புத்தாண்டு பிறந்து 2வது நாளில் புத்தாண்டு பிறந்ததன் பயனடைந்தேன். நீங்கள் யூகிப்பது சரி தான்..சந்திரமுகி பார்த்தாகிவிட்டது! பிறவிப் பயன் இந்த முறையும் எய்தியாகிவிட்டது!

எல்லோரும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறார்கள். பிரதம ரஜினி ரசிகனான நான் எழுதா விட்டால் எப்படிஎன்று நீங்கள் வருத்தப்படும் முன்..இதோ!

பி வாசு கதை எழுதி ரஜினிக்கு சொல்வதற்கு முன்னரே தமிழ்நாட்டில் அனைவருக்கும் கதை தெரிந்து விடுகிறது. [ரஜினிக்குத் தெரிகிறதோ இல்லையோ!] இப்படி இருக்கும்போது, படம் வந்து 5 நாள் ஆன பிறகு படத்தின் கதையை சொல்வது சிறுபிள்ளைத்தனம்! இருந்தாலும் அந்த சிறுபிள்ளைத்தனத்தை ஒரு சிறு வரியில் செய்து விடுகிறேன்!

ஜோதிகா மீது வரும் சந்திரமுகி என்ற பேயை சைக்கியாட்ரிஸ்ட் ரஜினி விரட்டுகிறார்!

ஜோதிகா யாரு? ரஜினி ஏன் அவளை பேய்கிட்ட இருந்து காப்பாத்துறார் என்றெல்லாம் நீங்கள் கேட்டால், நீங்க இப்பொவே ஆட்டையில இருந்து விலகிக்கலாம்!

சரி, சரி..விமர்சனத்துக்கு வர்றேன்! முதலில் படத்தின் நிறையை பார்ப்போமா?

ரஜினி, ரஜினி & ரஜினி :

3 வருடங்களுக்குப் பிறகு இளமையாய் திரும்பி இருக்கிறார் ரஜினி. அவருடைய பழைய படங்களின் பாணியில் காலை மட்டும் முதலில் காட்டி சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார். மனிதன் படத்தில் முதலில் செந்தில் காலைக் காட்டுவார்கள். ரசிகர்கள் ரஜினி தான் என்று நினைத்து உற்சாக மிகுதியில் கையைத் தட்டுவார்கள், பார்த்தால் செந்தில் வருவார்!! அந்த ஞாபகம் தான் வந்தது..

ரொம்பவும் அடாவடி, ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வந்து போகிறார்! ரொம்பவே அடக்கி வாசித்திருக்கிறார். தானும் பஞ்ச் டயலாக் பேசினால், எங்கே விஜய் ரசிகர்கள் விஜயை காப்பி அடிப்பதாக சொல்லி விடுவார்களோ என்று நினைத்து விட்டார் போல..

ஜோதிகா :

சாதரண படத்திலேயே முகத்தில் ஏதாவது குறும்புத்தனம் செய்வது ஜோதிகாவின் இயல்பு. இதில் பேய் பிடித்து ஆட்டும் வேடம் என்றால், கேட்கவா வேண்டும்..எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டுகிறார்!

வித்யாசாகர் :

எளிமையான இசையில், ரஜினிக்கே உரிய பாணியில் அற்புதமாய் செய்திருக்கிறார். நிச்சயமாக தேவுடா இவர் பக்கம் சூடுவார்! யாரு எஸ்பிபியா பாடுவது..எத்தனை நாளாச்சு சார்! தத்திந்தோம் பாட்டு பழைய இளையாராஜாவை ஞாபகப்படுத்துகிறது! ரஜினி ரசிகர்கள் இன்னும் இவர் வீட்டை பதம் பார்க்காததிலிருந்தே தெரிகிறதே, பாட்டு சூப்பர்னு!!

ரஜினியின் காஸ்ட்யும்ஸ் : [செளந்தர்யாக்கு ஒரு ஓ போடுங்க!]

குறிப்பாய் யாரும் ரஜினி படத்தில் லாஜிக் பார்ப்பதில்லை..அதேபோல், ஒரு சைக்யாட்ரிஸ்ட் இப்படி எல்லாம் ட்ரஸ் பண்ணுவாரா என்று கேட்காவிட்டால் அமோகமாய் உடை வடிவமைத்திருக்கிறார் செளந்தர்யா!

