படம் ஆரம்பிக்கும்போதே ஒரே கூத்தும் கொண்டாட்டமுமா தானேய்யா ஆரம்பிக்கிறாய்ங்க! திருவிழாவென்ன, கொட்டென்ன, மேளமென்ன, கூத்தென்ன..அடடா.......பருத்தி வீரன் கத்தியோட குஸ்தி வாத்தியார் குண்டியில குத்த, வேகத்தோட பொறப்படும்போது தான் வான வேடிக்கையோட டைரடக்கரு பேரைப் போட்றாய்ங்க! அங்கன ஆரம்பிக்குது அலப்பரை! கெட்ட அலப்பரையில்ல!
பருத்தி வீரனும், சித்தப்பு செவ்வாழையும் சேந்து செய்ற அட்டகாசம் இருக்கே, போய் பாத்தாவில்ல தெரியும்..அவனுக ரவுசென்ன பவுசென்ன? ஒன்னுமில்ல, ஒரு வேலை வெட்டிக்கு போறதில்லப்பா, தண்ணிய போட்டுட்டு, அடுத்தவனை கண்ட இடத்துல சொறுவிட்டு, வாரா வாரம் ஜெயிலுக்கு போயிட்டு அதுல மெட்ராஸ் ஜெயிலை ஒரு தடவை பாத்துரனும்ன்றது ஒரு மனுஷனுக்கு லட்சியமாம்! சும்மா சொல்லக் கூடாது நல்ல தான் கெட்டு போயிருக்காய்ங்க!!
இந்தச் சண்டியரை சண்டைக்கிழுத்து உண்டு இல்லைன்னு ஆக்குற ஓரே ஆளு அவ மாமம் பொண்ணு முத்தழகு! அடடா..அந்தப் புள்ள பேர்ல மட்டுமா அழகு, ஆளும் தான்! பகுடர் போடாமையே பளபளப்பா இருக்குறவளப் போயி இந்தப் பயலுக கருவாச்சி கருவாச்சின்னுல்ல கூப்பிட்றாய்ங்க! அவய்ங்க கெடக்காய்ங்க மானங் கெட்ட பசங்க!
வீரனுக்கு மொத தடவையா அவன் சித்தப்பு புத்தி சொல்லி, அவன் மனசுலயும் வருதுய்யா அந்த காதல் கருமாந்திரம். பொறவென்ன நம்ம சண்டியரு அவ பேர் இருக்குற தன் மார்ல தாம் பேரையும் பச்ச குத்திகிட்டு ஒரு அம்பு வுட்றாரு பாருங்க! டாப் க்ளாஸ்! அதை அப்படியே முத்தழகுக்கு காட்டிட்டு "சாஞ்சுக்கலாம்ல"னு சொல்றானே, அங்கன சாஞ்சது முத்தழகு மட்டுமில்ல, படம் பாக்குற அத்தன சாதி சனமுந்தான்! அதோட நின்னானா, சொல்லிட்டு அந்தக் கையை தூக்கி தலைக்கு மேல குடுத்துட்டு காலை ஒரு சைஸா வச்சுட்டு ஒரு ஆட்டு ஆட்றான் பாருங்க! ஏ ஒன்னேன்! அந்தப் புள்ள வேற 'ஐய்யய்யோ' பாட்டு பாடிகிட்டே வானத்துல இருந்து அந்தக் கைய நீட்டி அள்ளுது பாருங்க! எப்பா, அள்ளிட்டு போகுது போ!!
முத்தழகோட அப்பனாத்தா என்ன, பருத்தியோட சேக்காளிக என்ன, இவனுக கிட்ட மாட்டி பொழப்பு கெட்டு போற டக்லஸ் அண்ணெ என்ன..இப்படி எம்புட்டு பேரை சொல்றது...பின்னிபுட்டானுவல்ல பின்னி!! என்னா ஒன்னு கழுத, அருவாளையும், ரத்தச் சத்தத்தையும் கொஞ்சம் கொறைச்சுருக்கலாம்! சண்டிப் பசங்க கதைய எடுத்துட்டு ராமயணமா சொல்ல முடியும்?
ம்யுஜிக் தானே, அத ஏன் கேக்குறீங்க, அப்பனுக்கு புள்ள தப்பாம தான் பொறந்துருக்கு! டேய் அது என்ன இந்த பின்னாடி ம்யுஜிக் வருமே, எழவு என்ன க்ரவுண்டுடா அது? ஆ...அதேன்னே பேக்ரவுண்ட்டு ம்யுஜிக்கு ..யப்பா யப்பா..கோவமா போறப்ப ரோஷமா வருது, காதலா வாரப்ப காத்தா வருது..அடக்கி வாசிக்க வேண்டிய எடத்துல அடக்கியும் வாசிக்குதுல்ல...
இங்கன கதயா சொல்லிட்டு இருக்கோம், வாய பொளந்து பாக்குறவ...மிச்ச கதயும் சொல்லிட்டா படத்த தியேட்டர்ல போயி யாரு பாக்குறதாம்? என்ன நாஞ்சொல்றது?
----------------------------------------------------------------------------
பருத்தி வீரன்
ஒவ்வொரு வார்த்தையும் வசனமல்ல.......வாழ்க்கை!
இது ஒரு படமல்ல....ஒரு வாழ்வின் பதிவு!!
