"சாக்லேட் லைம்ஜூஸ் ஐஸ்க்ரீம் டாஃப்பியான்" என்று ஹம் ஆப்கே ஹைன் கோன் படத்தில் ஒரு பாடல் வரும். குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்தை நான் அடைந்து விட்டேன், எனக்கு இனிமேல் குழந்தைகள் ரசிக்கும் விஷயங்களில் உள்ள மோகங்கள் குறைந்து விட்டன என்று! அற்புதமான பாடல். அதே போல் நான் வளர்ந்து விட்டேன் என்று சொன்னாலும் என் மனைவி வளராததால் பொம்மை படங்களுக்கு கூட்டிச் செல்ல வேண்டியிருக்கிறது! ஷ்ரக் 4 வரும்போதே நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள், ஏதோ சாக்கு போக்கு சொல்லி அதை கடந்தால் டாய் ஸ்டோரி 3 வந்து விட்டது. இனியும் தப்பிக்க முடியாது என்று சொல்லி அதை அனுபவிக்கத் தயாரானேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் அவளின் நச்சரிப்பு தாங்காமல் நான் பொம்மை படம் பார்க்கும் போதெல்லாம் மிக அற்புதமான அனுபவம் தான் எனக்கு வாய்க்கிறது. ஆனாலும் அடுத்த முறை இன்னொரு படத்தை பார்க்கும் ஆவல் பிறப்பதில்லை. ராவண் போன்ற படங்களின் மீதே ஆவல் பிறக்கிறது! அது சரி என் மனைவியாவது அவளின் உள்ளே உள்ள குழந்தையை தக்க வைத்திருக்கிறாளே அது வரை சந்தோஷமே! அதனால் எனக்கும் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்க்கிறது. இனி டாய் ஸ்டோரி 3 !

ஆண்டி (தமிழ் ஆண்டி அல்ல!) என்ற சிறுவனிடம் வித விதமான பொம்மைகள் இருக்கின்றன. வூடி என்ற கவ்பாய் பொம்மை, ஜெஸ்ஸி என்ற ஒரு கவ் கேள், பஸ் என்ற விண்வெளி வீரன், ஒரு ஜோடி உருளைக்கிழங்கு பொம்மைகள், ஒரு பன்றி இப்படி வித விதமாய்! இவைகளைக் கொண்டு அவன் கற்பனை உலகத்தில் வித விதமான விளையாட்டுக்களை விளையாடுகிறான். அவனுக்கு இந்த பொம்மைகள் என்றால் உயிர். அதே போல் அந்த பொம்மைகளுக்கும்! (பொம்மைகளுக்கு ஏது உணர்ச்சி என்று நீங்கள் சொன்னால் பேசாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு சன் பிக்சர்சாரின் அடுத்த வரவு என்ன என்ற டார்ச்சரை அனுபவிக்கலாம்!) அவனின் சந்தோஷம் தான் அவர்களின் சந்தோஷம். காலம் செல்ல செல்ல ஆண்டி வளர்ந்து பெரியவனாகி விடுகிறான். (எந்த சைக்கிள் சக்கரமும் சுற்றாமல்!) அதன் காரணமாக அவன் பொம்மைகளிடம் விளையாடி வெகு நாட்கள் ஆகின்றன. அவன் இவைகளுடன் விளையாடவில்லை என்றாலும் எல்லாவற்றையும் பத்திரமாக ஒரு பெட்டியில் பூட்டி பாதுகாப்பாக வைத்திருக்கிறான். பெட்டிக்குள் எல்லா பொம்மைகளும் சேர்ந்து இனிமேல் ஆண்டிக்கு தாங்கள் தேவையில்லை, அவன் எப்படியும் தங்களோடு விளையாடப் போவதில்லை என்று புலம்புகின்றன. ஆனால் வூடி அதை மறுக்கிறது. ஆண்டிக்கு குழந்தை பிறந்தால் அதனை சந்தோஷப்படுத்தலாம், ஆண்டி நம்மிடம் விளையாடினாலும், இல்லாவிட்டாலும் அவன் தான் நம் எஜமானன், அவனிடம் தான் நாம் இருக்க வேண்டும் என்று வாதம் செய்கிறது.

