போன வாரம் ஒரு விஷேசத்திற்காக மதுரை சென்றிருந்தேன். அந்த விஷேசத்திற்கு போவதை விட ஆய்த எழுத்து படத்திற்கு போகலாம் என்ற எண்ணமே என் மனதில் நிறைந்திருந்தது! வழக்கமாய் மனிரத்னம் படம் அம்பிகையில் தான் போடுவார்கள்! இந்த முறை அபிராமி!! அம்பிகையில் படம் பார்த்த சுவாரஸ்யம் இங்கு கிடைக்கவில்லை! இனி படத்தின் விமர்சனம்!!

மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட மூன்று பேர் எப்படி சமுதாயத்தை சார்ந்து இருக்கிறார்கள் என்பதை சொல்வதால் படத்தின் பெயர் ஆய்த எழுத்து!

கதை :

இன்ப சேகரன் ஒரு ரவுடி. மைக்கேல் வசந்த் சமுதாய நோக்கம் உள்ள ஒரு இளைஞர். அர்ஜுன் வெளிநாட்டு மோகம் கொண்ட தற்கால வாலிபன்! இவர்கள் மூவரும் ஒரு பாலத்தில் சந்திக்கிறார்கள்! எப்படி? bike ல் சென்று கொண்டிருக்கும் மைக்கேலை இன்பா துப்பாக்கியால் சுடுகிறார், அர்ஜுன் அவரை காப்பாற்றுகிறார்! The beauty is மூவரின் கோணத்திலிருந்து கதை சொல்லப் பட்டிருப்பது! அருமை!! Flash Back என்றவுடன் frame ல் character ன் focus மங்குவதும், tortoise சுருள் சுழல்வதும் போயே போச்சு! [ஒன்று கவனித்திருக்கிறீர்களா? எப்பொழுதும் ஒரு character தன்னுடைய Flash Back ஐ சொல்லும்போது கேட்பவரை பார்க்காமல் மெல்ல நடந்து வந்து ஜன்னலயோ இல்லை நம்மையோ பார்த்து தான் பேச ஆரம்பிப்பார்!!] Flash Back சொல்வதில் நம்மவர்கள் கரை கண்டு விட்டார்கள்! அலைபாயுதே, விருமாண்டியைத் தொடர்ந்து
இப்பொழுது ஆய்த எழுத்து! HATS OF MANI!

1. மாதவன் : [இன்ப சேகரன்]

மனிரத்னம் சொல்வது போல் இவரை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டி இருக்கிறார்! மைக்கேலை சுடும் போது அந்த tension கொஞ்சம் கூட இல்லாமல் அவருடைய மனைவியின் தொல்லை பற்றி புலம்புவது அருமை! சசியிடம் [மீரா ஜாஸ்மீன்] காதல் கொள்ளும்போதும், அடுத்த நிமிடமே அவரை வீட்டை விட்டு விரட்டும் போதும் மாதவன் இன்ப சேகரனாகவே வாழ்ந்திருக்கிறார்! மற்றபடி இந்த பாத்திரம் அவ்வளவாக பாதிப்பதாகத் தெரியவில்லை!

2. சூர்யா : [மைக்கேல் வசந்த்]

சூர்யா ஒரு ideal character ஆக வருகிறார். இந்த சமுதாயத்தில் கண்டிப்பாய் ஒரு மாற்றம் வர வேண்டும் என்று விரும்புகிற அதற்காக போராடுகிற ஒரு brilliant character.

மாதவன் இவரை மிரட்டும் காட்சி என்னை மிகவும் கவர்ந்தது! இஷா தியோலிடம், உனக்கு என்னை பிடிச்சிருந்தா straight ஆ பெட்டி தூக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்துரு, கல்யாணம் எல்லாம் சும்மா, society க்காக பண்ணிக்கிறது. நம்ம தான் society க்காக எதுவுமே பண்றதில்லையே, அப்புறம் இதை மட்டும் ஏன் பண்ணனும் என்ற வசனம் நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! [அவர் கேக்குறது நியாயம் தானே?]. நான் சூர்யாவில் என்னைப் பார்த்தேன்..நோ நோ, personality wise ஆ இல்லை, thought wise ஆ. அவர் கேக்குற கேள்விகளைத் தான் நான் எனக்குள்ள கேட்டுட்டு இருக்கேன்! அவர் படத்துல வர்ற hero, 3 தடவை சுட்டாலும் சாக மாட்றாரு..நான் அப்படி இல்லயே, பொம்மை
துப்பாக்கி காட்டினாலே மயங்கி விழுந்துருவேன்!

நிற்க

நான் election ல நிக்க போறேன், என்கூட யாரு நிக்கிறது என்று கேட்கும் போது, எல்லோரும் பின் வாங்குகிறார்கள். அதற்கு சூர்யா,
நான் ஏதாவது தப்பு பண்றேனா?

