என்ன தலைப்பு பாத்து வந்தீங்களா? ஹிஹி, தெரியுமே...சரி சரி, படிங்க!

நேற்று எனக்கு நிஜமாகவே சனி உச்சத்தில் இருந்திருக்க வேண்டும்! பிரபுதேவா ஏதாவது செய்திருப்பார் என்ற நப்பாசையில் போக்கிரி பார்க்க வேண்டியதாகிவிட்டது. படத்தை விட்டு வரும்போது என் சட்டை முழுதும் ரத்தம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அத்தனை வன்முறை! கமலின் சண்டியருக்கு போர்க்கொடி தூக்கிய கனவான்கள் இப்போது எங்கப்பா ஒளிந்து கொண்டீர்கள்? போக்கிரி, ஆழ்வார், தாமிரபரணி மூன்றும் சாரமாறியாய் போட்டுத் தள்ளும் படங்கள் தான்! அடுத்த வீட்டுப் பையன் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி, இன்னைக்கு பெரிய அருவாளை கைல வச்சுட்டு நிக்கிறார் விஷால்!

டிக்கட் எடுத்துக் கொண்டு உள்ளே செல்லும்போது நம்ம லிங்குவிடம் [அதாங்க நம்ம பீமா லிங்குசாமி] பேசிக் கொண்டிருந்தேன்! [என்ன கற்றதும் பெற்றதும் சாயல் அடிக்குதா?] என்ன சார் இந்த படம் எல்லாம் பாக்க வந்துருக்கீங்க? இது நான்! ஏன்பா, இந்த படம் நல்லா இருக்காதா? இது அவர்..இல்லை இது மாஸ் படமாச்சே, நீங்க எப்படி? இந்த மாதிரியும் ஒரு படம் எடுக்கனும்ல..அதான்! ஏன் சார், விக்ரம் வைச்சி இப்படி படம் தான் எடுக்குறீங்களா? இல்லை இல்லை..அதற்குள் தியேட்டரின் இருட்டில் கலந்து விட்டோம்!

படத்திற்கு போக்கிரிலு என்று பெயர் வைத்திருக்கலாம்! அப்பட்டமானலு தெலுங்குலு படம்லு!! முடியலலு!!

எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?

நிற்க

இன்று அது ஏன் தமிழில் இப்படி ஓடுகிறது? தமிழ் மக்களுக்கு என்ன ஆகிவிட்டது? விஜய் என்ன படம் நடித்தாலும் பார்ப்பார்களா? மாஸ் ஹீரொ, மாஸ் ஹீரோ என்று இப்படிப்பட்ட படங்களாய் எடுத்து இன்னும் தமிழ் சினிமாவை பாழ் படுத்தப் போகிறோமா? கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? எம்.ஜி.ஆர் என்றொரு மாஸ் ஹீரோ தன் எல்லா படங்களிலும் உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டினார்! ரஜினி என்றொரு மாஸ் ஹீரோ தன் ஸ்டைலாலும், மேனரிஸங்களாலும் மக்களை குஷிபடுத்தினார்! விஜய் என்ற மாஸ் ஹீரோ எல்லா படங்களிலும் அரிவாளுடனும், துப்பாக்கியுடனும் எல்லோரையும் போட்டுத் தள்ளுகிறார்! அதிலும் இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]

படம் முடியும் தருவாயில் விஜய் துப்பாக்கியால் ஒருவரை துளைத்து கொண்டிருந்தார். தியேட்டரில் மயான அமைதி. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை திடீரென்று சத்தம் போட்டுக் கை கொட்டி தன் விஜய் மாமாவை பார்த்து சிரித்தது! படம் முடிந்தவுடன் அந்தக் குழந்தையின் தந்தையிடம், நான், குழந்தைகளை இந்த மாதிரி படத்துக்கெல்லாம் கூட்டிட்டு வராதீங்க என்றேன்! அவர் ஆமோதித்து தலையில் அடித்துக் கொண்டார்!

