எனக்கு எப்போதுமே நல்ல விளம்பரங்களில் ஈடுபாடு உண்டு! என்னைப் பொறுத்தவரை நல்ல விளம்பரங்கள் என்பது, அதைப் பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை, ஒரு புத்துணர்ச்சி, ஒரு சிறு சந்தோஷம், ஒரு புல்லரிப்பு ..[நான்: வானத்தை பாத்துகுட்டே.. நீங்க:சரி சரி]!!..சரியா சொல்லனும்னா ஒரு cuteness இருக்கனும்!

உதாரணத்துக்கு HUTCH விளம்பரம் போதும்..எதை அவங்க விக்கனுமோ, எதுக்காக விளம்பரம் பண்றாங்களோ அதை அவங்க அந்த விளம்பரத்தில் காட்டவே இல்லை..மிக அற்புதமான படைப்பு! இந்த மாதிரி விளம்பரங்களை உருவாக்குறவங்களைப் பத்தி நினைச்சி பாக்குறேன்..யோசிச்சுட்டே இருக்கனும்..எத்தனை புது விதமான சிந்தனைகளை விதைக்கனும்! இந்த software engineering ஐ விட நல்ல வேலையா இருக்கேன்னு தோனுது..[இக்கரைக்கு அக்கரை பச்சை!]

என்ன பையன் திடீர்னு advertisement ல தாவிட்டான்னு நீங்க நினைக்கிறீங்களா? சொல்றேன் சொல்றேன்!

அன்னைக்கு தெரியாத்தனமா என் கூட வேலை பார்ப்பவனிடம் இங்கே ad agencies எங்கே இருக்கு? உனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்! அவன், அதுக்கு என்
friend ஒருத்தன் இருக்கான்..நான் அவன் address தர்றேன், ஆனா அதுக்கு முன்னாடி "பேனா" வுக்காக நீ ஒரு script எழுதுன்னுட்டான்..கடன்காரன்!! ஐய்யா அதுல என்னோட
திறமையை பாத்துட்டு அப்புறம் தான் address தருவாராம்!! [என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க?] புதுசா பள்ளிக்கூடத்துல சேர்றவன்கிட்ட ALGEBRA ல ஒரு கணக்கு போட
சொல்ற மாதிரி இருக்குப்பா...[தெரிஞ்சா நான் ஏண்டா schoolல சேர்றேன்!!] தவளை தன் வாயால் கெடும்ன மாதிரி வாயைக் கொடுத்து மாட்டிகிட்டாச்சு..நமக்கு இந்த மானம்
மாரியாத்தா..சூடு சூலாத்தா எல்லாம் இருக்கோல்லியோ? சரி கழுதை நம்ம யோசிச்சி பாப்போமேன்னு சவாலை ஏத்துகிட்டேன்!! [கட்டவிரல் காட்டி intervel எல்லாம் போடாம!!]

எதையும் மிகைப்படுத்திக் காட்டுவது தானே விளம்பரம்! இங்கே நான் யோசித்த சில..[சத்தியமாப்பா..]

IVth Std. A Section

Miss: சரி இன்னைக்கு பாடம் முடிஞ்சது!..இப்போ என்ன பண்ணலாம்?
[பசங்க ஆளாளுக்கு ஒரு விளையாட்டு பேரை சொல்றாங்க!]
ஒரு பையன்: [எழுந்து நின்று] Miss! Imposition எழுதலாம்!!
Miss: [Close up] அதிர்ச்சியுடன் அவளைப் பார்க்கிறாள்..
பையன்: [Close up] பெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு தன்னுடைய impositionஐ தொடர்கிறான்!
[I will do my home work regularly என்று முடித்து அடுத்த lineக்குப் போகிறான்..தன்னுடைய பேனாவை பார்த்துக் கொண்டே...]
Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Make your mark!" இப்படி ஏதாவது..

Bank

1: ஒரு DD ஐ fill பண்ணிட்டு அதை சரி பார்த்துக் கொண்டிருக்கிறான்..
2: Sir! Pen please?
1: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?[முறைத்துக் கொண்டே கொடுக்கிறான்!]
2: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]
[அடுத்த முறை இருவரும் பாங்க்கில் சந்திக்கிறார்கள்..இருவரிடமும் பேனா!]
3: [2மவனிடம்] Sir! Pen please?
2: ஏன் சார், பாங்க் வந்தா பேனா கொண்டு வரனும்னு தெரியாதா?
[1மவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கொடுக்கிறான்]
3: எழுதி விட்டு ஒரு முறை அந்தப் பேனாவைப் பார்க்கிறான்..[Cut]

1 & 2 இருவரும் வெளியே வந்து பார்க்கிறார்கள்..3மவன் கடையில் அதே பேனாவை வாங்கி இவர்களைப் பார்த்து அசடு வழிகிறான்! இருவரும் தங்கள் பேனாவுடன் சிரித்துக்
கொள்கிறார்கள்...Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Your 6th Finger" இப்படி ஏதாவது..

Magic

[இதில் வசனமே இல்லை...நல்ல ஒரு ஜிங்கிள்ஸ் போடலாம்..]