ரஜினியின் மேக்கப் [லாங், மிட்] :

கவனிக்க! லாங், மிட் ஷாட்டில் ரஜினி அழகாக இருக்கிறார்!

இனி குறைகள் :

ரஜினி வடிவேலு சீப் காமெடி :

காமெடி செய்வதற்கு ரஜினியே போதும், இதில் வடிவேலு வேறு இருக்கிறாரே என்று நினைத்தால், ஒன்றிரன்டு காட்சிகளைத் தவிர மற்ற எல்லாம் கேவலமான இரட்டை அர்த்த வசனங்களாய் இருந்தது பெருத்த ஏமாற்றம்!

அங்கங்கே உதைக்கும் லாஜிக் :

சைக்கியாட்ரிஸ்ட் எப்படி பேய், பிசாசை எல்லாம் நம்புகிறார், நயந்தாராவை எப்போதும் கடுப்படித்திக் கொண்டிருந்தாலும் அவர் ரஜினியை ஏன் விரும்புகிறார், எதற்கு தேவை இல்லாமல் அந்த வில்லி வருகிறார், ஜோதிகாவிற்குத் தான் பேய் பிடித்திருப்பதாக ரஜினி கூறும் போதும் சில காட்சிகள் லேசாக உதைக்கிறது! [யாராவது படத்தைப் பார்த்து விட்டு எனக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை அளியுங்கள்!]

ரஜினியின் மேக்கப் [க்ளோசப்] :

முகத்தில் பௌடர் பூசலாம், பௌடரிலேயே முகம் இருக்கக் கூடாது. ஜோதிகாவை விட ரஜினிக்குத் தான் அதிகம் லிப்ஸ்டிக் போட்டிருப்பார்களோ என்று தோன்றுகிறது! ரஜினியை க்ளோஸப்பில் காட்டும்போது, மேடைக்கு மேடை [அபிநயா க்ரூப்!] ரஜினி போல் வேடம் போற்று சுற்றுவார்களே, அவர்களைப்போலவே உள்ளது!

படத்தைப் பொறுத்தவரை கடைசி அரை மணி நேரம் தான் விறுவிறுப்பாக இருந்தது! எப்படியோ ரஜினி படம் வந்தால் சரி! என்ன சொல்றீங்க?

தான் யானை இல்லை, குதிரை என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார் ரஜினி!! [யானை குதிரை மாட்டர் எல்லாம் உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன்!]

12 Responses
 1. Boston Bala Says:

  நல்ல விமர்சனம்...

  >>>நயந்தாராவை எப்போதும் கடுப்படித்திக் கொண்டிருந்தாலும்---

  அதைவிட துர்காவும் எப்படி சரவணன் மேல் காதலில் விழுந்தார் (வெறுப்பேற்றினால் காதல் வரும் என்பது ரஜினியின் 80-களில் வெளிவந்த பட லாஜிக்) என்றும் புரியவில்லை!?


 2. பாலா

  நீங்கள் சொல்வதை ஒப்புக் கொண்டாலும், 80களில் வந்த படங்களில் ஏதாவது ஒன்றை நல்ல விதமாய் செய்து காதலியை கவர்வார். அப்படி எதுவும் இதில் செய்ததாகப் படவில்லை..[தத்திந்தோம் பாட்டைத் தவிர]

  என்னமோ குறையுது சார்!


 3. Thala, costume designer Soundarya illa. Vera oruthar.


 4. Sivakumar Says:

  Pradeep!

  I think nee padam sariya gavanikkalannu ninaikkiren. Athu pei ellam pidikkirathillai sir!.

  Athu split personality ngira oru noi nnu thaan thalaivar solrar. Athavathu, jyothika thannai chandramukhiyagave ninacchukka aarambhikkira. athanala ange ellarum (antha koila antha battar solra) solra kathapadi avalai chandramukhiyagavum, antha pakkathula veetle irukkiravanai thannoda kadalanagavum ninacchukira. Thalaivar raja shoe and tadiya kaile vacchu pesurathunala avarai rajava ninacchu kollanumnnu ninaikkira!

  jyothika piraviyileye tanakku pidiccha entha oru characteraiyum avala ninacchu pathukira oru vidatha personality nnu kadayila flash back storyoda solli irukkanga sir!