வெளியே வரும்போது லிங்குசாமி கண்ணில் படவில்லை. அவர் வேறு இப்படி ஒரு படத்தை எடுத்து தொலைத்து விடப் போகிறார் என்று அடி வயிற்றைக் கலக்குகிறது! உங்கள் யாருக்காவது அவரைத் தெரிந்தால் கொஞ்சம் சொல்லி வையுங்கள்!

41 Responses

 1. Anonymous Says:

  லிங்குசாமியை சத்தியமாக எனக்கு தெரியாது.. தெரிந்திருந்தால் உங்கள் சார்பாக கண்டிப்பாக சொல்லியிருப்பேன் :)
  உங்கள் விமர்சனத்தைப் படித்தவுடன் எனக்கு என்னவோ இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும் போல் உள்ளது.. அப்படி என்ன தான் மோசமாக இருக்கிறது என்று பார்க்க வேண்டும்..
  மேலும் இது போல் பல நல்ல :) படங்களை பார்த்து விமர்சிக்க வாழ்த்துக்கள்..


 2. ஜி Says:

  ஒரு நணபர் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. ரஜினி ஒரு நடிகன் அல்ல.. பொழுதுபோக்காளன்... அதே மாதிரிதான் விஜய்யும் ஆக முயல்கிறார். காலேஜ் பசங்களோட போனா, விசிலடிச்சு படம் பாக்கலாம். இல்லீனா இப்படி விமர்சனம் எழுதலாம் :)


 3. சீனு Says:

  அடங்குங்க!
  படம் ஓ.கே.தான். பார்க்கிற விதத்துல பார்க்கனும். சும்மா குறை சொல்லிகிட்டிருந்தா எதையும் ரசிக்க முடியாது...எல்லா வகைப்படங்கள் மாதிரி இதுவும் ஒரு வகை.

  //ரஜினி ஒரு நடிகன் அல்ல.. பொழுதுபோக்காளன்... அதே மாதிரிதான் விஜய்யும் ஆக முயல்கிறார்.//
  ம்ம்...மிக சரி. ஒரு பொழுது போக்காளன் என்ன செய்வானோ அதை மட்டும் பாருங்கள். 007 படங்களை மட்டும் பார்ப்பதில்லையா...அது போல...


 4. Anonymous Says:

  This is my thoughts after seeing some clippings and the original telugu version..

  After watching the stylish acting and filming in telugu, I was very eager to watch our Vijay's performance. But when I watched the clippings of some scenes and some songs I changed my mind. The main reasons are
  1) "E adichan copy"
  Vijay's mannerisms, which his fans really appreciate is exact copy of telegu's mahesh babu. This is a big shame for our
  "Ilaya Thalapathi". Everbody remakes the movie, even Rajini. But nobody copies the other actors styles and manerisms. That is IMHO, is pathetic and shameless. It is acceptable, if Vijay at least accepts it. But he acts like a "peria vennai" in interviews, as if like his own creativity. Don't mis undersatnd me that I don't like him. I'm the one honestly wished him be successful when media makes fun of him based on his looks when he got introduced.
  2) Choreography.
  Again, I'm a big fan of Prabhu Deva, but I'm totally disppointed when I saw this movie songs. It can't be compared with Telugu version. You guys must watch Telugu version if you get a chance.

  I would say, the telugu version got hit might not be because of the story, but because of the pair (Ileyana... ammmaaaaazing looking in this movie), stylish songs (there is one sweeet melody "Gala..Gala.." in this movie which our Vijay's fans don't want..), clean choreography.

  Shame on you Vijay!!!


 5. Pradeep Says:

  அனானிமஸ்

  ஐய்யயொ, உங்களை படம் பார்க்க தூண்டி விட்டேனே! சே, என் விமர்சனத்தின் தோல்வி. எப்படி? இந்த மாதிரி படங்களை பார்த்து விமர்சனம் பண்ணனுமா? ஆனியே புடுங்க வேணாம்!

