பதிவு போட்டு வெகு நாட்கள் ஆன விரக்தியில் இதே எழுதியே தீர்வது என்று எழுதிய பதிவு இது! உங்களுக்கு இதை படித்தே தீர்வது என்று நிர்பந்தம் ஏதும் இல்லையென்றால் படிக்கத் தேவையில்லை! இந்தப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்று எனக்கே சந்தேகம் தான்!

சமீப காலமாக என் வலைபதிவின் தோலுரித்து புது தோல் போர்த்த வேண்டும் என்ற ஆசை என்னை பிடுங்கித் தின்கிறது..இணையத்தில் புது தோல்களை தேடி தேடி, என் தோலுரிவது தான் மிச்சம்! யாருக்காவது விதவிதமான தோல் கொண்ட அதையும் ப்ரீயா குடுக்குற மகராசன்கள் தெரிஞ்சா சொல்லுங்க. என் தோலை உங்களுக்கு செருப்பா தச்சி போட்றேன்! [தோலை வச்சி எப்படியெல்லாம் டயலாக் சொல்டேன் பாத்தீங்களா?]

நிற்க

எனக்கு இந்த உப்புமா பதிவுகளில் நம்பிக்கையில்லை! [நீ போட்டது பூராவுமே உப்புமா பதிவுகள் தான் என்பவர்கள் எனக்கு தனி மடல் வரைய வேண்டுகிறேன்!] பல வருடங்கள் கழித்து என் வலைப்பதிவை புரட்டிப் பார்த்தால் கொஞ்சம் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்!

நிற்க

இந்த சிவாஜி படம் வந்தாலும் வருகிறது வலையுலகில் அதை வைத்து எத்தனை பதிவுகள்! சிவாஜி என்ற தலைப்பை பார்த்தாலே எரிச்சலாய் வருகிறது! எரிச்சல் குறைவதற்குள் அதையெல்லாம் படித்து விடுவேன்! ஒரு ஏழைத் தமிழனால் வேறு என்ன செய்ய முடியும், சொல்லுங்கள்?

நிற்க

சமீபத்தில் பெரியார் படம் பார்த்தேன், உன்னாலே உன்னாலே என்ற அற்புதமான யூத்ஃபுல் படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதும் நான் இதற்கு எழுத முடியவில்லை! பெரியாரை விமர்சிக்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற நினைப்போ என்னமோ..படம் நன்றாய் இருக்கிறதோ, இல்லையோ ஒரு கடமையாய் நினைத்து பார்த்து விடலாம்!

நிற்க

ஒரு ஜோக்!

மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். அர்த்த ராத்திர்யில் பஸ் வழக்கம் போல் ஒரு டீ கடையில் நின்றது. குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் அந்த டீ கடையை மொய்த்தோம்! ஒன்று புரியவில்லை, ட்ரைவர் தூக்கம் வராமல் இருக்க டீ குடிக்கிறார், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த நாங்கள் எழுந்து ஏன் டீ குடிக்க முன்டியடிக்கிறோம்? தமிழனோட வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா என்று ஒரு லைட் டீ போடச் சொன்னேன்! அவர் வெள்ளையாய் ஒரு க்ளாஸ் நீட்டினார், என்னங்க ரொம்ப லைட்டா இருக்கே என்றேன். அதற்கு அவர், இது உங்களுக்கு இல்லை, அவருக்கு[இன்னொருவரை சுட்டி]..இது டீ இல்லை பால் என்றார்! எல்லோரும் பல்பு வாங்குவார்கள்! எனக்கு அன்று பல்பு மாலை!

இப்போ அல்லாரும் ஒக்காருங்கோ!! [இன்ஸ்ப்யர்ட் பை டுபுக்கார்!]
10 Responses
  1. G.Ragavan Says:

    வாங்கய்யா...வந்துட்டீங்களா? எல்லாரும் நலமா? இப்ப எங்க இருக்கீங்க?


