அலுவலகத்தில் இருந்து வரும்போது கடையில் வாங்க வேண்டிய பொருட்களை வீட்டு அம்மா குறுஞ்செய்தி அனுப்பி விட்டார்கள். வரும் வழியில் நில்க்ரீஸ் சென்றேன். பாப்பாவின் டயபர் [இதை கண்டுபிடித்தவனை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்! என்னா மூளை?] பிஸ்கட் பாக்கெட்டுகள், பழம் என்று வாங்கிக் கொண்டேன். பில் போடுவதற்காக ஒரு கவுண்டரில் எல்லா பொருட்களையும் வைத்தேன். அங்கே நில்க்ரீஸ் பெயர் போட்ட கேரி பேக் இருந்தது. சுரேகா நினைவுக்கு வந்தார். கச்சேரியை ஆரம்பிச்சிர வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டேன்.
பில் போட ஒரு நடுத்தர வயது ஆணும் கவரில் பொருட்களை போட்டுக் கொடுக்க ஒரு சின்ன பையனும் நின்று கொண்டிருந்தார்கள். "சார் கவர் வேணுமா?" என்று சின்ன பையன் கேட்டான். "காசா?" என்று கேட்டதற்கு ஆமாம் என்று தலை ஆட்டினான். "எவ்வளவு?" என்றேன். "ரெண்டு ரூபாய்!" என்றான். "நான் பத்து ரூபா தர்றேன், ப்ளைன் கவரா கொடுங்க, உங்க கடை பேர் இருக்க கூடாது!" என்றதும் சற்று ஜெர்க் ஆனார்கள். மேலும், "உங்க கடையை விளம்பரப்படுத்த நான் ஏங்க காசு கொடுக்கணும்" என்றேன்? "இல்லை சார், நீங்க பை ஏதாவது கொண்டு வந்துருக்கீங்களா?" என்று நடுத்தர வயது இளைஞன் கேட்டான். "இல்லையே, எப்பவும் கைல ஒரு பையை வச்சுட்டே சுத்திட்டு இருக்க முடியுமா பாஸ்?" என்றேன். இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள். அவர் பில் போட்டுக் கொண்டே இருந்தார். நான் அவரிடம் "இருங்க, காசு இல்லாம கவர் கொடுத்தா வாங்குறேன், இல்லன்னா நான் வேற கடையில வாங்கிக்கிறேன்" என்றேன். கணினியில் எல்லாம் தட்டி விட்டு 426 சார் என்றார். 26 ஆ இல்லை 24 ஆ என்று கேட்டேன். சிரித்தார். "கவர் காசு இல்லைல்ல?" என்றேன். "இல்லை சார்" என்று சிரித்தார். எல்லா பொருளும் கவருக்குள் போட்டு கொடுத்தார்கள். பிரதீப் ஹேப்பி! நன்றி சுரேகா சார். பின்னால் ஒருவர் பொருட்களை வாங்க நின்று கொண்டிருந்தார். அவர் என்ன செய்தாரோ?!

super g
எந்த ஊர் நீல்கிரிஸ்...?
kovai neram: Chennai thaan. vera enga...
Haa good one.. i had similar exp.. will post in my blog soon :)