  ஜி,

  ரஜினி ஒரு நடிகன் என்று நானும் சொல்லவில்லை. நம் குழந்தைகள் ரஜினி ஸ்டைலில் கையை காலை ஆட்டினால் நாம் எவ்வளவு ரசிப்போம்! இன்று விஜையையும், இந்த மாதிரி படங்களையும் பார்த்து குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கின்றன என்று நாம் சிந்திக்கிறோமா?
  காலேஜ் பசங்களோடு படம் பார்த்தாலும் விசில் அடித்து ரசிக்க அதில் என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

  சீனு,

  நீங்களுமா இப்படி சொல்றீங்க? வர்ற படத்தை எல்லாம் இப்படி ஆதரிக்கிறதாலே தான் இப்படி படங்களா வருது. எல்லாரையும் போட்டுத் தள்ளுவது தான் பொழுது போக்கு படம் என்றால், அந்த பொழுதே எனக்குப் போக வேண்டாம்! 007 படங்களில் இந்த அளவுக்கு வன்முறை இல்லை என்று நினைக்கிறேன்..கழுத்தில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்தில் கத்தியை நீட்டி கிராஃபிக்ஸ் செய்கிறார்கள்..இதை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை..இதை விசில் அடித்து எப்படி வரவேற்பது என்றும் புரியவில்லை..

  அனானி,

  தெலுங்கில் படம் ஹிட் ஆனதற்கு இலியானா ஒரு முக்கிய காரணம் என்று நானும் உணர்ந்தேன். நீங்கள் சொல்வது போல் விஜய் வசனம் பேசும்போது "பெரிய வெண்ணெய்" மாதி பேசுவதாகத் தான் எனக்கும் தோன்றியது! எரிச்சலாயும் வந்தது..

  தமிழ் போக்கிரியே தாங்க முடியல, இதுல தெலுங்கு போக்கிரியா? நம்மாள இந்த அளவுக்கு ரத்த காயம் எல்லாம் தாங்க முடியாதுப்பா..ஆள விடுங


 6. Anonymous Says:

  Ada neenga onna sollaaama vittuteenga !!

  Police dress La LATHIkku dress potta maari namma vijay climax pooraam sandai poduvaarae !

  athu thaan SUPER comedy !!

  Pona varuda AJITH melindu imsai kaattinaar

  inda murai THALAPATHY ! TB adhicha maari irukkaaar !


 7. vijay deserves all abuses in this world.. he is a 9th rate loafer.. ivana pathi pesuvathey kevalam...


 8. ////எனக்கு ஒன்று (அல்ல ஒன்றுக்கு மேல்) புரியவில்லை! இந்தப் படம் ஏன் தெலுங்கில் ஹிட் ஆனது? தெலுங்கில் இப்படி ரத்தக்களறியாய் இதற்கு முன் ஒரு படம் கூட வந்ததில்லையா?/////

  'கொல்'லுன்னு சிரிச்சுட்டேன்...

  ////இந்தப் படத்தில் கடைசியில், தான் ஒரு போலிஸ் அதிகாரி என்று வேறு அடையாளம் காட்டிக் கொள்கிறார்! [என்ன வேணா சொல்லுவீங்களா..ஒரு நியாய தர்மம் வேண்டாம்?]////

  :))))))))))


 9. பீரதீப் சூப்பர் விமசர்னம்லு... கலக்கலு கலக்கலு...


 10. Sandai koli, Pokkiri, Aditadi idu ellam winning name tane.

  Movie, Audience idu erandukkum cyclic relationship irukkanum. Surukkama solla pona "Audience are influenced by movie or movie influences audience?" Unga kanippila edu first edu second?


 11. Pradeep Says:

  அனானி,

  நீங்க சொல்வது ரொம்பச் சரி! எனக்கும் அதே தான் தோனிச்சி. முடி வேற ஜாஸ்தியா வச்சுருக்காரா, ரொம்ப நோஞ்சான் மாதிரி தெரியுது!

  கார்த்திக்,

  நீங்க என்ன ஆழ்வார் ரசிகரா?

  ரவி,

  எனக்கும் சிரிப்பு தான் வருது!