  2. அது என்னதுங்க உப்புமா?

    உங்க கருத்து மற்றும் ஜோக் நல்லா இருக்கு! (இது வழக்கம் தானேன்னு சொல்றீங்களா?)

    அப்பறம் நீங்க என்ன ஊர் மாறிட்டிங்களா? மின்னஞ்சல் தட்டுனா பதிலே காணோம்? (அனுப்பி ஒரு நாள் தானே ஆகுது?)

    //இந்தப் பதிவு அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா என்று எனக்கே சந்தேகம் தான்!//

    அது என்ன அப்படி ஒரு நம்பிக்கை?
    உங்க நம்பிக்கையில் மண்.


  3. ராகவன்,

    சர்வம் சுகம்! அதே சிங்கார சென்னை தான்! ஆமா ஏன் கேக்குறீங்க? ஆட்டோ கீட்டோன்னு அனுப்பி வச்சுராதீங்கோ..

    சிவமுருகன்,

    உப்புமா பற்றி அழகன் படத்தில் மம்முட்டி அழகாக சொல்லியிருக்கிறார். படம் பார்க்க!

    ஆஸ்தான கமெண்டருக்கு புடிக்காமலா போயிடும்? எல்லாம் ஒரு நம்பிக்கை தான்..

    எந்த ஊர் மாறினாலும், மின்னஞ்சல் தட்டினா பதில் அனுப்பலாம்! அலுவலகத்தில் ஆணிகள் கொஞ்சம் அதிகம்! தவறாக நினைக்கக் கூடாது!!

    நான் என்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா? எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு அதை ஈடு கட்டுவதற்கு! அதான் அப்படி எழுதினேன்! இது எப்படி இருக்கு?


  4. ak Says:

    நண்பா, ப்ல்பு வாங்குறது உனக்கு என்ன புதுசா, பழக்கப்பட்டது தானே!அதை இப்படி பெருசா எடுத்துக்கலாமா?என்ன நான் சொல்வது சரிதானே?

    வலைப்பக்கங்களோட பின்புறங்கள்(web page background)வெள்ளையாய் இருப்பது அதிகமான மின்சாரத்தை உபயோகிக்குமாம், அதனல், அவற்றை கருப்பாக இருக்கும்படி தோலை தேடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


  5. arun,

    noothukku nooru sari!

    athai naanum kelvipatten, black background vaithaal matter site mathiri oru look vanthu en blog hits koodum endru nenaikiren hehehe..


  6. RAGUNATHAN Says:

    ஹாய் ப்ரதீப்,
    வணக்கம்....நான் ரகுநாதன்...
    நீங்கதான் முதல் முறை நம்ம பிளாக் பக்கம் வந்தீங்க...
    அடிக்கடி சந்திக்கலாமே....என்ன சொல்றீங்க...

    உங்க உப்புமா நல்லா இருக்கு....

    இன்னும் முழுசாப் படிக்கல....


  7. Anonymous Says:

    Pradeep,
    Nee Sivaji vimarsanam ezhudi iruppe ennu nenachu ethana thadve vandaalum, Sivaji release aaradukku late aana maadiri neeyum late seiriye... enga roomle ellarum Periyaar paarthu mudicha udane, Adavadi paarthu magilndom... Mudal padathi Sathyaraajukku daadi neelam, rendaavadu padathil Funk Neelam... nee avasiyam inda padathayum paarkanum


  8. Sivakumar Says:

    என்ன எதுவும் இன்னும் பதியவில்லையா?


