எந்த ஜாதி மதம் சார்ந்தவராய் இருந்தாலும்
மல ஜலம் அள்ள வைத்து விடுகிறது குழந்தை
****************************************
என்
மகள் நாள்
முழுவதும்
இறைத்து
விளையாடிய
விளையாட்டு
சாமான்களை
இரவில்
எடுத்து
வைக்க வேண்டிய
பொறுப்பு
அவ்வப்போது
எனக்கு
வாய்க்கும்
காலை
நீட்டி அமர்ந்த
ஒரு சாந்தமான
புலி
காபி
கரை
படிந்த ஒரு
இளஞ்சிவப்பு கரடி
கை
காலை தனித்
தனியாய் அசைக்கும்
ஒரு குட்டிக்
குரங்கு
இரு
இறக்கைகளையும் இழந்த
ஒரு பெரிய
வானவூர்தி
துண்டு
துண்டான
ரயில் பாலங்கள்,
வெவ்வேறு ரயில்
பெட்டிகள்
அந்த
இரவிலும் அதன்
இயல்பு மாறாமல் -
ஒலியெழுப்பும்
ஒரு
சின்னஞ்சிறு மணி
இப்படி
பல
விதமான சாமான்கள்
அனைத்தையும்
ஒரு
பிளாஸ்டிக் டபராவில் எடுத்து வைப்பது
கடவுள்
எல்லாவற்றையும்
பூமிக்குள்
எடுத்து வைத்ததை போலிருக்கிறது!
ரசிக்க வைத்தது... இதையெல்லாம் செய்வதும் சந்தோசம் தான்... வாழ்த்துக்கள்...
ரசித்தேன்
அப்படிச் செய்யாதீர்கள்! குசந்தையைத் தூங்க விடுங்கள். மறுநாள்காலையில் முதலில் எழுந்து வீட்டைப் பாருங்கள். அதுவே ஒரு கவிதை மாதிரி இருக்கும்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
இதுவும் மகிழ்ச்சியே.என்றென்றும் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திடும் நினைவுகளே இவைதான்
ரசிக்க வைத்த பதிவு!
தொடர்ந்து எழுதுங்கள்..
தமிழ்மணம் பிளஸ் + 1 வோட்டு போட்டு விட்டேன்.