நான் உடலால் முதுமையும், உள்ளத்தால் என்றும் இளமையும் பெற்ற ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் பலதரப்பட்ட பத்திரிக்கைகளில் நிருபராய் வேலை பார்த்தவர். அவர் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை எனக்குச் சொன்னார். அதை நான் மிகவும் ரசித்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சாவி என்ற பத்திரிக்கையில் ஒருவர் பலமுறை தன் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தார். எந்தக் கதையுமே பிரசூரிக்கப் படவில்லை! கோபமடைந்த அவர், சாவியின் பத்திரிக்கை ஆசிரியருக்கு "என்னைப் போன்றவர்கள் எவ்வளவு தான் நன்றாய் கதை எழுதினாலும், எதையும் நீங்கள் பிரசூரிப்பதில்லை; இதே, சுஜாதா அனுப்பியிருந்தால் அவருடைய லான்ட்ரி பில்லாய் இருந்தாலும் பிரசூரிப்பீர்கள் என்று கார சாரமாக ஒரு கடிதத்தை எழுதினார்.

இதை அந்த ஆசிரியர் எப்படி எதிர் கொண்டிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இந்த மாதிரி தினமும் 100 கடிதம் வரும், இதையெல்லாம் அவர் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்று நினைத்தால், அது தவறு! அந்த ஆசிரியர் இந்தக் கடிதத்தை படித்து விட்டு, சுஜாதாவிடம் விஷயத்தை சொல்லி அவர் லான்ட்ரி பில்லை வாங்கி பிரசூரித்தார். சுஜாதாவின் லான்ட்ரி பில் கீழ் வருமாறு:

2 டெரிகாட் சட்டை
3 பாண்ட்
2 புடவை
4 கை வைத்த பனியன்
2 கைக்குட்டை, அதில் ஒன்று ரத்தம் படிந்தது!..

இது உண்மையிலேயே நடந்ததா என்றால் அது சுஜாதாவுக்கு கொஞ்சம் வெளிச்சம்; தேசிகனுக்கு தான் எல்லா வெளிச்சமும்! [சுஜாதாவே இவரிடம் தானே தன் கதை எங்கு, எப்போது வந்தது என்று கேட்கிறார்!]

எப்படியோ எழுத்தாளர்களின் திறமையை நான் ரசித்தேன்! நீங்கள்?


12 Responses
 1. kalai Says:

  இதை ரசிப்பதா இல்லையா என்று புரியவில்லை. சுஜாதாவின் லான்ட்ரி பில்லை பிரசுரித்தது திறமையை விட வீம்பும் ஜம்பமும் தான் அதிகம் தெரிகிறது.


 2. Pradeep Says:

  கலை,

  இதே போல் தான் என்னுடைய இன்னொரு நண்பரும் சொன்னார். நான் சுஜாதாவுக்காக அதை ரசிக்கவில்லை. எந்த எழுத்தாளர் இப்படிச் செய்திருந்தாலும் நான் ரசித்திருப்பேன். லாண்ட்ரி பில்லே கொடுத்தாலும், அதில் தான் பல மர்ம நாவல்கள் எழுதியவன் என்ற வகையில் ஒரு கைக்குட்டையை ரத்தம் படியச் செய்திருக்கிறார். அதை தான் நான் ரசித்தேன்.

  நான் ரசித்ததை எல்லாம் எல்லோரும் ரசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லையே! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! அப்புறம் தமிழ் கற்றுக் கொண்டீர்களா?


 3. pradeep..

  after i read ur comment only, i understood what that post was abt...(sorry konjam bulb naan)..

  athuvaraikkum puriyave ille..


 4. Pradeep Says:

  aria,

  there is a chance to say that my understanding was also wrong!

  bulb will glow atonce, u shld say tube light! but, the actual problem is in my post, which failed to express whatever feelings i experienced!


 5. kicha Says:

  ungal karpanai thiranukku alave illaya? I am not able to imagine even after reading the comments. (oruvela naan "fused" bulbo ;-)


 6. Pradeep Says:

  kicha,

  its not my imagination boy! anyway, when u come next time i will explain u!


 7. Basket Says:

  Vous avez un blog très agréable et je l'aime, je vais placer un lien de retour à lui dans un de mon blogs qui égale votre contenu. Il peut prendre quelques jours mais je ferai besure pour poster un nouveau commentaire avec le lien arrière.

  Merci pour est un bon blogger.


 8. Was reading your old posts...They are very very good..Thoroughly enjoyed each and every one, I read...konjam porumaia thaan ellam padikka mudiyum...They were really enjoyable..

  How come no updates at all, for a long time...


 9. Anonymous Says:

  nice blog enjoyed it :)

  Keep up the excellent work! and i bookmarked u!

  so cant wait for ur next post! :)

  Thanks!!


 10. Pradeep Says:

  maduraiaria!

  athai enpa kekkure, officela pudussa velai ellam seiyya soldraangala, onnum puriyalai!

  ezhunthutten! itho varren!

  Anonymous,

  Thanks for ur comments

  pradeep


 11. kicha Says:

  "ezhunthutten! itho varren!", ithe neenga kanavula thaane sonnenga?


 12. hi frend

  is it true? if u have time come and see my blog and post ur cooments