  9. சுஜாதாவும் அவர் ராசியும்
    சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.அவர் *தன் ராசி எது என்பதிலேயே குழப்பமிருப்பதாக கூறிவருவது தெரிந்ததே. இது ஜோதிட அரிச்சுவடியை புரட்டினாலே தெரிந்து கொள்ளக்கூடிய விஷயம். ஆனால் சுஜாதாவோ தம்து சோம்பலை மறைத்து ,ஜோதிடத்தின் நம்பகத்தன்மையை சந்தேகத்துக்குள்ளாக்கிவருகிறார். முதலில் இந்த பஞ்சாயத்தை தீர்த்துவிட்டு சிவாஜிக்கு போகலாம். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் ப்ரஸ்தாபிக்கப்படுகின்றன. பகுத்தறிவாளர்கள் மற்ற நட்சத்திரம் எல்லாம் நம்ம சூப்பர் ஸ்டார் மாதிரி ஒப்புக்கு சப்பாவா என்று நக்கலடிக்கிறார்கள். உண்மையில் நட்சத்திரம் என்பது நட்சத்திர மண்டலத்தை குறிக்கிறது. அஸ்வினி என்றால் ஆகாய வெளியில் குதிரை வடிவத்தில் தென்படும் நட்சத்திர தொகுப்பாகும். நிற்க, சுஜாதாவின் ஜன்ம நட்சத்திரம் கிருத்திகை என் கிறார். ஆனால் தன் ராசி மேஷமா, ரிஷபமா என்பதில் குழப்பம் இருப்பதாக கூறுகிறார். சந்திரன் கிருத்திகை நட்சத்திர மண்டலத்தில் 24 மணி நேரம் சஞ்சரிக்கிறார். இதை 4 பாகங்களாக்கி உள்ளார்கள். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாகத்தில் (நட்சத்திரம் உதயமான முதல் 6 மணி நேரத்தில்) பிறந்திருந்தால் அவர் ராசி மேஷமாகும். அடுத்த 3 பாகங்களில் அதாவது அடுத்த 18 மணி நேரத்தில் பிறந்திருந்தால் அவர் ராசி ரிஷபம். இந்த சின்ன விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் வாசகர்களை குழப்பி வருவது அவருக்கு அழகல்ல. அவர் தன் பிறப்பு விவரங்களை எனக்கு மெயிலில் அனுப்பினால் அவர் ராசி எது என்று ஸ்டாம்பு பேப்பரில் எழுதி தர தயார்.

    சிவாஜியும் ஜோதிடமும்
    கீதாச்சாரியன்,இந்து மித்திரன் தவிர எல்லாரும் சிவாஜி படத்தை விமர்சித்துவிட்டார்கள் என்று சுஜாதா எழுதியுள்ளது நிஜமே. ஆந்திர நீதிபதிகள் கூட உலகமே பார்த்த பின்னாடி தடை கேட்கறிங்களே என்று கூறியிருக்கிறார்கள்.(படத்தில் சோனியா படத்தின் பக்கத்தில் வில்லனான சுமன் படத்தை காட்டியதற்காக காங்கிரஸ் கட்ச்சியினர் தடை கேட்டு கோர்ட்டுக்கு போனது தெரிந்ததே.)

    இருந்தும் இந்த கட்டுரையை வலைதளத்தில் வைக்க காரணம் நான் ஒரு ஜோதிட ஆய்வாளன் என்பதே. சுஜாதா அறிவு ஜீவியாக இருக்கலாம் . ஆனால் அவர் தொடர்ந்து ஜோதிடம் குறித்த தவறான செய்திகளையே பதிவு செய்து வருகிறார்.

    *இனி சிவாஜி பஞ்சாயத்துக்கு வருவோம். ஒரு பெண்ணிற்கு ஜாதகத்தில் கடும் தோஷம் உள்ளது. இதனால் கணவனுக்கு கண்டம் வரும் என்பது கதை. ரஜ்ஜு பொருத்தம் வேறு இல்லையாம் . எனவே கணவன் ஆபிச்சுவரியில் வருவது நிச்சயமாம். ஜோதிடருக்கு நாக்கில் மச்சமாம். எனவே அவர் சொல்வது நிச்சயம் பலிக்குமாம்.

