அமெரிக்காவிற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை பிடித்து தள்ளியாகி விட்டது. அந்த இயந்திர சக்கரத்தினூடே தலையைக் கொடுத்து பயணப்பட ஆரம்பித்தாகிவிட்டது. வங்கிக் கணக்கு நேர்த்தியாகிவிட்டது. சமூக பாதுகாப்பு எண் [சோசியல் செக்யுரிட்டி நம்பரை எப்படி சொல்வது?] வந்தாகிவிட்டது. அபார்ட்மென்ட் செட் ஆகி விட்டது. பாத் டப்பிற்கு ஷவர் கர்ட்டெயின் வாங்கியாகி விட்டது. [இதெல்லாம் ரொம்ப முக்கியமா என்பவர்களுக்கு கீழே விளக்கியிருக்கிறேன்] பிஎஸ் என் எல்லின் தயவில் கொஞ்சம் ஃபோட்டோ, கொஞ்சம் படம் என்றில்லாமல் யு ட்யுப் வீடியோ சரளமாய் வருகிறது. குக்கர் சத்தம் போட்டால் ஸ்மோக் டிடெக்டர் அலறுகிறது! வெஜிடெபிள் கட்டரால் சற்று விசிறி விட்டால் சாந்தமாகி விடுகிறது!
காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அபார்ட்மென்டின் ஒரு எல்லையிலிருந்து ஏறி அங்கு போகும் ஒரு சின்ன ரோட்டை கடந்தால், காம்ப்பவுண்ட் சுவரே இல்லாத என் அலுவலகத்தின் பின் எல்லையை அடைந்து விடலாம்! எவ்வளவு கஷ்டம் பாருங்கள். நானும் பொறுப்பாய் காலை எட்டரைக்கெல்லாம் அலுவலகத்தைல் ஆஜராகி, ஆஹா இன்றும் நாம் தான் முதலில் வந்தோம் என்று பெருமை பட்டுக் கொண்டேன். பிறகு தான் தெரிந்தது, இங்கு பாதி பேர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்கள் என்று....எப்போதாவது 2, 3 தலைகள் தென்படுகிறது. மற்ற நாட்களிலெல்லாம் தனிக்காட்டு ராஜா தான்! ரோட்டில் தான் ஆள் நடமாட்டம் இல்லையென்றால் அலுவலகத்திலுமா? அட போங்கப்பா....
இரவு எட்டு எட்டரை வரை வெளிச்சமாகவே இருக்கிறது. வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து, அமெரிக்கா வந்தால் தான் வார நாட்களில் மாலை என்ற ஒரு பொழுதே அனுபவமாகிறது. என் எட்டு வருட மென்பொருள் வரலாற்றில் அதிகம் போனால் வார நாட்களில் 50 மாலைகளை பார்த்திருப்பேன். எப்போதாவது 6 மணிக்கு அலுவலகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும், ஏதோ ஆயுள் முழுதும் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டு இன்று விடுதலை ஆவதைப் போல் இருக்கும். வெளியே வந்தவுடன் வானத்தையும், அந்திச் சூரியனையும் சற்று நேரம் பார்த்துக் கொண்டே நிற்பேன். அமெரிக்காவில் இதற்கு நேர் எதிர். 5 மணிக்கு பெட்டையை கட்டி விடுகிறார்கள். கலகலவென்று அலுவலகம் இருந்தாலே, சே, எவ்வளவு நேரம் தான் இங்கேயே உட்கார்ந்திருப்பது? வாழ்க்கையே இவ்வளவு தானா என்று தோன்றும், இங்கு என் பக்கத்தில் சுமார் ஒரு 10, 15 இருக்கைகளில் நான் ஒருவன் தான் இருக்கிறேன். எனக்கு எப்படி இருக்கும்? ஏதோ ஒரு ஞாயிற்றுக் கிழமை தேவையில்லாமல் அலுவலகம் வந்து விட்டதை போல் உணர்கிறேன். அதனால் நானும் அதிகபட்சம் 6 மணிக்கு [என்ன இருந்தாலும் இந்தியர்கள், 6 மணிக்கு முன்னாடி போனா உறுத்துதில்லை...]கிளம்பி விடுகிறேன். கேட்க நாதியில்லாததால், என் கூட்டில் போய் ஒடுங்கி விடுவேன், வேறு என்ன செய்ய?
