ஒரு பூச்சியின் வாழ்க்கை முடிந்து போயிருந்தது.
போன தடவை ஒரு கதை புடிக்காமல் பட்டென்று
புத்தகத்தை மூடியபோது..
போன தடவை ஒரு கதை புடிக்காமல் பட்டென்று
புத்தகத்தை மூடியபோது..
பிடிக்காத கதை படித்து
பட்டென்று புத்தகம் மூடியதில்
சட்டென்று முடிந்தது - ஒரு
பூச்சியின் வாழ்க்கை
பதமான கதையாய் இல்லாவிட்டாலும்
இதமாய் புத்தகம் மூடியிருந்தால்..
வதமாகி இருக்காது ஒரு பூச்சி..
ஒரு பூச்சியின் உதிர்ந்த வாழ்வைப் பார்த்து எனக்கு உதித்த கவிதை இது. எனக்கு இது கவிதையாகப் பட்டது. உங்களுக்கு எப்படியோ தெரியாது. அப்படி
உங்களுக்கு கவிதையாய் பட்டால், இந்த நிகழ்வை மூன்று வடிவங்களில் எழுதி இருக்கிறேன். எந்த வடிவம் சரியானது? இல்லை இதை விட நல்ல வடிவத்தில் எழுதலாமா? கவிதை இப்படித் தான் எழுத வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா என்ன?
முடிவு பிடிக்காது
பட்டென மூடிய புத்தகத்தில் சிக்கி
முடிந்தது
ஒரு பூச்சியின் வாழ்க்கை.
இது எப்படி இருக்கு?
கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்
Raj,
Wow! good one.
I am writing kavithai's since 9th standard
pradeep
பிடிக்காத கதை படித்து
பட்டென்று புத்தகம் மூடியதில்
முடிந்தது
ஒரு பூச்சியின்
கதை
அர்த்தமற்ற தியாகம்
பிடித்ததை படிக்காமல்
படித்ததும் பிடிக்காமல்
பித்து பிடித்த பிரதீப் - உன்
பித்தால் வாழ்க்கையே
ரத்தாகிய பூச்சி கூட
வித்தாக வில்லையே - ஒரு
முத்துக் கவிதை நீ எழுத...!?
(இதுல அலட்டல் வேற...ஸ்கூல் போகும்போதே கவிதை எழுதுவென்னு...ரொம்ப முக்யம்)
Thanks.. M. Padmapriya
நன் கவிதை தாம் புனைய
என் கவிதை வித்தானதைக் குறித்து
மிக்க மகிழ்ச்சி!
3rd one is good