ஒரு கட்டத்தில் ஆண்டி கல்லூரியில் சேர வேறு ஊருக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவன் அம்மா அவன் போவதற்கு முன் அவனுடைய அறையை காலி செய்ய விரும்புகிறாள். தேவையற்றவைகளை ஒரு மூட்டையாகவும், பரண் மேல் போட வேண்டியவைகளை இன்னொரு மூட்டையாகவும் கட்டச் சொல்கிறாள். அவனின் பொம்மைகளை நல்ல ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கொடுத்து விடலாம் என்று கூறுகிறாள். அவனுடைய பொம்மையை இழக்க ஆண்டி விரும்பவில்லை. அதனால் எல்லா பொம்மைகளையும் ஒரு சாக்கில் கட்டி பரணில் போட முடிவு செய்கிறான். வூடி அவனுக்கு நெருங்கிய நண்பன். அதனால் அதை மட்டும் தன் கல்லூரிப் பெட்டியில் வைத்து விட்டு மற்ற அனைத்தையும் ஒரு சாக்கில் போட்டு கட்டிக் கொள்கிறான். தவறுதலாக அது குப்பை மூட்டைகளுடன் சேர்ந்து விடுகிறது. வூடி இதை கண்டு கொள்கிறது. தன் நண்பர்கள் தவறுதலாய் குப்பைகளில் சேர்ந்து விட்டதை பார்த்து அவைகளை காப்பாற்ற வூடி களம் இறங்குகிறது. ஆனால் மற்ற பொம்மைகள் அதிலிருந்து தந்திரமாய் தப்பித்து காப்பகத்திற்குப் போய் மற்ற குழந்தைகளை மகிழ்விக்க காப்பகத்திற்காக உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொள்கின்றன. இதைக் கண்ட வூடி அவர்களை கண்டிக்கிறது. ஆனால் யாரும் அதனுடைய பேச்சை மதிக்கவில்லை. அந்த வாக்கு வாதத்தில் ஆண்டியின் அம்மா காரை கிளப்பிக் கொண்டு அந்த காப்பகத்திற்கு வந்து விடுகிறாள். வூடியும் இதில் மாட்டிக் கொள்கிறது. அந்த காப்பகத்தில் ஒரு கரடி பொம்மை இருக்கிறது. அது எல்லா பொம்மைகளின் தலைவனாக விளங்குகிறது. புது பொம்மைகளை வரவேற்று வாரத்திற்கு ஐந்து நாட்கள் குழந்தைகள் உங்களிடம் விளையாடுவார்கள்; சந்தோஷமாய் இருங்கள் என்று வாழ்த்தி விட்டுப் போகிறது. இப்படி ஒரு இடமா என்று ஆண்டியின் அனைத்து பொம்மைகளும் குதூகலிக்கின்றன. ஆனால் வூடி மட்டும் உங்களுக்கு விருப்பமிருந்தால் இங்கேயே இருங்கள் ஆனால் நான் ஆண்டியிடம் செல்கிறேன் என்று கிளம்பி விடுகிறது. போகும் வழயில் அடிபட்டு ஒரு குழந்தையின் கையில் சிக்கி விடுகிறது. அந்தக் குழந்தை வூடியை தன் வீட்டிற்கு கொண்டு சென்று விடுகிறது. அங்கு இருக்கும் மற்ற பொம்மைகளிடமிருந்து காப்பகத்தில் இருக்கும் கரடி பொம்மை பொல்லாதது என்றும் அது எல்லா பொம்மைகளையும் மிரட்டி வைத்திருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொள்கிறது. அந்த கரடி பொம்மை ஏன் அப்படி ஆனது என்று ஒரு ப்ளாஷ் பேக்! வழக்கமான தமிழ் சினிமா பாணியில் கேட்பவரின் முகத்தை பார்க்காமல் ஜன்னலை பார்த்துக் கொண்டே ஒரு பொம்மை கதை சொல்கிறது. வூடி எப்படி தன் நண்பர்களை அந்தக் கரடியிடமிருந்து காப்பாற்றி ஆண்டியிடம் சேர்ந்தது என்பதே மீதிக் கதை. அதகளப்படுத்தியிருக்கிறார்கள் (கேபிள் சங்கரை அதிகம் படித்தது தப்பாய் போய் விட்டதே!)பொம்மைகளை வைத்துக் கொண்டு என்ன மாதிரியான ஒரு உணர்ச்சிப் பூர்வமான கதை. ஹாஸ்யம், சோகம், காதல், வஞ்சம், கோபம், தந்திரம்...அப்பப்பா! ஒரு பொழுது போக்குச் சித்திரத்திற்கான அனைத்து அம்சங்களும் அம்சமாய் பொருந்தியிருக்கிறது. இதில் ஐ மேக்ஸ் 3 டி அனுபவம் வேறு! கேட்கவா வேண்டும். பட்டையை கிளப்பி இருக்கிறார்கள் (நான் சொல்லலை? கேபிளாரே தான்!) இந்தப் படத்தின் கதையை ஒரு வீக்கெண்டில் எழுதியதாக விக்கி சொல்கிறது. எப்படி இந்த அளவு பிரமாதப்படுத்துகிறார்கள் என்ற ஆச்சர்யத்திலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ஏதோ ஒரு சுவிட்சை தட்டியதால் பஸ் (விண்வெளி வீரன்) செய்யும் காதல் அளப்பறைக்கே கொடுத்த காசு சரியாகி விடும். கண்டிப்பாக குழந்தைகளை கூட்டிச் சொல்லுங்கள்! தலை தனியாய் உடல் தனியாய் இருக்கும் பொம்மையை பற்றி ராமகிருஷ்ணன் துணையெழுத்தில் எழுதியிருந்தார். இந்தப் படத்தை பார்த்தால் உங்கள் குழந்தைகள் இனிமேல் கண்டிப்பாய் அப்படி செய்யாது என்று நினைக்கிறேன்.

