இன்று எத்தனை பேர் கூகுளாரின் லோகோவை கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. அமேரிக்காவில் வாழும் தம்மாத்துண்டு குழந்தைகளிலிருந்து 12ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் வரை கடந்த இரண்டு மாதங்களாக அனைவருக்கும் ரவுண்டு கட்டி நேஷனல் டிசைன் மியுசியத்துடன் இணைந்து ஒரு அற்புதமான போட்டி நடத்தி முடித்துள்ளது. அதாவது "நான் விரும்பும் உலகம்" என்ற தலைப்பில் எல்லா குழந்தைகளும் அவரவர் விருப்பம் போல கூகுள் லோகோவை வடிவமைக்க வேண்டியது. தேர்ந்தெடுக்கப்படும் லோகோ ஒரு நாள் முழுதும் கூகுள்.காமை அலங்கரிக்கும். எத்தனை சிறப்பான விஷயம். கூகுளின் லோகோவையும் அவர்கள் அடிக்கடி அதன் முகம், நிறம் மாற்றும் உக்திக்கே பலர் அடிமை. அதில் நானும் ஒருவன். இதில் இப்படி ஒரு போட்டியை எல்லா குழந்தைகளுக்கும், பள்ளிகளுக்கும் வைத்து இத்தனை பொறுப்புடன் திறமைகளை வெளிக்கொணரும் பாங்கை நான் என்ன சொல்வதென்று புரியவில்லை. இந்தப் போட்டியில் வெல்லுபவருக்கான பரிசுகளைப் பாருங்கள்
1. முதல் பரிசு பெறும் குழந்தைக்கு $15,000 படிப்பிற்கான ஸ்காலர்ஷிப் பரிசு

2. கூகுள் அலுவலகத்திற்குள் ஒரு பயணம்

3. ஒரு லேப்டாப்

4. வென்ற லோகோவைக் கொண்ட ஒரு டீஸர்ட்

5. இதோடு மட்டுமல்லாமல், அந்தக் குழந்தையின் பள்ளிக்கு கம்ப்யுட்டர் லேப் வளர்ச்சிக்காக $25,000 பரிசு.

பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது. ஆனால் கூகுள், ஒரு படம், ஒரு உள்ளீட்டு வசதி, ஒரு பொத்தானை வைத்துக் கொண்டு காட்டும் படம் இருக்கிறதே அப்பப்பா.....சமீபத்தில் கூட சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தன் அலுவலகத்தைச் சுற்றி உள்ள புற்களை சமன்படுத்த இயந்திரத்தை உபயோகிக்காமல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்! வேலை பாத்தா இங்கே பாக்கணும்!

சினிமாக்காரனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா? எழுத்தாளனுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று வகை தொகை தெரியாமல் நாம் பல பேரை கேள்வி கேட்டு டார்ச்சர் செய்து [என்ன அரசியல்வாதிகளை விட்டுட்டேனா? இல்லை தெரியாம தான் கேக்குறேன், அவங்களுக்கும் சமூகத்துக்கும் என்ன சார் சம்மந்தம்?] . பணத்தை மட்டுமே பிரதானமாய் நினைத்து வாழும் பல வித நிறுவனங்களுக்கு மத்தியில் கூகுள் போன்ற ஒரு நிறுவனம் இத்தகைய சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பில் ஒரு பங்காவது நம்மில் இருக்கிறதா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டி தொடங்கும் போதே இதைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்தேன். பதியமுடியவில்லை. என் சமூக பொறுப்பு எப்படி இருக்கிறது பாருங்கள். இந்த போட்டியின் அழகியல் என்னை மிகவும் கவர்கிறது. இப்படி ஒரு தலைப்பை குழந்தைகளிடம் கொடுத்து தங்களுடைய லோகோவை வடிவமைக்கச் சொல்லி அழகு பார்ப்பது எத்தனை பேருக்கு வரும்? நாங்க தான் நாசமா போயிட்டோம், நீங்களாவது இந்த உலகத்தை காப்பாத்துங்க என்று குழந்தைகளுக்கு இந்த வகையில் ஒரு அறிவிப்பு விடுத்துள்ளது. குழந்தைகளின் உலகம் எத்தனை அழகானது. எத்தனை வண்ணமயமாகவும், பரிசுத்தமாகவும் இருக்கிறது. கூகுளில் இதே பணியில் ஈடுபட்டிருப்பவர்களைக் காட்டிலும் எந்த விதத்திலும் குழந்தைகள் சலைத்தவர்கள் இல்லை என்பதை கீழ் உள்ள படங்கள் பறைசாற்றுகின்றன. எனக்குப் பிடித்த சில படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்...

வெற்றி பெற்ற படம்


3வது படிக்குது...நானோடேக்னாலஜி அதுலயும் அண்டத்துல...

வாங்கப்பா பீச்சுக்கு என்று ஒரு பிஞ்சுக் குழந்தையின் குரல், ராணுவ ஆடைகளை எங்கே தொங்க விட்டிருக்கிறார் பாருங்கள்!



இந்தப் படம் தப்பு தான், உலகத்தை ஒரு அமைதியான இடத்துக்கு தூக்கிட்டு போகுதாம்...சுத்தி இருக்குற இடமா பிரச்சனை? உள்ளே இருக்குறவங்க தானே பிரச்சனை...ஆனாலும் அருமை...


இன்னும் பாருங்க...            




பூமி உருகுகிறது, அதன்மேல் தெர்மா மீட்டரை வைத்திருக்கிறார். அந்தப் போலார் கரடியை பாருங்கள். எத்தனை பாவமாய் உட்கார்ந்திருக்கிறது.

நம்பிக்கை துளிர் விடுகிறது...

ரணகளம்...






மிச்சத்தை வெண் திரையில் காண்க...

6 Responses
  1. அழகு.. அவ்வளவும் அழகு



  2. கிரி Says:

    //பார்க்க நமீதாவைப் போல் பிரம்மாண்டமாய் பலவித படங்களைக் காட்டும் பல இணையதளங்களில் உள்ளே சென்றால் கமலா காமேஷ் ரேஞ்சுக்குக் கூட விஷயம் இருக்காது//

    :-)))

    பிரதீப் இப்ப கமலா காமேஷ் அதே மாதிரி ஒல்லியா இல்லை..

    அனைத்து படங்களும் அருமை

    பிரதீப் நான் முன்னாடியே கூறியபடி...உங்களோட பெரும்பாலான பதிவுகளை படித்து விட்டேன்..அனைத்தும் அருமை ..

    தொடர்ந்து எழுதுங்க..வாழ்த்துக்கள்


  3. கிரி,
    ரயில் பயணங்கள் ல நீங்க பின்னூட்டம் போடும் போதே தெரியுது ஒன்னு விடாம படிக்கிறீங்கன்னு...மிக்க நன்றி!