கதை:
மிகுதியான காம சிந்தனைகளின் ஆக்கிரமிப்பால் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் கதை. அவர் தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றியும் தனக்குத் தானே பேசிக் கொள்கிறார். அவருடைய தாய் அவரை நினைத்து அழுவதையும், மருத்துவர்கள் அவரை இம்சிப்பதாயும், நண்பர்கள் அவரை பரிகாசம் செய்வதையும், ஏன் இவர்கள் எல்லோரும் இப்படி என்னை வதைக்கிறார்கள்? நான் படிக்கும் காலத்தில் இருந்ததைப் போல இவர்கள் இல்லையே? ஏன் என்னிடம் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தன்னைத் தானே கேட்டுக் கொள்கிறார். அடிக்கடி அம்மா "உனக்கு ஒன்னுமில்லப்பா, நீ நல்லா ஆயிடுவே" என்று சொல்லும்போது நல்லா ஆகுறதுன்னா என்ன அர்த்தம்? இப்போ எனக்கு என்ன ஆயிடுச்சு? என்று பரிதாபமாய் நம்மைப் பார்த்து கேட்கிறார்!
இதன் மூலம், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய சுய சிந்தனைகளை ஒளித்தும், மறைத்தும் எவ்வளவு போலியான வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கிறது. எந்த வித பயமும் இல்லாமல் சிந்திப்பவனை இந்தச் சமுதாயம் மனநோயாளி பட்டம் கட்டி விடுப்படுகிறது. இது தான் ஆசிரியர் உணர விரும்பிய கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை..ஏன் என்றால் எனக்குப் புரிந்தது இது தான்.
நவீன நாடகம், புதுக் கவிதை, கலைப் படங்கள் எல்லாம் ஒரே வரிசையில் இருப்பவை என்று நினைக்கிறேன். அவரவர்க்கு புரிந்த்தை எடுத்துக் கொள்ள வேண்டியது. இது மிகச் சிறந்த கவிதை என்று ஒருவர் சொல்லி நாம் படித்தால், அந்தக் கவிதை அவருக்குத் தந்த அனுபவம் நமக்குக் கிடைக்காமல் இருக்கலாம். அதனால் அந்தக் கவிதை நம்மைப் பொறுத்தவரை நல்ல கவிதை கிடையாது! [நம்மைப் பொறுத்தவரை!] அவ்வளவு தான்..
15 வருடமாய் கூத்துப் பட்டரையில் இருப்பவர் ஜெயராவ். தெலுங்கர். நல்ல உயரம், மாநிறம், பாரதி மீசை. நக்கலான சிரிப்பு, நினைத்தபோதெல்லாம் கண்களில் கண்ணீர், திடீர் திடீரென்று மாறும் முகபாவனைகள் கொண்டு ஒரு நிஜ மனநோயாளியை நம் கண் முன்னே நிறுத்திகிறார். குறை என்று சொன்னால், கதைப் படி அந்த மனநோயாளி ஒரு பிராமணர், இவருடைய உடலமைப்பும், தமிழும் கதாப்பாத்திரத்துடன் ஒட்டவில்லை. இவர் தமிழ் பேசியது ரஜினிகாந்த் தமிழ் போன்றதொரு பிரமை எனக்கும், என்னோடு வந்த நண்பருக்கும் ஏற்பட்டது! இவர் ஊனமுற்ற குழந்தைகளுக்காக "தியேட்டர்ஸ்" என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்தக் குழந்தைகளும் இது போன்ற பொழுது போக்க நிகழ்ச்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வழி வகை செய்கிறார். வாழ்க!
நவீன நாடகங்களையும், கலைப் படங்களையும் எல்லோரும் பார்ப்பதில்லை; அது எல்லோருக்கும் புரிவதில்லை என்பது என் கருத்து. ஹே ராமைப் பார்த்து விட்டு என் நண்பன் ஒருவன், கமல் என்னடா சொல்ல வர்றாரு? காந்தியும் முஸ்லீம்ன்றாரா? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்! எப்படி அப்படிப் பட்ட ஒரு கருத்து அவனுக்கு அந்தப் படத்தில் தோன்றியதோ எனக்குப் புரியவில்லை. ஆனால் ஒரு ஊரில் ஒரு ராஜா என்று ஆரம்பமாகும் கதைகள் என்றோ வழக்கொழிந்து விட்டன. ஒருவேளை இன்று யாராவது அப்படி எழுதினால், அட இது என்ன புதுசா இருக்கே ஆரம்பமே என்று சிலர் படிக்கலாம்.
நான் கவனித்த ஒரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி நாடகங்களில், படங்களில், கதைகளில் ஒரு சிறு நகைச்சுவை வந்தாலும், கொஞ்சம் அளவுக்கதிகமாகவே சிரிக்கிறார்கள். இதே ஒரு சாதாரண நாடகங்களில், படங்களில், கதைகளில் வந்தால் அவர்கள் இப்படிச் சிரிப்பார்களா என்று சந்தேகம் தான். இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று ஒரு வரியில் குறை சொல்லிச் சென்று விடுவார்கள். இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும். இல்லையென்றால், பக்கத்தில் உட்கார்ந்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கும் சதாசிவம் மாமா, என்னங்கானும்? பையன் என்னமா ஹாஸ்யமா நடிக்கிறான், பேசுறான், நீர் சிரிக்கவே மாட்றீரே? அவன் என்ன பேசினான்னு புரியலையோ என்று இதற்கும் ஒரு பெரிய ஹாஸ்யத்தை சொன்னது போல் சொல்லிச் சிரிப்பார் என்ற பயம் என்று நினைக்கிறேன்.