இங்கு யாரும் நடப்பதில்லை. ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. நல்ல ஒரு கூட்டமான இடத்திலிருந்து வந்ததால் அது ஒரு வித எரிச்சலை தருகிறது. எங்கே மக்கள் மக்கள் என்று மனம் அலைபாய்கிறது. இதே அனுபவம் எனக்கு சண்டிகரிலும் கிடைத்தது. ரோட்டில் அதிகம் ஆள் நடமாட்டமே இருக்காது. என்ன ஊர் இது என்று தோன்றும். அங்கு ரோஸ் ஃபெஸ்டிவல் அன்று தான் கூட்டத்தையே பார்த்தேன். சண்டிகார் என்றால் சர்தார்னிகள் நிறைந்திருக்கும் நகரம். [நம்ம சிம்ரன் லூதியானா பொண்ணு], அவங்கள்லாம் கலகலவென்று வெளியில் தெருவில் நடமாடினால் தானே மனதுக்கு சற்று ஆறுதலாய் இருக்கும்....
கடை கன்னிகள் அருகில் காரை பார்க் செய்து விட்டு கடைக்குள் நடப்பது தான் அமெரிக்கர்களின் நடை. [வீட்டில் த்ரட் மில்லில் எகிறி குதித்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்த்து] எனக்கு ரஜினியின் ஞாபகம் வருகிறது. அவரும் இப்படித் தானே இருப்பார், வீட்டிலிருந்து இறங்கியதும் கார், செல்லும் இடம் வந்ததும் இறங்கி உள்ளே ஓடி விடுவார். அதை வைத்து பார்க்கும் போது ஒவ்வொரு அமெரிக்கனும், ஒரு ரஜினிகாந்த் தான்! [இதையே இந்த பதிவுக்கு தலைப்பா வச்சுர்றேன், கூட்டம் கூடிடும்!]
திடீரென்று என் சிந்தனை சிங்கத்தை [எவ்வளவு நாள் தான் குதிரைன்னே சொல்றது? ஆமா சீனாவுக்கு, சீனா தானே சரியா வருது, ஏன் குதிரை உள்ளே கொண்டு வந்தாங்க?...] தட்டி விட்டேன். அதாவது, இங்கு இடம் மிக மிக அதிகமாக இருக்கிறது, மக்கள் மிக மிக குறைவாக இருக்கிறார்கள். இந்தியாவில் இடம் மிக மிக குறைவாக இருக்கிறது, மக்கள் மிக மிக அதிகமாக இருக்கிறார்கள். இதுக்கு நான் என்ன சொல்றேன்னா, ஒரு காண்ட்ராக்ட் மாதிரி போட்டு, இங்கு இருப்பவர்களை எல்லாம் அங்கு ஷிஃப்ட் செய்து விட்டு, அங்கு இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விட்டால் என்ன, இவங்க அங்கே போய் நம்ம இந்தியாவை அமெரிக்காவா மாத்திர மாட்டாங்க? என்று தோன்றியது. [இதைச் சொன்னா நம்மளை கிறுக்கன்னு சொல்றாங்க...] இதிலிருந்து என்ன தெரியுது? ஒருத்தன் தனியா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவன் தமிழனா இருக்கக் கூடாது, அப்படியே இருந்தாலும், அவனுக்கு ஒரு வலைத்தளம் இருக்கக் கூடாதுன்னு புரியுதா? விதி வலியது...
