ஒரு மத்தியானப் பொழுதின்
மயான அமைதி - தூக்கத்திலிருக்கும்
ஒரு குழந்தையை
திடுக்கிட்டு எழச் செய்கிறது
சத்தமில்லாமல் ஊர்ந்து செல்லும்
நிழலில் ஒரு கருகிய
வாசம் வருகிறது
தெருவோரத்தின் துரு பிடித்த
ஒரு குழாயிலிருந்து
கிரீச்சிடும் சத்தம் கசிகிறது
மேகங்களைக் கொண்டு
விதவிதமான பொம்மைகளை
செய்து செய்து
அழிக்கிறது வானம்
ஒரு பெரிய மரத்தின் வேர்
நீரை உறுஞ்சவும், அந்த மரத்தின்
இலைகள் காற்றில் சிலிர்க்கவும்
சரியாய் இருக்கிறது
எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது
நல்ல கவிதை ப்ரதீப் !
பரத்,
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
pradeep...
"ஒரு மத்தியானப் பொழுதின்
மயான அமைதி "
"நிழலில் ஒரு கருகிய
வாசம் "
-vaarthai pirayogam romba nalla irukku...
Naan gooda... ithu maathiriyana mathiya velaigalai [en sontha kiramathil, karuvela marathinadiyil, kaitru kattilil padithu irukkum pothu] anupavithirukiren...
kurippa..
kiramangalil... kodai kaala mathiya velaigal... neenga sonna anaithayum pirathi palikkum...
kadaisi... varigal...
எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது
ennudaya thondayilaye romba naalaga veli varaaamal nindru vitta varthaigalai... ungaludaya varigal moolama pidungi erinthu enakoru vimosanam kodthathu ponru irunthathu...
thanga kireedathil vaitha vairm pola piragasikirathu....
great post [kavithai].
keep it up.
Rgds,
Elango.S
இளங்கோ,
நான் எழுதும் போது கூட இவ்வளவு சிலாகித்து எழுதவில்லை! நீங்கள் அவ்வளவு சிலாகித்து என்னை பாராட்டியது எனக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது..
கவிதை என்பது ஒரு வாழ்வனுபவம்! ஒரு நல்ல கவிதை எல்லோருக்கும் புரியுமென்றும், பிடிக்குமென்றும் சொல்ல முடியாது! நம் இருவரும் மதியப் பொழுதுகளை அவ்வளவு ரசித்திருக்கிறோம் என்பதால் நம் ரசனை ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன :)
தங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி! அடிக்கடி என் வலைப்பதிவுக்கு வந்து நிறைகளை சுட்டியும், குறைகளை குட்டியும் எனக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!!
அன்பன்
பிரதீப்
othukren,
nee oru kavingan, kalaingannu othukren.
marubadiyum varren.
karthic,
nalla timing. aana dialogue appadi varaathu..
othukkuren,
nee oru kavingan, kalaingannu othukkuren..
next meet pandren!
[enna oru pakkiyayum kaanom]
pasi rusi ariyadhu enbathai
palaya saadham thaan eppodhum
nirubikkiradhu....
kavidhai super...
naveen....
//எங்கோ எதையோ கூவி விற்கும்
ஒருவனின் பலவீனமான குரலில்
அவன் பசி எதிரொலிக்கிறது//
அப்பா என்ன அருமையான வரிகள். ரொம்ப அருமையாக இருந்தது.
Nandha,
தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
பிரதிப்,
நட்சத்திர வாழ்த்துக்கள் !
இந்த haplogs மட்டும் உங்களைக் குறிவைத்து விரட்டி விரட்டி வந்து விடுகிறதே எப்படி?
ஓ! பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையாதலால் உங்களை தமிழ்மணப் பக்கங்களில் பார்க்காது போயிருப்பேனோ?