வெகு நாட்களுக்குப் பிறகு வலைப்பதிகிறேன். சமீபத்தில் ஒரு துர் மரணம் என்னை மிகவும் பாதித்தது. பெங்களூரில் நான் இருந்த போது எனக்குப் பழக்கமான ஒரு நண்பன்; அவனுக்கு வயது ஒரு 22, 23 இருக்கலாம். 'டெல்' லில் நானும் அவனும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம்.

சமீபத்தில் அவன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதில் அவனும் அவனுக்கு மட்டுமே தெரிந்த பாஸ்வேர்ட்களும் இறந்தது. ஒரு மரணத்தை வேடிக்கையாகச் சொல்வதாக யாரும் எண்ண வேண்டாம், வேதனையாகத் தான் சொல்கிறேன். இப்படி அவனுக்கு மட்டுமே தெரிந்த எத்தனை ரகசியங்கள், சாதனைகள், சாகசங்கள், சோகங்கள், சந்தோஷத் தருணங்கள் அவனோடு அழிந்து போனதோ.. வாழ்க்கை தான் எத்தனை விசித்திரமானது? இப்படி 22, 23 வயதில் ஒரு சாலையின் பிரிவானத்தில் அடிபட்டு இறக்கவா அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தான்? அவனுக்கும் எனக்கும் நிறைய வாக்குவாதங்கள் வருவதுண்டு. நல்ல நிலையில் இருக்கும் நீ நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும் என்று நான் சொல்வேன்..நான் என்னை பாத்துக்குறேன், சமுதாயம் அது தன்னை பாத்துக்கும் என்பான். சமுதாயம் எனக்கு என்ன செய்தது, நான் அதற்கு செய்வதற்கு என்று சண்டை போடுவான்...அவன் பேசுவதைக் கேட்டால், என்னையும் அவனுடைய கட்சியில் சேர்த்து விடுவானோ எனறு எனக்கு பயமாக இருக்கும். இதை பற்றி நாம் பிறகு விவாதிப்போம் என்று ஒதுங்கி விடுவேன்.

நான் எழுதிய பொதுவுடைமை பற்றிய பதிவுக்கு எதிராக அவனும் வலை பதித்தான். ஆம். அவன் உங்கள் எல்லோருக்கும் அறிமுகம் ஆனவன் தான். விஜயநகர் என்ற பதிவில் பொன்னியின் செல்வன் என்ற பெயரில் வலைப்பதித்து வந்தான். சமீபத்தில் அவனுடைய வலைப்பதிவின் டெம்ப்ளேட்டை மாற்றினான். நீங்களும் பாருங்கள்!ரத்தச் சிவப்பில், காலனை போன்ற ஒரு கரிய உருவம் கையில் ஏதோ ஒரு ஆயுதம் ஏந்தி நிற்கிறது. மரணம் தன்னை நோக்கி வருகிறது என்று அவன் மூளையின் ஓரத்தில் ஒரு நரம்பு சொல்லியதோ என்னமோ?

மரணம் மனிதனை விட வக்கிரம் படைத்தது என்று நினைக்கிறேன். காதலுக்கு கண்ணில்லாதது போல், மரணத்துக்கும் இல்லை போலும். கண்களை விடுங்கள்! இதயமே இல்லை அதற்கு. என்று நட்பின் பிரிவில் நான் புலம்பினாலும், எந்த லஞ்சமும் வாங்காமல், எந்த ஊழலும் செய்யாமல் கடமையை மட்டும் கண்ணும் கருத்துமாய் செய்யும் மரணம் என்னை வியக்கச் செய்கிறது. மரணத்தில் தான் சமத்துவம் இருக்கிறது. அது எல்லோரையும் ஒரு சேர கண்கானித்துக் கொண்டே இருக்கிறது. அதற்க்கு நிறைய கண்கள் இருக்க வேண்டும். என்று நினைக்கிறேன். காற்றுடன் சேர்ந்து அசையும் மரம் போல, மரணத்துடன் சேர்ந்து வாழ்வு அசைந்து கொண்டே இருக்கிறது.

எத்தனையோ பேர் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் நம் முதுகுக்கு பின்னால் வந்து நம் கழுத்தைப் பிடித்து நம்மை கொண்டு செல்கிறது மரணம்!

மரணமே இல்லாத மரணத்தை யாரால் என்ன செய்ய முடியும்?

பின்குறிப்பு: தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். அவனுக்கு தலையில் அடிபட்டதைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்பும் ஏற்படவில்லை!
11 Responses
  1. நீண்ட நாட்களுக்குப் பிறகே இந்த விவரம் எனக்குத் தெரிய வந்த போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவில்லை. வலைப்பூ ஆசிரியராக அவர் எழுதிய பதிவுகள் நினைவில் இருக்கின்றன. அவரது வலைப்பதிவில் அவரது புகைப்படங்களைப் பார்த்தேன். இந்த இளைஞருக்கு இது நேர்ந்திருக்க வேண்டாம். ஆழ்ந்த வருத்தங்கள்.


  2. உங்கள் நண்பரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
    பிறப்பு உண்டு எனில் நிச்சயம் இறப்பும் உண்டு.
    அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் அதுவாகத்தான் ஆகிவிடுவோம்.
    ஏதேச்சையாய் / ஏதோ காரணத்தால் template கலர் மாறியது போல் அவரின் வாழ்க்கையும் போய்விட்டது..இது ஆச்சரிய மூட்டுகிறது.
    உங்கள் கட்டுரை என்னையும் பாதித்தது.



  3. Anonymous Says:

    on a lighter note, avanoda entha passwd-um irakkala..avan site,id,passwd-nu azhaga list pottuttu poitan..hmm so hws ur job?? hvnt been in touch with u for long r8...
    bala..


  4. Anonymous Says:

    Very painful
    தயவு செய்து வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். அவனுக்கு தலையில் அடிபட்டதைத் தவிர உடம்பில் ஒரு சிராய்ப்பும் ஏற்படவில்லை!


  5. Anonymous Says:

    பல நாட்கள் நினைக்க வைத்த துயரம் இது.

    இரண்டு நாட்களுக்கு முன்புகூட, கார்த்திக் என்று யாகூமெயிலில் தேட, அவருடைய பழைய மடல்கள் வந்துவிழுந்தன. :(

    -மதி


  6. Anonymous Says:

    பல நாட்கள் நினைக்க வைத்த துயரம் இது.

    இரண்டு நாட்களுக்கு முன்புகூட, கார்த்திக் என்று யாகூமெயிலில் தேட, அவருடைய பழைய மடல்கள் வந்துவிழுந்தன. :(

    -மதி


  7. rama,

    i too understand if there is pirappu, there will be irappu..actually i couldn't digest the cruelty of death..how strange it is!

    bala,

    i wanted to contact u, but i couldn't get ur mobile number or email. pls mail me ur mobile no.



  8. Anonymous Says:

    kashtamaga irundadu.. Yavaro oruvar irandadai ninaitu varuttha pattirukkenna, neengal yennai ungal ezhuttaal avar ulagathai kaattivitteergal.. Thanks..

    And my condolences...