ஷவர் கர்ட்டெயின்:
இது இல்லைன்னா நீங்க குளிக்கவே முடியாது. பாத்ரூம்ல நம்ம ஊர் மாதிரி தண்ணி போக ஓட்டை எல்லாம் இருக்காது, நீங்க காலால வரட்டு வரட்டுன்னு தண்ணியெல்லாம் அதுல விட்றதுக்கு...ஒரு பாத் டப் இருக்கும், அதுக்குள்ள போய் நின்னுட்டு ஷவர் தொறந்து விட்டுக்கணும், அதுக்கு முன்னாடி இந்த கர்ட்டெயினை மூடிக்கனும் [ஒரு கூண்டு மாதிரி ஆயிடும்! குயிலைப் புடிச்சி கூண்டிலடைச்சி பாட்டும், கெணத்தடியில வாளியில மொன்டு மொன்டு ஓடி ஓடி குளிச்சதெல்லாம் ஞாபகம் வந்து படுத்தும்!] இல்லைன்னா தண்ணி தெறிச்சி பாத்ரூம் பூரா சொத சொதன்னு ஆயிடாது...அதனால...நம்ம இங்கிலீஷ் படத்துல எல்லாம் பாத்துருப்போம், ஒரு அழகான ஹீரொயின் ஒரு ட்ரான்ஸ்பெரன்டான ஷவர் கர்ட்டெயினை மூடிட்டு ட்ரஸ் எல்லாம் கழட்டிட்டு குளிக்கப் போவா, [ஹூம்....] அப்ப தான் அந்த கொலைகாரப் பாவி வந்து அவ கழுத்துலையே குத்து குத்துன்னு குத்துவான்...அப்புறம் அந்த டப் ஓட்டை வழியா செவப்பு கலர் தண்ணியை க்ளோஸப்ல காட்டுவானுங்க...அட போங்கப்பா...
மொக்கை பதிவு தான்! மூளைக்குத் தெரியுது, ஆனா இந்த மனசுக்குத் தெரியலையே....யார்ட்டயாவது பொலம்பனும் பாருங்க...
டாலஸ். டெக்ஸாஸ் பக்கம் இருந்தா சொல்லுப்பா ஒரு நாளைக்கு நல்ல சோறு போடுறேன்
நல்ல புலம்பல் என்று சொன்னாலும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.
ஆட்கள் ரோடு பக்கம் வேண்டும் என்றால் சிங்கப்பூர் சிரங்கூன் சாலை பக்கம் வந்திடுங்க.
:)))))
muthalvar avargale,
virunthombalil thamizanukku nigar thamizane...mikka nandri aiyya!
kumar,
aaha, ipo dance vera aada solvaanga pola irukkepa...
anony,
sirikka thaane poreenga, athukku enga anony perla olinjukureenga?
பிரதீப் உங்களுக்கு அங்கே வாழ்க்கை சுவாராசியம் இல்லாமல் இருக்கலாம்..ஆனால் உங்க பதிவு ரொம்ப ரொம்ப சுவாராசியம் ..அதுக்குள்ளே உங்க பதிவு முடிந்து விட்டதே என்று வருத்தப்பட்டேன்..நல்லா எழுதி இருக்கீங்க
//வடுவூர் குமார் said...
ஆட்கள் ரோடு பக்கம் வேண்டும் என்றால் சிங்கப்பூர் சிரங்கூன் சாலை பக்கம் வந்திடுங்க.//
:-)))
வடுவூர் குமார்..இங்கே அதிகம் மக்கள் நடமாட்டம்.. அங்கே நடமாட்டமே இல்லை..என்ன கொடுமை சார் இது!
//மொக்கை பதிவு தான்! மூளைக்குத் தெரியுது,
//
யார் சொன்னா இத மொக்கப் பதிவுன்னு?
:)
giri,
thanks for coming and keep coming :) 5 varshama ezhuthuren sir! neriyya pathivu irukku...mella padinga!
abdulla,
makkal theerpe magesan theerpu :)
இந்தியாவை அமெரிக்காவா மாத்த மாட்டாங்க அமேரிக்காவை இந்தியாவா மாத்திறுவாங்க...
///இங்கு இருப்பவர்களை எல்லாம் அங்கு ஷிஃப்ட் செய்து விட்டு, அங்கு இருப்பவர்களை இங்கு கொண்டு வந்து விட்டால் என்ன, இவங்க அங்கே போய் நம்ம இந்தியாவை அமெரிக்காவா மாத்திர மாட்டாங்க?///
aaha, en sinthanai singathuku intha yosanai varaama poche! correcta sonneenga...
:-)
kalakkal!
i dont know pradeep.. I have felt the same thing in he US.. a kinda loneliness and that i why i hate it there.. the write up is so good that under those funny lines there is a kinda gloominess :)
except life, everything is here :)
Pradeep.... this is true indeed...