  தேவ்,

  நன்றிலு!

  நா.சு.

  சுத்தமா குழப்பிட்டீங்க!


 12. Kittu Says:

  innum "Pokkiri" padathai pakkavillai, thapithen, pizhaithen..Thanks for cautioning me !
  tamil makkal rasanai ippo rombave maariyachu..


 13. Ithellaam season movies! vidu vidu! prabhu deva yethavathu senjurupparnnu pona unna thaaan sollanum!


 14. Pradeep Says:

  kittu,

  ilaya thalapathi vijay vanthu kooptaalum poyidatheenga! ambuttu thaan solven.

  siva,

  oru padam nalla eduthuttannu vikraman padathaye onnu vidaama paathavan thaane naan!


 15. G.Ragavan Says:

  நான் தப்பிச்சுட்டேன். நான் தப்பிச்சுட்டேன். நன்றி பிரதீப் நன்றி. என்னைக் காப்பாற்றியமைக்கு நன்றி. இல்லைன்னாலும் இந்தப் படத்துக்குப் போற எண்ணம் இல்ல. இனிமே வராதுங்குறதுக்கு ஒங்க பதிவு உதவுச்சு.


 16. Pradeep Says:

  ragavan,

  ungalai kaapathurathukku naan ivvalvu avasthaipatrukken paarunga..athai chollunga!

  etho neengalaavathu nalla irunga.


 17. Gobinath Says:

  I have a Question to all the person who hate masala movie.

  1)How many of you people have seen Anba Sivam?
  2)Y that so called educated people not able to make that movie a hit one.

  My Personal Option, as far as i have see that movie the message told in that movie is 100% good. Y cant v people take that one. If those kinds of movies are able to create magic in box office, i am sure that directors will think of taking movies to different hight.

  Last year stats:

  VV (Kamal Movie) was biggest grosser according to box office results. But what happened to Veyil, its mega hit but could not make it as big as VV.

  Dont blame Creators. Blame the people either educated or uneducated it us who makes the directors and producers deliver such movies.

  As Mr.Madhan told in Vijay TV.


 18. சீனு Says:

  //How many of you people have seen Anba Sivam?//

  அப்டி போடுங்க.

  //Dont blame Creators. Blame the people either educated or uneducated it us who makes the directors and producers deliver such movies.//

  I too agree with this...


 19. சீனு Says:

  வலைப்பதிடுகளில் திட்டுவது ஒரு வியாதியாகிவிட்டது. யாராவது யாரையாவது திட்டிக்கொண்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது...


 20. Anonymous Says:

  It has been years that I stopped watching vijay, ajith and simbu movies. You should blame yourself for watching these kind of stupid movies. If one starts to avoid these kind of adithadi, punch dialog movies, at least they will stop making such movies.

  Not only movies, there are 100s of junks which are being encouraged by our society.......


 21. Anonymous Says:

  nan thappithuvitten
  thaks very intellygent vimarsanam super


 22. Anonymous Says:

  Gopinath and Others who blames audience,

  As a matter of fact, almost 70% of the audience (educated audience, as you say, will call the mass audience as B and C class) like Mass film. I accept. But the arguement here I think is not about the Mass film but about the violence in that film and treating a violence film as a Mass Big Hit movie.

  I myself like Vijay's dance and mannerism. His film Badri is my all time favourite. But I dont like his recent films.. it has violence violence and only violence. Even some of my friends who are Vijay's fans are also thinking like me. He became everyone's favourite by his earlier films which were good and watchable. Now with those fans he is trying to give masala big hit and almost 60% of his fans are watching his movie Expecting that it would be nice. If a movie like Gilli comes out, I am damn sure that everyone would love it.

  My opinion is - will Vijay act in a film like Veyil? No. He himself told that he will act only in mass movie. If Vijay acts in a film like Veyil, won't we accept it and make it a Box office hit? I am saying that the control is not with the Director or with the audience. Its with the ACTORS now. They are not ready to act in a challenging film and they are not acting for Acting.. they are acting only for HITS and CRORES. They have to have enough GUTS to act in a nice film. Its their mistake.