    ஜோதிட ஆய்வு என்பது பிராமணர்களின் சேப்டி லாக்கரில் இருந்து சூத்திரர்கள் கைக்கு மாறி பலகாலம் ஆயிற்று. பிராமணர்களை திதி பார்க்க மட்டுமே மக்கள் அணுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஜாதி அபிமானத்தில், சூத்திரர்களின் வசம் போய்விட்ட ஜோதிடத்தை கேலிக்கிடமாக்கிவிடவேண்டும் என்ற தகிப்பினால் மேற்படி முடிச்சை சிவாஜி படத்திற்கு சுஜாதா பரிந்துரைத்திருக்க வேண்டும்.

    திருமணப் பொருத்தம்:

    திருமண பொருத்தம் என்பது முதலில் ஆண், பெண் ஜாதகங்களை வைத்து பார்க்கப்படவேண்டும். பெண் ,பிள்ளை ஜாதகத்தை பொறுத்து அவரவர்க்கு வர வேண்டிய வாழ்க்கை துணையை பற்றிய அம்சங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

    அந்த அம்சங்கள் தற்போது வந்துள்ள வரனுக்கு உள்ளதா என்று ஒப்பிடவேண்டும். பிறகு இருவருக்கும் போதுமான ஆயுள்(8 ஆமிடம்),தோஷங்கள் உள்ளனவா (செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம் இத்யாதி),குரு,சுக்கிரன் நிலை என்ன? மறுமண யோகம் (7 ஆமிடம்) ஏதும் உள்ளதா? இதை எல்லாம் பார்த்தாக வேண்டும்.

    தோஷமிருந்தால் இருவருக்கும் ஒரே அளவில் இருக்க வேண்டும் (அ) சுத்த ஜாதகங்களாக இருக்க வேண்டும். படத்தில் பெண்ணின் ஜாதகம் மட்டுமே ஜோதிடரிடம் காட்டப்படுகிறது. அவரோ தன் நாக்கில் உள்ள மச்சத்தை மட்டுமே தகுதியாக கொண்டு பலனை அள்ளி வீசுகிறார்.

    மச்சத்துக்கு காரகர் ராகு. ஜாதகத்தில் ராகு எங்கு நிற்கிறாரோ அந்த பாகத்தில் மச்சம் ஏற்படும். நாக்கு என்பது 2 ஆமிடம். ஜாதகத்தில் 2 ஆமிடத்தில் ராகு நின்றால் நாக்கில் மச்சம் ஏற்படும்.
    2 ஆமிடத்தில் ராகு வாக்கு பலிதத்தை எப்படி கொடுப்பார்?. வாக்கு தவறுதல்,பசி,பட்டினி,விஷம் குடித்து சாதல்,குடும்பத்தை விட்டு வெளியேறுதல் போன்ற கெட்ட பலன் களைத்தான் தருவார். நாக்கில் மச்சமிருப்பவர் சொன்னது பலிக்கும் என்பது தவறு.

    வெறுமனே பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்துவிட்டு பலன் சொல்லும் ஜோதிடர் நிச்சயமாக ஒரு பொய்யராகத்தான் இருக்க வேண்டும். பெண் ஜாதகப்படி கணவனுக்கு தோஷம் இருந்து விட்டால் போதாது. அவனுடைய ஜாதகமும் அற்பாயுள் ஜாதகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் மரணம் ஏற்படும்.

    அதிலும் ஜோதிடவியலை பொறுத்தவரை ம்ரணம்,சிறை,பிரிவு, ஐ.பி போடுதல்,தலை மறைவாதல்,தனிமை எல்லாமே சமமான பலன் களாகும். பெண்ணுக்கு எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானம். அதில் தோஷம் இருந்த மாத்திரத்தில் கணவன் செத்துத்தான் போவான் என்று எந்த ஜோதிடனும் கூறக்கூடாது. அப்படி கூறினால் அவன் பொய்யன்.நாஸ்திகன். ஜாதகத்தை பார்த்து பலன் சொன்னாலே இது நிலைமை.

