Jun
25
காதலி..
நான்
நடைமுறைக் காதலன்

உனக்காக
வானத்தை
வசப்படுத்த மாட்டேன்

உன் விழிப் பெண்
கண்ணீர் கற்பிழக்காமல்
பார்த்துக் கொள்வேன்

நட்சத்திரங்களால்
ஜரிகை நெய்ய மாட்டேன

என் சுவாசச் சுவரெங்கும்
சித்திரமாய் உன்னை
சித்தரிப்பேன்

வானவில்லின்
வண்ணங்கொண்டு
உனக்கு சேலை
செய்ய மாட்டேன்

உன் வாலிபம்
வானவில் காண
சாரல் மழையாயிருப்பேன்

மேகத்தால்
உனக்கொரு
மெத்தையிட மாட்டேன்

மழை மேகமாய்
உனை நனைத்து
பெண் வாசனை
நுகர்வேன்

உன் உடல் மட்டும் அணைக்காது
உயிரையும் சேர்த்தணைப்பேன்

அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
நீ அணியும் போதும்
அருகிலிருப்பேன்

ஆம்
நான் நடைமுறைக் காதலன்

13 Responses
  1. ஆச்சர்ய குறி இல்லாமல் ஒரு கவிதை!

    தலைப்பிலேயே ஆச்சர்ய குறி.

    அட்டகாசமான கவிதை.

    //நட்சத்திரங்களால்
    ஜரிகை நெய்ய மாட்டேன


    என் சுவாசச் சுவரெங்கும்
    சித்திரமாய் உன்னை
    சித்தரிப்பேன்//

    அருமை.

    சீக்கிரம் ஒரு குணவதியை ...

    (புள்ளியிட்ட இடத்தை நிறப்புக)


  2. அழகுக் கவிதை ப்ரதீப்

    /*
    உன் உடல் மட்டும் அணைக்காது
    உயிரையும் சேர்த்தணைப்பேன்


    அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
    நீ அணியும் போதும்
    அருகிலிருப்பேன்
    */

    இவ்வரிகளைப் படிக்கும் பெண் எல்லாம் உங்கள் ரசிகைகள் ஆகிவிடுவார்கள்.


  3. சிவமுருகன்,

    நன்றி! எங்கே அவள்...என்றே மனம்..
    தேடுதே ஆவலாய் ஓடி வா!

    ப்ரியன்,

    நன்றி!அப்படி எல்லாம் நடந்து விடுமா என்ன?


  4. //அவிழ்க்கும்போது மட்டுமில்லாமல்
    நீ அணியும் போதும்
    அருகிலிருப்பேன்//
    ஆடையா ? செருப்பா ? :)
    தமாசு தப்பா நினெச்சிக்காதிங்க :))))))


  5. கோவி கண்ணன்

    அட, இது புதுசா இருக்கே! ஆனா உங்களோட கற்பனையில் பொருட் குற்றம் இருக்கிறது!

    செருப்பை கழட்டுங்கள் என்று தான் சொல்வார்களேயன்றி அவிழுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்!

    நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!! [எத்தனை ஆச்சர்ய குறி!]

    எப்படி இருக்கு என்னோட தமாசு? ஹிஹி..


  6. //Pradeep said...
    கோவி கண்ணன், செருப்பை கழட்டுங்கள் என்று தான் சொல்வார்களேயன்றி அவிழுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்!//
    இதை சொல்லுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தேன் . என்னை ஏமாற்றவில்லை ... கவிஞன் கவிஞன் தான்



  7. ஆறு விளையாட்டுக்கு அழைத்துள்ளேன் பிரதீப் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்



  8. Anonymous Says:

    அருமையா இருக்கு கவிதை


  9. ஆச்சர்ய குறியுடன் எல்லோருக்கும் என் நன்றிகள்!



  10. Anonymous Says:

    Pradeep, really superb, i like these lines very much

    மழை மேகமாய்
    உனை நனைத்து
    பெண் வாசனை
    நுகர்வேன்