தமிழ் மையமும் தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை இணைந்து நடத்திய சென்னை சங்கமம் இன்று இனிதே நிறைவுற்றது! மிகவும் அற்புதமான விஷயம்! நம் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பல வகை கிராமியக் கலைகளை சென்னையின் தெருக்களுக்கே கொண்டு வந்து ஒரு திருவிழாவே நடத்தியிருக்கிறார்கள்! அவர்கள் சொல்வது போல் இது நம்ம திருவிழா தான்!

தமிழ் மையத்தின் எம்.டி. திரு. கேஸ்பர் ராஜ், இந்த யோசனை ஆகஸ்ட் மாதத்தில் உதித்ததாகவும், ஆனால் வேலை செய்யத் தொடங்கியது ஜனவரியில் தான் என்று சொன்னார்! உண்மையாகவே வரவேற்கத் தக்க ஒரு விஷயம். இதைப் பற்றி ஹிந்து பேப்பரில் படிக்கும் போது தான் நம் கிராமங்களில் எத்தனை வகையான ஆட்டம் இருக்கிறது என்றே தெரிகிறது!

நான் முதலில் சென்றது நந்தனத்தில் ஒய் எம் சி ஏ பக்ஸ் தியேட்டரில் நடந்த மொஸார்ட் மீட்ஸ் இந்தியா என்ற நிகழ்ச்சிக்கு! இது சிஃம்பொனியுடன் நம் கர்நாடக சங்கீதத்தை கலந்து கொடுக்கும் முயற்சி! ஃப்யுஷன் என்கிறார்களே, அது தான்..[எனக்கு எல்லாம் கேள்வி ஞானம் தான், இதில் பெருசா தப்பு இருக்க வாய்ப்பில்லை, கொஞ்சமாவது சரியா இருந்தா தானே தப்பு கண்டுபுடிக்க முடியும்...] அற்புதமாய் செய்தார்கள்! கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் வரிசையாக உட்கார்ந்து வயலின் வாசிப்பதையும், கோரஸாய் ஆண்களும் பெண்களும் பாடுவதையும் இது வரை சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன்! சென்னை சங்கமத்தின் உதவியால் ஒரு தர்ம தரிசனம்! சங்கராபரணம், சிந்துபைரவி, பந்துராஹளி ராகங்களை வாசித்துக் காட்டினார்கள்! காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் நம்பவா போகிறீர்கள்! அந்த ஓபன் தியேட்டரில் தொடை தட்டிக் கொண்டே கேட்டதில் ஒரு கொசுவும் சாகவில்லை! இது சங்கீதக் கூட்டம் என்று அறிந்து தொடையைத் தவிர மற்ற எல்லா இடத்திலும் கொசுவாரின் கச்சேரி!மறுநாள் ஃபின்லேண்டில் இருந்து வந்த ஒரு குழு நடனமாடி பாட்டு பாடி மகிழ்வித்தார்கள்!

நேற்றும் இன்றும் பெசன்ட் நகர் பீச்சில் கண்டு களித்தேன்! குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்! கடற்கரையே ஆடியது என்றால் மிகையாகாது! அந்த இடத்திலேயே சினிமா இசையமைக்க குடும்பாட்டக் குழுவிற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதாக மேடையில் அறிவித்தார்கள்!

அடடா தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வருடா வருடம் இதை நடத்தப் போவதாகத் திட்டம்! இந்த வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம்! சென்னை சங்கமத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், [முதலில் கடற்கரையில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள் சார்!] அழிந்து வரும் பல கிராமியக் கலைகள் தழைத்தோங்கவும், இருக்கிறானா இல்லையா என்று தெரியாத இறைவனை வேண்டிக் கொள்கிறேன்!!
10 Responses
  1. Anonymous Says:

    "குடும்பாட்டம், ஜிம்னாஸியம், சத்தியமங்கலத்தில் வாழும் மலை வாழ் மக்களின் ஆட்டம் என்று விதவிதமாய் அமர்க்களப் படுத்தினார்கள்!"
    - அடடா தவற விட்டுவிட்டோமே என்று தோன்றத்தான் செய்கிறது.. Photo எடுத்திருந்தால் பதியுங்களேன்..


  2. Anonymous Says:

    teah it wud have been nice if you have posted the snaps too.. Seems I missed something nice :)

    Suresh C Nair


  3. anonymous * 2

    i tried uploading some of the photos, even video too..but blogger was so slow and my files were too big..

    so couldnt do so..today i will try to do that.

    thanks


  4. Gandhiraj Says:

    Friend,

    I read your blog and its very happy to see that your language is very simple and the flow is good. Good Job. Looking forward for more articles.

    -Gandhi


  5. Gandhiraj,

    Thanks for your valuable comments. I will give my best :)


  6. Radha N Says:

    அலுவல் தொடர்பாக நுங்கம்பாக்கம் செல்லும் வழியில், நடைபாதையில் ஒரு கிராமிய நடனம் நடந்துகொண்டிருந்தது. அந்த இசைதான் பலரை அதன் வசம் இழுத்தது என்றால் மிகையில்லை, என்னையும் சேர்த்துதான்.

    அதன் பிறகு, சிவன் பூங்காவில் கண்டு மகிழ்ந்தேன். அருமை அருமை அருமை சொல்வதற்கு வேறொன்றுமில்லை. கடும் வெயிலில் மழைபெய்ததைப்போல் உணர முடிந்தது, சென்னைவாசிகளுக்கு.


  7. naagu,

    //
    கடும் வெயிலில் மழைபெய்ததைப்போல் உணர முடிந்தது, சென்னைவாசிகளுக்கு.
    //

    miga poruthamaana uvamai :)

    nandri.


  8. sangeetthathirku december season pola varudaa varudam graamiya kalai season chennaiyil nadaipetraal nanraaga irukkum...


  9. vaanga gayathri,

    aalaye kanom! neenga solvathu mutrilum sari! chennai sangamathai varuda varudam nadakka povathaaga arivithirukkiraargal!


  10. Anonymous Says:

    "காதில் தேன் வழிந்து எறும்பு மொய்த்ததென்றால் " - nichayamaga namba mudiyaadu... yenna Theenle yerumbu varaadu...
    innonum erubu vandaa ada "moikkudu" ennu solluvaangala?

    As long as they dont disturb the traffic, these functions will certainly add value

    -Balaji K.R.S.