உன்னை விட சின்ன வயசு பசங்ககிட்ட சேராதன்னு அம்மா தலை தலையா அடிச்சிகிட்டாங்க! நான் கேட்டேனா..கேக்கலையே! இப்போ அவஸ்தை பட்றேன்!!
ஒன்னுமில்லீங்க, இந்த உன்னாலே உன்னாலே பாட்டு, மியுசிக்கை எல்லாம் ரிங் டோனா வச்சுகிட்டு, பேன்ட்ரில எப்போ பாத்தாலும் அந்த படத்தோட ட்ரைலர் பத்தி பேசிகிட்டு, அந்த படத்துல ஒன்னுமே இருக்காதுன்னு நான் சொன்னா உடனே, உங்களுக்கு வயசாயிடுச்சு மேனஜர் கூட போய் உக்காந்துக்குங்கன்னு ஓரம் கட்டிற வேண்டியது...நீங்களே சொல்லுங்க, என்னை மாதிரி ஒரு யுத்துக்கு ரத்தம் கொதிக்குமா இல்லையா? என்ன இருந்தாலும் எனக்கு வாலிப வயசில்ல?
ஜீவா தான் யுத்ஃபுல்லா படம் எடுப்பாராமே, சரிடா, நானும் யுத்டான்னு கெளம்பிட்டேன்! என்னை மாதிரி 2 யுத்களையும் கூட்டிட்டு..சும்மா சொல்லக்கூடாது, உங்க வீட்டு எங்க வீட்டு கொத்தில்ல, உலக மகா கொத்து! நீங்க எனக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னாலும் பரவாயில்லை! கொத்து கொத்து தான்!
நான் மிகவும் விரும்பி பதிய ஆரம்பித்து பாதியிலேயே சுவாரஸ்யம் குறைந்து பதியாமலேயே விட்ட பதிவு என்னிடம் ஏராளம். ஒரு நாலு வரி எழுதுவதற்குள் எனக்கு சுவாரஸ்யம் குறைந்து விடுகிறது..ஒரு திரைப்படத்தை எழுதி எடுப்பது என்பது சாதரண விஷயமா? இந்தப் படத்தை எப்படி தியேட்டர் வரை கொண்டு வந்தார்கள் என்று எனக்கு விளங்கவில்லை..இதற்கு ஒரு புது ஹீரோ, ஒரு புது ஹீரோயின் வேற..
வினய் [ஆள் நல்லா தான் இருக்காரு, அதுக்காக?]
தனிஷா [ஒரு முறை தான் குனிந்தார், சரியாக கவனிப்பதற்குள் நிமிர்ந்து விட்டார்]
சதா [சதா இவங்களையே ஹீரோயினா போட்டு ஏம்பா டார்சர் பண்றீங்க]
ஹாரீஸ் [ஆமா சார், ஜீவா சார் என்ன சிச்சுவேஷன் சொல்லி பாட்டு வாங்கினாரு? ஒரு பாட்டு கூட சிச்சுவேஷன்லா இல்லையே..ஆனா ஒன்னு சார், உங்க பிஜிஎம்லையே தெரியுது உங்க கோவம்!]
எஸ். ராம்கிருஷணன் [நமக்கு தான் விகடன் இருக்கே சார், உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்?]
தோட்ட தரணியும், காஸ்ட்யும் டிசைனரும் [எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, படத்துல உருப்படியான விஷயம் இது தான்!]
ஜீவா [வேற யாராவது நல்ல படம் எடுப்பாங்க, அதுல உங்க போட்டோக்ராப்பி தெறமைய காட்டிகிட்டு பேசாம இருங்க..நமக்கு எது வருதோ அது தான் செய்யனும்..ஓகே..இனிமே யுத்ஃபுல்லா படம் எடுக்குறேன்னு சொல்லி பாருங்க.....இல்ல சொல்லிப் பாருங்களேன்!]
படத்தின் கடைசியில் சதா ஒரு டயலாக் பேசினார்..
"போதுமா?" - இது தான் டயலாக்
அப்பாடா இப்போவாவது இந்த பொண்ணுக்கு மனசு வந்துச்சேன்னு எனக்கு கண்ல தண்ணியே வந்துருச்சு..போதும்டி அம்மா..இங்க எல்லாருக்கும் போதும் போதும்னே ஆயிடுச்சு!
நீங்க ஒரு படம் நல்லா இல்லைன்னு சொன்னா
அது ஜஸ்ட் லைக் தெட்
அதுவே நாங்க சொன்னா வயசாயிடுச்சா?
தரதரரப்பப் தரதரரப்பப் ....
//அது ஜஸ்ட் லைக் தெட்
அதுவே நாங்க சொன்னா வயசாயிடுச்சா?//
சூப்பர் பஞ்ச் தல, வித்தியாசமான விமர்சனம்
sooper post .. chancey illa..
நல்ல வேளை பல ரசிகர்களை காப்பாற்றிவிட்டீரகள். நேற்று தான் நான் தியேட்டர் வரை போய்விட்டு ஏதோ மனம் மாறி திரும்பி வந்துட்டேன். இப்போ உங்க பதிவ பார்த்தா நூலிழையில் தப்பி இருக்கேன்னு நினைக்கிறேன்
நல்ல வேளை.... நான் போறதா இருந்தேன்...காப்பாத்திட்டீங்க....
கானா பிரபா, அரவிந்த்,
நன்றி, நன்றி!
மருதநாயகம், பிரகாஷ்
இந்த மாதிரி கொடுப்பனை எல்லாம் எனக்கு அமைய மாட்டேங்குதேய்யா..எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்கள்ல?