  Our audience are really poor.. they do have a crazy fantasy period in which their favourite hero is everything for them. Even though the movie is worse they will watch for their fav hero.. Dont blame them. They are ready to watch a good film if their fav hero acts in that movie. Its the Actors who are giving or allowing to give a NICE film


 23. எனக்கும் டவுட்டுதாங்க...தமிழ் சினிமா அவ்வளவுதானா.... மணி,பாரதிராஜா எல்லாம் கூட அதனாலதான் இந்திக்கு போய்ட்டாங்க போல்...


 24. Jai Says:

  Anonymous,

  I think it should be //Its the Actors who are NOT giving or allowing to give a NICE film//


 25. Pradeep Says:

  Gopinath,

  I still have that doubt, whoever i ask everybody likes anbe sivam movie. nobody has any idea why that film not hit box office.

  சீனு,

  நீங்கள் சொல்வதைப் போல் எதையாவது திட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. எனக்கு மிகவும் பிடித்த சினிமா இப்படி கெட்டு சீரழிகிறதே என்ற ஒரு ஆதங்கம் தான்..

  எல்லோருக்கும்,

  என்னை பொறுத்தவரை சினிமா என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஊடகம்! அதிலும் நம் தமிழ்நாட்டில் சினிமாவின் ஆதிக்கம் நம் எல்லோருக்கும் தெரிந்ததே..அப்படி இருக்கும் போது கோடி கோடியாய் சம்பாதிக்கும் நடிகர்கள் சமுதாய நோக்குடன் நல்ல படங்களைத் தர முன் வர வேண்டும்! நான் சொன்னதைப் போல் எம்.ஜி.ஆர், ரஜினியும் பொழுது போக்குப் படங்களைத் தான் கொடுத்தார்கள்..அதில் நல்ல ஒரு மெஸேஜ் இருக்கிறதோ இல்லையோ, இந்த அளவுக்கு வன்முறை இருந்ததில்லை..

  உங்கள் வீட்டில் குழந்தை ரஜினி மாதிரி நடந்தாலோ, பேசினாலோ சந்தோஷப்படும் நீங்கள் விஜய் படங்களைப் பார்த்து கத்தி எடுத்துக் கொண்டு டயலாக் பேசினால் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா?

  லகே ரஹீ முன்னாபாய் பார்த்தீர்களா, அது தான் பொழுது போக்குத் திரைப்படம். இந்த அற்புதமான மீடியம் கொண்டு நிறைய நல்ல விஷயங்களை சொல்ல முடியும். நல்ல விஷயங்களை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த மாதிரி கெட்ட விஷயங்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காதீர்கள் என்று தான் நான் கேட்கிறேன்!

  ஏதேதேது போக்கிரி படத்தை விமர்சித்தால் என்னையே போட்டுத் தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறதே, எஸ்கேப்!

  //
  Anonymous said...
  Gopinath and Others who blames audience,

  As a matter of fact, almost 70% of the audience (educated audience, as you say, will call the mass audience as B and C class) like Mass film. I accept. But the arguement here I think is not about the Mass film but about the violence in that film and treating a violence film as a Mass Big Hit movie.

  I myself like Vijay's dance and mannerism. His film Badri is my all time favourite. But I dont like his recent films.. it has violence violence and only violence. Even some of my friends who are Vijay's fans are also thinking like me. He became everyone's favourite by his earlier films which were good and watchable. Now with those fans he is trying to give masala big hit and almost 60% of his fans are watching his movie Expecting that it would be nice. If a movie like Gilli comes out, I am damn sure that everyone would love it.

  My opinion is - will Vijay act in a film like Veyil? No. He himself told that he will act only in mass movie. If Vijay acts in a film like Veyil, won't we accept it and make it a Box office hit? I am saying that the control is not with the Director or with the audience. Its with the ACTORS now. They are not ready to act in a challenging film and they are not acting for Acting.. they are acting only for HITS and CRORES. They have to have enough GUTS to act in a nice film. Its their mistake.