நாடகத்திற்குப் பிறகு கோபிகிருஷ்ணன் எழுதிய ஒரு நூலின் ஆங்கிலப் மொழிபெயர்ப்பு [தலைப்பு social work, asocial work, anti social work என்று நினைக்கிறேன்] வெளியிடப்பட்டது.
வித்தியாசமான அனுபவம். நன்றி பிரசன்னா!
பின்குறிப்பு:யாரோ ஒரு வலைப்பதிவாளர் மழையில் நனைந்ததைப் பற்றிய பதிவு பிரசன்னாவை ரொம்பவே பாத்தித்திருக்கிறது. நீங்களாவது உருப்படியாய் இந்த நாடகம் பத்தி உங்க பதிவுல எழுதுங்க என்றார். பிரசன்னா நீங்க சொன்னபடி செஞ்சுட்டேன்.
Nethu Manmatha Leelai parthen. Athula kamal-kitte velai pakkira antha ayyar aathukar ippadi thaan polambuvar. Athu ghabagam vanthuducchu!
good writeup.
I missed it.
Anbudan
//ஹரன் பிரசன்னா தன்னுடைய பதிவில் ஒரு நவீன நாடகத்திற்கான அழைப்பிதழை பதித்திருந்தார்//
ஆஹா... கடைசியா மாட்டிக்கிட்டது நீங்கதானா?
//I missed it.//
அட... இதப்பார்றா..!
Dear Pradeep,
Thanks for this post. I feel very sorry as i could not make it for this play.
- suresh kannan
அடப்பாவி சுரேஷ் கண்ணன்! என்னைத் தூக்கத்துலேர்ந்து எழுப்பி முகவரியெல்லாம் கேட்டு வாங்கிட்டு கடைசில போகவே இல்லையா?
//இங்கு சிரிப்பதற்குக் காரணம், நான் இந்த நாடகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறேன். இந்த நாடகம் எனக்கு மிகச் சுலபமாகப் புரிகிறது என்று பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்ளத் தான் போலும்//
ஆச்சரியம் ப்ரதீப்! எனக்கும் இதே எண்ணம் தான் இருந்தது. கேம்யூவின் நாடகமொன்றை பார்க்கப் போனபோது ஒலிபெருக்கியில் கொஞ்சம் muffled ஆக வந்த சப்தத்தில் ஒரு எழவும் புரியவில்லை கொஞ்ச நேரத்திற்கு. (ஆங்கிலம் வேறு) சுற்றி இருந்தவர்கள் பெரிதாகச் சிரித்தபோது எரிச்சல் மிஞ்சியது - இதற்கு மேல் ஒரு complex உம் சேர்ந்துகொண்டது. அப்புறம் எனக்குத் தோன்றியது - மேடை நாடகங்களில் பின்னூட்டம் உடனுக்குடன் போய்ச்சேருகிறது. இதனால் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இப்படிச் செய்கிறார்கள் என்று...(இருந்தாலும், நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்த பெண் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்டபோது அழுதவாறு இருந்தார். ஒரு powerful performance இனால் பாத்திரத்தில் மூழ்கி, அதன் உள்மனநிலைகளினால் உலுக்கப் பெற்று..."டூ மச்! நடிக்கக் கத்துக்கறீங்களோ இல்லையோ. இதக் கத்துக்குங்க முதல்ல" என்று நினைக்கத் தோன்றியது. நாடகத்தின் முக்கிய ஹாஸ்யமாக இதற்கு நான் சிரித்துக் கொண்டிருந்தது பலருக்கு வினோதமாய் இருந்திருக்கலாம்)
எப்படியாயிருந்தாலும், ஒரு நவீன நாடகத்திற்குச் செல்லும் போது எஸ்வி சேகர் நிகழ்ச்சிக்குப் போவதுபோல இயல்பாய் இருக்க முடிவதில்லை. காதைத் தீட்டிக் கொண்டு வளைந்து உட்கார்ந்து உன்னிப்பாய் கவனிப்பதில் முக்கியமான எதையாவது விட்டு விடுவோமோ என்ற பதட்டம் இருக்கும் - இதில் மொத்த நாடகத்தையும் கோட்டை விடுவேன். அடுத்தமுறை பாப்கார்ன் கோலா எடுத்துக் கொண்டு, இருக்கையில் ஒய்யாரமாகச் சாய்ந்து பார்க்கப் போகிறேன் - என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
Hi, Thanks for the coverage and your views. Regards, PK Sivakumar
அனைவருக்கும் நன்றி!
Mi telle naTkam sirani. aana gopi krishnan rikke telle two page short story sovdi savo. jukku tellingkan rhaay. kiTTatthaTTo onDo mhada work keri telle story rikkeyo mani gopi mora jool onDaal sangiyaas. paav, two years mundadi gopi kaalam voya visayam jugu tenga kalaana.
ar.kumar