நல்ல பதிவு.
பதிவை விட உங்களுக்கு படம் பார்த்த அனுபவம், நல்ல அனுபவம்... :))
Pradeep,
கேமராவை பத்தி ஒண்ணுமே சொல்லலையே. BGM அவ்ளோ மோசமா இல்லைனு நினைக்கிறேன். எஸ்.ராவின் வசனம் பல இடங்களில் பளிச்சேன இருக்கு. என்ன சில இடங்களில் சவ சவ..
மத்தபடி உங்கள் விமர்சனத்தோடு முழுவதும் ஒத்துபோகிறேன்.
// ஒரு முறை தான் குனிந்தார், சரியாக கவனிப்பதற்குள் நிமிர்ந்து விட்டார
same blood. அடுத்து ஷோவுலயாச்சு கொஞ்சம் மெதுவா எழுகிறரா பார்க்கலாம் ;)
விக்கி,
அதான் சொல்லியிருக்கேனே, நமக்கு எது ஒழுங்கா வருதோ அதை தான் செய்யனும்னு..அதான் காமெராவுக்கு பாராட்டு!
ப்ளீஸ், பிஜிஎம் பத்தி சொல்லாதீங்க..ஏதோ படு பயங்கரமான த்ரில் படம் மாதிரி ஒரே இரைச்சல்! காது கிழிகிறது..
என்னுடைய வாதம் எஸ். ரா இதை எழுதத் தேவையில்லை! நானே கொஞ்சம் நல்லா எழுதியிருப்பென் :)
ஓ, அதை பாக்க அடுத்த ஷோ வேற போவாங்களாக்கும்..ஏங்க நீங்க வேற...
Pradeep,
Unga vidi Unnale moolama Konnale aachunu eppadi vilaydiducho...
athe maathiri
en vidi,
MAYAKANNADI Moolama...
Madurai Mathiyana Veyil-la..
Mathi theater-la
Mandaya udaichidichu...
[appa.. ethanai 'Ma'? kavida kavida]
Y blood?
hm....
Same blood...
:)
Elango.S
நச்ச்சுன்னு ஒரு விமர்சன-பதிவு போட்டுள்ளீர்கள்.
ஊருக்கு எப்ப போறீங்க?
(இந்த சோகத்த மறக்க ஊருக்கு போனா தானே போகும்.)
பிரதீப், அழகுக்கு அழகு சேர்க்க உங்களை அழைத்துள்ளேன்.
அனானி,
நச்! அதே ரத்தம் தான் எனக்கும்...
சிவா,
ஊருக்கு ஜூன் மாதத்தில் போகிறேன்! நீங்க?
அழகு பத்தி எழுத சொல்றீங்க..முயற்சி பண்றேன்!
irunthalum life-le romba thaan risk edukkire, intha mathiri padam ellam paathu!!!
nezammave inda padiva paathu officela sirichukittu irunden...
Ellarum enna oru maadiriya paaka aarambichitaanga
Un team ponnunga unnaya nalla ootranga ennu nenaikiren..
The post was really interesting..
keep it up!!!
Balaji K.R.S.
balaji,
ponnunga paravaillai, pasanga thaan jaastiya otranga! ennapa, "unnaale unnaale" padam pathiyannu naan kettu mudikkirathukkulla, neenga nalla illainnu solveenga..aanalum naanga pappomnu oru nakkal! avanga thalai ezhuthu..enna pandrathu!
paathuttu vanthaalavathu en arumai theriyumnu nenachen! ponga neenga sonna alavukku ellam illai, nalla thaan irunthuchunnu oru gundai thooki thalayila pottathu intha kaalathu youthu...
nijammave enakku vayasaayiduchonnu oru mild doubt varuthu...
good one. nalla velai sonneenga. naane net la download panni dhan most padam paappen. padam pakkara maadhir irundhaa apram dvd vangi ozhungaa oru dharam pakkuradhu.. 3 hours save panni irukkeenga.
- Uma Krishna
ஆரம்பிச்சுட்டீங்களா!!!
Uma,
neram
panam
health (padam pathavudane BP erum!)
ippadi pala vithathula ungalai kaappathi irukken :)
Seenu,
yov, paruthi veeran nalla irukkunnu thaane sonnen..athai ellam pakka matteengale...
Pradeep,
Naan ippo padam paarthutu comments eluduren...
Enakkennomo...nee konjam overa thaan build-up pannite ennu nenaikkiren...
Pokiri, Aalwar, Naan Avan illai, Aacharya, Naalai, Yuga, Dharmapuri, Pudupettai, Vallavan, Thalai Magan...ippadippata kodoora padangala ellam paarthutu... Unnale Unnale padam paartha ennakku inda padam rombo nalla irukkira maadiri thaan thonudu.
Aruva ille, Rowdi ille, Rowdiya kaadalikkira loosu heroine ille.. rombo mukkiyama... BharathiRaja maadiri dubaakoor sentiments ille...
Azhagana Australia, Azhagana Hero, Heroines, Nalla songs... rombo logic ellam edirpaarkame ukkandu paartha... nalla thaan irukkira maadiri thonudu... Oru velai nee rombo edirpathutu poi iruppe ennu nenaikkiren... Sometimes over expectations make even good movies.. look too bad...
edukkum nee innoru thadave inda padam paarthutu...apparam oru thadave vimarsanam ezhudina nalla irukkum ennu nenaikkiren
balaji,
rasanaigal palavitham :)
oru velai neengal unmayilaye youtha irukkalam! illai innum youthunu ungalaye neengal emathittu irukkalam!
enakku vayasaayiduchu! naan othukkuren :)