ஷ்ரேயா, படம் நல்லா இருக்குத் தானே.:-)
நீங்களே வசனம் எழுதி இருக்கலாம்.
நேராவே பாத்த மாதிரியில்ல இருக்கு.
மழைன்னா நான் மட்டுமில்லைங்க வல்லி.. இந்த வலைப்பதிவு பிரதீப் எழுதுறது. பெய்யெனப் பெய்யற ஆளு. :O))
-'மழை' ஷ்ரேயா
படம் நல்லாயிருக்குன்னு கேள்வி. போய்ப் பாக்கனும். உங்க விமர்சனமும் ஆவலைத் தூண்டுது.
Nice. :-)
வல்லி,
ஓஹோ, மழை ஷ்ரேயான்னு நினச்சுட்டீங்களா? அதான் அவங்க புட்டு புட்டு வச்சுட்டாங்களே..
வசனமா? அட நம்ம ஊர் பாஷை நமக்கு தெரியாதுங்களா? பொளந்து கட்டிற மாட்டோம் :)
ஷ்ரேயா,
தங்கள் வருகைக்கும், என்னையும் ஒரு ஆளாய் மதித்ததற்கும் நன்றி!
ராகவன்,
மிஸ் பண்ணிடாதீங்க..நம்ம ஊர் பக்கம் போயிட்டு வந்த மாதிரி இருக்குது படம் :)
சுரேஷ்,
நீங்க தான் எழுத மாட்றீங்க..அதான் எங்க ஆட்டம் :)
இப்பவே போய் பாத்திருவோம்யா, ப்ரதீப்
போய் பாத்திருவோம்ணே ..
அடடா,
நம்ம வெமர்சனத்துக்கு இம்புட்டு மதிப்பா? பாசக்கார பயகப்பா..
மொதோ வேலையா அமீரண்ணேங்கிட்டே சொல்லி மக்கள் தொடர்புக்கான ஒரு தொகைய ஆட்டைய போட்ரனும்...
hey Pradeep,
Final got only Cool movies. Thats cool right
gobi
gobi,
enna soldreenga? onnum puriyalai..
r u saying finally i got to watch a cool movie? if yes, answer is also yes :)
நல்ல விமர்சனம். ரசித்தேன்.
:))
muthulakshmi,
mikka nandri!
Uma,
paravaillaye, unga friend padichathoda nirkaama ennoda valaipathivai vilambarapaduthi ungalukkum arimugapaduthi vachurukkaare? avarukku en ulam kanintha nandrigal urithaaguga!!
avar sonnathukkaga, en ovvoru pathivayum padiththu ovvonna per solli paaraatra ungalukkum en manamaarntha nandrigal!
thangalai pondravargalin paaraattinaal, en ezuthukkal innum merugerum! nichayam innum nalla pathivugalai koduppen!
thirunagaril piranthu ipo englandil vasikireergalo? romba santhosham!
namma ooru baashai namakku theriyaama poyidungala..athaan vittu thaakittomla..
meendum meendum varuga..paaraattu mazhai pozhiga.. :)
பிரதீப்,
சான்சே இல்ல. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!
இதே மொழிநடையில தொடர்ந்தீங்கன்னா, நாமளும் இங்கே கெடப்போம்ல..
-Mathy
மதி,
கெடங்க, ஆரு வேணாம்னா..நாங்க தான் சூப்பர் சூப்பர் ஐட்டமா வச்சுருக்கோம்ல..அடிக்கடி வந்தாவுல்ல புரியும்..
நல்ல விமர்சனம்.
"
நம்ம சண்டியரு அவ பேர் இருக்குற தன் மார்ல தாம் பேரையும் பச்ச குத்திகிட்டு ஒரு அம்பு வுட்றாரு பாருங்க! டாப் க்ளாஸ்! அதை அப்படியே முத்தழகுக்கு காட்டிட்டு "சாஞ்சுக்கலாம்ல"னு சொல்றானே, அங்கன சாஞ்சது முத்தழகு மட்டுமில்ல, படம் பாக்குற அத்தன சாதி சனமுந்தான்! அதோட நின்னானா, சொல்லிட்டு அந்தக் கையை தூக்கி தலைக்கு மேல குடுத்துட்டு காலை ஒரு சைஸா வச்சுட்டு ஒரு ஆட்டு ஆட்றான் பாருங்க! ஏ ஒன்னேன்! "
நிஜமாவே இந்த சீன்
ரொம்ப சூப்பரான சீன்
ரசிக்கும் படியான சீன்
நீங்கள் சொன்ன விதம்
அதைவிட அழகு
சூர்யா,
மிக்க நன்றி! என்ன இருந்தாலும் தம்பியை விட்டு குடுப்பீங்களா..கார்த்தியோட அண்ணன் சூர்யா தானே! எப்படி?
இந்த சீன் வந்த போது சுற்றி நோட்டம் விட்டதில், மொத்த சாதி சனமும் அந்த நிழல் வெளி காதலுக்காக உருகிக் கிடந்தது தெரிந்தது! அப்படி ஒரு பூரிப்பு அனைவரின் முகத்திலும்! அதனால் தான் அப்படி எழுதினேன்!
//மதி:இதே மொழிநடையில தொடர்ந்தீங்கன்னா, நாமளும் இங்கே கெடப்போம்ல..//
ரிப்பீட்டே!
படம் பிடிச்சதை விடவும் உங்க பதிவுதான் பிடிச்சிருக்கு