புது வருடத்தில் எல்லோருக்கும் என் புது வணக்கம். வழக்கமாய் புது வருடத்தின் முதல் செய்தியே முந்தைய இரவு டாஸ் மார்க்கின் வியாபாரம் என்ன என்பது தான்! ["குடி உயர அரசுயரும்" என்று வள்ளுவர் சரியாய் தான் சொல்லியிருக்கிறார்!!] அப்புறம், எல்லோரும் முறிப்பதற்காகவே ஒரு தீர்மானம் மேற்கொண்டிருப்பீர்கள். இல்லை, தீர்மானமே இனி எடுப்பதில்லை என்ற ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறேன் என்று அதிமேதாவி ரேஞ்சுக்கு ஃ பீல் செய்திருப்பீர்கள்! [நாங்க எவ்வளவு பண்ணியிருப்போம்!] வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! அந்த நம்பிக்கை உண்மையா பொய்யா, பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது, அது நம்பிக்கை! அவ்வளவு தான். அந்த முடிவோடு நேற்றே ஒரு பதிவை எழுதினாலாவது வருடம் முழுதும் பல பதிவுகள் எழுதுவோமோ என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று முடியவில்லை. அதனால் நீங்கள் எல்லோரும் என்னுடைய தொடர் மொக்கைகளிளிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று வழக்கமான ஒரு மொக்கையை போட நான் விரும்பவில்லை. 

சத்தியமாய் இப்போது வரை என்ன எழுதப் போகிறேன் என்று எனக்கே தெரியாது. இப்படியெல்லாம் இவன் எழுதுவான், இதை நான் படிக்கணும், எனக்கு என்ன தலையெழுத்தா என்றெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் சாருவை படிப்பவர் என்றால் அப்படி எல்லாம் நினைக்க மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். அதனால் தொடருங்கள்!

உறவினர் ஒருவரின் குழந்தை (கிட்டத்தட்ட 3 வயது) அதனுடைய உயரம் அளவிற்கு ஒரு மெடல் சுமந்து வந்து காட்டியது. சில்வர் கலரில் இருந்தது. அவன் அம்மா ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தான் என்றார்கள். இத்துனூண்டு குழந்தைக்கு ஒரு ஓட்டப்பந்தயம் அதற்கு ஆள் உயரத்துக்கு ஒரு மெடல் வேறா என்று நான் வியந்து கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள், அதை என் கேட்கிறீர்கள், ஃ பஸ்ட் ப்ரைஸ் வாங்க வேண்டியது, செகண்ட் தான் கிடைத்தது என்றார்கள். ஏன் வேகமா ஓடலையா என்றேன். இல்லை இல்லை, நல்லா ஓட்டிட்டு இருந்தான், கிட்ட வந்ததும் எல்லாரும் கை தட்றதை பார்த்து அவனும் நின்னு கை தட்ட ஆரம்பிச்சுட்டான் என்றார்கள். சோ க்யுட்!

ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆசாமி. ஒன்வேயில் செல்லும்போது போலீஸ் உங்களை பார்த்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். போலீசின் கண்களும் உங்கள் கண்களும் மோதியதும் (என்ன கவித்துமான தருணம்!) அவர் உங்களை அழைக்க கை ஓங்குவதற்கு முன் நீங்கள் உங்கள் கையை காட்டி நான் உங்களிடம் தான் வருகிறேன் என்று அவரை நோக்கி செல்ல வேண்டும். அவர் உங்களை கேள்வி கேட்பதற்கு முன் சார், இந்த ரோட்டுக்கு எப்படி போகணும்? இந்த தெருவுக்கு எப்படி போகணும் என்று ஒரு பிட்டை போட வேண்டும். அவர் டென்ஷன் ஆகி "யோவ், அது அந்த பக்கம் போகணும்யா, போய்யா அட்ரஸ் தெரியாம ஒன்வேல வந்துட்டு..." என்று சத்தம் போட்டு அனுப்பி விடுவார், விடுவாராம்! முயற்சித்து பாருங்கள். அவர் சைடில் ஏதாவது கேட்டால் நீங்கள் நேராய் கமெண்ட்டில் வந்து என்னை கேட்காதீர்கள்!

ஆமாம், இந்த சென்னைக்கு என்ன ஆகிவிட்டது? எப்போது பார்த்தாலும் மேக மூட்டமாய், குளிர் காற்றுமாய், சாரலைத் தூவிக் கொண்டு கண்றாவியாய் அல்லவா காட்சி தருகிறது! ஒரு வேளை அடுத்த கிருஸ்த்துமசுக்கு பனி பெய்யுமோ? க்ளோபல் வார்மிங்கானால், சென்னை கூளிங்காமோ?  புது வருடமும் அதுவுமாய் இப்படி ஒரு மொக்கையை நான் இதுவரை போட்டதே இல்லை! என்னாலேயே தாங்க முடியவில்லை! வருகிறேன். 

7 Responses
 1. Thamizhachi Says:

  Ipdilam kuda blog la padhiyalam nu unga blog paathu thaan kathukanum Pradeep.

  "Narayana, indha kosu tholla thaanga mudiyala da!"


 2. pala yaanaigalukku maththiyila oru kosuvaavaathu irukkanumla? athaan! ippadi ellam blog podren.


 3. Anonymous Says:

  மொக்க மொக்க மொக்க மொக்க!

  -
  வெங்கடேஷ்


 4. Anonymous Says:

  வருடத்தின் முதல் நாள் என்ன செய்கிறோமோ, அதையே வருடம் முழுவதும் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! அந்த நம்பிக்கை உண்மையா பொய்யா, பலிக்குமா, பலிக்காதா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது, அது நம்பிக்கை! அவ்வளவுதான்
  ஆஹா என்ன ஒரு கவித்துவமான வார்த்தைகள் ! அந்த நம்பி்க்கை உண்மை எனநம்பு்ங்கள். நம்பி்க்கை தான் வாழ்க்கை.நம்பினோர் கெடுவதில்லை அது 4 மறைத்தீர்ப்பு . ஏன் சொல்கிறேன் என்றால்- வருடத்தின் முதல்நாள் என்ன செய்கிறோம்?
  பல் தேய்க்கிறோம்.
  அதையே தானே வருடம் முழுவதும் தேய்க்கிறோம்?

  உறவினர் ஒருவரின் குழந்தை- 3 வயது....
  அந்த உறவினர்உங்கள் மனைவியா?
  ஏன் என்றால் குழந்தையும் அதி புத்திசாலியாக, பிறவிக் கலைஞனாக உருவாகியிருக்கிறானே!
  உங்களது ஸ்வாரஸ்யமான நன்பரை பார்த்தால் சொல்லுங்கள் -
  ' நண்பேண்டா '
  சென்னைக்கு இப்படிப்பட்ட மழையே அபூர்வம் ! அடுத்த கிருஸ்மஸ்க்கு பனி விழும் மலர் வனமா? ஆனால் உங்களதுமொக்கை ப்ளாக் இப்படியே போனால் க்ரீன்லேன்டே சென்னை மேல்வந்து விழுந்து உடையும்
  இப்படிக்கு
  மொக்க ப்ளாகுகளால் முளை Block
  ஆகிப் போனோர் சங்கம், மதுரை.


 5. venki and anony,

  sari vidunga..ithellam pathivugalla sagajam thaane!


 6. //குடி உயர அரசுயரும்" என்று வள்ளுவர் சரியாய் தான் சொல்லியிருக்கிறார்!//

  இதை சொன்னது அவ்வைப்பாட்டி