1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பெய்யெனப் பெய்யும் மழை

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. தமிழ் சினிமா ஹீரோயின் மாதிரி மழை என்றால் மிகவும் பிடிக்கும். அந்த நாட்களில் நான் படித்த பெய்யெனப் பெய்யும் மழை - வைரமுத்து கவிதைத் தொகுப்பு மிகவும் பிடித்துப் போனதால் இந்தப் பெயரை வைத்தேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

என்ன சொல்வது? குஷ்பு திமுகவில் சேர்ந்தது, புவனேஸ்வரி அரசியலில் குதித்தது, டி. ராஜேந்தரை நாம் பொருத்துக் கொள்வது...இவையெல்லாம் நம் கையிலா இருக்கிறது? இப்படி எத்தனையோ டார்ச்சர்களை போல் தான் நான் வலை பதிய ஆரம்பித்தது! விதி வலியது!

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் இடையே ஏ.வி.எம். ராஜன், ரவிச்சந்திரன் போன்றவர்களும் காலம் தள்ளியதை போல் தான் நானும் என் வலைப்பதிவும். என் வலைப்பதிவு பிரபலமாக இதுவரை ஒன்றும் செய்யவில்லை. அதனால் அத்தனை பிரபலமும் ஆகவில்லை என்பது என் எண்ணம்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு! சொந்தச் சரக்கு அல்லாமல் நன்றாக எழுதத் தெரிந்தால் நான் எழுத்தாளன் ஆகியிருப்பேனே! வலைப்பதிவில் ஏன் எழுதிக் கொண்டிருக்க போகிறேன்? "இப்படித்தான்டா அன்னைக்கு நான்" என்று எதெற்கெடுத்தாலும் தன்னைச் சுற்றியே கதை பின்னும் மரபு நம் தமிழ் மரபு! அதிலிருந்து நான் மட்டும் தப்ப முடியுமா?
விளைவு சாதகாமாயும் இல்லை; பாதகமாயும் இல்லை!

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

சம்பாதிக்கும் நோக்கம் அறவே இல்லை. மனதிற்குப் பிடிக்கிறது, செய்கிறேன்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு!

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன் ?

சில மொக்கை பதிவுகளுக்கு ஐம்பது, நூறு என்று கமெண்ட்டை பார்த்தால் பொறாமையாய் இருக்கும். அது உண்மை. பிறகு சாரு போல், தமிழ்நாட்டில் எழுத்தாளனை யார் மதிக்கிறா? என்று என்னை தேற்றிக் கொள்வேன்! (இப்போ சாருவுக்கு எப்படி இருக்கும்?)

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

நான் பெங்களூரில் இருந்த போது ஒருவர் என் பதிவுகளை படித்து விட்டு என்னை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். நானும் என் எல்லா எழுத்துப் பணிகளையும் ஒத்தி வைத்து விட்டு (டேய், டேய்!!) அவரை அன்று மாலையே சந்தித்தேன்! என்னுடன் பேசிய அந்த கொஞ்ச நேரத்தில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு வலைபதிவை ஆரம்பித்தார். அதில் எல்லா உண்மைகளையும் போட்டு உடைப்பேன் என்றார். பாருங்கள்! நீங்களே மிரண்டு விடுவீர்கள்! இங்கே

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

அப்புறம் என் சுய சரிதை எப்படி விற்கும்? போங்க சார்!

கொசுறு: நான் ஏற்கனவே எழுதிய சில சுய குறிப்புகள் இங்கே!
8 Responses
 1. naanum thaan inge irukkennu appo appo solligine irukke!


 2. வழக்கம் போலவே நல்லா இருந்துச்சு.

  உங்க பதிவை இங்கே அறிமுகம் (???) செய்திருக்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/2010/08/2.html

  நாம் முன்பே பேசி வைத்த மாதிரி, பணத்தை என் பேங்க் அக்கௌண்டில் கட்டிவிடவும் :)


 3. பெய்யென பெய்யும் மழை -

  இப்பதான் உங்க தளத்தை சந்திக்கிறேன்.

  கவிதையெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு-

  வாழ்த்துக்கள். தொடருங்கள்.


 4. samayal kupippugala arumai..


 5. siva,

  sariya sonne!

  pinnokki,

  romba santhosham, mikka nandri! a/c no. anuppi vidunga...panniduvom!

  kamalesh,

  varukaikkum, vaazthukkum mikka nandri!

  naveen,

  kupippugala ????


 6. நன்றி பிரதீப், இத்தனை சீக்கிரம் தொடர்பதிவெழுதுவீங்கன்னு நெனக்கல, வழக்கம் போல நால்லாருக்கு. . . வாழ்த்துகள்
  முடிஞ்சா மின்னஞ்சல்ல தொடர்பு கொள்ளலாமே, அப்பிடியே http://sourashtra.info வந்து பாருங்க


 7. maarkandeya,

  ennada ezhuthurathunnu muzhuchuttu irunthen. neenga vanthu kaapaathiteenga! ungalukku thanks. kandippa thodarbu kollalam.


 8. என் அழைப்பினை ஏற்று, தொடர்ந்தவர்களின் வலைத்தொடர்பும் என் பதிவில் கொடுத்துள்ளேன்,

  உங்கள் கவனத்திற்கு.