  Our audience are really poor.. they do have a crazy fantasy period in which their favourite hero is everything for them. Even though the movie is worse they will watch for their fav hero.. Dont blame them. They are ready to watch a good film if their fav hero acts in that movie. Its the Actors who are giving or allowing to give a NICE film //

  i agree with this :)


 26. சீனு Says:

  தல,

  நானும் தமிழ் சினிமாவின் ரசிகன் தான். என் பதிவுகளை பார்த்தாலேயே தெரியும்.

  //நான் சொன்னதைப் போல் எம்.ஜி.ஆர், ரஜினியும் பொழுது போக்குப் படங்களைத் தான் கொடுத்தார்கள்..அதில் நல்ல ஒரு மெஸேஜ் இருக்கிறதோ இல்லையோ, இந்த அளவுக்கு வன்முறை இருந்ததில்லை..//

  அப்படீன்னு நீங்க சொல்றீங்க. காரணம், அந்த காலத்து படங்களில் இருந்த வன்முறை அந்த காலத்துக்கு அதிகம். இப்போதைக்கு அதெல்லாம் ஜுஜுபீ. மனோகரா படத்தில் டி.ஆர்.ராஜகுமாரியை(?) கட்டிப் போட்டிருப்பார்கள். அப்பொழுது அவரை கட்டிப் போட்டிருக்கும் கயிறு அவர் மார்பில் படர்ந்து போகிறது என்பதற்காக பயங்கர எதிர்ப்பு. அப்போதைக்கு அது ஆபாசம். இப்பொழுது அதெல்லாம் சாதா'ரணம்'.

  வன்முறை என்பது தவிர்க்க வேண்டியது தான். ஆனால், அதற்காக ஒட்டு மொத்த படத்தையும் குறைசொல்வதாகாது. அப்புறம் நம்மால் எதையும் ரசிக்க முடியாது.

  இப்படிப்பட்ட படங்களை மக்களாக தேடி போவதில்லை. திணிக்கப்படுகிறது. இதற்கு காரணம் தயாரிப்பாளார் முதல் கதாநாயகர்கள் வரை.


 27. Pradeep Says:

  //
  இப்படிப்பட்ட படங்களை மக்களாக தேடி போவதில்லை. திணிக்கப்படுகிறது. இதற்கு காரணம் தயாரிப்பாளார் முதல் கதாநாயகர்கள் வரை.
  //

  //கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? //

  நிங்க சொல்றதை தான் நானும் சொல்றேன்! நான் நடிச்சா என்ன படம்னாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற மெத்தனம் கலைஞர்களுக்கு இருக்கக் கூடாது! நம்மோட புகழை நல்ல விதத்தில் எப்படி பயன்படுத்த முடியும் என்று அவர்கள் பார்வையை செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்!

  நிற்க

  ரவுடித்தனமாய் எல்லோரையும் போட்டுத் தள்ளி விட்டு கடைசியில் நான் போலீஸ் என்பது!
  என்ன தான் இத்தனை பேரை போட்டுத் தள்ளினாலும், பொறுக்கித் தனமாய் சுற்றினாலும் அசீன் விஜயை விரும்புவது நம் சினிமாவில் மட்டுமே நடக்கும் மற்றொரு கொடுமை!
  மகேஷ் பாபுவின் மேனரிஸத்தை அப்படியே காப்பி அடிக்கிறேன் என்ற பேர்வழியில் விஜய் இழுத்து இழுத்து பேசுவது இன்னொரு எரிச்சல்!

  இப்படி பலப் பல...

  வன்முறையை தவிர்த்து இந்தப் படத்தை பார்த்தாலும் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது என் வாதம்!


 28. Gobinath Says:

  //My opinion is - will Vijay act in a film like Veyil? //

  Hello Mr. Anonymous,
  Is it a talk about Vijay or about violence in Movies. Forget about the vijay. Here we where discussing about Violence not about any actor. Even i have mentioned Anba sivam, but its really really good movies which conveyed good message. But non of us either or the so called educated did not like the movie.

