வானம் தரையிலும் பூமி வானத்திலும்
ஒன்றும் நிலை மாறவில்லை

சூரியன் குளிர்வதாயோ சந்திரன் சுடுவதாயோ
எனக்குத் தோன்றவில்லை

வெல்லம் கசக்கவோ வேம்பு இனிக்கவோ
அப்படி ஏதும் சங்கதியில்லை

நான் நிற்பதாயும் தரை நடப்பதாயும்
அப்படி ஏதும் தடயமில்லை

இரவென்னைக் கொல்லவில்லை - பாவம்
அந்த நிலவென்னைக் கொல்லவில்லை

எனக்கும் சந்தேகம் தான் - ஆனால்
நீ நம்பித்தான் ஆகனும்

சத்தியமாய் நான் உன்னைக் காதலிக்கிறேன்!