    ரஜ்ஜுப்பொருத்தம்:மேலும் படத்தில் ரஜ்ஜுபொருத்தம் பற்றியும் ப்ரஸ்தாபனை வருகிறது. ஏக ரஜ்ஜு வருவதால் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. ரஜ்ஜு என்பது முக்கியமான பொருத்தம்தான் இல்லை என்று கூறவில்லை. அதற்காக மரணம் என்று ஒருவரியில் கூறுவதும்,அடுத்தடுத்த சம்பவங்கள் அதற்கேற்ற மாதிரியே நடப்பதும் தான் ஜோதிடத்தை கேலிக்கிடமாக்குகிறது.

    மொத்தம் 5 வித ரஜ்ஜுக்கள் உள்ளன. இதில் எந்தெந்த ரஜ்ஜு ஏக ரஜ்ஜுவானால் என்ன பலன் என்று ஜோதிடம் குறிப்பிட்டு கூறுகிறது. அதன் விவரம் வருமாறு:
    1.சிரோ ரஜ்ஜு-கணவன் மரணம்2.கண்ட ரஜ்ஜு-பெண் மரணம்3.உதர ரஜ்ஜு-புத்திர தோஷம்4.தொடை-பண நஷ்டம்5.பாதரஜ்ஜு-பிரயாணத்தில் தீமை
    ஜாதகப்பொருத்தம் பார்க்க ஆண், பெண் ஜாதகங்களை பார்த்தாக வேண்டும்.

    சிவாஜி ஜோதிடர் பெண் ஜாதகத்தை மட்டும் பார்த்து விட்டு,ரஜ்ஜு பொருத்தம் இல்லை மரணம் நிச்சயம் என்று கூறுகிறார்.
    அவர் சொன்னது போலவே நடக்கிறது.

    பல நூறு கோடிகள் செலவழித்து எடுக்கப்பட்ட படம் , அதிலும் அறிவு ஜீவியும், பிராமணருமான சுஜாதா வேறு டீமில் இருக்கிறார். ஒரு கிளி ஜோசியரை வரவழைத்து சிங்கிள் டீ வாங்கி கொடுத்து கேட்டிருந்தாலும் விஷயத்தை சொல்லியிருப்பார்.

    அதைக் கூட செய்யாது சுஜாதா பாஷையில் சொன்னால் ஜல்லியடித்து, வேதங்களின் அந்தர் பாகமான ஜோதிடத்தை பற்றிய தவறான நம்பிக்கைகளை வெகுஜன மீடியாவில் பதிவு செய்துள்ளார்கள்.


  10. உங்கள் மதுரை சென்னை பஸ் பயணம் என் பழைய நினைவுகளை உசுப்பி விட்டது. சுமார் 25 வருடங்களுக்கு முன் (உங்க வயதே அவ்வளவுதான் என கணிக்கிறேன்) கேபி டிராவல்ஸ் என்ற பஸ் பயணத்தில் இப்படி பல அனுபவங்கள்.
    அவற்றில் சில:

    1. திருச்சியில் இறங்கி குடம் குடமாக சிறுநீர் கழித்துவிட்டு பஸ் பயணம் சூடென்று இளநீர் குடிப்பது

    2. பசி தாங்காமல் இரவு 2 மணிக்கு விழுப்புரத்தில் பரோட்டா சிக்கன் சாப்பிடவது.

    3. அதிகாலையில் சென்னையில் இறங்கி குளித்துவிட்டு நேராக ஆபிஸ் போய் வேலை செய்துவிட்டு இரவு சக்ரா பாரில் தண்ணியடித்துவிட்டு மறுபடி அதிகாலை விமானத்தை பிடித்து டெல்லி செல்வது.

    எங்கே போனது வருடங்கள்.....

    பழைய நினைவுகளை தூண்டிவிட்டதற்கு நன்றி