  //I am saying that the control is not with the Director or with the audience. Its with the ACTORS now.//

  No one will agree with this Comment. Can please tell me one thing if Audience starts rejecting movies like this will there be any actor who will make such a movie.

  Ok i will agree on thing here according to recent situations. Actors are the one who selects the script , director or producers. But they can force any audience to see there movie.What happened to the same actors movie(Adhi) last year. But still there are movies of this Movies because of the success of similar movies (MASALA).

  Can you reply how many time have you see anba sivam or autograph or kadal or kannathil mutham ittal or veyil. Veyil is also a kind of masala. Can you tell me what is the good stuff the movie conveyed. Or does it have any thing g8.

  //Dont blame them. They are ready to watch a good film if their fav hero acts in that movie. Its the Actors who are giving or allowing to give a NICE film //

  Boss y u audience watch these kind of films if you dont like it. If seriously look for good movies like veyil. Then Avoid masala Movie. Try avoiding two three films from the actor if its of the same kind then he will change the way he select the scripts.
  I am 10000% sure that it the audience whom v should blame. Not the Creator. When Audience Starts rejecting Such creation then they will come up with some thing Good.

  Do u need on example. Bala Sakthivel, who directed Samurai. But that movie was in the same genre of India and many other movies. People rejected it. He came back and with a better movie next time kadal. Its because audience rejected his First movie. If samurai would have made big in Box office. I am damn sure he would have been in the list of Masala Movies Directors.


  //வன்முறையை தவிர்த்து இந்தப் படத்தை பார்த்தாலும் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது என் வாதம்! //
  Pradeep we are fighting againt violence in movies but u r able to enjoy those violence. Great :( Hats off


 29. Gobinath Says:

  ////
  இப்படிப்பட்ட படங்களை மக்களாக தேடி போவதில்லை. திணிக்கப்படுகிறது. இதற்கு காரணம் தயாரிப்பாளார் முதல் கதாநாயகர்கள் வரை.
  //

  //கலைஞர்களுக்கு கொஞ்சம் கூட சமூக பொறுப்பு இல்லையா? //

  நிங்க சொல்றதை தான் நானும் சொல்றேன்! நான் நடிச்சா என்ன படம்னாலும் மக்கள் பார்ப்பார்கள் என்ற மெத்தனம் கலைஞர்களுக்கு இருக்கக் கூடாது! நம்மோட புகழை நல்ல விதத்தில் எப்படி பயன்படுத்த முடியும் என்று அவர்கள் பார்வையை செலுத்த வேண்டும் என்பது என் வேண்டுகோள்!
  //

  Hello Pradeep,
  If the actor thing in that way audience can teach him by rejecting him movies. The star status what these actors have is because of the audience.


 30. Pradeep Says:

  கோபி,

  //வன்முறையை தவிர்த்து இந்தப் படத்தை பார்த்தாலும் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை என்பது என் வாதம்! //

  வன்முறை மட்டுமே இல்லை, இந்த படத்தில் பொழுது போக்கு அம்சங்களும் இருக்கிறது என்பவர்களுக்கு நான் சொன்ன விளக்கம் அது! நீங்கள் என்ன சொல்கிறீர்கள், புரியவில்லை :)


 31. சீனு Says:

  கோபிநாத்,

  //Veyil is also a kind of masala. Can you tell me what is the good stuff the movie conveyed. Or does it have any thing g8.//

  பொதுவாக தமிழ் திரைப்படங்கள் வெற்றி பெற்றவரின் கதையை படமாக்குவார்கள். ஆனால், 'வெயில்' படத்தை பொறுத்தவரையில் தோல்வி அடைந்த ஒருவரின் கதை. சினிமாவுக்காக இந்த படத்திலும் சில compromise-கள் உண்டு. உதா, கதாநாயகர்கள் என்றாலே காதல்/லி இருக்க வேண்டும் என்பது. பசுபதியின் காதலாவது கதையின் ஊடே வருகிறாது. ஆனால் பரத்தின் காதல், திணிக்கப்பட்ட ஒன்று. பிதாமகனிலும் compromise உண்டு. சிம்ரன் டான்ஸ்.

