ஊர் மக்களுக்கு ஓர் நற்செய்தி [It depends!].. டம டம...

அதாகப்பட்டது இருமல் நோய் முற்றி ஊருக்கு ஓடிப்போன உங்கள் ப்ரதீப் ஒரு பயனும் இல்லாமல் போன படியே திரும்பி வந்துவிட்டேன்!!

கொள்ளு..கொள்ளு..[இருமுறேங்க..நீங்க வேற]

அந்த 5 நாட்கள் :

மதுரை, கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்து வழிகிறது! நாம் இங்கே தான் 21 ஆண்டுகளாய் இருந்தோமா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் சிறுவனாய் இருந்த போது, "வெயில் காலம் வேற வருது" என்று புலம்பும் பெருசுகளை கண்டால் எனக்கு வியப்பாய் இருக்கும்..அப்படி என்ன இங்கே வெயில் அடிக்கிறது, இது இப்படி அலுத்துக்குது என்று நினைப்பேன்..மற்றும் எனக்கு துளி அளவு கூட வேர்க்காது [இது வரமா சாபமா தெரியவில்லை!] நான் முதலில் வெயிலை உணர்ந்தது டெல்லியில் தான்..இரவு 9 மணிக்கு office விட்டுக் கிளம்பி bus stop வந்தால், ஒரு அற்புதமான உஷ்ணக் காற்று உங்களை காதலுடன் தழுவும்!! உடல் முழுதும் பிசு பிசுன்னு..கொடுமையா இருக்கும்..வீட்டுக்கு போனவுடனே குளிக்கனும்..எல்லோர் வீட்டிலும் Air Cooler இருக்கும். [எங்கள் வீட்டில் அப்போது இல்லை!] நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா மதுரையிலும் இனி Air Cooler இல்லாமல் கஷ்டம் என்று தோன்றுகிறது..என்னடா இப்படி வெயில் அடிக்குதுன்னு பசங்ககிட்ட பேசவும் பயம்மா இருக்கு.."தோடா bangalore போனவுடனே இவனுக்கு மதுரை வெயில் தாங்கமுடியலை..அடங்குடா" என்று சொல்வார்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் சொல்வதும் நியாயம் தானே..ஓவரா film காட்டக்கூடாதுல்ல..

இதில்

கொத்தனார் வேலை பார்ப்பவர்கள்
ரோடு போடுபவர்கள்
சாலைகளில் ஏதோ ஒரு department க்காக குழி வெட்டுபவர்கள்
bus drivers & conductors
tea கடையில் வேலை பார்ப்பவர்கள்

இப்படிப் பலரை நான் நினைத்துப் பார்க்கிறேன்..ஏனோ முதன் முறையாய் எனக்கும் வேர்க்கிறது. நடமாடும் தெய்வங்கள்!!

கதிரவனே உனக்கொரு வேண்டுகோள்!
உழைப்பால் தம் உயிர் வளர்ப்பவர்களை விட்டு விட்டு
ஊழல் செய்தே உயிர் வளர்ப்பவர்களை மட்டும்
உன் செங்கதிர்களால் சாடு!!


[நானும் செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி சொல்லிட்டுத் தான் இருக்கேன், நீ எங்கே கேக்குற?]

சரி கொஞ்சம் நிழல்ல உட்கார்ந்து பேசுவோமா? வாங்க..

இருமலுக்காக நான் எடுத்துக்கொண்ட கை வைத்தியங்கள்:

1. ஆட்டுக்கால் சூப்
2. சாதம் வெந்த தண்ணியில் குந்தப்பானை போட்டு ஒரு glass
3. கொலக்கட்டையும் அதைச் சார்ந்த பானமும்
4. வால் மிளகும், பொரிகடலையும் சேர்ந்து மெல்லச் சொன்னார்கள். [குமட்டிக் கொண்டு வந்தது!]
5. பங்கரபான் பைரி [தமிழ்ல என்னன்னு தெரியலை! its a kind of வடை with தோசைப்பொடி]
6. பலாப்பழம்
7. காலையில் எழுந்தவுடன் ரெண்டு காதையும் இழுத்து விட்டுக்கச் சொன்னாங்க [அதை நான் செய்யவே இல்லை..யாருக்குப்பா ஞாபகம் இருக்கு!]
8. மஞ்சள், மிளகு போட்டு பால்!

என்னப்பா இப்போ இரும மாட்ரேன்னு வீட்லே யாராவது கேட்டா, கேட்டவுடனே ஞாபகம் வந்து இருமுவேன்..ஹிஹி..

இதுக்கெல்லாம் மசியாம கடைசியா doctor கிட்ட போனேன்..அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்..மறுநாள் பூரா நான் இருமவே

இல்லை..ஆனா இப்போ மறுபடியும் வந்துருச்சு!! : (

மதுரை:

1. வழக்கமான "எப்போப்பா வந்தே..உங்க அப்பா சொல்லிட்டே இருந்தாரு" நல்லா இருக்கியா? நல்லா பெருத்துட்டே..இன்னும் என்ன, உங்க அப்பாட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியது தானே"!!
2. எல்லா சொந்தக்காரர்களின் வீட்டிலும் இதே கேள்வி, இதே பேச்சு!
3. 5 நாளும் நான் TV பார்த்தே அழிந்தேன்.
4. நிறைய oneway ஆக்கி இருக்கிறார்கள்..எப்படி போவது எப்படி வருவது என்றே தெரியவில்லை.
5. ஒரு வழியாக திருமலை நாயக்கர் மஹாலை புதிப்பிக்கிறார்கள் [8 கோடி செலவில்]..தொல்பொருள் ஆய்வாளர்கள் கையில் சென்று விட்டதாம்.
6. நிறைய புதுப் புதுக் கட்டங்கள் எழும்பி விட்டன..எல்லாம் புது விதமாய் மாறுவதில் மகிழ்ந்தாலும், இனி அதை பழைய படி பார்க்க முடியாது என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..[இதை ஒரு நல்ல சிறுகதைக்கு கருவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன்!]

இது தான் என் 5 நாள் மதுரை புராணம்..ரொம்ப படுத்திட்டேனோ? சரி அப்புறம் பாக்கலாம்..