாங்க மனோரமா..அப்போ அம்மா சென்டிமென்டோட ஒரு பாட்டு! பாட்டு முடிஞ்சதும் சரியாயிடனும்ல, அதானே லாஜிக்! சரியாயிடுது! இந்த சமயம் கொஞ்சம் ஜாக்கிரதையா டவுசர் கிழியாம பொங்கி எழுறார் ரஜினி! ஜன்னல்ல வச்சிருக்குற பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து மனோரம்மாக்கு கதற கதற ஊத்திக் கொடுத்துட்டு தானும் குடிச்சிட்டு ஸ்டைலா விழுந்து சாவுறாரு! காமெராவை பான் பண்ணி டாப் அங்கிள்ல காட்றோம், பஞ்ச் டயலாக் சொல்ற அதே தோரணையில ஒரு வெரல் மட்டும் தூக்கிட்டு செத்து போயிருக்காரு!
"ஒரு பஞ்ச் இன்று பஞ்சத்துக்கு அடிபட்டது"ன்னு ஸ்கிரீன்ல மெஸஜை போட்டு படத்தை முடிக்கிறோம்! நீங்க பூச்சி கொல்லி மருந்தோட என்னைத் தேடி வர்றதுக்குள்ள நான் அப்பீட் ஆயிக்கிறேன்!!
ம்ம்ம்ம் இந்த நடை உடை பாவனை விமர்சனத்தை தான் எதிர்பார்த்தோம்.
kadai-oda title yenna?
btw, part II la avar uyir tirumbi vandiruvaaru illa?
சிவா,
நன்றி!
ப்ளாகேஸ்வரி,
மொக்கராசுவின் மொக்கை! [படத்துல ரஜினி பேரு மொக்கராசு! எப்படி டைட்டில்?]
இதெல்லாம் நக்கல் தானே? அதான் இது ரஜினியோட வழக்கமான படம் இல்லைன்னு சொல்லியாச்சுல்ல! மறுபடியும் உயிர்த்து வர்றதுக்கு அவர் என்ன ஏசுவா...
ரெண்டு கேள்வி:
1. உங்கள் பதிவை நான் எப்படி இதுவரை miss பண்ணினேன்? (உங்களைத் தேடி நட்சத்திரமாக்கியவருக்கு - குடத்து விளக்கை குன்றில்
ஏற்றியதற்கு (!) - என் பாராட்டுக்கள்.
2. இதுபோன்ற பதிவிற்கும் எப்படி பின்னூட்டங்கள் அதிகமாக வராமல் போயின?
//இத்தனை நாட்கள் கழித்து விமர்சனம் போடுவது ஏதோ பழைய சிவாஜி கணேசன் படத்திற்கு விமர்சனம் போடுவது போலிருக்கிறது! இருந்தாலும் சற்றும் தளராத விக்ரமன்//
அதற்க்கு இத்தனை நாள் கழித்து பின்னூட்டம் போடும் நான் ஹி ஹி
//இவருக்கு நைட்டியே கொடுத்தாலும் தொப்புளுக்கு இரண்டு இஞ்ச் கீழே தான் கட்டுவாரோ என்னமோ//
;-) நினைத்து பார்த்தேன் கலவரமாக இருக்கிறது
//தருமி said...
ரெண்டு கேள்வி:
1. உங்கள் பதிவை நான் எப்படி இதுவரை miss பண்ணினேன்?//
இதே கேள்வியை தான் ரொம்ப நாள் முன்னாடி கேட்டேன்..இல்லையா பிரதீப் ;-)
சரி..எங்க தலைவரை இப்படி வாரி இருக்கீங்க ....இருக்கட்டும் இருக்கட்டும்
இருந்தாலும் உங்க பதிவுகள் நன்றாக உள்ளதால் தொடர்ந்து வருகிறேன் :-)