கொசுறு:
நேற்று ஒரு பொம்மை கடைக்கு என் மனைவியுடன் போயிருந்தேன். ஒரு பெரிய குரங்கு பொம்மையை பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னாள். இதை நம்ம வாங்கிட்டு போயிட்டா அதோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருத்தப்படுமே என்றேன்? என் மனைவி சிரித்தாள்! பொம்மை வாங்காமல் திரும்பினோம். வாட் எ கிரேட் எஸ்கேப்!!
13 Responses
 1. //
  நேற்று ஒரு பொம்மை கடைக்கு என் மனைவியுடன் போயிருந்தேன். ஒரு பெரிய குரங்கு பொம்மையை பார்த்து இது எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று சொன்னாள். இதை நம்ம வாங்கிட்டு போயிட்டா அதோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருத்தப்படுமே என்றேன்? என் மனைவி சிரித்தாள்! பொம்மை வாங்காமல் திரும்பினோம். வாட் எ கிரேட் எஸ்கேப்!! //

  கலக்கல் :)


 2. senshi,

  intha mathiri padangal porathula evvalavu payan paarunga :)


 3. :)
  அருமை.
  பார்க்கத் தான் வேண்டும்!


 4. manimekala,

  kandippaaga paarungal 5. sivamurugan,

  enga sir poyiteenga? varuga varuga...meendum varuga!


 6. Anonymous Says:

  படம் சூப்பரா இருக்கும் போல இருக்கே! கண்டிப்பா பாக்கணும்! உன்னோட கதை சொன்ன நடை கூட ரொம்ப நல்ல இருக்கு.

  -
  வெங்கடேஷ்


 7. venki,

  i am very reluctant to write the whole story when i write a film review. but this time i wanted to write it. kandippaa paaru...


 8. அந்த குரங்கு பொம்மைய வாங்கமா விட்டதுக்கு வேற ஒரு காரணமும் இருக்கு. எதுக்கு சொல்லி உங்களை மனசு கஷ்டப்படுத்தனும்னு விட்டுருப்பாங்க.

  நீங்க எழுதுவதில்லை என்று ரொம்ப நாளாக இந்த பக்கம் வரவேயில்லை. விட்டதைப் படிக்கணும்.


 9. pinnokki,

  aaha! ippadi onnu irukko, neenga soldrathum sariyaa thaan paduthu...hehehe...


 10. அருமையா எழுதி irukeenga


 11. பொம்மை கதை எல்லாம் தாண்டியாச்சு. பாக்கமுடியலை எதுவும். ஆனா finding nemo சூப்பர் படம். அதுமாதிரி இருந்தா பாக்கலாம்


 12. jai,

  naanum ungalai mathiri thaan! intha padam ungalukku kandippa pudikkum. paarunga...