  So, peiyum illa pisasum illai. Innoru tadavai poi paaru.

  Mathapadi padathula romba kuraigal undu. udaranuthukku chandramukhya marunathukkapparam, normal life-le than kadalan vinith kattikka pora ponnai (malavika) aval yen kolla pakira, i mean chandramukhi life and normal life mix pannittanga. ithu split personality padi sathiyamnnnu teriyalai. intha mathiri innum romba. But padam rasikka mudijathu. Jyothika acting is very nice!


 5. Anonymous Says:

  ரஜினி split personality பற்றி தானெ சொல்கிறார்.பெரியவர்களின் சந்தோசத்திற்காக பூஜை நடக்கிறது அவ்வளவு தான்.
  கனிப்பொறியில் காதல் என்றால் ஒத்துக் கொள்கிறீர்கள். ரஜினி நயன் தாரவை பார்த்தவுடன் காதல் வந்ததாக வைத்துக்கொள்ளுங்கள். இலக்கியத்தில் சொல்லும் ஊடல் போல ரஜினி நயன் தாரவை சீண்டுகிறார். அவ்வளவே. ரஜினி அத்திந்தோம் பாடலுக்கு பிறகு ரஜினியின் இசைத்திறமையையும் அதை அதுவரை வெளிக்காடடமல் பெருந்தன்மையாக இருப்பதை கண்டு ரஜினியை விரும்புகிறார். ரஜினி - நயன் தாரா காதலை நீட்டினால் கதைக்கு அவசியம் இல்லை என்று சொல்வீர்கள்

  நீங்கள் சொல்லுவது போல் எல்லாரும் அவளயே வில்லியாக நினைக்க வேன்டும் என்பதற்காக தான் வில்லியாக சித்தரிப்பது போல் சில காட்சிகள். கதையின் விறுவிறுப்பிற்காக.

  //ஜோதிகாவிற்குத் தான் பேய் பிடித்திருப்பதாக ரஜினி கூறும் போதும் சில காட்சிகள் லேசாக உதைக்கிறது//
  என்ன உதைக்கிறது என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

  ரஜினியின் பவுடர் மேட்டர்(லிப்ஸ்டிக் அதிகம் போட்டதாக தெரியவில்லை), Ok


 6. Anonymous Says:

  மக்களே!

  1. கதாநாயகியை வெறுப்பேற்றி, பிறகு காதல் வசப்படுத்துவது, 80 களில் வந்த லாஜிக்காக இருந்தாலும், அது இந்தப் படத்தில் அழுத்தமாய் இல்லை என்பது தான் என் வாதம். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று தடுப்பது, பட்டம் விடும்போது பட்டத்தை அறுத்து விடுவது இப்படி வெறுப்பை வரவழைத்து விட்டு, பிறகு ஒரு பாட்டில் நயந்தாரா அவரிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்குச் சென்று விடுகிறார். அவ்வளவு இசை ரசனை உள்ளவர் என்றால், ஏன் குழந்தைக்கு பாட்டு சொல்லிக் கொடுப்பதை தடுக்க வேண்டும்?

  2. அப்புறம் இன்னொரு முக்கியமான ஒன்றை நான் சொல்ல மறந்து விட்டேன். அதை எல்லா விமர்சகர்களும் மறந்து விட்டார்கள். அந்த க்ராஃபிக்ஸ் பாம்பு எதுக்கு? அது அந்த ராஜா பொம்மையை கொன்றவுடன் அது வெளியே போகிறது.

  3. பேய் பிசாசே படத்தில் இல்லை என்றால், அந்த சாமியாரால் மட்டும் தான் கங்காவை அந்தச் சக்கரத்தில் உட்கார வைக்க முடியும் என்று சரவணன் ஏன் சொல்கிறார்! பேய் ஓட்டுபவரால் ஸ்பிலிட் பெர்சனாலிட்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணை எப்படி நினைத்த இடத்தில் உட்கார வைக்க முடிகிறது?

  4. பிரபு இன்று இரவு நாம் சென்னைக்குப் போகிறோம் என்று சொல்லும்போது, கங்கா தன்னைலை மறந்து தெலுங்கில் நான் வரமாட்டேன், அந்த ராஜாவைக் கொல்லனும் என்று கத்துகிறார். அப்போது ஏன் பிரபுவை அவர் கொல்லவில்லை? கட்டிலைத் தூக்கி போட்டு சரியாட்டாளே!

