உத்தம வில்லன் வந்திருக்கும் இந்த சமயத்தில் என்னுடைய அடுத்த (ஆறாவது) குறும்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி!
இந்தக் குறும்படத்தின் தலைப்பு வேறு தான். ஆனால், உத்தம வில்லன் பார்த்து, விமர்சனம் எழுதிய கையோடு, இந்த குறும்படத்தை பார்த்தால், "உத்தம வில்லன் - II" சரியான தலைப்பாய் தான் தோன்றுகிறது.
நீங்களே பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள் :)
வாழ்த்துக்களையும், வசவுகளையும் எதிர்நோக்கி....

Mika Poruthamana Thalaippu.
வாழ்த்துக்கள் மட்டுமே! படம் நன்றாக வந்துள்ளது. அனைவரின் நடிப்பும், குறிப்பாக சிறுவனின் நடிப்பும் அருமை.
நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதை நினைத்துக்கூட பார்க்கத்தெரியாத சமூகம். அறுபதுகளில் வீட்டுப் பணியாளின் சம்பளம் மாதம் பத்து ரூபாய்.
புறம் போக்கு நிலத்தில் ஓலைக்குடிசை.காலை நாலு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம் வேலை. சாப்பாடும் காபியும் உண்டு. வருடம் ஒரு புது படவை. சில உடுத்திய துணிமணிகள். ஒரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் ஆளனுப்பி ஏன் என்று தெரிந்து வரச் சொல்வார்கள். புதுமுக வகுப்பில் அண்ணாவின் செவ்வாழை கதை பாடமாக இருந்தது. அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளத் தெரியாத சமூகம் என்பதை அழகாக எழுதியிருப்பார். ஓரளவு சுயமாக யோசிக்கத்தொடங்கிய காலம். அம்மாவிடம் இது குறித்துக் கேட்டிருந்தாலும், இது எல்லார் வீட்டிலும் நடப்பதுதானே என்று சொல்லியிருப்பார். விதி என்ற ஒன்றை நம்முடைய சமூகம் கெட்டியாகப பிடித்துக் கொண்டிருக்கிறது :-(
thanks anony and thanks peace for detailed comment. vithiya?
Good effort. Nicely done!
பிரமாதம்