அலுவலகம்

விளம்பரநாயகன் பேனாவை ஆட்டி ஆட்டி ஏதோ சொல்கிறான்..அவனுடைய boss தலையை ஆட்டி ஆட்டி அவன் முதுகைத் தட்டிக் கொடுத்துப் போகிறார். அவனுக்கு
ஒன்றும் புரியாமல், இதற்கு முன் அவர் எப்படி வள் வள் என்று விழுவார் என்று நினைத்துப் பார்க்கிறான்..இன்று எப்படி இப்படி ஆனார் என்று யோசிக்கிறான்..[கையில்
பேனாவுடன்!][Cut]

வீடு

பேனாவை ஆட்டி ஆட்டி மனைவியிடம் ஏதோ சொல்கிறான்..அவள் தலையை தலையை ஆட்டுகிறாள்..மறுபடியும் அவளின் ருத்ரதாண்டவத்தை நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

பேனாவை ஆட்டி ஆட்டி குழந்தையிடம் விளையாடுகிறான்..அது தலையை தலையை ஆட்டுகிறது..அது சதா எப்படி இவனிடம் அழுதது என்று நினைத்துப் பார்க்கிறான்!
[கையில் பேனாவுடன்]

ஒன்றும் புரியாமல் பேனாவை உற்றுப் பார்க்கிறான்!Background: வசீகரமாக பேனாவின் பெயரைச் சொல்கிறது.. முடிந்தால் ஏதாவது ஒரு Quotes.."Start your magic"...இப்படி ஏதாவது..

இதை எல்லாம் அவன்கிட்ட சொன்னேன்..நல்லா இருக்குன்னான்..சரி இப்போ "காருக்காக" ஒரு விளம்பரம் செய்ன்னான்...

அது அடுத்த பதிவில்...



5 Responses
  1. //எனக்கு எப்போதுமே நல்ல விளம்பரங்களில் ஈடுபாடு உண்டு! என்னைப் பொறுத்தவரை நல்ல விளம்பரங்கள் என்பது, அதைப் பார்த்தவுடன் நம்மையும் அறியாமல் ஒரு சிறு புன்னகை, ஒரு புத்துணர்ச்சி, ஒரு சிறு சந்தோஷம், ஒரு புல்லரிப்பு ..[நான்: வானத்தை பாத்துகுட்டே.. நீங்க:சரி சரி]!!..சரியா சொல்லனும்னா ஒரு cuteness இருக்கனும்! //

    இதற்கெல்லாம் அதிகமாக, விளம்பரத்தைப் பார்த்து விட்டு விளம்பரம் செய்யப்பட்ட நமது பொருள்/சேவையைப் பற்றிய மதிப்பு உயர்வதும், அதை வாங்குகிற திசையில் பார்வையாளரின் முடிவு பயணப்படுவதும் கூட விளம்பரத்தின் தலையாய பணி என்று சொல்லலாம். அதற்கான வலிமையான justification இல்லாமல் நிறுவனங்கள், விளம்பரங்களுக்கு go-ahead கொடுப்பதில்லை


  2. அடுத்ததா கார் விளம்பரங்களையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்


  3. «ýÀ¢ý ôþ£ô, Å¢ÇõÀÃõ ±Ø¾ ¬ÃõÀ¢ìÌõ ¦À¡ØÐ ±ó¾ Ũ¸ Áì¸¨Ç þó¾ Å¢ÇõÀÃõ ¦ºýÚ §ºÃ §ÅñÎõ ±ýÀÐ Ó츢ÂÁ¡¸ ¸ÅÉ¢ì¸ôÀ¼ §ÅñÎõ. ¿£í¸û ±Ø¾¢Â Å¢ÇõÀÃí¸Ç¢ø Á¡½Å÷¸û, Åí¸¢ìÌ ¾õ ¦º¡ó¾ §Å¨ÄìÌò ¾¡§Á ¦ºøÀÅ÷¸û, Å£ðÎ §Å¨Ä ¦ºöÀÅ÷¸û þÅ÷¸Ç¢¼õ ¾¡ý ¯í¸û §ÀÉ¡¨Å ¿£í¸û Å¢ü¸ ÓÂüº¢ ¦ºöÐûÇ£÷¸û. þýÛõ high income group -ìÌ Å¢ü¸ ÓÂüº¢ ¦ºöÔí¸û.
    ±ÉРŢÇõÀÃõ þó¾ À¡½¢Â¢ø..ÍÕì¸Á¡¸§Å:
    ±ý §ÀÉ¡Å¢ý Å¢¨Ä 300 åÀ¡ö:
    ¸¡ðº¢ 1: ӾĨÁî ºÃ¡¸ô À¾Å¢§ÂüÀÅ÷ ´ÕÅ÷ «ó¾ ¸¡ðº¢Â¢ø þó¾ §ÀɡŢɡø ¨¸¦ÂØò¾¢Î¸¢È¡÷..
    þÐ §À¡ýÚ þýÛõ º¢Ä ¸¡ðº¢¸û..
    ÓÊÅ¢ø,
    "±í¸û §ÀɡŢɡø ¾¡ý ÅÃÄ¡Ú¸û ±Ø¾ôÀθ¢È¦¾ýÀÐ ¿¢ƒõ.. Å¡íÌí¸û..º£Á¡îÍ §ÀÉ¡.."

    ±ôÀÊ þÕ츢ÈÐ þÐ?
    ±ý¦ÈýÚõ «ýÒ¼ý,
    º£Á¡îÍ...


  4. Anonymous Says:

    Amiable brief and this post helped me alot in my college assignement. Say thank you you on your information.


  5. thanks anony! happy that my thought helped u :)