இந்தியா இமயத்தை விட
உயர்ந்திருந்தது

அரசியல்வாதிகள் அனைவரும்
காந்தியாய், காமராஜராய்
மாறி இருந்தனர்

ஊழல் ஊழ்வினை
கண்டிருந்தது

லஞ்சம் நாடு
கடத்தப்பட்டிருந்தது

தீவிரவாதம்
பக்கவாதம்
கண்டிருந்தது

வறுமையின் வயிரு பசியால்
வாடிப் போயிருந்தது

பாபருடன் இராமர்
என்மராகி இருந்தார்

தமிழ்நாட்டில் காவிரி
தலைவிரி கோலமாய்
ஓடிக் கொண்டிருந்தது

'ஆயிரம் வாலா' செய்து கொண்டிருந்தவர்கள்
'அறம் செய விரும்பு' படித்துக் கொண்டிருந்தனர்

வரம்பு மீறி கனவு
காண்பதாகக் கூறி - கனவே
என் கனவு கலைத்தது!! :(

இது நான் ஒரு 5 அல்லது 6 வருஷத்துக்கு முன்னே எழுதிய கவிதை..இந்தக் கனவிற்கு இன்றும் இதே நிலைமை தான் என்று நினைக்கும் போது என் விரல்கள் type செய்ய மறுக்கின்றன..

i hope to delete this post in near (??) future..can i?