  //I am 10000% sure that it the audience whom v should blame. Not the Creator. //
  சிரிப்பு தான் வருகிறது. இது கோழியா? முட்டையா கதை தான். ஆனால், இங்கு சமூகப் பொருப்பில்லாமல் படம் எடுக்கும் படைப்பாளிகள் தான் காரணம் என்பேன். தன்னிடம் சரக்கில்லாதவன் தான் மாசாலாவில் இறங்குவான்.

  //Bala Sakthivel, who directed Samurai. But that movie was in the same genre of India and many other movies. People rejected it.//

  ஒரு படம் வெற்றியடைய/தோல்வியடைய நிறைய காரணங்கள் உண்டு. சாமுராய் தோல்வியடந்ததற்கு காரணம் நீங்கள் குறிப்பிடுவது அல்ல. அந்த படம் வந்தபொழுது, அதே கதை வடிவத்தில் சிட்டிசன் படமும் வந்தது. சொதப்பலான திரைக்கதையால் சிட்டிசன் தோல்வி அடைந்தது. அதன் தாக்கம் இந்த படத்திற்கும் உண்டு. சாமுராய் நிறைய விஷயங்களில் ஒரு ஓ.கே. டைப் படம்தான்.

  காதல் படமும் நீங்கள் சொன்ன படி ஒரு genre of India படம் தான். திரைக்கதை தான் காப்பாற்றியது.


 32. Gobinath Says:

  //I am 10000% sure that it the audience whom v should blame. Not the Creator. //
  சிரிப்பு தான் வருகிறது. இது கோழியா? முட்டையா கதை தான். ஆனால், இங்கு சமூகப் பொருப்பில்லாமல் படம் எடுக்கும் படைப்பாளிகள் தான் காரணம் என்பேன். தன்னிடம் சரக்கில்லாதவன் தான் மாசாலாவில் இறங்குவான்.
  //

  as the audiences can v reject those kind of movies. So that the creator will be forced to deliver a good movie


 33. Anonymous Says:

  நல்ல பதிப்பு


 34. படம் எப்படி ஓடுகிறது என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது பிரதீப்..

  ரொம்ப நாள் கழிச்சு உங்க பதிவு பக்கம்!


 35. Anonymous Says:

  I just watched the great imitation of Pokkiri in Vijay TV's Lollu Sabha (Imitation Movie name 'Bakery'). Vijaya oru kili kilichittangho. Vijay must watch it.


 36. MAKE EVERY REJECTION AN OPPORTUNITY FOR REVLOUTION -William Ngwako Maphoto சொன்னது..

  தலைவரே...விஜய் படத்திலே வேறென்ன எதிர்ப்பார்த்தீர்கள்? மசாலா ஃபார்முலா மிக்ஸிங்...அவ்வளவுதான்.. படம்பார்தேன்னு வெளியில சொன்னீங்க பாருங்க உங்க தைரியத்தை முதல்ல பாராட்டணும்!


 37. Anonymous & Bharateeya

  Just now i understood why pokkiri film is an hit...

  I wrote this post on Jan 22nd still i am getting comments on this..

  Rajini news eppadi nalla irunthaalum illainnaalum padikkiromo, athe craze vijaykkum irukku..so padam nalla irunthaalum illaattiyum makkal paappanga pola :)


 38. பதிவிலும், பின்னூட்டங்களுக்கு அளித்துள்ள பல பதில்களிலும் ஒத்தக் கருத்து இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  நான் 'அந்தக் காலத்தில்' எழுதியது: இங்கே


 39. vignesh Says:

  dai nee mattum en kaila kitaichana unaku tharma adi vilukum da. enga thalaivara pathi thappa pasura ithoda vittudu.


 40. vignesh,

  unga pinnoottam pokiri climaxla unga thalai uniform la varra mathiriye comedya irukku...