  5. சரவணன் கங்காவுக்குத் தான் பேய் பிடித்திருக்கிறது என்று விளக்கும்போது, பீங்கான் பாத்திரங்கள், கடிகாரங்கள் உடைகின்றன, ஆனால் அப்போது கங்கா பிரபுவின் பக்கத்தில் தான் உள்ளார்! பிறகு எப்படி எல்லாம் கங்காவின் செயல் என்று சரவணன் கூறுகிறார்? என்ன இடிக்குதா?

  6. டைட்டில் கார்டில் செளந்தர்யாவின் பெயரை உடையமைப்பில் பார்த்ததாய் ஞாபகம்! தவறென்றால் திருத்திக் கொள்கிறேன்!

  எனக்கு ஒரு நல்ல ரஜினி ரசிகனாய் இருப்பதை விட, ஒரு நல்ல விமர்சகனாய் இருக்கவே விருப்பம்!!

  அப்பாடா இதுக்கு நான் இன்னொரு பதிவே பதிஞ்சுருக்கலாம்!

  பின்னூட்டம் கொடுத்த அனைவருக்கும் நன்றி!

  பிரதீப்


 7. Anonymous Says:

  Pradeep,

  Nalla vimarsanam.
  But, ithu oru Rajini padamnu kirathalayae ivaluvu vimarsananglam, ethir vimarsananglam endru ninaikiraen. veru entha padamum ivaluvu kavanam kavarthanthaga theriyavillai. Athu thaan Rajini ku kidaitha vetri.Rajni rasikargal thavira anaithu tharappu makkalakum intha padam pudithirukirathu.

  Soundarya, padathirku Multimedia design(Titles and etc) pannathaga pada title lil varukirathu.


 8. Anonymous Says:

  epdi pathalum ithu thalaivar padam..... so as a rajini fan.. i can only say.. its " too good"..


 9. Sivakumar Says:

  Pradeep,

  1. pattu pidikkamal kuzhanthaigalai poga sollavillai, nayan taravai veruppettha!

  2. Graphics pambu, ganga-vin karpanai. Unmayil iruppathillai enru ninaikiren. but ithilum tappu irukkirathu.

  3. ganga chandramukhi-yai aaviyaga karpanai panni athai thaana ninaithu kolgiral. athanal samiyarin udaviyai rajini naadugirar.

  4. prabhu-vai kolla muyarchi seivatharkku mun, prabhu kathi tanithu vidugirar enru vaithu kollalam.

  5. Peengan pathirangal, kadikarangal udaivathu, antha agilandeswariyin seyal enpathu pola terigirathu. irunthalum nambum padiya seivavillai Fazil.(ManichithraTazh-lil kooda ippadi thaan varugirathu)

  6. theriyavillai.

  Vimarasathukku vimarsanam kodavendiyathagi vittathu.

  Sivakumar.


 10. SwethaRaja Says:

  என்னுடைய கருத்து என்னவென்றால்
  * அந்த பாம்பு சும்மா அல்ல அது சந்திரமுகியின் ஆவி. அது முதலில் ஆவேசத்துடன் இருந்துள்ளது பின்பு அடங்கி செல்கின்றது.

  * ஜோதிகாவுக்கு அந்த நோயும் இருக்கிறது அத்துடன் பேயும் இருக்கின்றது. சாமியாரிடம் ரஜனி சொல்கின்றார் உங்கள் உதவியும் வேண்டும் என்று. சந்திரமுகி ஜோதிகாவின் நோயை அறிந்து சந்திரமுகி செயல் பட்டுள்ளார்!

  * கங்கா கதையை கேட்டார் பின்பு சந்திரமுகி இடத்திற்கு போனார். படத்தை துடைத்தார் பின் அவர் போலயே நின்று பார்த்தார் ஆடிப்பார்த்தார். அத் தருணம் பார்த்து சந்திரமுகி அவருக்குள் புகுதார்.


 11. கிரி Says:

  எந்திரன் படமே வர போகுது..இப்ப தான் இதை படிக்கிறேன் ;-)


 12. giri,

  irunthaalum neenga romba fast sir! ipovaavathu padicheengale...aama enna innaikku oru mudivoda irukeengala ella blogum padichu comment podanumnu?