நம்ம எல்லாரும் america scolarship வாங்கிட்டு போயிடுவோம், அவனுக்கு software எழுதுவோம், soap வித்துக் கொடுப்போம், ஆனா நம்ம நாட்டுக்கு ஒன்னும் செய்ய மாட்டோம்!!!??
மத்தவங்களுக்கு எப்படியோ, என் தலையில் ஓங்கி சம்மட்டியால அடிச்ச மாதிரி இருந்தது!

3. சித்தார்த் : [அர்ஜுன்]

உடலால் இந்தியாவிலும், உள்ளத்தால் அமெரிக்காவிலும் வாழ்பவர். ஏண்டா, நேத்து night தண்ணி போட்டியா? என்று அப்பா கேட்க, பாக்கு போட்டேனே?!என்பது மனிரத்னம் நச்! சூர்யாவுடன் அரசியலில் ஈடுபடும் போது, ஏண்டா இந்த கருமம் எல்லாம் உனக்கு?என்று அப்பா கேட்க, நாளைக்கு நான் மந்திரி ஆயிட்டா நீங்க என்னை இப்படி எல்லாம் திட்ட முடியாதுப்பா! என்பதும்..[அதான் ஏற்கனவே சொல்லிட்டேனே?!] இப்படி அங்கங்கே சில நச்கள்! மற்றபடி பையன் அசத்தியிருக்கானே என்றெல்லாம் சொல்லத் தோன்றவில்லை..character ன் scope அப்படி!


மீரா : [சசி]

அழகாய் இருக்கிறார். மற்றபடி இவருக்கும் அதிக வேலை இல்லை!

இஷா : [கீதா]

சூர்யாவின் தங்கைகள் இழுத்து போர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். இஷா மட்டும் வீட்டில் தொப்புள் தெரிய வலம் வருகிறார்! மனி சார், நீங்களுமா? [எல்லாம் இந்த commercial கருமாந்திரம் பண்ற வேலை!]

த்ரிஷா : [மீரா]

இந்த கால Hi-Fy பெண்ணாய் வருகிறார். சித்தார்த் காதலி சொல்லும்போது, நான் சிவகாசி போறேன், எனக்கு கல்யாணம் ஆகப் போகுது என்று சொல்கிறார், ஆனால் சித்தார்த்துடன் நல்லா சுத்துறார், முத்தம் கொடுக்கிறார், மேலே விழுந்து புரள்கிறார்! மனி சார், நீங்க என்ன சொல்ல வர்றீங்க? city ல இருக்கிற பொண்ணுங்க இப்படித்
தான் இருக்காங்கன்னு சொல்றீங்களா? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை சார் :( ஏன் சார் வயத்துல tamerind ஐ கலக்குறீங்க!

பாரதிராஜா : [செல்வ விநாயகம் ]

என் இனிய தமிழ் மக்களே..[அடச்சே! இவர் பெயர் சொன்னாலே அடுத்து இது தான் வருது!] மனி சார், இந்த character க்கு இவர் தான் பொருத்தமானவர்னு நீங்க ஏன், எப்படி நினைச்சீங்க? நாசர், ரகுவரன், ப்ரகாஷ் ராஜ் எல்லாம் assault ஆ பண்ணி இருப்பாங்களே? அப்படி என்ன நடிக்க மாட்டேன் என்று சொன்னவரை அடம்பிடித்து கொண்டு வைத்து நடிக்க வைப்பது? எனக்குப் புரியலை. எனக்கு அவர் ஒன்னும் செல்வ விநாயகமா தெரியலை, பாரதிராஜாவா தான் தெரிஞ்சார்!

ரவி K சந்திரன் : [ஒளிப்பதிவு]

மூன்று பேருக்கு மூன்று கலர் கொடுத்திருக்கிறார்.

மாதவன் - சிவப்பு
சூர்யா - பச்சை
சித்தார்த் - நீலம்

நான் tv ல் பார்க்கும் போது தெரிந்த வண்ண வித்தியாசங்கள் எனக்கு படத்தில் அவ்வளவாய் தெரியவில்லை..ஒரு வேளை நான் கவனிக்கத் தவறி விட்டேனோ என்னவோ? anyway ரொம்ப அருமையாய் செய்திருக்கிறார்!

A R ரஹ்மான் : [இசை]

அப்பாடா, இந்த படத்துல கொஞ்சம் background music தனியா போட்ருக்காருப்பா! இல்லைன்ன மனுஷன் பாட்டையே music ஆ போட்டு கொள்வாரு! ஆனா ரஹ்மான் சார், இன்னைக்கு கூட என்னால மெளன ராகம், நாயகன், தளபதி போன்ற படங்களின் background music மறக்க முடியலை..ஆனா ரோஜா க்கப்புறம் உங்க background music மனசுல ஒட்ட மாட்டேங்குதே..ஏன் சார்?


மொத்தத்தில் ஆய்த எழுத்தில் உயிர் இல்லை!!

1 Response
  1. Anonymous Says:

    Nallaa vimarsanam seithirukkireergal pradeep. Your writtings are in easy flow. Good keep it up.